World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US, EU officials press for détente between Egyptian junta and Muslim Brotherhood

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே சமாதானத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

By Alex Lantier 
1 August 2013

Back to screen version

இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு நடுவே, அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் எகிப்தின் புதிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும், முகம்மது முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் (MB) இடையே சமாதானத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முர்சி ஜனாதிபதி பதவிக்கு எதிரான பாரிய தொழிலாளவர்க்க எதிர்ப்புக்களைத் தொடர்ந்து முர்சியை இராணுவம் ஜூனை 3 ஆம் திகதி இராணுவம் சதி மூலம் அகற்றியது.

மதிப்பற்ற சமூகச் சிக்கன நடவடிக்கைகளை இராணுவ ஆட்சிக்குழு செயல்படுத்தத் தயாராகுகையில், ஏகாதிபத்திய நாடுகளும் எகிப்தின் அரசியல் ஆளும்பிரிவுக்குள் இருக்கும் சக்திகளும் இப்படுகொலைகள் இராணுவ ஆட்சிக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தி புதிய வெகுஜனப் போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்ற கூடிய கவலையைக் கொண்டுள்ளன.

முர்சி ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் காத்தரின் ஆஷ்டனை செவ்வாயன்று சந்தித்தபின், தென் கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்சே கிரகாம் தானும் செனட்டர் ஜோன் மக்கெயினும் அடுத்த வாரம் ஜனாதிபதி ஒபாமாவின் வேண்டுகோளின் பேரில் கெய்ரோவிற்குப் பயணிக்க உள்ளதாகக் கூறினார். அவர்கள் “ஒரு இருகட்சித் தகவலான நாம் இராணுவமற்ற கட்டுப்பாட்டை நோக்கி செல்லவேண்டும், அதாவது இராணுவம் நாட்டில் புதிய தேர்தல்களுக்கு அனுமதி செய்யும் வகையில் செயல்படவேண்டும் என வலியுறுத்திருப்பதாக கிரகாம் கூறினார்.

முஸ்லிம் சகோதரத்துவ  அங்கத்தவர்கள் உட்பட “அரசியல் தலைவர்களிடம் தான் பேச உள்ளதாகக் குறிப்பாகத் தெரிவித்த கிரகாம் பின்வருமாறு கூறினார்: “ஜனநாயகத்தை நோக்கி செல்வதையும் இந்த நிகழ்வுகளையும் நீங்கள் நிறுத்த முடியாது... இராணுவம் விரைவில் செயல்பட்டு ஒரு பொதுவான அரசாங்கத்திடம் கட்டுப்பாட்டை ஒப்படைக்க வேண்டும.

இது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் எகிப்திய இராணுவத்தில் வலிமை மிகுந்த ஜெனரல் அப்டெல் பத்தா எல்-சிசியைச் சமீபத்தில் செவ்வாயன்று பலமுறை அழைத்து பேசிய பின் வந்துள்ளது. அவர் இராணுவம் முஸ்லிம் சகோதரத்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்களை வன்முறையாக அடக்குவதில் “நிதானம் காட்டுமாறு வலியுறுத்தியிருந்தார். இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனி மட்டும் குறைந்தப்பட்சம் 90 எதிர்ப்பாளர்கள் ஒரு முஸ்லிம் சகோதரத்துவ  சார்பு உடைய கெய்ரோவிலுள்ள ரபியா அல் அடாவியா மசூதியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது கொல்லப்பட்டனர்.

செவ்வாய் மாலை இக்கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கெய்ரோ, அலெக்சாந்திரியா, மனசௌரா, மாட்ரௌ, சூயஸ் மற்றும் அஸ்வான் ஆகிய நகரங்களில் பெரிதும் அமைதியான முஸ்லிம் சகோதரத்துவ  ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஐரோப்பிய அதிகாரிகள் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் பெரிதும் அமைதியான முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே உடன்பாடு தேவை என்னும் தங்கள் விருப்பத்தையும் அடையாளம் காட்டியுள்ளனர். பிரான்ஸின் வெளியுறவு மந்திரி லோரன் ஃபாபியுஸ் “முன்னாள் ஜனாதிபதி முர்சி உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவர், தனது அரசாங்கம் “புதிதாக பதவியில் இருத்தப்பட்டுள்ள அரசாங்கம் விரைவில் ஜனநாயக அணுகுமுறையைக்கு திரும்ப வேண்டும் என்றும் வன்முறையை நிராகரிக்கவேண்டும் என்றும் மேலும் கூறினார்.

