WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan SEP to contest
provincial council election in Jaffna
இலங்கை
சோசலிச
சமத்துவக் கட்சி
யாழ்ப்பாணத்தில்
மாகாண
சபை
தேர்தலில்
போட்டியிடுகிறது
By Socialist
Equality Party (Sri Lanka)
5 August 2013
Back to screen version
இலங்கையில்
சோசலிச
சமத்துவக்
கட்சி,
செப்டம்பர்
21
அன்று
நடைபெறவுள்ள
மாகாண
சபை
தேர்தலில்
வட
மாகாணத்தின்
யாழ்ப்பாண
மாவட்டத்தில்
போட்டியிடுகிறது.
மத்திய
மற்றும்
வட
மேல்
மாகாணங்களுக்கான
தேர்தலும்
அதே
நாளில்
நடைபெறும்.
நீண்ட
பட்டியலில்
அடங்கும்
அரசியல்
கட்சிகள்
மற்றும்
சுயேச்சை
குழுக்களுக்கும்
எதிராக,
இராணுவவாதத்தை
எதிர்க்கவும்
தொழிலாள
வர்க்கத்தினதும்
ஒடுக்கப்பட்ட
மக்களினதும்
ஜனநாயக
உரிமைகளையும்
வாழ்க்கைத்
தரத்தையும்
பாதுகாக்கவும்,
ஒரு
சர்வதேச
சோசலிச
வேலைத்திட்டத்தினை
அபிவிருத்தி
செய்யும்
ஒரே
கட்சி
சோசலிச
சமத்துவக்
கட்சி
மட்டுமேயாகும்.
சோசலிச
சமத்துவக்
கட்சி
தேர்தல்
விதிமுறைகளுக்கு
ஏற்ப,
நீண்டகால
கட்சி
உறுப்பினரான
திருஞானசம்பந்தர்
தலைமையில்
19
வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது.
சோசலிச
சமத்துவக்
கட்சி
இந்த
தேர்தலை,
தொழிலாள
வர்க்கம்
எதிர்கொள்ளும்
முக்கிய
அரசியல்
பிரச்சினைகளை
விளக்க
பயன்படுத்திக்கொள்ளும்.
வளர்ச்சி
கண்டுவரும்
உலக
முதலாளித்துவத்தின்
நெருக்கடிக்கு
பிரதிபலிப்பாக,
உலகம்
முழுவதும்
உள்ள
தனது
சம
தரப்பினரைப்போல்,
ஜனாதிபதி
மஹிந்த
இராஜபக்ஷவின்
அரசாங்கமும்,
தொழிலாளர்கள்
மற்றும்
இளைஞர்களுக்கு
எதிராக
ஒரு
சமூக
எதிர்ப்-புரட்சியை
திணிக்க
முற்படுகிறது.
அதேசமயம்,
உலக
மற்றும்
பிராந்திய
சக்திகளுக்கு
இடையேயான
பூகோள
அரசியல்
மோதல்
என்ற
நீர்ச்சுழிக்குள்
இலங்கை
மேலும்
மேலும்
இழுபட்டுச்
செல்கின்றது.
சீனாவின்
செல்வாக்கை
கீழறுக்கும்
நோக்கிலான
ஒபாமா
நிர்வாகத்தின்
“ஆசியாவிற்கு
திரும்புதல்”
என்ற
வேலைத்
திட்டத்திலும்
மற்றும்
சீனாவிற்கு
எதிரான
அமெரிக்காவின்
போர்
தயாரிப்புகளிலும்
இது
மிகத்
தெளிவாக
வெளிப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
மஹிந்த
இராஜபக்ஷ,
தனது
கொள்கைகளை
திணிக்க,
தசாப்தகால
இனவாத
போரின்போது
கட்டியெழுப்பப்பட்ட
பொலிஸ்-அரச
எந்திரத்தை
தொழிலாள
வர்க்கத்திற்கு
எதிராக
பயன்படுத்த
தயாராகின்றார்.
பிரிவினைவாத
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
தோல்வியடைந்து
நான்கு
ஆண்டுகள்
கடந்த
பின்னரும்,
யுத்தத்தால்
நாசமாக்கப்பட்ட
வடக்கு
மற்றும்
கிழக்கு
மாகாணங்கள்
இன்னமும்
இராணுவ
ஆக்கிரமிப்பின்
கீழ்
உள்ளன.
பொருளாதார
நடவடிக்கைகளை
கட்டுப்படுத்துவது
உட்பட,
பொதுமக்கள்
வாழ்வின்
அனைத்து
அம்சங்களிலும்
இராணுவம்
ஊடுருவுகிறது.
