WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Bradley Manning prosecution pushes for
maximum 136-year sentence
பிராட்லி மானிங்
குற்றச்சாட்டு
வழக்கு
அதிகபட்சமாக 136 ஆண்டு சிறைத்தண்டனைக்கு அழுத்தம்
கொடுக்கிறது
By
Matthew MacEgan
2 August 2013
Back to screen version
வீரர்
பிராட்லி
மானிங்க்கு
இராணுவத்
தீர்ப்பு
மன்றத்தில்
தண்டனை
அளிக்கும்
கட்டம்
புதனன்று
ஆரம்பித்தது,
இது
எட்டு
வாரம்
நடந்த
விசாரணைக்குப்பின்
வருகிறது;
இதற்கு
தலைமை
தாங்கும் நீதிபதியான கேர்னல்
டெனிஸ்
லிண்ட்,
மானிங்
20
குற்றச்சாட்டுகளை
எதிர்கொள்கிறார்
என்றும்
இதில்
6 உளவுச்
சட்டத்தின்
கீழ்
வருகிறது
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை
அளிக்கும்
வழக்கு
கட்டத்தின்
முதல்
நாளில்,
அரசு
தரப்பு
வக்கீல்
தன்னுடைய
பழிவாங்கும்
போக்கை
நிலைநிறுத்திக்
கொண்டார்;
நீதிபதியை
அதிகப்பட்சமாக
136
ஆண்டுகள்
சிறைத்
தண்டனையை
25 வயது
நிரம்பிய
தகவல் வெளிப்படுத்தியவர் மீது
கொடுக்குமாறு
வலியுறுத்தினார்.
ஒரு
வழக்கு
அமர்வு
விசாரணையில்
உளவு
பார்த்தல் என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களில்
தண்டனை
மானிங்
பெறுகிறார்;
ஏனெனில்
அமெரிக்க
மக்களிடம்
ஈராக்
மற்றும்
ஆப்கானிஸ்தான்
ஆகிய
நாடுகளில்
அமெரிக்க
இராணுவம்
செய்த
போர்க்குற்ற
விவரங்கள்
குறித்து
வெளியிடும்
தைரியத்தை
கொண்டிருந்ததற்காகும்;
மேலும்
அவர்
குவான்டநாமோ
சிறை
முகாமில்
காவலில்
வைக்கப்பட்டிருப்பவர்கள்
தவறாக
நடத்தப்படுவது
குறித்த
ஆவணங்கள்,
இராஜதந்திர
தந்தி
தகவல்கள்,
வாஷிங்டன்
உலகம்
முழுவதும்
செய்யும்
இராஜதந்திரங்கள்
இவைகளையும்
அம்பலப்படுத்தினார்.
மானிங்
மீதான
குற்ற
விசாரணை,
தண்டனை
அளித்தல்
(குற்றச்சாட்டு
இல்லாமலேயே
காவலில்
மூன்று
ஆண்டுகளுக்கு
மேல்
இருந்தவர்,
அதிலும்
பெரும்பாலும்
தனிமைச்
சிறையில்,
மோசமான
நிலைமைகளில்),
என்பது
வாஷிங்டனின்
போர்களுக்கு
மக்கள்
எதிர்ப்பை
அடக்க
மிரட்டும்
நோக்கத்தையும்
ஏற்கனவே
தாழ்ந்துபோயுள்ள
செய்தி
ஊடகத்தில்
இன்னும்
கட்டுப்பாட்டைக்
கொண்டுவரவும்
நடக்கிறது.
உளவுபார்த்த
குற்றச்சாட்டுக்களில்
மானிங்
தண்டனை
பெறுவது
முதலாவது
அரசியலமைப்பு
திருத்தத்திலுள்ள
செய்தி
ஊடக,
பேச்சுரிமைகளின்
மீது
நேரடியான
தாக்குதல்
ஆகும்.
இது
அரசாங்கத்தின்
குற்றங்களை
அம்பலப்படுத்துபவரை,
அரசாங்கம்
மறைக்க
விரும்புவதை
வெளிப்படுத்துபவரை,
மற்றும்
அத்தகைய
தகவலை
பகிரங்கமாக
ஆக்கும்
செய்தியாளர்
அல்லது
வெளியிடுபவரையும் உளவாளி
என்றும்
துரோகி
என்றும்
முத்திரையிட
முன்னோடியாக
ஆகிறது.