ஆனால் தற்பொழுது ஆட்சிக்குழு அதன் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு ஆதரவான எதிர்ப்பாளர்களை அடக்குவதைத் தீவிரப்படுத்துகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், அது முர்சி ஆதரவாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஏற்படுத்தியுள்ள நிலைமை, “பயங்கரவாதச் செயல்களையும் சாலை மறியல்களையும் தோற்றுவித்துள்ளது. இவை நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்கு  ஓர் அச்சுறுத்தலாக இருப்பதால் ஏற்கத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

ஆட்சிக்குழு முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமைக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமை வழிகாட்டி முகம்மது பேடி, துணைத் தலைமை வழிகாட்டி கைரட் எல்-ஷாட்டர், மற்றும் அதன் தலைவர் ரஷாத் பேயௌமி ஆகியோர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வன்முறையைத் தூண்டுபவர்கள் என விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வக்கீல்கள் இஸ்லாமியவாத அதிகாரிகளான ஒசாமா யாசின் மற்றும் எச்சாம் எல்-எரியன் மற்றும் சலாபிஸ்ட் சமயகுரு சப்வட் ஹெகசி ஆகியோரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

முஸ்லிம் சகோதரத்துவம் முதலில் முர்சி அதிகாரத்தில் மீண்டும் இருத்தப்பட வேண்டும்  என்பது பற்றிய ஒரு உடன்பாடு இல்லாமல் பேச்சுக்களை நடத்த மறுத்துள்ளது. நேற்று முஸ்லிம் சகோதரத்துவ அதிகாரிகள் அரசாங்க நாளேடான அல்-அஹ்ரத்திடம் செவ்வாயன்று ஆஷ்டனுடன் நடத்திய பேச்சுக்களில் முர்சி “தான் அகற்றப்படவேண்டும் என்ற அழுத்தத்தையும், சதியையும் நிராகரித்துள்ளார்.

தற்போதைய அரசியல் கொந்தளிப்பின் மத்தியில், ஆட்சிக்குழு ஆழ்ந்த செல்வாக்கற்ற சிக்கனக் கொள்கைகளைச் செயல்படுத்த விரும்புகிறது. திங்களன்று அது எரிவாயு, எரிபொருட்கள் ஆகியவற்றின் விலையையும் பாவனையையும் கட்டுப்படுத்த தனியார்களுக்கும்,  ஆலைகள், ரொட்டி சுடும் நிலையம், விவசாயிகளுக்கு “smart card இனை எரிபொருள் நிலையங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது முர்சியால் முன்னதாக இக்கோடையில் சர்வதேச நாணய நிதியத்திடம்  இருந்து $4.5 பில்லியன்  கடன் வாங்குவதற்கு பதிலாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் எரிபொருள்களுக்கும் உணவுப் பொருட்களுக்குமான  மானியங்களில் வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

புதிய நிதி மந்திரி அஹ்மத் கலால், சர்வதேச நாணய நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள பிணையெடுப்புப்பொதி தொடர்புடைய மானியத்தொகை வெட்டுக்களுக்குத் தன் ஆதரவை தெரிவித்தார். அவர் பின்வருமாறு கூறினார்: “இந்த வடிவமைப்பிற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பை நான் எதிர்க்கவில்லை. ஏனெனில் அது நமக்கு நம்பகத்தன்மையையும் புதிய நிதிகளையும் கொண்டுவருகிறது. நீங்கள் இலக்கு வைப்பவற்றை அடைவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் அதன் பொருள் அதுதான் என் ஆரம்பப்புள்ளியல்ல. சர்வதேச நாணய நிதியத்தை கருத்திலெடுக்காவிட்டாலும் நாம் உண்மையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.

ஆட்சிக்குழு சிக்கன நடவடிக்கைகளை தழுவியிருப்பது சதிக்கு ஆதரவு கொடுத்த தமரோட் (எழுச்சி) இயக்கத்தைச் சுற்றியுள்ள அமைப்புக்களின் பிற்போக்குத்தனப் பங்கை அம்பலப்படுத்துகிறது. அவை தொழிலாளவர்க்க எதிர்ப்பை முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு ஆதரவு அல்லது இராணுவத்திகு ஆதரவு என திருப்ப முற்படுவதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் முழு எகிப்திய முதலாளித்துவ உயரடுக்கிற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தை எதிர்க்கிறது.

இச்சக்திகளில் முகம்மது எல் பரடேயின் தாராளவாத தேசிய விடுதலை முன்னணி (NSF), ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள்(RS) ஆகியவற்றுடன் இவற்றுடன் ஒத்துழைக்கும் அமெரிக்காவிலுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு ISO, பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கட்சி(SWP) ஆகியவை உள்ளன.