இராஜபக்ஷ
பிரதானமாக
தமிழர்கள்
செறிந்து
வாழும்
வட
மாகாணத்தில்
தேர்தலை
நடத்த
விரும்பவில்லை.
அவரது
அரசாங்கம்,
இராணுவத்திலும்
மற்றும்
தமிழ்
முதலாளித்துவ
தட்டுக்களுக்கு
எந்தவொரு
சலுகையும்
வழங்குவதை
கடுமையாக
எதிர்க்கும்
சிங்களப்
பேரினவாத
பங்காளிகளிலுமே
தங்கியிருக்கின்றது.
அமெரிக்கா,
இந்தியா,
ஜப்பான்
மற்றும்
ஏனைய
சக்திகளின்
அழுத்தம்
காரணமாகவே
ஜனாதிபதி
இந்த
தேர்தலுக்கு
அழைப்பு
விடுத்தார்.
அமெரிக்காவும்
இந்தியாவும்
மற்றும்
ஏனைய
சக்திகளும்
இலங்கை
தமிழர்களின்
ஜனநாயக
உரிமைகளை
பற்றிக்
கவலைப்படவில்லை.
அவை
இராஜபக்ஷவின்
இனவாத
யுத்தத்தை
ஆதரித்ததோடு
இராணுவத்தின்
அட்டூழியங்கள்
மற்றும்
போர்க்
குற்றங்களை
மூடிமறைத்தன.
புலிகளின்
தோல்வி
தவிர்க்க
முடியாததாக
ஆன
பின்னரே,
அமெரிக்கா
இராஜபக்ஷ
அரசாங்கத்தை
சீனாவிடம்
இருந்து
தூர
விலகச்
செய்வதற்கு
நெருக்கும்
வழிமுறையாக,
“மனித
உரிமைகள்”
பிரச்சினையை
எழுப்பத்
தொடங்கியது.
இலங்கையில்
தமிழர்கள்
நடத்தப்படும்
விதம்
பற்றி
தென்னிந்திய
மாநிலமான
தமிழ்
நாட்டில்
பொது
மக்களின்
சீற்றத்தை
தணிக்கும்
முயற்சியாகவே
இந்தியா,
வட
மாகாண
சபை
தேர்தலை
நடத்த
அழுத்தம்
கொடுத்தது.
சிங்களப்
பேரினவாத
கட்சிகள்
கோரியவாறு,
மாகாண
சபையின்
பொலிஸ்
மற்றும்
நில
அதிகாரங்களை
இரத்து
செய்யும்
திட்டங்களை
ஒத்திவைக்குமாறும்
இந்தியா
இராஜபக்ஷவுக்கு
அழுத்தம்
கொடுத்தது.
மத்திய
மற்றும்
வடமேல்
மாகாணங்களில்
தேர்தல்களை
முன்கூட்டியே
நடத்த
அரசாங்கம்
முடிவு
செய்தமை
ஒரு
அரசியல்
சூழ்ச்சியாகும்.
என்ன
விலை
கொடுத்தாவது
தேர்தலில்
வெற்றி
பெறுவதன்
மூலம்,
இராஜபக்ஷ
தனது
கொள்கைகளுக்கு
மக்கள்
ஆணை
கிடைத்துள்ளதாக
கூறிக்கொள்ள
கூடும்.
அவர்
சர்வதேச
நாணய
நிதியம்
கட்டளையிட்டுள்ள
தனது
சிக்கன
நடவடிக்கைகளை
நியாயப்படுத்துவதற்கு
தேர்தல்
வெற்றியை
பயன்படுத்துவார்.
உள்நாட்டு
யுத்தத்தின்
இறுதி
மாதங்களில்
பல்லாயிரக்கணக்கான
பொதுமக்கள்
கொல்லப்பட்டமைக்கு
அரசியல்
பொறுப்பாளியான
இராஜபக்ஷ
அரசாங்கம்,
குறிப்பாக
வடக்கில்
தொழிலாளர்கள்,
விவசாயிகள்
மற்றும்
இளைஞர்கள்
மத்தியில்
வெறுப்புக்குள்ளாகியுள்ளது.
தனது
அரசியல்
எதிரிகளை
கவிழ்ப்பதற்கு
அது
வன்முறை
உட்பட
எந்த
வழிமுறையையும்
நாடும்.
அதன்
கூட்டணி
பங்காளியான
ஈழ
மக்கள்
ஜனநாயக
கட்சி
(ஈ.பீ.டி.பீ.),
இராணுவத்தின்
மறைமுக
ஆதரவுடன்
யாழ்ப்பாணத்தில்
இயங்கி
வரும்
அதன்
ஆயுத
குண்டர்களை
பயன்படுத்துவதில்
இழிபுகழ்பெற்றது.
