சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Reports detail CIA war crimes in Pakistan

பாக்கிஸ்தானில் CIA  இன் போர்க்குற்றங்களை அறிக்கைகள் விரிவாக கூறுகின்றன

By Tom Carter
20 April 2013

use this version to print | Send feedback

நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்டள்ள செய்தியாளர் மார்க் மாஷேட்டி எழுதிய தொடர்ச்சியான சமீபத்திய கட்டுரைகள் அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் -CIA- செயற்பாடுகள் பாக்கிஸ்தானில் எப்படி உள்ளன என்பதைப் பற்றி கூடுதலாக டுத்துக் காட்டுகின்றன. மாஷேட்டியின் கட்டுரைகள் அவருடைய சமீபத்திய நூல் The Way of the knife என்பதில் இருக்கும் கருத்துக்களை தொகுத்து சுருக்கிக் கூறுகின்றன. அந்த நூல் வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளக ஆதாரங்களை பேட்டி கண்டதை அடித்தளமாக கொண்டது.

குறிப்பாக மஷேட்டியின் ஏப்ரல் 6ம் திகதிக் கட்டுரை, “இரத்தத்தினால்  மூடிப்பட்டுள்ள டிரோன்கள் பற்றிய இரகசிய உடன்பாடுஎன்பது ஜூன் 2004ல் பாக்கிஸ்தானில் டிரோன் திட்டத்தை CIA  ஆரம்பித்தபோது இருந்த ஒழுங்குமுறையற்றதும் மற்றும் வேண்டுமென்று செய்யப்பட்டதுமான குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது. ஒரு ஆளில்லா விமான பிரிடேட்டர் டிரோனோல் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை பயன்படுத்தி  பாக்கிஸ்தான் அகற்ற விரும்பிய பஷ்டூன் பழங்குடித் தலைவர் நெக் முகம்மதையும் மற்றும் 6 பேரையும் அவர்கள் இரவு உணவருந்தும்போது சிஐஏ கொன்றது. இதில் 16, 10 வயதுடைய இரு குழந்தைகளும் இருந்தன.

முகம்மதின் படுகொலை பாக்கிஸ்தானின் வான்வழியை சிஐஏ தடையின்றி வருங்காலப் படுகொலைகளை நடத்தப் பயன்படுத்துவதற்கு பாக்கிஸ்தான் அதிகாரிகள் கொடுத்த உறுதிகளுக்கு ஈடான செயல்களின் ஒரு பகுதி என்று மஷேட்டி குறிப்பிடுகிறார். இதற்கிடையில் பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் பொய்யான முறையில் பாக்கிஸ்தான் தாக்குதலை நடத்தியது என்று கூற ஒப்புக்கொண்டன. இரு குழந்தைகளும் ஏனைய கொல்லப்பட்ட நபர்களும் போராளிகள்என முத்திரையிடப்பட்டனர்.

வேறுவிதமாகக் கூறினால், எந்த மாபியாத் தலைவன் அல்லது கொலையாளியும் உடனே புரிந்து கொள்ளும் ஓர் உடன்பாட்டில், அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கான கறைபடிந்த வேலையைச் செய்யத் தயாராக இருந்தது. அதற்கு ஈடாக பாக்கிஸ்தானிடம் இருந்து இன்னும் கொலைகளை செய்ய உரிமையைப் பெற்றது. இரு அரசாங்கங்களும் கொலை செய்யும் சதியை மேற்கொண்டன, யார் செய்தது என்பது குறித்தும், யார் கொலையுண்டது என்பது பற்றியும் பொய் கூறின.

இந்த நிகழ்வு பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கத்தினை இன்னும் அம்பலப்படுத்துகிறது. இது அவ்வப்பொழுது நாட்டில் இருக்கும்  அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் செய்வதைக் குறித்து கண்டிக்கும். ஆனால் உண்மையில் அதே அமைப்புகளுடன் தன் குடிமக்களைக் கொலை செய்ய பின்புல இரகசியத் திட்டங்களை பல காலமும் தீட்டும். மஷேட்டியின் கருத்துப்படி அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் பொதுமக்கள் இதிலுள்ள சிஐஏ தொடர்பு குறித்து கண்டுபிடித்துவிடும் என்பதை எள்ளி நகையாடினார். “பாக்கிஸ்தானின் வானில் இருந்து எல்லா நேரமும் ஏதேனும் விழுந்து கொண்டிருக்கும்என்றார் முஷாரப்.

குற்றச்சாட்டோ, விசாரணையோ இல்லாமல் முகம்மதைக் கொன்ற ஏவுகணைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றமும், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதும் ஆகும்.

அமெரிக்கா பாக்கிஸ்தானுடன் கொண்டுள்ள உடன்பாட்டில் டிரோன் தாக்குதல்களை ஆப்கானிய எல்லைக்கு அருகே இருக்கும் குறுகிய பகுதிகளில் மட்டுமே சிஐஏ நடத்தும் என்ற விதி அடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா டிரோன்கள்இந்தியாவின்மீது தாக்குதல்களுக்காக பயிற்சி கொடுக்கப்படும் காஷ்மீர் போராளிகளின் மலைப்பகுதி முகாம்கள் இராதுஎன்று கூறப்பட்டது.

