சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : 

Australian SEP Senate candidates to address public meetings in Sri Lanka and New Zealand

The US “pivot” to Asia: Socialism, War and the International Working Class

அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் செனட் வேட்பாளர்கள் இலங்கை மற்றும் நியூசிலாந்தில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர்

 
அமெரிக்காவின் ஆசியாவுக்கு "மீண்டும் திரும்புதல்": சோசலிசம், போர் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம்

6 August 2013


செப்டம்பர் 7  நடக்கவுள்ள அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) வேட்பாளர்கள், இலங்கை மற்றும் நியூசிலாந்தில் இந்த மாதம் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர். சீனாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போர் அபாயம் உக்கிரமடைந்து வருவதற்கு எதிராக, ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கத்தினுள் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதே சோ... தேர்தல் பிரச்சாரத்தின் மைய இலக்காகும். இந்த கூட்டங்களில் முன்கொண்டுவரப்படவுள்ள விடயங்கள் இவையே ஆகும்.


1930களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முதலாளித்துவத்தின் மோசமான பூகோள நெருக்கடியின் மத்தியில், ஒபாமா நிர்வாகமானது தனது போட்டியாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று சரிவை ஈடுசெய்ய முயன்று வருகின்றது. ஒபாமாவின்  ஆசியாவிற்குமீண்டும் திரும்புதல்" என்ற திட்டத்தில் ஏற்கனவே உள்ளடங்கியுள்ள ஈவிரக்கமற்ற இராஜதந்திர ஆத்திரமூட்டல்களும் இந்தோ-பசிபிக் முழுவதுமான ஒரு அமெரிக்க இராணுவ கட்டமைப்பு அபிவிருத்தியும், பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கியுள்ளதோடு கொரிய தீபகற்பம் போன்ற பற்றியெரியக்கூடிய ஆபத்தான இடங்களுக்கு தீ மூட்டுகின்றது. இலங்கை மற்றும் நியூசிலாந்து உட்பட, இப்பிராந்தியத்தில் ஒவ்வொரு நாடும், வெளிப்படையான யுத்தத்துக்குள் துரிதமாக இழுத்துச் செல்லக்கூடிய பூகோள-அரசியல் பகைமை என்ற நீர்ச்சுழிக்குள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றன.

2013 அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம், இந்த நவீன போர் ஏற்பாடுகளைச் சூழவுள்ள அமைதிச் சதியை தகர்க்க சோ.ச.க. போராடுகிறது. அவுஸ்திரேலியாவில், ஒபாமாவின் திருப்பத்துடன் நிபந்தனையின்றி அணிசேர்ந்துகொண்டுள்ள தொழிற் கட்சி அரசாங்கம், டார்வினில் ஒரு அமெரிக்க கடற்தரைப் படையை நிலை நிறுத்துவது உட்பட அமெரிக்க படைகள் அவுஸ்திரேலிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்தியுள்ளது. மத்திய அவுஸ்திரேலியாவில் பைன் கெப் போன்ற வேவு தளங்கள், ஏற்கனவே மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தனது ஆளில்லா விமான படுகொலைகளை மேற்கொள்ளுவதற்காக ஒபாமா நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சோ.ச.க. (அவுஸ்திரேலியா), இலங்கையிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் இணைந்து, யுத்தத்தின் தோற்றுவாயான முதலாளித்துவத்தையும் அதன் பிற்போக்கு தேசிய அரசு முறைமையையும் ஒழிப்பதன் ஊடாக, இராணுவவாத காட்டுமிராண்டித்தனத்தின் புதிய சகாப்தம் உருவாவதை தடுக்கும் வல்லமை படைத்த ஒரேயொரு சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே என்று வலியுறுத்துகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து கூட்டங்களில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், தொழிலாள வர்க்கம் ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய சர்வதேசிய சோசலிச முன்னோக்கு பற்றி கலந்துரையாடுவர். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கை

கொழும்பு ஆகஸ்ட் 15,
வியாழக்கிழமை, மாலை 4.30 மணி, புதிய நகர மண்டபம்,
கிரீன் பாத், கொழும்பு

காலி ஆகஸ்ட் 17,

சனிக்கிழமை, மாலை 3.00 மணி
மேல் மாடி, விளையாட்டு பார்வையாளர் மண்டபம்
காலி

நியூசிலாந்து வெலிங்டன்

ஆகஸ்ட் 24, சனிக்கிழமை பி.ப. 1.30 மணி
MacKenzie Room
St. John’s in the City, Conference Venue
Corner of Willis and Dixon Streets, Wellington
Tickets: $3 or $2 concession

அங்கீகரித்தவர் நிக் பீம்ஸ்: 113/55 Flemington Rd, North Melbourne VIC 3051