முதலில்
இது
விக்கிலீக்ஸ்
நிறுவனத்தின்
ஜூலியன்
அசாஞ்சை
உளவுபார்த்த
குற்றத்திற்காக
விசாரணைக்கு
உட்படுத்த
வழிவகுக்கிறது;
அவர்
லண்டனில்
உள்ள ஈக்குவடோர்
தூதரகத்தில்
கட்டாயத்தில்
ஓராண்டிற்கும்
மேலாக
உள்ளார்;
இது
அவர்
மீது
கூறப்படும்
போலி
பாலியல்
குற்றங்கள்,
ஸ்வீடனில்
நடந்தவை
எனப்படுபவற்றால்
நாடு
கடத்தப்படும்
ஆபத்தைத்
தவிர்ப்பதற்காகவும்;
அதையொட்டி
அமெரிக்காவிற்கு
மாற்றப்படுவதை
தடுக்கவும்தான்.
மானிங்
கிட்டத்தட்ட
700,000
இரகசிய
இராணுவ
அறிக்கைகளின்
தகவல்களையும்,
அரச
அலுவலக தகவல்
தந்திகளையும்
விக்கிலீக்ஸுக்கு
மே
2010ல்
அனுப்பி
வைத்தார்.
ஆரம்பத்திலிருந்து
ஒபாமா
நிர்வாகம்
மானிங்கை
தண்டிக்க
உறுதி
கொண்டு
அவரையும்
அரசாங்கத்தின்
குற்ற
நடவடிக்கைகளையும்,
வெளிநாடுகளில்
செய்வதையும்,
அல்லது
அதனுடைய
ஜனநாயக
உரிமைகளுக்கு
எதிரான
சதிகளை
உள்நாட்டில்
நடத்துவதை
அம்பலப்படுத்துபவர்களுக்கு
எச்சரிக்கைக்கான
உதாரணமாக
ஆக்கும்
உறுதியைக்
கொண்டுள்ளது.
இது
நிர்வாகத்திற்கும்
இன்னும்
அதிக
முன்னுரிமையை
முன்னாள்
தேசியப்
பாதுகாப்பு
அமைப்பின்
ஒப்பந்தக்காரர்
எட்வார்ட்
ஸ்னோவ்டென்
அமெரிக்க
மக்கள்
அனைவரின்
மீதும்
இலக்குவைக்கும்
பாரிய
சட்டவிரோத
உளவுத்
திட்டங்கள்
மற்றும்
சர்வதேச
அளவில்
கணக்கிலடங்காத
மில்லியன்
கணக்கான
மக்கள்
குறித்தும்
ஆவணங்களை
வெளியிட்டபின்
வழங்கியுள்ளது.
முடிவதற்கு
பல
வாரங்கள்
எடுக்கும்
நிலையிலுள்ள
தண்டனை
அளிக்கும்
கட்டத்தின்
முதல்
நாளிலேயே,
மானிங்கிற்கு
எதிரான
குற்றச்சாட்டுக்களிலுள்ள
தயாரிப்புத்
தன்மையை
அம்பலப்படுத்தியது.
அரசு
தரப்பு
வக்கீல்
எந்தவித
குறிப்பிட்ட
அல்லது
நம்பகத்தன்மை
உடைய
சான்றுகளை
அவருடைய
கூற்றான
மானிங்
அமெரிக்க
இராணுவ,
உளவுத்துறை
நடவடிக்கைகளுக்குச்
சேதம்
விளைவிக்கும்
இரகசிய
ஆவணங்களைக்
கசிய
விட்டார்,
அமெரிக்கப் படைகளின்
பாதுகாப்பை
சமரசத்திற்கு
உட்படுத்தினார்
என்று
முன்வைக்க
முடியவில்லை.
அரசு
தரப்பில்
முதலில்
ஓய்வு
பெற்ற
ஜெனரல்
ரோபர்ட்
கார்
சாட்சியமளிக்க
அழைக்கப்பட்டார்.
கார்
அரசாங்கக்
குழு
ஒன்றிற்குத்
தலைமை
தாங்கியிருந்தார்;
அது
மானிங்கின்
கசிவுகளால்
தேசிய
பாதுகாப்பிற்கு
ஏற்பட்டதாகக்
கூறப்படும்
சேதங்களை
மதிப்பிடும்
பணி
அவருக்கு
கொடுக்கப்பட்டிருந்தது.