புஷ் நிர்வாகத்தின்கீழ்ஆரம்பித்த டிரோன் படுகொலைத் திட்டம் ஒபாமா நிர்வாகத்தின்கீழ் பாரிய விரிவாக்கத்தை அடைந்தது. தாக்குதல்களின் விகிதம் கிட்டத்தட்ட 300%அதிகரித்துள்ளது. குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரகாம் சமீபத்தில் இவற்றால் குறைந்தப்பட்சம் 4,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பெருமை அடித்துக் கொண்டார்.

பாக்கிஸ்தானில் சிஐஏ அச்சுறுத்தலின் முதல் பலியானவர் நெக் முகம்மது ஆகும். அமெரிக்க அரசாங்கம் தான் கொல்லும் ஒவ்வொரு நபரையும்போராளிஎனக் கூறுகையில், பாக்கிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களில் இளம் சிறுவர்கள், குழந்தைகள், மழலைகள், மீட்புப் பணியாளர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள், துக்கம் கொண்டாடுபவர்கள் மற்றும் நிரபராதியாக அருகே நின்றவர்கள் என உள்ளனர். ஒரு ப்ரூக்கிங்ஸ் நிறுவன ஆய்வு ஒரு டிரோன் தாக்குதலில் கொல்லப்படும் ஒவ்வொரு போராளி எனப்படுவோருக்கும் 10  குடிமக்களும் இணைந்து கொல்லப்பட்டனர் எனக் கூறுகிறது.

சிஐஏ தாம் இலக்குவைத்துள்ளோம் என நிச்சயமற்று இருந்தாலும் வெள்ளை மாளிகையில் இருந்து பாக்கிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதி கிடைத்ததுஎன்று மஷேட்டி விளக்கினார். கையெழுத்துத் தாக்குதல்கள் என அழைக்கப்பட்டவற்றின் விதிகளுள், டிரோன்களில் இருந்து ஏவுகணைகளை அனுப்பும் முடிவு சந்தேகத்திற்கு உரியவை எனக் கருதப்பட்டாலும் முடிவெடுக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.

உதாரணமாக ஒரு இளம்இராணுத்தில் இருக்கக்கூடிய வயது ஆண்கள் குழு ஒரு சந்தேகத்திற்குரிய போராளிப் பயிற்சி முகாம்களுக்கு வந்து போவது கவனிக்கப்பட்டால், அவர்களிடம் ஆயுதம் இருக்கிறது என கருதப்பட்டால், அவர்கள் முறையான இலக்குகள் எனப் பரிசீலிக்கப்படுவர். அமெரிக்க அதிகாரிகள் ஒரு மனிதனுடைய வயதை வானில் ஆயிரக்கணக்கான அடியில் இருந்து தீர்மானிப்பது கடினம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் வயதுக்கு வர உள்ள இளைஞர்களும் கூடுதலாக போராளிகளிடையே உள்ளனர். இத்தகைய பரந்த வரையறைகளைப் பயன்படுத்தி எவர்போரிடுபவர்என நிர்ணயிப்பது, அதையொட்டி அவர் ஒரு முறையான இலக்காக்குவது ஆகியவை ஒபாமா நிர்வாக அதிகாரிகளை ஒரு கட்டத்தில் பாக்கிஸ்தானில் டிரோன் தாக்குதல்கள் விரிவாக்கம் ஓராண்டிற்கு எந்தக் குடிமக்களையும் கொல்லவில்லை என்ற கூற்றைச் சொல்ல வைத்தது.

 “இது தர்க்கத்தின் ஒரு சூழ்ச்சி போன்றது. இராணுவ நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்ற ஒரு பிரதேசத்தில், இராணுவத்திற்கு தகுதியான ஆண்கள் அனைவரும் எதிரிப்போராளிகள் எனக்கருதப்பபடலாம். இதனால் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட எவரும் ஒரு போராடுபவர் என வரையறுக்கப்படலாம்.

புஷ் நிர்வாகத்தில் எப்படி சிஐஏ சித்திரவதையில் இருந்து கொலைக்குமாறியதுஎன்பது குறித்தும் மாஷேட்டி விளக்குகிறார். குறிப்பாக சிஐஏயின் தலைமை ஆய்வாளர் ஜோன் எல் ஹெல்ஜெர்சன் உட்பட மூத்த சிஐஏ அதிகாரிகள், பயங்கரவாதத்தின் மீதான போர் என அழைக்கப்படுவதின் போரில் கைப்பற்றப்பட்ட கைதிகளுக்கு எதிராகச்ஒரு சிறிய பெட்டியில் ஏராளமான பூச்சிகளுடன் இருத்துல்போன்ற சித்திரவதை செய்வது பற்றி கவலைகளை எழுப்பினார். இவை சிஐஏ செயலர்களையும் அதிகாரிகளையும் சிறையில் தள்ளக்கூடும் என்றும் கூறினார். கைப்பற்றி விசாரணை நடத்தவதற்குப் பதில், அவர்களைக் கொல்லுவது எளிது.

