சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan army fires on protesters, killing 17-year-old youth

இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 17 வயது இளைஞனைக் கொன்றது

By Panini Wijesiriwardene and M. Rajapakse
3 August 2013

use this version to print | Send feedback

கடந்த வியாழக்கிழமை, கனரக ஆயுதங்களை ஏந்திய இலங்கை இராணுவ கமாண்டோக்கள், கொழும்பில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பஹாவில், சுமார் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், 17 வயதான அகில தினேஷ் கொலை செய்யப்பட்டதோடு மற்றும் பலர் காயமுற்றனர்.
அவரது அடிவயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் தினேஷ் இறந்தார். மற்றொரு காயமடைந்த இளைஞர் மோசமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள், அந்தப் பகுதியில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் சிலருக்கு துப்பாக்கி சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன
.

கல்லொலுவ, நடுன்கம, ரதுபஸ்வெல, ஊறுவெல, கதுறுவத்த, கிரிகித்த மற்றும் அம்பரலுவ உட்பட பல கிரமாங்களைச் சேர்ந்த, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள், இரப்பர் கையுறை உற்பத்தி ஆலையான வினோக்ரஸ் டிப் புரடக்ட்ஸ் நிறுவனத்தால் உள்ளூர் குடிநீர் மாசுபடுத்தப்படுவதை எதிர்த்தே ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருந்தனர். கிராமத்தவர்கள், பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லாமல் தங்கள் எதிர்ப்புக்களை நிறுத்த மறுத்து, இராணுவ தாக்குதலுக்கு முன் பல நாட்களாக கூடியிருந்தனர்.

வியாழக்கிழமை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வெலிவேரியவில் கண்டி-கொழும்பு அதிவேக வீதியின் பிரதான சந்தியிலும், பெலும்மஹர மற்றும் ரதுபஸ்வெலவிலும் ஒன்று கூடி வீதியை மறித்ததோடு, கலைந்து செல்லுமாறு பொலிஸ் விடுத்த கட்டளையையும் புறக்கணித்தனர். "எங்களுக்கு அமில தண்ணீர் வேண்டாம்: சுத்தமான நீர் எங்களுக்கு கிடைத்தால் அமைதி வரும்", போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை அவர்கள் சுமந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை மீனவர் மீது கடந்த ஆண்டு கொலைத் தாக்குதல் நடத்திய பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த திட்டமிட்ட தாக்குதல், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க இராஜபக்ஷ அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை காட்டும் மற்றொரு உதாரணமாகும். ஊடக அறிக்கைகளின் படி, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஒரு அரசாங்க பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே, கம்பஹா ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இராணுவ அணிதிரட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அங்கிகளை அணிந்து, டி-56 தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதபாணிகளாக்கப்பட்ட சுமார் 1,000 படையினர் அப் பகுதியில் நிலைகொண்டனர். இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படை உறுப்பினர்கள் சுமார் 2 மணியளவில் பெலும்மஹரவுக்கு வந்து, உடனடியாக கலைந்து செல்லக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினர்.

சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைக்க மற்றொரு படைக் குழு வெலிவேரியவில் திரட்டப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் ஐந்து நிமிடங்களில் கலைந்து செல்லுமாறு ஒரு இராணுவ பிரிகேடியர் விடுத்த உத்தரவுக்கு இணங்கியபோது, அப்போதிருந்த சலசலப்பின் மத்தியில், கமாண்டோக்கல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர். ஆர்ப்பாட்டக்காரர்களை நீண்ட பொல்லுகள், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கி கொண்டு தாக்கினர்.


இராணுவத் தாக்குதலில்
உயிர் தப்பிய ஒருவர்
.