அவருடைய
சாட்சியம்
மானிங்கிற்கு
எதிரான
அரசாங்கத்தின்
சட்டவிரோதப்
பழிவாங்கும்
தன்மையின்
பெரும்
ஆதாரங்களை
அடிக்கோடிட்டுக்
காட்டியது.
சேதம்
இழைக்கப்பட்டது எனக்
கூறப்படுபவற்றை
மதிப்பிட
காரின்
குழு
10
மாதங்களை
எடுத்துக்
கொண்டது.
அவற்றுள்
ஒரு
மாதத்தில்
குழுவானது
125
பேருக்கு
மேல்
ஒவ்வொரு
நாளும்
24 மணி
நேரம்,
வாரத்திற்கு
ஏழு
நாட்கள்
என்று
நியமித்திருந்தது.
குழுவின்
செயற்பாடுகளுக்கான
மொத்தச்
செலவு
6.2
மில்லியன்
டாலர்களாகும்.
ஆனால்
எடுத்துக்
கொண்ட
நேரம்,
செலவழித்த
பணத்திற்கு,
அரசு
தரப்பிற்கு
உதவும்
வகையில்
எதுவும்
கண்டறியப்படவில்லை.
புதனன்று
கார்
குறைந்தப்பட்சம்
ஒரு
ஆப்கானிய
நாட்டவர்
கொல்லப்பட்டார்
மானிங்
அம்பலப்படுத்தியதால்
என்று
கூறினார்.
அவருடைய
முடிவு
ஒரு
தாலிபன்
அறிக்கையை
தளமாகக்
கொண்டது,
அக்குழு
அம்மனிதரை
விசாரனையின் போது
கொன்றது.
“எதிரிகள்
இன்னும்
தெளிவாக
கிராம
மக்கள்
அமெரிக்கப்
படைகளுடன்
ஒத்துழைத்தனர்
என்று
அறிந்திருந்தால்,
இம்மக்கள்
இன்னும்
ஆபத்தான
நிலையை
எதிர்கொண்டிருப்பர்”
என்றார்
கார்.
ஆனால்
குறுக்கு
விசாரணையின்போது,
கார்
அவருடைய
பணிக்குழு
நபரின்
பெயரை
அடையாளம்
காணமுடியவில்லை
என்பதை
ஒப்புக்
கொண்டார்.
இதன்
விளைவாக
நீதிபதி
லிண்ட்
ஆப்கானிய
ஒத்துழைப்பாளர்
கொலைக்கான
சான்று
எனப்
பதிவு
செய்யத்
தான்
அனுமதிக்கவில்லை
என்று
கூறிவிட்டார்.
மானிங்கின்
வக்கீல்கள்
இராணுவ
நீதிபதி
அவருடைய
இரண்டு
ஒற்றாடல்
தண்டனைகள்,
இரு
திருட்டு
பற்றிய
தண்டனைகளை
இணைக்கலாம்
என்று
கோரினர்;
இது
அதிகப்பட்சமாக
சிறைத்தண்டனையை
116
ஆண்டுகளுக்குக்
கொண்டுவரும்.
அரசு தரப்பு
கிட்டத்தட்ட
20
சாட்சிகளை
அழைக்கும்
திட்டம்
கொண்டுள்ளதாகக்
கூறியது;
பலரும்
மூடிய
நீதிமன்றத்தில்
இரகசியத்
தகவல்
குறித்து
சாட்சியம்
அளிப்பர்.
இந்தச்
சாட்சியங்கள்
எதிர்
புலனாய்வு,
மூலோபாயத்
திட்டம்,
பயங்கரவாதம்
ஆகிய
துறைகளில்
“வல்லுனர்களாக”
இருப்பவர்களாகும்.
செவ்வாயன்று
நீதிபதி
லிண்டின்
தீர்ப்பையடுத்து,
பல
தனி
நபர்களும்
அமைப்புக்களும்
மானிங்
வழக்கு
முன்வைக்கும்
முன்னோடித்தன்மையைப்
பற்றி
கருத்துத்
தெரிவித்து
அறிக்கைகளை
வெளியிட்டுள்ளன.
