World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Democratic Party’s Enrico Letta will try to form Italian government

ஜனநாயகக் கட்சியின் என்ரிகோ லெட்டா இத்தாலிய அரசாங்கத்தை அமைக்க முயல்கின்றார்

By Alex Lantier
25 April 2013


Back to screen version

இத்தாலியப் பாராளுமன்றம் மீண்டும் ஜனநாயகக் கட்சியின்(PD)  ஜியோர்யோ நபோலிடானோவை சனிக்கிழமை எதிர்பாராதவகையில் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தபின், என்ரிகோ லெட்டா பிரதம மந்திரியாக  நியமிக்கப்படுவார் என்று நேற்று நபோலிடானோ அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைமை அனைத்தும் இந்த வார இறுதியில் இராஜிநாமா செய்யும் வரை அதன் இரண்டாம் தலைவராக இருந்த லெட்டாஇப்பொழுது அரசாங்கத்தை அமைக்க முற்படுவார்.

பெப்ருவரி இத்தாலித் தேரதல்கள் ஒரு தொங்குப் பாராளுமன்றத்தைத் தோற்றுவித்த பின் ஓர்  அரசாங்கம் இன்றி உள்ளது. இத்தேர்தல் வாக்கெடுப்பு தொழில்நுட்பப் பிரதம மந்திரி மாரியோ மோன்டி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடத்திய சிக்கனக் கொள்கைகளை மிகப் பெரிய அளவில் நிராகரித்தது. இத்தாலிய செனட்டில் ஜனநாயகக் கட்சிக்கு 119 இடங்கள்பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்காக மக்கள் கட்சிக்கு(PdL)   117, ஜனரஞ்சக நகைச்சுவை நடிகர் பெப்பே கிரில்லோவின் ஐந்து நட்சத்திர இயக்கம்(M5S) 54 இடங்களையும் மற்றும் மோன்டியின் குடிமக்கள் தேர்வு இயக்கம் (SC) 18 இடங்களை மட்டுமே பெற்றது.

ஜனாதிபதி அரண்மனையை விட்டுச் செல்லும்போது, லெட்டா, இத்தாலியின் அனைத்து முக்கியக் கட்சிகளையும் பேச்சுக்களுக்கு அழைத்து தான் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைப்பதில் ஒருசிக்கல் வாய்ந்த, கடின முயற்சியைமுகங்கொடுப்பதாகக் கூறினார். “என்னுடைய தோள்கள் சுமக்ககூடியதைவிட அதிக கனம்இதில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க பேச்சுக்கள் நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் அரசாங்கத்தை அமைப்பதில் லெட்டா வெற்றிபெற்றார் என்றால், முன்மொழியப்படுத் அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கிற்காக சமர்ப்பிக்கப்படலாம்.

லெட்டாவின் நியமனத்தை அடுத்து, இத்தாலியின் முக்கிய அரசியல் கட்சிகள் மிகப் பெரியளவில் தொழிலாளர் வர்க்த்தால் எதிர்க்கப்படும் சமூக வெட்டுக்களைச் சுமத்துவதற்கு ஒரு பாராளுமன்ற சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கின்றன.

87 வயதான நபோலிடானா, ஸ்ராலினிச இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் (PCI) ல் தன் அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். கட்சிகள்  பொருளாதாரச்சீர்திருத்தங்கள்தொடர ஒன்றுபடாவிட்டால், தான் இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளார். ஜனநாயகக் கட்சி,  பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்காக மக்கள் கட்சி, மற்றும் மோன்டியின் குடிமக்கள் தேர்வு இயக்கம் ஆகியவை அனைத்தும் தாம் நபோலிடானோ தேர்ந்தெடுத்துள்ள நியமனப் பிரதம மந்திரியுடன் ஒத்துழைப்பதாகக் குறிப்புக் காட்டியுள்ளன.

இத்தாலிய வங்கியின் தலைமை இயக்குனர் வப்ரிசீயோ ஸக்கோமானியை பொருளாதார மந்திரியாகவும், இத்தாலிய புள்ளிவிவரங்கள் நிறுவனமான ISTAT இன் தலைவர் என்றிக்கோ ஜியோவானியை தொழில்துறை மந்திரியாகவும், மோன்டியை வெளியுறவு மந்திரியாகவும் நியமிக்கப் பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தாலி, கிரேக்கம் மற்றும் பிற நாடுகளைப் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளை லெட்டா அரைமனதுடன் குறைகூறி,  “ஐரோப்பாவின் சிக்கனக் கொள்கை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார். ஆனால் லெட்டாவின் முழு வாழ்க்கைப் போக்கும் அவர் மோன்டியின் கொள்கைகளில் சிறுதிருத்தங்களை செய்தாலும்கூட, தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தொடர்வார் என்பதைத்தான் காட்டுகிறது.

