தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Boston bombings and the roots of terror போஸ்டன் குண்டுவெடிப்புக்களும் பயங்கரவாதத்தின் வேர்களும்
Bill Van Auken use this version to print | Send feedback போஸ்டன் குண்டுத் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குள், ஒபாமா நிர்வாகம், FBI மற்றும் பிறமாநில நிறுவனங்களின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில், இந்த பயங்கரவாத தாக்குதல்கள் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பெரிய முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. பல முந்தைய நிகழ்வுகளைப் போலவே மீண்டும் போஸ்டன் குண்டுத்தாக்குதல்களில், பயங்கரவாத செயலின் முக்கிய அமைப்பாளரை FBI நன்கு அறிந்திருந்தது. கடந்த வாரம் போலிசுடன் ஒரு துப்பாக்கி சண்டையில் இறந்த Tamerlan Tsarnaev, ஒரு சந்தேகத்திற்கு உரிய தீவிரவாத இஸ்லாமியவாதி, வடக்கு காகசில் உள்ள ஆயுதக்குழுக்கள் சிலவற்றுடன் பிணைப்பு கொள்ள முற்பட்டார் என்று 2011ல், ரஷ்ய உளவுத்துறை துப்பு கொடுத்துள்ளது. Tsarnaev என்னும் வெளிநாட்டுக்காரரும் ரஷ்ய குடிமகனும் இப்பொழுது FBI விசாரணைக்கு உட்பட்டார் என்றும் எந்தவித பாதிப்பைக் கொடுக்கும் சான்றுகளும் அவரிடம் இல்லை என்றும், ஏப்ரல் 15 குண்டுத்தாக்குதல்கள் வரை அவரைப் பற்றி வேறு எதுவும் கேள்விப்படவில்லை என்றும் கூறுகிறது. செவ்வாயன்று காபிடோல் ஹில்லில் சாட்சியம் அளித்த உள்நாட்டுப் பாதுகாப்பு மந்திரி ஜெனெட் நாபோலிடானோ, Tsarnaev ஆறு மாத கால பயணமாக காகசஸிற்குச் செல்ல ஜனவரி 2012 ல் அமரிக்காவை விட்டு நீங்கியபோது, அவருடைய பயணம் பற்றிய தகவல் உள்நாட்டுப் பாதுகாப்பு முறையின் கவனத்திற்கு வந்தது. ஆனால் அவர் திரும்பி வந்தபின் அதைப்பற்றி எவரும் கருத்திற்கொள்ளவில்லை, ஏனெனில் அவருடைய நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் முடிந்துவிட்டன. FBI விசாரணையின்கீழ் இருந்த ஒரு நபர், இஸ்லாமியப் போராளி என்று சந்தேகிக்கப்பட்டவர், அமெரிக்க நகரம் ஒன்றின் இதயத்தானத்தில் மூன்று பேரைக் கொன்று, 170ஐவிட அதிகமானவர்களைக் காயப்படுத்திய குண்டுத்தாக்குதலை எப்படி நடத்த முடியும் என்பதற்குப் பல விளங்கங்கள் இருக்கக்கூடும். ஒன்று அநேகமாக இருந்திருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டது, அதுதான் FBI உடைய கூற்றான, சந்தேகத்திற்கு உரியவர் அதன் கண்காணிப்பில் இருந்து அகன்று விட்டார் என்பதுதான். இரு சகோதரர்களின் தாயார் FBI யின் விவரிப்பை நேரடியாக முரண்படுத்தும் வகையில், Tamerlan, நிறுவனத்துடன் தொடர்ந்து மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகள் தொடர்பில் இருந்தார் என்றும் “அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும்” அவர்கள் கட்டுப்படுத்தினர் என்றும் கூறியுள்ளார். ரஷ்ய பொலிஸ் ஆதாரங்களும், மாஸ்கோவில் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்ற FBI இன் கூற்றை முரண்படுத்தி, அவர்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு Tamerlan பற்றிய கோப்புத் தொகுப்பில் இருந்து தகவல் அளித்தன என்று கூறியுள்ளன. Tsarnaev இன் 19 வயதுச் சகோதரர் Dzhokhar வை கைப்பற்றுமுன், போஸ்டனை ஒரு முற்றுகை நிலையில் கடந்த வெள்ளியன்று இருத்திய