“பிராட்லி
மானிங்கின்
வெளிப்படுத்தல்கள்
எனப்படுபவைகள்
போர்க்
குற்றங்களை
அம்பலப்படுத்தியுள்ளன,
புரட்சிகளைத்
தூண்டியுள்ளன,
ஜனநாயக
சீர்திருத்தங்களை
ஏற்படுத்தியுள்ளன.
இவர்
ஒரு
சிறந்த
தகவல்
வெளியிட்டவர்”
என்றார்
ஜூலியன்
அசாஞ்.
“ஒரு
தகவல்
வெளியிடுபவருக்கு
எதிரான
முதல்
உளவு
தண்டனை
இதுவாகும்.”
அசாஞ்
தொடர்ந்தார்.
“இது
ஓர்
ஆபத்தான
முன்னோடி,
தேசிய
பாதுகாப்பு
தீவிரத்திற்கு
ஒரு
உதாரணமாகும்.
இது
ஒரு
குறுகிய
பார்வையுடைய
தீர்ப்பு,
பொறுத்துக்
கொள்ள
முடியாது,
மாற்றப்பட
வேண்டும்.
பொது
மக்களுக்கு
உண்மைத்
தகவல்
கொடுத்தல்
ஒருபோதும்
“உளவு
பார்த்தல்”
ஆகாது....
“அரசு
தரப்பானது
பிராட்லி
மானிங்கின்
வெளிப்பாடுகளால்
ஒரு
நபருக்கு
தீமை
ஏற்பட்டது
என்று
சான்று
எதுவும்
கொடுக்க
முடியவில்லை,
கூறவும்
முடியவில்லை.
திரு
மானிங்
ஒரு
வெளி
சக்திக்கு
உழைத்தார்
என்றும்
அரசாங்கம்
ஒருபோதும் கூறவில்லை.”
அரசியலமைப்பு
உரிமைகள்
மையமானது
(CCR)
தீர்ப்பை
ஒட்டி
அறிக்கை
ஒன்றை
வெளியிட்டுள்ளது:
“எதிரிக்கு
உதவுதல்
என்னும்
குற்றங்கள்
(அதில்தான்
மானிங்
சரியாக
விடுவிக்கப்பட்டுள்ளார்)
செய்தி
ஊடகத்தின்
முக்கிய
கவனத்தைப்
பெற்றபோது,
உளவு
பார்த்தல்
சட்டமே
முதல்
உலகப்
போர்
சகாப்தத்தின்
இழிந்த
எச்சம்
ஆகும்;
அரசியல்
எதிர்ப்பு,
போர்
எதிர்ப்புச்
செயற்பாடுகளை
நசுக்கும்
கருவியாகப்
பயன்படுத்தப்பட்டது;
மேலும்
அரசாங்கம்
மானிங்கிற்கு
எதிராக
இதைப்
பயன்படுத்தியதே
சீற்றத்திற்கு
உரியது.
போர்க்
குற்றங்கள்,
இன்னும்
பல
தவறுகள்
அரசாங்கத்தின்
திறமையற்ற
தன்மை
குறித்து
தகவல்
வெளியிடுபவர்
அரசாங்க
ஊழியர்கள்
முதலாவது
சட்டத் திருத்தத்தின்படி
பாதுகாக்கப்பட
வேண்டும்.
“எதிரிக்கு
உதவுகிறோம்
எனக்
கண்டறியப்படாவிட்டாலும் போர்க்குற்றங்களை
அம்பலப்படுத்தும்
எவரும்
ஆயுள்தண்டனை
பெறலாம்
என்னும்
நாட்டில்
நாம்
வாழ்கிறோம்.
அதே
நேரத்தில்
போர்க்
குற்றங்கள்
செய்ய
பொறுப்புடையவர்கள்
சுதந்திரமாக
உள்ளனர்....
மானிங்கை
வழிநடத்தியது,
குற்றச்சாட்டு,
தண்டனை
அனைத்தும்
ஒரு
நோக்கத்திற்குத்தான்:
அதாவது
தகவல் வெளிப்படுத்தும்
திறன்
உடையவர்களை
மௌனப்படுத்தவும்,
செய்தி
ஊடகத்தை
மௌனப்படுத்தவும்தான்.” |