இராணுவத்தால் நகரின் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு தாக்குதல் இரவும் தொடர்ந்தது. சிப்பாய்கள் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களையும் சோதனையிட்டனர். மக்கள் அருகில் உள்ள தேவாலயம் உட்பட பல இடங்களுக்கு பாதுகாப்பு தேடி எல்லா திசைகளிலும் தப்பி ஓடிய போதிலும், இராணுவம் தேவாலயத்தினுள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், தேவாலயத்தின் தரை மற்றும் சுவர்களில் இரத்த மற்றும் துப்பாக்கி சன்னம் துளைத்த அடையாளங்களையும் இரத்தக் கறைகளையும் கண்டனர்.

நேற்று வெலிவேரிய, கடைகள் மூடப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பு வலயம் போல் இருந்தது. கவச வாகனங்கள், படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் ரோந்து சென்றனர். வியாழக்கிழமை தாக்குதலில் தப்பியோடிய மக்கள் விட்டுச் சென்ற செருப்பு சப்பாத்துகளும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை பாதுகாக்கும் முயற்சியில் அமைத்த உடைக்கப்பட்ட தடைகளும் வீதியெங்கும் காணப்பட்டன. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், உடலில் இரத்தக் காயங்களையும், தேவாலயத்தின் தரை மற்றும் சுவர்களில் பல தோட்டா அடையாளங்களையும் கண்டனர்.

உலக சோசலிச வலை தள நிருபர்கள் தேவாலயத்தின் தளம் மற்றும் சுவர்களில் இரத்த மற்றும் புல்லட் மதிப்பெண்கள் இணைப்புகளை பார்த்தேன்.

ஒரு பதட்டமான அமைதி ஏற்பட்ட அதேவேளை, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் எதிரான கொந்தளிப்பான சீற்றம் நிலவியது. ஒரு பெண் தனது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை எமது நிருபர்களுக்கு காட்டினார். வியாழக்கிழமை பாதுகாப்பு தேடி சுமார் 15 பேர் உள்ளே விரைந்தபோது, அவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார். இராணுவம் வீட்டுக்குள் பாயும் முன்னர் அவர் தனது பிள்ளைகளை படுக்கைக்கு கீழ் மறைத்து வைத்தார். கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த இராணுவம், தளபாடங்கள் மற்றும் குளியலறை மறைப்புக்களையும் சேதப்படுத்தியது.
எம்மிடம் பேசிய ஒரு சிறுமி கூறுகையில், "போர் வீரர்களுக்கு நாங்கள் அன்பு காட்ட வேண்டும் என பாடசாலையில் எங்களுக்கு கூறினர். உண்மையில், நாங்கள் அவர்களை நேசித்தோம். நாங்கள் இராணுவ வீரர்களுக்காக போதி பூஜை செய்தோம். இப்போது நமது நேசம் அழிந்துவிட்டது. எங்களை எந்த காரணமும் இல்லாமல் தாக்கினர். நாங்கள் அவர்களை வெறுக்கிறோம், என்றாள்
.

அவளின் தாயார் பேசும் போது: "இராணுவம் எங்களை இந்த முறையில் நடத்துகிறது எனில், அவர்கள் தமிழர்களை [நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் போது] எப்படி நடத்தியிருப்பர் என்று கற்பனை செய்துகொள்ளலாம், என்றார். அவர்கள் அதை ஒரு 'மனிதாபிமான நடவடிக்கை' என்று கூறினார். ஆனால் அந்த நடவடிக்கை எப்படி நடந்திருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்கின்றோம். நாங்கள், இராணுவம் எம்மை பாதுகாக்க உள்ளது என்று நினைத்தோம். அவர்களுக்கோ [அரசாங்கத்துக்கு], இரப்பர் கையுறை தொழிற்சாலையே பெரிய விஷயம். அது எங்களில் ஆயிரக்கணக்கானவர்களை பாதிப்பது பெரிய விடயம் அல்ல.

மற்றொரு குடியிருப்பாளர் WSWS இடம் கூறியதாவது: "அரசாங்கம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் [ஜனாதிபதியின் சகோதரரும், இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான] பசில் இராஜபக்ஷவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளிகள். பசில் [இராஜபக்ஷ] இந்த பகுதியில் இருந்து தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர். நாம் எதிர்காலத்தில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம்."

