சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Father of Edward Snowden issues open letter to Obama denouncing “Orwellian surveillance programs”

எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய தந்தை ‘ஓர்வெலியன் கண்காணிப்புப் திட்டங்களை’ கண்டித்து ஒபாமாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிடுகிறார்

By Thomas Gaist 
29 July 2013

use this version to print | Send feedback

எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய தந்தையான லோன் ஸ்னோவ்டென் ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு அனுப்பி வைத்துள்ள ஒரு பகிரங்கக் கடிதத்தில், அவருடைய மகனால் அம்பலப்படுத்தப்பட்டுவிட்ட NSA உடைய கண்காணிப்புத் திட்டங்களை கண்டித்துள்ளார்; அத்தோடு ஒபாமா நிர்வாகம் சர்வதேச அளவில் இந்த வெளிப்படுத்தல்களுக்காக மகனை வேட்டையாடுதலையும் கண்டித்துள்ளார்.

இக்கடிதம், ஜூலை 26, 2013 திகதியிட்டு, லோன் ஸ்னோவ்டெனுடைய வக்கீலான ப்ரூஸ் பீனுடன் இணைந்து எழுதப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில், ஸ்னோவ்டென் NSA கண்காணிப்புத் திட்டங்களை Fugitive Slave Act உடனும் மற்றும் அமெரிக்காவின் தென்பகுதி ஜிம் க்ரோ சட்டத்துடனும் ஒப்பிடுகிறார்; அமெரிக்கா “மூன்றாவது ரைய்க் (நாசி ஜேர்மனி) இயக்கவியலில் இருந்து” படிப்பினைகளை கற்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போதைய நிலைமையை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நூரெம்பேர்க் விசாணைகள் காலத்துடன் ஒப்பிடுகிறது; “அதில் பின்வரும் ஆணைகள் பாதுகாப்பு போன்றவை அல்ல என்று நிராகரிக்கப்பட்டன.”

திட்டங்களின் பிரமாண்டமான அளவு குறித்த புதிய வெளிப்பாடுகள் வந்துள்ள நிலையில் இக்கடிதமும் வந்துள்ளது. ABC News இன் This Week நிகழ்ச்சியில் ஞாயிறன்று பேட்டி கொடுத்த கார்டியன் செய்தியாளர் கிளென் க்ரீன்வால்ட் கூறுகிறார்: “NSA டிரில்லியன் கணக்கான தொலைப்பேசி அழைப்புக்களையும், மின்னஞ்சல்களையும் தங்கள் தரவுத் தொகுப்புகளுக்குள் வைத்துள்ளது, இவைகள் கடந்த சில ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டவை.”

NSA பயன்படுத்தும் திட்டங்களைப் பற்றி க்ரீன்வால்ட் விளக்கும் வகையில் கூறுவதாவது, “ஒரு பகுப்பாய்வாளர் செய்ய வேண்டியதெல்லாம் இணைய முகவரியுடன் (IP) அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் நுழைய வேண்டும் அது இரண்டு வேலைகளைச் செய்யும்.” “தரவுத் தொகுப்புக்களை ஆராய்ந்து உங்கள் அழைப்புக்களை கேட்கவும், அல்லது NSA சேகரித்துள்ள ஒவ்வொரு உங்கள் மின்னஞ்சலும் வாசித்துப் பார்க்கவும், அல்லது கூகிள் தேடுதலில் இருக்கும் தேடிய வரலாறுகள் நீங்கள் நுழைந்தவை முழுவதையும் காட்டும்; பகுப்பாய்வாளர்களுக்கு அந்த மின்னஞ்சல் தொடர்புடைய மக்களின் மற்ற நடவடிக்கைகளையும் அதேபோல் அந்த IP எதிர்காலத்தில் செய்வதையும் எச்சரிக்கை செய்துகாட்டும்.”

“இவை அனைத்தும் நீதிமன்றத்திற்கு போக தேவையில்லாமலேயே நடைபெற்றுள்ளன; பகுப்பாய்வாளருக்கு மேற்பார்வையாளர் கூடத் தேவையில்லை” என்று அவர் தொடர்கிறார். க்ரீன்வால்ட் கீழ்மட்ட பகுப்பாய்வாளர்ளுக்கு பரந்தமுறையில் கண்காணிப்பு செய்வதற்கு தரவுகள் கொடுத்துள்ளதற்கு சான்றுகள் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

லோன் ஸ்னோவ்டெனும், பீனும் தங்கள் பகிரங்கக் கடிதத்தில், ஒபாமா நிர்வாகம் இரகசியத்தை பயன்படுத்தி அதன் “ஓர்வெலிய கண்காணிப்புத் திட்டங்களைப் பற்றிய” பொது விழிப்புணர்வு, விவாதங்களை தடுத்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அமெரிக்க மக்களில் “மிகப் பெரும்பான்மையினர்” இப்பொழுது அமெரிக்கர்கள் மீது விரிக்கப்பட்ட கண்காணிப்பு வலை குறித்து கவலை கொண்டுள்ளனர் என்றும் இதை எட்வார்ட் பகிரங்கப்படுத்தியுள்ளார், நீங்கள் மறைத்துள்ளீர்” என்றும் எழுதியுள்ளனர்.

