World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்Huge death toll in Bangladesh factory collapse பங்களாதேஷ் ஆலைச் சரிவில் பெரும் இறப்பு எண்ணிக்கைBy Sarath Kumara and Wimal Perera
பங்காளதேச வரலாற்றின் மிக மோசமான தொழில்துறைப் பேரழிவுகள் ஒன்றில், குறைந்தப்பட்சம் 149 தொழிலாளர்கள் வியாழன் காலை வரை இறந்துவிட்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்கள் காயமுற்றனர் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது – டாக்காவில் ஒரு எட்டு மாடிக்கட்டிடம், ஆடை ஆலைகளைக் கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்று புறநகர் சவாரில் சரிந்ததை அடுத்து இது நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 1,600 பேருக்கும் மேலானவர்கள் இடிபாடுகளில் அகப்பட்டுக் கொண்டிருப்பர் எனக் கருதப்படுகிறது. இந்தப் பணியிட படுகொலை குறித்த சமூக சீற்றத்தை எதிர்கொள்ள அஞ்சும் பிரதம மந்திரி ஷேக் ஹசினா, மீட்புச் செயல்கள் “போர்க்கால அடிப்படயில்” இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நாட்டில் இராணுவமும் அதன் இழிந்த விரைவு நடவடிக்கை பிரிவும் இதற்காக திரட்டப்படுகின்றன. புதன் கிழமை கட்டிடச் சரிவின் இறுதி இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிமாக இருக்காலம்; ஏனெனில் இன்னும் அதிக உடல்கள் மீட்கப்படுகின்றன. மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் பலரும் சிக்கலான நிலையில் உள்ளனர். ரானா பிளாசா என அறியப்படும் கட்டிடத்தின் ஆறு மாடிகளில் குறைந்தபட்சம் 3,000 தொழிலாளர்கள் ஆடை ஆலைகளில் பணி புரிந்துவந்தனர். பேரழிவு ஏற்பட்டபோது உள்ளே இருந்த மக்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் மேல்மாடிகள் ஒன்றோடொன்று உராய்ந்து காலை 9 மணிக்கு சரிந்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். ஒரு குறுகிய நேரத்திற்குள், முக்கிய தூண்கள், முன்பக்கச் சுவரின் சில பகுதிகளைத் தவிர அங்கு எதுவுமே காணப்படவில்லை. இடிபாடுகளால் கட்டிட அமைப்பு முழுவதுமே ஒரு இரண்டு மாடி, காங்க்ரீட் குப்பைத் தளமாக போயிற்று. பாதிப்பாளர்கள் “இடிபாடுகளின் கீழ் சிக்கித் தவித்து, சிமென்ட் புகையால் திணறினர்”, உதவிக்கும் தண்ணீருக்கும் கதறினர் என்று டெய்லி ஸ்டார் தகவல் கொடுத்துள்ளது. ராய்ட்டர்ஸிடம் ஒரு நபர் கூறினார்: “ஒரு நில நடுக்கம் இவ்விடத்தைத் தாக்கியது போல் தோன்றியது”. ஆடை ஆலைத் தொழிலாளர் சோஹ்ரா பேகம் கூறினார்: “மூன்றாம் மாடியில் நான் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென காதைப் பிளக்கும் ஒலியைக் கேட்டேன். ஆனால் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. நான் ஓடிப்போனேன், என் தலையில் ஏதோ தாக்கியது.” தையல் இயந்திரத்தின் கீழ் தவழ்ந்து தப்பித்த 22 வயது மசூதா பேகம் கூறினார்: “கட்டிடம் முழுவதும் நாங்கள் வேலை தொடங்கியபின் அரை மணி நேரத்தில் அதிர்ச்சியுற்றது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எங்கள் மாடியில் இருந்தனர். திடீரென இருட்டாயிற்று. எங்களில் சிலர் தவழ்ந்து வெளியேற முடிந்தது; ஆனால் மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.” செவ்வாயன்று பிற்பகலில் கட்டிடத்தில் பெரிய விரிசல்களை தொழிலாளர்கள் கண்டனர் ஆனால் ஒரு வெளியேற்றத்தின்பின் வேலைக்கு மீண்டும் செல்ல உத்தரவிடப்பட்டனர். “தொழில்துறை பொலிஸ், ஆலை உரிமையாளர்களிடம் அவர்களது ஆலைகளை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. உரிமையாளர்கள் எங்கள் முறையீட்டை புறக்கணித்து ஆலைகளைத் திறந்து விட்டனர்” என தொழில்துறை பொலிஸ் பிரிவின் தலைவர் முஸ்நாபிஜுர் ரஹ்மான் செய்தி ஊடகத்திடம் கூறினார். செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துக என்று பரிசோதகர்கள் “கூறியும்கூட” உரிமையாளர்கள் வேண்டுகோள்களை