பெர்லுஸ்கோனியின் முக்கிய ஆலோசகர் ஜியான்னி லெட்டாவின் சகோதரர் மகனான லெட்டாவின் அரசியல் வாழ்க்கை கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி மற்றும் இத்தாலிய மக்கள் கட்சியின்(PPI) ஒரு அங்கத்தவராக 1990களில் தொடங்கினார். 1996-2001இல் ஒலிவ் மர கூட்டணி அரசாங்கத்தில் அவர் உயர்மட்டக் கருவூல அதிகாரியாக இருந்தார். அது இத்தாலிய மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக இடதுகட்சி (PDS)ஆகியவற்றை ஒன்றாக்கி, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சியில் இருந்து வெளிவந்த மிகப் பெரிய கட்சியை உருவாக்கியது.

2002இல் ஆரம்பிக்கப்பட்ட யூரோவில் பங்குபெறுவதற்குத் இத்தாலிக்கு தேவையான நிதிய வழிகாட்டிகளை பூர்த்திசெய்வதற்கான ஒலிவ் மர அரசாங்கத்தின் கொள்கைகளை இயற்ற லெட்டா உதவினார். இக்கொள்கைகள் 1997ம் ஆண்டு ஓய்வூதிய வெட்டுக்களையும் அரசாங்கச் செலவுகளைக் குறைக்கும் வடிவமைப்பையும் கொண்டிருந்தது.

ஒலிவ் மர அரசாங்கம் 2001இல் சரிந்தததற்குப் பின், லெட்டா சிந்தனைக் குழுக்களிலும், பிரதம மந்திரி ரோமனோ பிரோடிஃகு 2006இல் உதவியாளராகவும் அரசாங்கச் செயலராகவும், அதன் பின் 2007ல் ஜனநாயக இடதுகட்சி, இத்தாலிய மக்கள் கட்சி இணைந்து ஜனநாயகக் கட்சி உருவானபோதும் பல உயர் பதவிகளை வகிந்தார்.

தொழில்நுட்ப மோன்டி அரசாங்கம் நவம்பர் 2011 ல் இருத்தப்பட்டபோது, லெட்டா அதைசரியான திட்டத்துடன் ஆரம்பிக்கின்றதுஎன்று பாராட்டி, பெண்கள் சேர்க்கப்படுகின்றனர் மற்றும் வளர்ச்சிக்குஆதரவு கொடுக்கப்படுகிறது என்றார். எப்படியும், மோன்டியின் வெட்டுக்களுடைய பாதிப்பில் இத்தாலியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 2.4% சுருக்கம் அடைந்து, தொழில்துறையில் உற்பத்தி பெப்ருவரி 2012 இல் இருந்து  7.9% சரிந்தது.
 

நபோலிடானோவின் லெட்டா நியமனம் நிதியச் சந்தைகளின் சாதகமான  விளைவுகளைக் கொடுத்தது. இத்தாலிய அரசாங்கக் கடன் பத்திரங்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறைந்தன. பிரான்ஸின் வணிக நாளேடு Les Echos  லெட்டாவைப் பற்றி பின்வருமாறு கூறியது:”நிழல்களில் இருந்து வருபவர், ஜனநாயகக் கட்சியின் சிறந்த மூளைகளில் ஒருவர் என்று கருதப்படுகிறார்.... அவர் நம்பிக்கை நிறைந்த ஐரோப்பியர், அவருடைய போக்கு நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.”

நபோலிடானோ லெட்டாவை நியமித்ததை மோன்டியும் பாராட்டினார். “அரசியல், கலாச்சார, சமூகத் துறைகளில் அவருடைய நிரூபிக்கப்பட்ட, கணிசமாக அனுபவம் இருக்கையில், அவர் இளைமையானவரானாலும் லெட்டா எப்படி இத்தாலியைத் தேவையான நிறுவன, கலாச்சார சீர்திருத்தங்கள் மூலம் திறமையுடன் வழிநடத்துவது என்பதையும், சர்வதேச அரங்கில் இத்தாலியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது  என்பது குறித்தும் அறிந்தவர் என்றார் மோன்டி.