"ஊடகங்கள், போலீஸ், இராணுவம் மற்றும் நீதிமன்றங்களும் எங்களுக்கு எதிராக உள்ளன," என மற்றொருவர் கூறினார். "ஊடகங்கள் எங்கள் உண்மைக் கதையை சொல்லவில்லை."

நீதவான், உள்ளூர் குடிநீர் நச்சுப்படுத்தப்படுவது பற்றிய விசாரணையை ஆகஸ்ட் 12 வரை தள்ளி வைத்தது ஏன், என அவர் கேட்டார். இது ஒரு அவசர பிரச்சினை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகக் கோபமடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் விளக்கினார்.

"என் மார்பு மீது ஒரு தடியை வைத்த அவர்கள் [படையினர்]: 'நாங்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். உங்களால் எங்களை சவால் செய்ய முடியுமா?' என கேட்டனர்" என்று 60 வயதான ஒருவர் கூறினார்.

சுமார் 40 இளைஞர்களை தேவாலயத்தில் இருந்து இழுத்துச் சென்று, கீழே இருக்கச் சொல்லி, பின்னர் அவர்களை அடித்தனர் என ஒரு இளைஞர் கோபத்துடன் கூறினார். "வீதியை தடுத்ததாக அவர்கள் எங்களை குற்றம் சாட்டிவிட்டு, அவர்களே நேற்று முதல் வீதியை மூடி வைத்துள்ளனர்.

வினோக்ரஸ் டிப் புரடக்ட்ஸின் ஒரு முன்னாள் தொழிலாளி, இரசாயனம் கலந்த நீரை அப்புறப்படுத்த தொழிற்சாலையில் முறையான அமைப்பு இல்லை என்று கூறினார். 15,000 கலன்கள் வரை கழிவு நீர் அன்றாடம் நிலத்தில் ஊற்றப்படுகிறது. அது நிலத்தடி நீருடன் கலந்து பின்னர் கிணறுகளுக்கு கசிய முடியும், என்று அவர் கூறினார். இந்த தொழிற்சாலை, இலங்கையின் முக்கிய தொழில்துறை குழுக்களில் ஒன்றான ஹேலீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அத்துடன் அது ஆளும் இராஜபக்ஷ குழுவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உள்ளூர் கோடீஸ்வரரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நடுகமுவ வாசி ஒருவர், உள்ளூர் தண்ணீரை, குடிக்கப் பயன்படுத்த முடியாததோடு குளிப்பதற்கும் பயன்படுத்துவது சிரமமான அளவில் மாசுபட்டு இருக்கின்றது என்று விளக்கினார். சிலருக்கு சொறி வந்துள்ளதோடு பலர் நீரில் குளித்தல் பின்னர் வேறு புகார்களை சொல்கின்றனர், என அவர் கூறினார். பல உள்ளூர் நெல் வயல்கள் தரிசாக இருப்பதோடு பல மரணங்கள் மாசுபட்ட தண்ணீரால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரதேசவாசிகள் சந்தேகப்படுகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் போத்தல்களையும் வைத்திருந்ததாக பொய்யாகக் குற்றஞ்சாட்டிய இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய, இராணுவம் "குறைந்தபட்ச சக்தியையே" பயன்படுத்தியது என்று அறிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாக அடக்கியமையானது தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பையிட்டு அரசாங்கம் பதட்டமடைந்துள்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த சில வாரங்களாக, இரயில் போக்குவரத்து உட்பட ஏனைய தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் உர மானியங்களை அரசாங்கம் வெட்டியமைக்கு எதிரான கிராமப்புற ஏழைகளது ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், அமைதியின்மையை நசுக்க இராணுவ வழிமுறைகளை பயன்படுத்துவதோடு பொலிஸ்-அரச வடிவங்களின் பக்கம் திரும்புகின்றது.