புறக்கணித்தனர், வங்க தேச வழக்கப்படி அரசாங்க அதிகாரிகள் அமல்படுத்த ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவர். செய்தி ஊடகத் தகவல்கள் இராணுவத்தின் மீட்பு நடவடிக்கையை உயர்த்திக் காட்டின. ஆனால் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இடிபாடுகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை காப்பாற்ற, தங்களை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். உள்ளுர்வாசிகளும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் வெறும் கைகளைப் பயன்படுத்தியே இடிபாடுகளை அகற்றினர். அரசாங்கம், முதலாளிகள் மற்றும் சர்வதேச ஆடை நிறுவனங்கள் நடவடிக்கையில் விரைவில் இறங்கி, பேரழிவின் பொருளாதார, அரசியல் விளைவுகளை குறைக்க முற்பட்டனர். பிரதம மந்திரி ஹசினா ஒரு வாடிக்கையான அறிக்கையை, உயிரிழப்புக்களுக்கு “அதிர்ச்சியை” தெரிவித்து வெளியிட்டார்; வியாழன் ஒரு தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார். உள்துறை அமைச்சர் முகியுட்டின் கான் ஆலம்கீர் இடத்திற்கு வருகை புரிந்து நிருபர்களிடம் கட்டிடம் “சட்டவிரோதம்” என்றார். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது “கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிமொழி அளித்தார். பங்களாதேஷை தளம் கொண்ட இண்டிபென்டென்ட் கருத்துப்படி ரானா பிளாசா உரிமையாளர் ஆறு மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வாங்கியிருந்தார்; பின் சட்டவிரோதமாக இரண்டு மாடிகளை சேர்த்திருக்கிறார். ஆனால் முந்தைய தொழில்துறை பேரழிவுகளைப் போல், விசாரணை என்பது பரந்த அளவில் பாதுகாப்பு, கட்டிடக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதை நிறுத்துவதற்கு பதிலாக குறுகிய முறையில் பலியாடுகளை கண்டுபடிப்பதில் குவிப்புக் காட்டும். எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியக் கட்சி (BNP) பெரும் சோகத்தை தன் சொந்த அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தும் வகையில், திட்டமிடப்பட்டிருந்த ஒரு எதிர்ப்பை இரத்து செய்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் கலீடா ஜியாவும் சோகம் குறித்துத் தன் “அதிர்ச்சியை” அறிவித்தார். ஆனால் ஆளும் அவாமி குழுவைப் போல், அது பதவியில் இருந்தபோது, பாதுகாப்பற்ற ஆலைகள், கட்டிடங்கள் என்ற நிலைக்குத்தான் தலைமை வகித்தது. முதலாளிகள் அமைப்பான பங்களாதேஷ் ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிச் சங்கம் (BGMEA), பொறுப்பை திசைதிருப்ப முற்பட்டது. BGMEA உடைய தலைவர் அடிகுல் இஸ்லாம் New Age இடம் தன்னுடைய அமைப்பு, ஆலை முதலாளிகளை அவர்களுடைய கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்ட உடனேயே வேலைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால் சில பொறியியல் வல்லுனர்களின் பரிசோதனைக்குப்பின், கட்டிட உரிமையாளர் ஆலை உரிமையாளர்களிடம் பிரச்சினை ஏதும் இருக்காது எனக் கூறினர்” என்றார் அவர். அரசாங்கத்தை போல் BGMEA உடைய முக்கிய கவலையும் பேரழிவின் பாதிப்பு ஆடைத் தொழிலில் ஏற்படுவதை குறைக்க வேண்டும் என்பதுதான், இத்துறை நாட்டின் ஏற்றுமதிகளில் 80%ஐக் கொண்டுள்ளது. பலநேரமும் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற சூழலில், கிட்டத்தட்ட 3.6 மில்லியன் ஆடைத் தொழிலாளர்கள் நீண்ட மணி நேரங்கள் 5,400 ஆலைகளில் உழைக்கின்றர். பங்களாதேஷ் தொழிலாளர்களை சுரண்டி பெரும் இலாபங்களை அனுபவிக்கும் முக்கிய சர்வதேச நிறுவனங்கள் —உலகிலேயே இங்குள்ள தொழிலாளர்கள்தான் குறைவான ஊதியம் பெறுகின்றனர்— சமீபத்திய பேரழிவில் இருந்து தங்களை விரைந்து ஒதுக்கிக் கொள்ள முற்பட்டன. ஐந்து ஆடைகள் ஆலைகள்—Ether Tex, New Wave Bottoms, New Wave, Phantom Apprrels, Phantom Tac—ரானா பிளாசா வளாகத்தில் செயல்புரிகின்றன. Ether