பொலிசார், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வதற்கு இடையே, FBI “உளவுத்துறைத் தோல்வி” ஒன்றைக் கொண்டுள்ளது என்ற குறைகூறல் பற்றிய முரொசொலி அதிகரித்துள்ளது. அமெரிக்க செனட் மற்றும் கீழ்மன்ற உளவுத்துறைக் குழுக்கள் செவ்வாயன்று மூடிய கதவுகளுக்குப்பின், Tsarnaev செயற்பாடுகளில் FBI உடைய 2011 விசாரணைகளை கையாண்ட முறைபற்றி கூட்டம் நடத்தின. இந்தக் கூட்டங்களில் மூடிமறைத்தல் தவிர வேறெதையும் எதிர்பார்ப்பதற்கில்லை என்பதற்கு காரணம் உண்டு. FBI யின் இயக்குனர் ராபேர்ட் முல்லர், இதே பதவியை செப்டம்பர் 11, 2011லும் வகித்திருந்தார் என்ற உண்மையை பரிசீலித்தாலே போதும். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய உளவுத்துறைத் தோல்வி என்று வெளிப்படையாக கருதப்படும் 9/11 அல்லது அதைத்தொடர்ந்த குழுக்கூட்டங்களை ஒட்டி முல்லரோ வேறு எந்த மூத்த அமெரிக்க உளவுத்துறை, இராணுவ அல்லது பிற அரசாங்க அதிகாரிகளோ அவர்களுடைய பதவிகளை “புள்ளிகளை இணைக்கத் தோல்வியுற்றதற்காக” இழந்துவிடவில்லை என்ற உண்மை உள்ளது. 9/11 தாக்கதல்களில் தொடர்புடைய பலர், FBI அல்லது CIA உடைய கண்காணிப்பின்கீழ் இருந்தனர். அமெரிக்காவிற்குள் இரண்டு கடத்தல்காரர்கள் நுழைந்து விட்டனர் என்பதை CIA நன்கு அறிந்திருந்தது, ஆனால் அத்தகவலை வேண்டுமென்றே பிற அமைப்புக்களுக்கு தெரிவிக்காமல் மூடிமறைத்தது. FBI க்குள் உள்ள கூறுபாடுகள் சௌதி இன்னும் பிற அரபு தேசக் குடிமக்கள் அமெரிக்காவில் இருக்கும் விமானப் பள்ளிகளில் பயிற்சி பெறுவது குறித்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் பற்றி விசாரணை வேண்டும் என்றன, அது நடக்கவில்லை. 9/11 உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்திய எவரும் இத்தொடர்புகள் குறித்து மிக அதிகமாக ஆராய அக்கறை காட்டவில்லை; ஏனெனில் அவை எதை வெளிப்படுத்துமோ என அஞ்சினர். 9/11ல் இருந்து அமெரிக்காவில் கிட்டத்தட்ட எந்த பயங்கரவாத நிகழ்வும் FBI இன் கைரேகள் அதன்மீது எல்லா இடங்களிலும் படிந்திருப்பதைக் காண்கிறது. போஸ்டன் குண்டுத்தாக்குதல்களும் விதிவிலக்கு அல்ல. பெடரல் பொலிஸ் நிறுவனம் முடிவிலா ஊக்கப்கடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிக பணம் கொடுக்கப்பட்ட தகவல் கொடுப்போரை பயன்படுத்தி, மசூதிகள், குடியேறிய சமூகங்கள் வழியே சென்று திக்கற்றவர்களை சதித்திட்டங்களில் ஈடுபடுத்தினர், FBI உடைய ஊக்கம், பணவசதி அளித்தல் ஆகியவை இல்லாவிட்டால் அவை நடந்திராது. Tamerlan Tsarnaev விவகாரத்தில், அவர்கள் அத்தகைய பின்புலம் இருந்து, நடத்தும் நிகழ்விற்கு முழுநிறைவான வேட்பாளரைக் கண்டனர், போராளித்தன அறிக்கைகள் விடுவதற்காக அவர் மசூதியில் இருந்து அகற்றப்பட்டார் என்பது இப்பொழுது தெரிவிக்கப்படுகிறது. ஆயினும்கூட சான்று இல்லை என்று அவர்கள் வழக்கை கைவிட்டுவிட்டனர். இக்கூற்றில் நம்பகத்தன்மை ஏதும் இல்லை. குண்டுத் தாக்குதல்களுக்குப்பின் எப்பிஐ சமீவ் சகோதரர்கள் புகைப்படங்களை வெளியிட்ட பொதுமக்களை “கருத்துக்கள்” கேட்டு முறையிட்டது, திட்டமிட்ட மூடிமறைத்தலைத்தான் காட்டுகிறது. எப்பிஐ ஒன்றும் கீஸ்டோன் பொலிசார் அல்ல. சமீவ் திட்டங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு முன்கூட்டிய தகவல் இல்லை என்றால், வீடியோக்களில் வர்களைப் பார்த்தவுடன் இந்த நபர்கள் எங்கு இருந்தார்கள் என்பதை