சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Detroit bankruptcy and the drive toward dictatorship

டெட்ராயிட் திவால்நிலையும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பும்

Andre Damon and Barry Grey
2 August 2013

use this version to print | Send feedback

டெட்ராயிட்டில் மட்டுமல்லாது அமெரிக்காவெங்கிலுமான நகரங்கள் முழுவதிலுமே அரசுத் துறை  ஊழியர்களின் ஓய்வூதியங்களிலும் சுகாதார நல உதவிகளிலும் மிகப் பெரும் வெட்டுகளைத்  திணிப்பதற்கும் ஒப்பந்தங்களைக் கிழித்துத் தூக்கிப் போடுவதற்கும் தேர்ந்தெடுக்கப்படாத  அதிகாரிகளையும் திவால்நிலை நீதிமன்றங்களையும் பயன்படுத்துவதற்கான ஒரு உதாரண மாதிரியாக  ஊடகங்களில் டெட்ராயிட்டின் திவால்நிலை பரவலாக மேற்கோள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டெட்ராயிட்டின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு கூட்டரசின் எந்தவொரு உதவியையும்  வழங்குவதையோ திவால்நிலையைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் நல உதவிகளை  இல்லாதொழிக்க வங்கிகள் மற்றும் பத்திர உரிமைதாரர்களின் முகமூடியாக சேவை செய்யும் மாநில  மற்றும் நகர அதிகாரிகள் செய்யும் முயற்சியைத் தட்டிக் கேட்பதையோ ஒபாமா நிர்வாகம்  நிராகரித்திருக்கிறது. டெட்ராயிட் திவால்நிலை என்பது வெள்ளை மாளிகையால்  ஒருங்கிணைக்கப்படுகிற தேச அளவிலான ஒரு விரிந்த  கொள்கையின் பகுதியே என்பது இதன்மூலம்  தெளிவாகியிருக்கிறது.

அரசுத் துறை ஊழியர்கள் மீதான தாக்குதலுடன் கைகோர்த்து தேர்தல்கள் உள்ளிட்ட ஜனநாயக  நடைமுறைகள் ஒத்துவராதவை என்பதையே டெட்ராயிட் நெருக்கடி விளங்கப்படுத்துவதாகக் கூறும்  கூற்றுகளும் அதிகமாக வருகின்றன. பல கட்டுரையாளர்களும் சொல்கிறார்கள், வாகன உற்பத்தியில்  உலகின் முன்னாள் தலைநகரது நிதிப் பொறிவு என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவின் ஒரு  வெளிப்பாடு அல்லவாம், மாறாக இதுஆளுகையின் தோல்வியாம், இதனை ஆட்சிமுறையின் மேலதிக  எதேச்சாதிகார வடிவங்களின் மூலமும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இன்னும் மேலதிகமாய்  நேரடியான அரசியல் கட்டுப்பாடு வழங்குவதன் மூலமும் தான் பழைய நிலைக்குக் கொண்டு வர  முடியுமாம்.

ஆளும் வர்க்கம் தனது பொருளாதாரக் கொள்கைகள் வெகுஜன சமூக எதிர்ப்பைத் தூண்டும் என்பதை  நன்கு அறிந்து வைத்திருக்கின்றது. ஒடுக்குமுறை மற்றும் வன்முறையின் மூலமாக இந்த அச்சுறுத்தலை  எதிர்கொள்ள அது தயாரித்துக் கொண்டிருக்கிறது.

முகப்பு அட்டையில் டெட்ராயிட் மறுமலர்ச்சி மையத்தின் படத்தைப் போட்டு அதன்மேல்அடுத்தது  உங்கள் நகரமா?” என்று தலைப்பிட்டு டைம்ஸ் இதழின் இப்போதைய இதழ் வெளிவந்திருக்கிறதுடெட்ராயிட்டின் திவால்நிலைஉள்ளூர் அரசாங்கங்கள் செயல்படும் விதத்திலும் நகரங்கள் வளர்கின்ற  விதத்திலும் ஏராளமான மாற்றங்களைகொண்டுவரவிருக்கிறது என்று அந்த இதழ் குறிப்பிடுகிறது.

அக்கட்டுரை தொடர்ந்து சொல்கிறது: “நகராட்சி கடன்கள் மீதான விரிவான தரமதிப்பீடு மாற்றம்,  கடன்வாங்குவதற்கான செலவை அதிகரித்து நகரங்கள் பத்திர விநியோகத்தின் மூலம் திரட்டக் கூடிய  பணத்தின் அளவைக் குறைத்து விடும் என்கிற அதேநேரத்தில், பல நகரங்கள் தமது வளர்ச்சிக்கான  மாதிரிகளை மாற்றுவதற்கும், தாக்குப்பிடிக்க முடியாத தொழிலாளர்செலவுகளுக்கு  கடிவாளம் போடுவதற்கும், அத்துடன் தனியார் துறையுடன் கூடுதலாய் புதுப்புது துறைகளில்  ஒத்துழைப்பு காண்பதற்கும் இது தூண்டுதலளிக்கலாம்.”