Tex தலைவர் முகம்மது அனிசுர் ரஹ்மான் Independent இடம் அவருடைய நிறுவனம், வால்மார்ட்டிற்கும், ஐரோப்பிய சங்கிலித் தொடரான C&A க்கும் துணை ஒப்பந்த நிறுவனம் என்றார். New Wave குழு முக்கிய ஐரோப்பிய வணிக முத்திரைகளுக்கு அயர்லாந்தின் பிரைமார்க் உட்பட, ஆடைகளைத் தயாரிக்கிறது. “Primark இற்கு விநியோகிக்கும் ஒரு நிறுவனம் சரிந்துவிட்ட கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்தது” என்பதை அது ஒப்புக் கொண்டுள்ளது, “அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும்” கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. Benetton அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரானா பிளாசாவில் இருக்கும் நிறுவங்கள் ஏதும் தங்களுக்கு விநியோகிக்கவில்லை எனக் கூறியது. வால்மார்ட் “இந்த சோக நிகழ்வு குறித்து வருத்தப்படுவதாகவும்” அதன் விநியோக நிறுவனங்கள் ஏதேனும் தொடர்பு கொண்டுள்ளனவா என்பதை விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தது. இவை அனைத்தும் நன்கு பின்பற்றப்படும் முறையைத்தான் கொண்டுள்ளன; இவை பொதுமக்கள் கவனத்தை திசைதிருப்பவும், பொறுப்பைக் குறைக்கவும் நோக்கம் கொண்டுள்ளன, அத்துடன் பாதிப்பாளர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் சிறு உதவி இணைந்து வரும்; வருங்காலத்தில் நிலைமை முன்னேறும் என்ன வெற்று உறுதிமொழிகளும் வரும். உற்பத்தி என்பது மற்ற இன்னும் பாதுகாப்பற்ற, குறைவூதிய அடிமை உழைப்பு நிலையங்களுக்கு, வங்காளதேசம் அல்லது மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும். இச்சமீபத்திய பெரும் சோகம், பங்களாதேசத்திலேயே மோசமான ஆலைத் தீவிபத்தில் குறைந்தபட்சம் 112 பேர் கொல்லப்பட்ட ஐந்து மாதங்களுள் நடைபெற்றுள்ளது. எட்டுமாடி Tazreen பாஷனஸ் கட்டிடத்தில், Ashulia தொழிற்துறை பகுதியில் ஏற்பட்ட தீ தரைத்தளத்தில் தொடங்கி மேல் மாடிகளில் இருந்த நூற்றுக்கண்கான தொழிலாளர்களை பொறியில் சிக்க வைத்தது. தொழிலாளர்கள் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்தனர், அல்லது கட்டிடத்தில் இருந்து எப்படியும் தப்பும் முயற்சியில் குதிக்கையில் இறந்தனர். இரண்டு விசாரணைகள் பெரும் புறக்கணிப்பிற்கான சான்றுகளைக் கண்டன. தீ எச்சரிக்கை வந்தும், மேலாளர்கள், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கட்டயப்படுத்தினர். ஒரே வெளியே செல்லும் வழியும் நெருப்பினால் தடுக்கப்பட்டது. மற்றவை பூட்டப்பட்டிருந்தன. விசாரித்தவர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் “குற்றம் வாய்ந்த புறக்கணிப்பு” என்ற குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும என்று பரிந்துரைத்தனர். ஆனால் அவர் பெப்ருவரி மாதம் தொழிலாளர்கள் சீற்றம் நிறைந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தியபின்தான் கைது செய்யப்பட்டார். நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பிற பாதுகாப்பற்ற குறைவூதிய அடிமை உழைப்பு நிலையங்கள் முன்பு போலவே தொடர்ந்து இயங்குகின்றன. 2006ல் இருந்து ஆடை ஆலை நெருப்பு விபத்துக்களில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். கட்டிட சரிவுகளும் வாடிக்கையாக நடைபெறுகின்றன. ஏப்ரல் 2005ல் ஸ்பெக்ட்ரம் ஸ்வெட்டர் ஆலை, சவாருக்கு அருகே சரிந்து, 64 தொழிலாளர்களை கொன்று மற்றும் ஒரு 80 பேரைக் காயப்படுத்தியது. இந்தப் பெரும் துன்பங்களுக்கான பொறுப்பு ஆடைதயாரிப்பு நிறுவனங்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பங்களாதேச அரசாங்கம் ஆகியவற்றுடன் நின்றுவிடவில்லை. தங்களது இடையறாத உந்துதலான, செலவுகளை குறைத்தல் இலாபங்களை அதிகரித்தல், அனைத்தும் தொழிலாளர் இழப்பில், என்று குறைவூதிய அடிமை உழைப்பு நிலையங்களுக்கு நிலைமையைத் தோற்றுவிக்கும் உலக நிறுவனங்களிடம்தான் உள்ளது. |
|