நபோலிடானோ மற்றும் லெட்டாவின் தந்திர உத்திகள் இத்தாலிய அரசியல் ஆளும்தட்டின் திவால் குறித்த மற்றொரு அடையாளமாகும். மோன்டியின் கீழ் ஜனநாயக கட்சியும், சுதந்திரத்திற்காக மக்கள் கட்சியும் தங்கள் மோன்டியின்  வெட்டுக்களுக்கான தமது பாராளுமன்ற ஆதரவை மோன்டியுடையது ஒருதொழில்நுட்பஅரசாங்கம், அரசியல் கட்சிகளுடைய அரசாங்கம் அல்ல என்ற கூற்றுக்களை முன்வைத்து மறைக்க முயன்றன. சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புப் பெருகிய நிலை, மோன்டியின் தேர்தல்களில் தோல்வி ஆகியவை மோன்டியின் செயற்பட்டியலை ஆதரிக்கவில்லை என்னும் ஜனநாயக கட்சியினதும், சுதந்திரத்திற்காக மக்கள் கட்சியினதும் இழிந்த போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

இத்தாலியின் முக்கிய முதலாளித்துவஇடதுகட்சியான ஜனநாயக கட்சி தான் குறிப்பிடத்தக்க வகையில் மற்றொரு சிக்கனச் சார்புடைய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளில் முன்னிற்கிறது. ஜனநாயக கட்சியின் முன்னாள் ஸ்ராலினிசத் தலைவர் பியர் லுயிஜி பெர்சானி  வெள்ளியன்று இராஜிநாமா செய்த பின் கட்சியின் முழுத் தலைமையும் இராஜிநாமா செய்தமை பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்காக மக்கள் கட்சியை தவிர்த்து ஒரு ஜனநாயக கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளின் தோல்வியை காட்டுகிறது. இப்பொழுது ஜனநாயக கட்சி பெர்லுஸ்கோனியிலும் தங்கியுள்ள ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை அதன் கிறிஸ்துவ ஜனநாயக பிரிவுகளிடம் ஒப்படைக்கிறது.

இது பெர்லுஸ்கோனியின் ஊழல் நிறைந்த போக்கு, மாபியா உறவுகள் குறித்து முறையீடுகள் செய்து அறநெறி சார்ந்த அழைப்புகளை விடுத்து இழந்துகொண்டு செல்லும் தமது ஆதரவை உயர்த்திக்கொள்ள முயலும் இத்தாலிய முதலாளித்துவத்தின்இடதுகட்சிகளின் வெற்றுப் பாசாங்குத்தனத்தையும் விட அதிகமாக அம்பலப்படுத்துகிறது.

 

பொருளாதார கேள்விகளின் நிலைப்பாட்டிலில் இத்தாலிய முதலாளித்துவ கொள்கைகளில் அதிகரித்தளவில் வலதிற்கும்” “இடதிற்கும்இடையே அதிக வேறுபாடுகள் இல்லாத நிலைதான் உள்ளது. சோவியத் ஒன்றித்தின் உடைவிற்கு பின்னர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளவர்க்கத்தின் அடித்தளத்தை முற்றிலும் இழந்துவிட்ட பின், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் உடைவிலிருந்து தோன்றிய  இத்தாலியஇடதின் பலவகையான கட்சிகள் முதலாளித்துவ சார்புடைய கட்சிகளாக மாறியுள்ளன. . 2008 பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டதில் இருந்து, இவை தொழிலாளர் வர்க்கத்தின் மீது இடையறாமல் தாக்குதலை நடத்துகின்றன.

தற்பொழுதைய நிலைமையின் முக்கிய கூறுபாடுகள் தொழிலாளர் வர்க்கம் முற்றிலும் அரசியல் உரிமையற்று போய்விட்டதும் மற்றும் மேலும் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், முழு அரசியல் நடைமுறைக்கும் எதிரான அதனது போராட்டம் பகிரங்கமாக எழக்கூடிய சாத்தியப்பாடுகளும் ஆகும்.

 

ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், அத்தகைய ஒரு நிகழ்வு குறித்து அஞ்சுகின்றன. இதில் இதுவரை வெளிப்படையாக அவருடன் உடன்பாடுகளில் கையெழுத்து இடாததற்காக முக்கியக் கட்சிகளைக் குறைகூறி வந்துள்ள M5S உடைய புகழ்பெற்ற பெப்போ கிரில்லோவும் அடக்கம்.

அவர் ஆரம்பத்தில் நபோலிடானோ மீண்டும் பதவியில் இருத்தப்படுவதைஆட்சிசதிஎன்று கூறி, அதை அங்கீகரிக்க மக்கள் மறுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பின்னர் அவர் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களைக் குறித்த அச்சம் காரணமாக அதிலிருந்து பின்வாங்கினார்