இதே கருப்பொருளுடன் தான் பிரிட்டிஷ் எகனாமிஸ்ட் இதழிலும் கட்டுரை வெளியாகியிருந்ததுடெட்ராயிட்அமெரிக்காவின் நிதிப் பலகத்தில் எச்சரிக்கை விளக்கை எரிய விட்டிருக்கிறதுஎன்று  செல்லும் அந்தக் கட்டுரை, “அமெரிக்காவெங்கிலுமான பல பிற மாநில மற்றும் நகர அரசாங்கங்களும்  கூட ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு விஷயத்தில் காப்பாற்றவியலாத அளவுக்கான  வாக்குறுதிகளை அளித்திருக்கின்றனஎன்று கூறுகிறது.

மாநில மற்றும் நகர மட்டத்தில் தொழிலாளர்களின் நல உதவிகளை இல்லாதொழிப்பது சமூகப்  பாதுகாப்பை (Social Security) அகற்றுவதற்கான மாதிரியாக விளங்கும் என்று ஃபைனான்சியல்  டைம்ஸ் எழுத்தாளர் ஜான் டிசார்ட் எழுதுகிறார். “கருவூல ரசீதுகள் மற்றும் பத்திரங்கள் போல கூட்டரசு  அரசாங்கத்தின் முழுநம்பிக்கைக்குரிய கடமைப்பாடுகளாக  சமூகப் பாதுகாப்பு உதவிகளைக் கருத முடியாது  என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.”

இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகத் திணிக்கப்பட முடியாது என்பதே  அதிகமான கட்டுரைகளின் விவாதப் பொருளாக இருக்கிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது:  “இப்படி சிந்தியுங்கள்: அரசாங்கங்கள் அளித்திருக்கும் ஓய்வூதிய மற்றும் சுகாதாரப் பராமரிப்பு  வாக்குறுதிகள் எல்லாம் முதன்மைக்கும் முதன்மையான முன்னுரிமை கொண்ட கடன்களா என்பதைத்  தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ ஜனாதிபதித் தேர்தலிலோ  வேட்பாளர்கள் கேட்பதற்கான வாய்ப்பு எத்தனை தூரம் உள்ளது? ஏனென்றால்டெட்ராயிட்  விவகாரத்தில் இந்த விடயத்தைத் தான் நாம் பேசுகிறோம்.”

 இத்தகைய கட்டுரைகளில் சுற்றி வளைத்து சொல்லப்பட்டிருக்கும் எதேச்சாதிகாரச் செய்தியை  “ஜனநாயகத்தால் டெட்ராயிட்டின் மரணம்என்கிற தலைப்பில் வாஷிங்டன் போஸ்டில் புதனன்று  வெளியான ஒரு தலையங்கப் பக்க கட்டுரையில் வலது-சாரி பத்தியாளரான ஜோர்ஜ் வில்  (George Will)வெளிப்படையாக முரட்டுத்தனமான வார்த்தைகளில் கூறுகிறார்.

வில் அரசாங்க ஊழியர் சங்கங்களை பட்டுப்புழுக்களை அரிக்கக் கூடிய ஒட்டுண்ணிப் பூச்சி  வகையுடன் ஒப்பிட்டார். தொழிலாள வர்க்கத்தின் மீதான அவருடைய நஞ்சு கக்கும் வஞ்சத்தில் அவர்  மோசடியாக தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் ஒன்றுபோல் கூறுகிறார். உண்மையில்  டெட்ராயிட்டிலும் சரி நாடெங்கிலும் சரி நான்கு தசாப்தங்களாக ஊதியங்களை வெட்டுவதிலும்  தொழிலாள வர்க்கத்தின்  மீது ஒப்பந்த வேலைகளைத் திணிப்பதிலும் தொழிற்சங்கங்கள்  பெருநிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்து வேலை செய்து கொண்டிருக்கின்றனதமது வருவாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வரையில் ஓய்வூதியங்களை வெட்டுவதில் ஒத்துழைக்க  தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதை சங்கங்கள் எப்போதும் தெளிவாக்கி வந்துள்ளன.

டெட்ராயிட் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்களுக்கு அவர்களையே காரணமாக்க முயல்கிறார்  வில். தொழிற்துறைகள் அகற்றப்பட்டது தான் நகரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக  கூறப்படுகின்ற ஒருபுனைக்கதையை அவர் கண்டித்தார். மக்கள் ஊழலடைந்த திறமையற்ற  நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தது தான் காரணம் என்று மக்கள் மீதே குற்றம் சுமத்தி,  “டெட்ராயிட்...ஜனநாயகத்தால் இறந்ததுஎன எழுதுகிறார்.