கொடுங்கோன்மைக்கு எதிராக குடிமக்கள் மறுப்பு மரபியத்தில் இருந்துதான் ஸ்னோவ்டெனுடைய செயல்கள் வந்துள்ளன என இவர்கள் வாதிட்டுள்ளனர். “சுதந்திரத்தின் வரலாறு நீதியற்ற சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சிவில் ஒத்துழையாமையின் வரலாறாக உள்ளது”. அநீதியின் கருவியாக சட்டம் இருக்கையில் அறநெறிக் கடமை எப்பொழுது சட்டத்தை மீறுவதாக உள்ளது என்பது குறித்து அவர்கள் Thoreau வை மேற்கோளிட்டுள்ளனர். “அநீதி நீங்கள் பிறருக்கு அநீதி இழைப்பதற்கு முகவர் என்று கொண்டுபோய்விட்டால், நீங்கள் சட்டத்தை மீறலாம். உங்கள் வாழ்வு இயந்திரத்தை நிறுத்தும் எதிர் சக்தியாக இருக்கட்டும்.”

ஸ்னோவ்டென் மீதான விசாரணையை பீனும் ஸ்னோவ்டெனும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் வரலாற்றுக் குற்றங்களின் உள்ளடக்கத்தில் இருத்துகிறனர்; இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய அமெரிக்கர்கள் சிறையில் வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர். “அமெரிக்காவின் இரண்டாம் உலகப் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயம், அப்போதிருந்த அமெரிக்கத் தலைமை வக்கீல் 120,000 ஜப்பானிய அமெரிக்கக் குடிமக்களையும் நாட்டில் வாழும் பிற வெளிநாட்டு மக்களையும் இனவாத கொடும் முகாம்களில் அடைப்பதற்கு தான் பங்கு பெறமாட்டேன் என பதவி விலகியிருந்தால் எழுதப்பட்டிருக்க மாட்டாது.” என அவர்கள் எழுதுகின்றனர்.

எட்வார்ட் ஸ்னோவ்டென் “இரகசிய பொறுப்பற்ற மில்லியன் கணக்கான நிரபராதிக் குடிமக்களை உளவுபார்த்தல்” குறித்து உந்துதல் பெற்றார் என அவர்கள் வாதிடுகின்றனர்; அவையோ முதலாவது மற்றும் நான்காவது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் நடைமுறையிலிருப்பவைகளை மீறியுள்ளது. “காங்கிரசின் உறுப்பினர்கள் மேற்பார்வையிட வேண்டியவர்கள் மௌனமாக இருக்கின்றனர், அல்லது டெல்பிக் போல் கணிக்கின்றனர் என்று கண்ட ஸ்னோவ்டென், “குடிமைக் கடமை மற்றும் பேசாமல் இருத்தல் இவற்றிற்கு இடையே விருப்புரிமையை எதிர்கொண்டார்.”

கசிவுகளை எதிர்கொண்ட முறை குறித்தும் பீனும் ஸ்னோவ்டெனும் ஒபாமா நிர்வாகத்தை கண்டித்துள்ளர். “திரு ஸ்னோவ்டென் குடிமை கடமையை செய்வதற்கும், ஜனநாயக வழிவகையை காப்பாற்றுவதற்கும், சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மனச்சாட்சிக்கு விரோதமின்றி நடப்பதற்கும், தண்டனை கொடுப்பது பற்றிய உமது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பாதுகாக்க முடியாதவை.”

“உங்கள் நிர்வாகத்தின் உகந்த வழிமுறை, சட்டத்தின் ஆட்சி, நியாயம், எட்வார்ட் குற்றமற்றவராக இருக்கலாம் என நினைக்க வேண்டிய தன்மை இவற்றிற்கு காட்டும் இகழ்வு குறித்தும் நாங்கள் வேதனைப்படுகிறோம்.”

இக் கடிதம் காங்கிரசையும் குற்றம்சாட்டுகிறது; “முக்கிய ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் மன்றத்திலும் செனட்டிலும், குற்றமற்றவர் எனக் கொள்ள வேண்டிய கருத்தை மீறியிருப்பது, எட்வார்ட் ஸ்னோவ்டெனை ஆவணங்கள் கசிந்தவுடன் தேசத்துரோகி எனக் கூறியது இவற்றிற்கும் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் மன்றத் தலைவர் ஜோன் போஹ்னெர், காங்கிரஸ் பெண் பிரதிநிதி நான்சி பெலோசி, மிச்சலே பாச்மன், செனட்டர் டயன் பீன்ஸ்டின் ஆகியோர்களும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

ஒபாமா, ஸ்னோவ்டெனுக்கு எதிரான குற்றங்களை விலக்க வேண்டும் என அழைப்புவிடுத்து கடிதம் முடிவடைகிறது; NSA கண்காணிப்பு மூலம் ஏற்பட்டுள்ள தவறுகள் தீர்க்கப்படவேண்டும்.” ஆனால் ஒபாமா தெளிவாக்கியுள்ளது என்னவென்றால் அவர் இவற்றில் எதையும் செய்யத்தயாராக இல்லை என்பதாகும்.