ஸ்ரீலங்கா
முஸ்லீம்
காங்கிரசும்
இராஜபக்ஷவின்
கூட்டணியின்
பங்காளியாகும்.
ஆனால்
அது
தேர்தலில்
தனித்துப்
போட்டியிடுவது,
அரசாங்கத்தில்
பிளவுகள்
ஆழமடைந்து
வருவதன்
அறிகுறியாகும்.
இராஜபக்ஷ
மற்றும்
அவரது
சகோதரரும்
பாதுகாப்பு
செயலாளருமான
கோடாபய
இராஜபக்ஷவும்,
முஸ்லீம்-விரோத
பேரினவாத
பிரச்சாரத்தை
முன்னெடுக்கும்
பொது
பல
சேனா,
சிங்கள
ராவய
போன்ற
சிங்கள-பௌத்த
அதி
தீவிரவாத
அமைப்புகளை
ஊக்குவிக்கின்றனர்.
எதிர்க்
கட்சிகளில்
ஒன்றான
மக்கள்
விடுதலை
முன்னணியும்
(ஜே.வி.பீ)
தேர்தலில்
போட்டியிடுகின்றது.
ஜே.வி.பீ.
2006ம்
ஆண்டு
விடுதலை
புலிகளுக்கு
எதிரான
இராஜபக்ஷவின்
புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்தை
ஆதரித்த
ஒரு
சிங்கள
அதி
தீவிரவாத
கட்சியாகும்.
அது
அரசாங்கத்தின்
யுத்த
வரவு
செலவுத்
திட்டங்களுக்கு
வாக்களித்ததோடு,
தமிழ்
மக்களுக்கு
எதிரான
ஒவ்வொரு
ஜனநாயக
விரோத
நடவடிக்கையையும்
ஆதரித்தது.
வடக்கில்
உள்ள
பிரதான
எதிர்
கட்சி,
தமிழ்
முதலாளித்துவ
கட்சிகளின்
கூட்டணியான
தமிழ்
தேசியக்
கூட்டமைப்பாகும்.
அமெரிக்கா,
இந்தியா
மற்றும்
பிற
சக்திகளின்
ஆதரவுடன்,
தமிழ்
தேசியக்
கூட்டமைப்பு
கொழும்புடன்
ஒரு
அதிகார
பரவலாக்கல்
ஒழுங்கை
பெற
ஏக்கத்துடன்
முயற்சிக்கின்றது.
அது
தமிழ்
முதலாளித்துவத்தின்
பொருளாதார
மற்றும்
அரசியல்
நலன்களை
பாதுகாப்பதில்
அக்கறை
காட்டுகிறதே
அன்றி,
தமிழ்
மக்களின்
ஜனநாயக
உரிமைகளில்
அல்ல.
கூட்டமைப்பு,
முன்னாள்
உயர்
நீதிமன்ற
நீதிபதி
சி.வி.
விக்னேஸ்வரனை
தனது
மாகாண
முதலமைச்சர்
வேட்பாளராக
நிறுத்தியுள்ளது.
விக்னேஸ்வரன்
கொழும்பு
ஸ்தாபனத்தின்
பகுதியாக
இருந்து
வந்துள்ளாரே
அன்றி,
கடந்த
மாதம்
வரை
கூட்டமைப்பின்
உறுப்பினராக
இருக்கவில்லை.
கூட்டமைப்பின்
தலைமைத்துவம்,
விக்னேஸ்வரனை
நிறுத்துவதன்
மூலம்,
புலிகளுக்கான
தமது
முந்தைய
ஆதரவில்
இருந்து
தூர
விலக
முடியும்
என்றும்,
மற்றும்
சர்வதேச
சக்திகளுக்கும்
கொழும்பு
அரசாங்கத்துக்கும்
ஏற்றுக்கொள்ளக்
கூடிய
ஒரு
நபரை
முன்நிறுத்த
முடியும்
என்றும்
கணக்கிட்டுள்ளது.
1983ல்
தீவின்
உள்நாட்டு
யுத்தத்தை
தொடங்கியமைக்கு
பொறுப்பாளியும்
இராஜபக்ஷவின்
புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்தை
ஆதரித்த
வலதுசாரி
எதிர்க்
கட்சியுமான
ஐக்கிய
தேசியக்
கட்சியும்
(யூ.என்.பீ.),
தேர்தலில்
போட்டியிடுகின்றது.