இக்குழுக்கள் அனைத்தும் இப்பொழுது சதிக்கு தாங்கள் வழங்கிய ஆதரவினால் மதிப்பிழப்பது குறித்து அஞ்சுகின்றன. Al Monitor  இல் “எகிப்தின் ஆபத்தான புதிய யதார்த்தங்கள் என்னும் தலைப்பில் வந்துள்ள கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது: “தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அதிகரித்தளவில் தேசிய மட்டத்திலான விவாதத்திற்கு தேவையற்றவர்களாகிவிட்டனர். தேசிய விடுதலை முன்னணி தற்பொழுதைய வடிவமைப்பில் இருக்குமா( அல்லது முற்றுமுழுதாக இருக்குமா) என்பது பெருகிய ஊகம் ஆகிவிட்டது.

Al Monitor   இன் கருத்து  2011இல் வெடித்த புரட்சிக்கு வெளிப்படையான விரோதப்போக்கைகயும் பழைய ஹொஸ்னி முபாரக்கின் இராணுவ ஆட்சிக்கான அவற்றின் ஆதரவை காட்டிய மத்தியதர வகுப்பு உயர்மட்டத்தின் பிரிவுகளில் பரந்த வலதுசாரி திசையிலான மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அக்கட்டுரை “பொது மற்றும் ஊடக வர்ணனைகள் 2011 நிகழ்வை அப்பட்டமாகக் கண்டிக்கிறது, சில நேரம் அது முஸ்லீம் சகோதரத்துதவத்தின் சதி என்றுகூட கூறப்படுகிறது அல்லது அது குறித்து சற்றே வருத்தப்படுகிறது, அதே போல் பிந்தைய நிகழ்வுகள் குறித்து பெருகிய முறையில் உரத்தகுரல் கொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. என குறிப்பிடுகின்றது.

எகிப்தின் வசதி படைத்த மத்தியதர வர்க்கங்களின் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புரட்சிகர சோசலிஸ்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இப்பிரிவுகள் இப்பொழுது புதிய அமைப்புகளை கட்டமைத்து தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி, நெரிக்கப்பார்க்கின்றன.

சோசலிச தொழிலாளர் கட்சியுடைய  Socialist Worker  வெளியீட்டிடம் பேசிய புரட்சிகர சோசலிஸ்டின் உறுப்பினர் ஹிஷம் பௌட் பின்வருமாறு எச்சரித்தார்: “முஸ்லீம் சகோதரத்துவத்தை எதிர்க்கும் கிளர்ச்சி பிரச்சார அமைப்பாளர்கள், தேசிய தீர்வு முன்னணி போன்ற எந்த அரசியல் சக்திகளும் சுயாதீனமான மூன்றாம் சக்தியாகச் செயல்பட முடியாது.

பௌட் புரட்சிகர சோசலிஸ்டுகள் சார்பாக பேசும் வலதுசாரிப் பக்கம் நகரும் சமூகத்தின் உயர்மட்ட அடுக்குகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். மக்களைப் பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். “ஒரு தோற்ற ஜனாதிபதியை அவர்கள் அகற்றிவிட்டு, தங்கள் தேவைகளை நிறைவேற்றும் ஒருவரைக் காண விரும்புகின்றனர். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதாக உணரவில்லை... ஆனால் இராணுவம் எதை வழங்கும்? அது நெருக்கடியைத் தீர்க்குமா? மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் முர்சியின் கீழ் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் மறைந்துவிடும் என்பதாக உள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

புரட்சிகர சோசலிஸ்டுகளின் பிரதிபலிப்பு இஸ்லாமியவாதிகள் மற்றும் தாராளவாதிகளுடன் சேர்ந்து இயங்கி புதிய அமைப்புக்களைக் கட்டமைக்க முயல்வது, அதே நேரத்தில் தங்களை தமரோட்டுடன் தமது கூட்டிலிருந்தும், சதியில் தங்களது ஒத்துழைப்பிலிருந்து குள்ளத்தனமாக விலகிக் கொள்ளவும் முயல்வது போல்தான் உள்ளது.

ஏப்ரல் 6 இளைஞர் இயக்கப் பிரிவுகளுடனும் மற்றும் எகிப்தின் வலுவான கட்சி (Strong Egypt party) என்னும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் முன்னாள் தலைவர் அப்தல் மோனிம் அபௌல் பொடோக் உடனும் புரட்சிகர சோசலிஸ்டுகள் தனியான ஒரு “மூன்றாம் சதுக்க இயக்கத்தை நிறுவி, முஸ்லீம் சகோதரத்துவம் அல்லது இராணுவ ஆட்சிக்குழுவின் ஆதரவாளர்களால் ஆக்கிரமிக்கப்படாத சதுக்கங்களில் எதிர்ப்புக்களை ஒழுங்கமைக்கின்றது.