அவர்கள் துல்லியமாக அறிவர். இப்பொழுது அரசாங்க வட்டங்களில் தெளிவான நரம்புத்தளர்ச்சி உள்ளது. ஓர் உண்மையான விசாரணை தொடங்கு முன்பே, இரண்டு சகோதரர்களும் வெளி உதவி ஏதும் இன்றி தனியே செயல்பட்டனர் என்ற கதை கொடுக்கப்படுகிறது. ஒபாமா நிர்வாகத்திற்குள்ளேயே புதிய வெளிப்பாடுகளில் இருந்து எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதில் ஒருங்கிணைந்த முயற்சி இருப்பதுபோல் தோன்றுகிறது. FBI, மாஸ்கோவில் இருந்து வேண்டுகோளைப் பெற்றவுடன் என்ன நடந்தது என்பதற்குப் பல விளக்கங்கள் உள்ளன. ஒன்றின்படி Tamerlan Tsarnaev அனுமதிச் சீட்டு கொடுக்கப்பட்டதற்கு காரணம் அவர் இஸ்லாமியக் குழுக்கள் குறித்து உளவுத்தகவல் சேகரிக்க ஒரு சொத்து எனக் காணபட்டார், தெற்கு ரஷ்யாவில் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நெறியற்ற அமெரிக்க செயற்பாடுகளுக்கு அது உதவக்கூடும் என்பதுதான். சில ஆதாரங்கள் அவர் தன்னுடைய அமெரிக்க கையாளர்கள் மீது பாய்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன—அப்படியும் பல நேரங்களில் நடைபெற்றுள்ளன. உயர்மட்ட CIA செயல்பாட்டாளர்கள் ஐந்து பேர், ஆப்கானிஸ்தானில் அல் குவேடாவில் ஊடுருவ அனுப்பப்பட்ட ஒரு ஜோர்டானிய டாக்டரால் கொலை செய்யப்பட்டது நினைவிற்கு வருகிறது. ஒன்று உறுதி, பயங்கரவாதம், வாஷிங்டன் நடத்தும் குற்றம் சார்ந்த வெளியுறவுக் கொள்கையுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது; இது முடிவிலாமல் பொறுப்பற்ற, கொள்கைமுறை மற்றும் வன்முறைத் தலையீடுகளை உலகெங்கும் நடத்தும் வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களே, 1970 களின் இறுதியில் கார்ட்டர் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு இஸ்லாமியவாத எழுச்சியை தூண்டும் முடிவில் அதன் வேர்களை கொண்டுள்ளது. இதையொட்டி வாஷிங்டன் பின்னர் “சுதந்திரப் போராளிகள்” என முன்பு புகழ்ந்த முஜாஹிதீன்களை கைவிடும் நிலையும் ஏற்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அல் குவேடாவிற்கும் இடையே நீண்ட கால, சிக்கலான உறவு வரலாற்றில் மீண்டும் வருகிறது. லிபியா மற்றும் சிரியாவில் வாஷிங்டன் அல்குவேடாவுடன் பிணைந்துள்ள சக்திகளை, மதச்சார்பற்ற அரபு அரசாங்களுக்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கு பினாமிப் படைகளாக பயன்படுத்தியுள்ளது. லிபியாவில் கடாபி தூக்கி எறியப்பட்டுக் கொலையுண்டபின், அமெரிக்கா இச்சக்திகளை அடக்க முற்பட்டது; அது பெங்காசியில் அமெரிக்க தூதரகத்தின்மீது குருதி கொட்டிய தாக்குதலை ஏற்படுத்திய விளைவைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரும் மூன்று பிற அமெரிக்கர்களும் கடந்த செப்டம்பர் 11 அன்று கொல்லப்பட்டனர். சிரியாவில் இதையேதான் நடத்துவதற்கு தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது; “நிதானமான” கூட்டணி ஒன்றை உருவாக்கி அல் நுஸ்ரா இஸ்லாமியவாதிகளை ஒதுக்குவதற்கு; அவர்கள் இதுவரை சண்டையின் சுமையை ஏற்றிருந்தனர். இவை அனைத்தும் இன்னும் அதிக பயங்கரவாதத்திற்கான விதைகளைத் தூவும். டமாஸ்கஸ், காபூல், பாக்தாத் அல்லது போஸ்டனில் உள்ள அப்பாவி பார்வையாளர்கள், இந்த அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பெரும் விலை கொடுக்கின்றனர்; இவை எல்லா இடங்களிலும் குருதியையும் பேரழிவையும் கொடுக்கின்றன. |
|
|