உண்மையில் டெட்ராயிட்டின் நெருக்கடி அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சிதைவின்  ஒரு வெளிப்பாடேயாகும். ஒரு பக்கத்தில் உற்பத்தித் துறை அகற்றப்பட்டதன் மூலமும் இன்னொரு  பக்கத்தில் நிதி ஒட்டுண்ணித்துவத்தின் பெருக்கம், கொள்ளை, அப்பட்டமான குற்றவியல்தனம்  ஆகியவற்றினாலும் இச்சிதைவு அடையாளம்காணப்பட்டது. 1972க்கும் 2007க்கும் இடையில்  டெட்ராயிட் தனது உற்பத்தியில் 80 சதவீதத்தையும் பத்தாயிரக்கணக்கிலான கண்ணியமான  ஊதியமளிக்கும் வேலைகளையும் இழந்திருக்கிறது.

வங்கிகளைப் பிணையெடுக்க வேண்டும், செல்வத்தின் உச்சியில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின்  செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு வரம்பில்லாத நிதியாதாரம் இருக்கிறது, ஆனால்  வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு அல்லது கல்வி என்று வந்தால்பணமில்லை”  என்பது தான் உலகெங்கும் சொல்லப்படும் பதிலாக இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியும் குறிப்பிட்ட வர்க்க நலன்களும் குறுக்கிடும் இடத்தின் உருவடிவம் தான்  வில். தொழிலாள வர்க்கத்தை முற்றுமுழுவதாய் வறுமைக்குள் தள்ளுவதையும் அதனைச் சாதிக்க  சர்வாதிகாரத்தைத் திணிப்பதையும் ஆதரிக்கின்ற ஒரு பெரும் சலுகை படைத்த வசதியான சமூக  அடுக்கின் உருவடிவமாக அவர் இருக்கிறார்.

 “முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக் காலத்தில் முதலாளித்துவ வர்க்கம் தனது சுரண்டல் உரிமையைப்  பாதுகாக்கும் பொருட்டு பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரின் வழிமுறைகளைக்  கையாள நிர்ப்பந்திக்கப்படும்என்று லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்.

அதனால் தான் பாரிய சட்டவிரோத கண்காணிப்புத் திட்டங்களின் வடிவில் ஒரு போலிஸ்-அரசின்  கட்டமைப்பு எழுப்பப்படுவதும், போலிஸ் படைகளின் இராணுவமயமாக்கமும், சட்டத்திற்குள் வராமல்  ஆளில்லா விமானம் மூலம் கொலை செய்யும் கொள்கையும், பிராட்லி மேனிங், எட்வார்ட் ஸ்னோவ்டென்  மற்றும் ஜூலியன் அசாஞ் போல அரசாங்கத்தின் இரகசியங்களையும் குற்றங்களையும்  அம்பலப்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவதும் நடக்கிறது.

பாரிய வறுமை, முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு வானளாவிய ஏற்றத்தாழ்வு, மற்றும்  சர்வாதிகாரம் இவை தான் முதலாளித்துவ அமைப்புமுறை நமக்கு அளித்திருப்பதுஇந்தத்  தாக்குதல்களை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரே சக்தி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்  அரசியல்ரீதியாய் நனவான ஐக்கியமான படையாக போராடுகின்ற தொழிலாள வர்க்கம் மட்டுமே.

அவசரநிலை மேலாளர் கெவின் ஓரை அரசியல் முகமாகக் கொண்டு வங்கிகளும் துணிகர நிதியங்களும்  தொடுக்கின்ற தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான எதிர்ப்பை ஒழுங்கமைக்கும்  பொருட்டு டெட்ராயிட் மேயர் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் பங்குபெறுகிறது.

ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கான இயக்கத்தைக் கட்டுவதற்கும், அவசரநிலை மேலாளரை  பதவியிறக்குவதற்கும், முழுக்கவும் வங்கிகள் மற்றும் பெருநிறுவன முதலாளிகளால் கையூட்டம் பெற்று இயங்கும்  பிரதிநிதிகளையே கொண்டிருக்கும் சிட்டி கவுன்சிலுக்குப் பதிலாக ஒரு தொழிலாளர்களது கவுன்சிலை  உருவாக்குவதற்குமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து  சுயாதீனமான தொழிலாளர்கமிட்டிகளை உருவாக்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின்  வேட்பாளரான டிஆர்டக்னன் கோலியர் அழைப்பு விடுக்கிறார்.

சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிற அதேசமயத்தில் வங்கியாளர்களுக்கு நகரம் கொண்டிருக்கும்  கடன்களை மறுதலிப்பதற்கும், பொருளாதாரத்தை தனிநபர் இலாபங்களுக்காய் அல்லாமல் சமூகத்  தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்யும் பொருட்டு வங்கிகளையும் பெருநிறுவனங்களையும்  தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அரசுடைமையாக்குவதற்கும் அவர் அழைப்பு  விடுக்கிறார்.