அது
நவ
சமசமாஜ
கட்சி
(ந.ச.ச.க.),
ஐக்கிய
சோசலிச
கட்சி
(ஐ.சோ.க.)
போன்ற
போலி
இடதுகளின்
ஆர்வம்
நிறைந்த
ஒத்துழைப்பிலேயே
தங்கியிருக்கின்றது.
இந்த
"கூட்டு
எதிர்ப்பு"
என
சொல்லப்படுவதன்
குறிக்கோள்,
ஜனநாயக
உரிமை
மீறல்களிலும்
சந்தை
சார்பு
மறுசீரமைப்பிலும்
யூ.என்.பீ.யின்
நீண்ட
சாதனையை
மூடிமறைப்பதாகும்.
நவசமசமாஜ
கட்சியும்
ஐக்கிய
சோசலிச
கட்சியும்,
அமெரிக்க
ஏகாதிபத்தியம்
தமிழ்
மக்களின்
உரிமைகளை
பாதுகாக்கும்
என்ற
ஆபத்தான
மாயையை
முன்னிலைப்படுத்துவதில்
தமிழ்
தேசியக்
கூட்டமைப்புக்கு
உதவி
செய்கின்றன.
இந்த
அமைப்புக்கள்,
சிங்களம்
மற்றும்
தமிழ்
ஆளும்
தட்டுக்கள்
இடையே
ஒரு
அதிகார
பரவலாக்கல்
ஒழுங்கிற்கான
அடிப்படையாக,
மாகாண
சபைகளுக்கு
அதிகாரங்களை
பகிர
கூட்டமைப்பு
விடுக்கும்
அழைப்புக்கு
ஆதரவளிக்கின்றன.
இந்த
இரு
குழுக்களும்
வட
மாகாணத்தில்
வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளன.
சோசலிச
சமத்துவக்
கட்சி,
ஆளும்
வர்க்கத்தினதும்
அவர்களுக்கு
வக்காலத்து
வாங்கும்
போலி
இடதுகளினதும்
பிரிவுகள்
அனைத்தினதும்
சூழ்ச்சிகளை
நிராகரிக்க
வேண்டும்
என
தொழிலாள
வர்க்கத்திற்கு
அழைப்பு
விடுக்கின்றது.
தீவின்
வடக்கு
மற்றும்
கிழக்கில்
இருந்து
அனைத்து
படைகளையும்
நிபந்தனையின்றி
உடனடியாக
திரும்ப
பெறக்
கோரும்
அதேவேளை,
சோசலிச
கொள்கைகளை
அமுல்படுத்துவதற்கு
தொழிலாளர்களதும்
விவசாயிகளதும்
அரசாங்கத்துக்கான
ஒரு
ஐக்கியப்பட்ட
போராட்டத்தின்
பாகமாக
மட்டுமே,
சிங்கள,
தமிழ்
மற்றும்
முஸ்லீம்களுமாக
அனைத்து
உழைக்கும்
மக்களதும்
ஜனநாயக
உரிமைகளை
பாதுகாக்க
முடியுமென
சோசலிச
சமத்துவக்
கட்சி
வலியுறுத்துகிறது.
வரும்
வாரங்களில்,
சோசலிச
சமத்துவக்
கட்சி
குழுவினர்
தெற்காசியாவிலும்
அனைத்துலகிலும்
ஐக்கிய
சோசலிச
குடியரசுகளுக்கான
பரந்த
போராட்டத்தின்
ஒரு
பகுதியாக,
ஸ்ரீலங்கா-ஈழம்
சோசலிச
குடியரசு
என்ற
வேலைத்திட்டத்துக்காக
தொழிலாளர்கள்,
விவசாயிகள்
மற்றும்
இளைஞர்கள்
மத்தியில்
விரிவாக
பிரச்சாரம்
செய்வார்கள்.
இந்த
வேலைத்
திட்டத்தை
ஆதரிக்கும்
அனைவரையும்
எமது
பிரச்சாரத்துக்கு
செயலளவில்
ஆதரவளிக்குமாறும்,
எல்லாவற்றுக்கும்
மேலாக
எதிர்வரும்
போராட்டங்களுக்கு
தேவையான
புரட்சிகர
கட்சியாக
சோசலிச
சமத்துவக்
கட்சியை
கட்டியெழுப்ப
இணையுமாறும்
நாம்
அழைப்பு
விடுக்கின்றோம்.
கட்சியின்
500,000
ரூபா
தேர்தல்
நிதிக்கு
தாராளமாக
நன்கொடை
வழங்குமாறும்
நாம்
வேண்டுகோள்
விடுக்கின்றோம்.
|