 இலக்க வைக்கப்பட்ட கொலைகள் குடியரசுக் கட்சியனர், ஜனநாயகக் கட்சியினர் இருவராலுமே பாராட்டப்பட்டனஎன்றும், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள விமானிகள் ஒட்டும் டிரோன்களைப் பயன்படுத்துவது இந்த மூலோபாயம் முழுவதையும் அபாயமற்றதாக  செய்துவிட்டது.” என மஷேட்டி எழுதினார்

நியூயோர்க் டைம்ஸே  அது செய்யப்படுவது பற்றி ஒரு சில சிறு தயக்கங்களை மட்டுமே காட்டி அரசாங்கத்தின் டிரோன் கொலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது. (பார்க்கவும், The New York Times defends drone murder )

ஏப்ரல் 7 அன்று ஒரு தலையங்கத்தில் டைம்ஸ்காங்கிரசுடன் சேர்ந்து உழைத்து, டிரோன் தாக்குதல்கள் குறித்து ஒரு நீடித்த சட்டபூர்வ கட்டமைப்பை தோற்றுவிக்குமாறுகோரியது. இந்த கட்டமைப்புதகவல்களை சேகரிக்க உளவு பார்க்க ஒப்புதல் கொடுக்கும் சிறப்பு நீதிமன்ற முறையை ஒத்திருக்க வேண்டும். அதாவது அரசாங்கத்தின் பிடியாணை கோரிக்கைகளில் 99.9% ஒப்புக்கொண்டது போல் இரகசியமாக நீதிமன்றம், வெளியுறவு உளவுத்துறைக் கண்காணிப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

அதேநேரத்தில், மஷேட்டின் கட்டுரைகளிலும் பிரதிபலிப்பது போல் சிஐஏ திடீரெனபடுகொலை விவகாரத்திற்குத் திரும்பியுள்ளதுமற்றும் அமெரிக்க குடிமக்களை இலக்கு வைத்துக் கொல்லுதல் நீண்டகால விளைவு தரும் தாக்கங்களை கொண்டுள்ளன என்பது பற்றி ஐயத்திற்கு இடமின்றி ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே கவலைகள் உள்ளன.

சிஐஏ இன் பாக்கிஸ்தானில் நடத்தும் கறைபடிந்த செயல்கள் பற்றிய கூடுதலான விவரங்கள் ஐயத்திற்கு இடமின்றி இன்னமும் கூறப்பட உள்ளன. குறிப்பாக ஒசாமா பின் லேடனை மே 2011ல் படுகொலை செய்த காலத்தில், சிஐஏ இற்கும் பாக்கிஸ்தான் உளவுத்துறைக்கும் இடையே முன்பிருந்த ஒத்துழைப்பு உறவு முறிந்திருந்தன. இதன் காரணம் முற்றிலும் விளக்கப்படவில்லை.

அந்த நேரத்தில் சிஐஏ பாக்கிஸ்தான் அதிகாரிகளுக்கு அது கொடுத்திருந்த பல உறுதிமொழிகளை மீறியது. அவற்றுள் டிரோன் தாக்குதல்கள் அவர்கள் ஒப்புதல் கொடுத்தபின்தான் நடத்தப்படும் என்பது இருந்தது. நடைமுறையில் வியத்தகு அளவில் கொலைகள் விகிதம் பெருகியது. இதற்கிடையில் பாக்கிஸ்தான், சிஐஏ செயலர் ரேமண்ட் டேவிஸைக் கைப்பற்றியது (இவரை ஒபாமா நிர்வாகம் தவறான முறையில்இராஜதந்திரிஎன்று கூறியது). இது லாகூரில் ஜனவரி 2011ல் நடந்த நிகழ்விற்குப் பின் வந்தது. அப்பொழுது டேவிஸ் இரண்டு பாக்கிஸ்தானிய குடிமக்களைக் கொன்ற பின் நடந்தது. ஒரு அமெரிக்க SUV, மூன்றாம் நபர் இடத்தில் இருந்து தப்பியோடுகையில் மோதிக் கொன்றது.

பாக்கிஸ்தானில் டேவிஸ் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது ஒருபொழுதும் முற்றிலும் விளக்கப்படவில்லை. பெப்ருவரி 2011 அறிக்கை ஒன்று, கராச்சியைத் தளம் கொண்ட இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபூனின் இணைப்படையை எக்ஸ்பிரஸ் டிரிபூனில் ஒரு மூத்த பஞ்சாப் பொலிஸ் அதிகாரிடேவிஸ்தான் லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுச் செயல்படுத்தி வந்தார்என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

TTP எனப்படும் தஹ்ரீக் தாலிபனுடன் டேவிஸ் நெருக்கமான பிணைப்புக்கள்கொண்டிருந்தார் என்று அதிகாரி கூறினார். “டேவிஸ்தான் குருதி கொட்டும் எழுச்சிக்கு எரியூட்ட பஞ்சாபில் தலிபானுக்கு இளைஞர்களை அணிதிரட்ட காரணம்.”

அமெரிக்கா டேவிஸின் விடுதலையை மார்ச் 2011ல் பெற்றபின், சிஐஏ ஒரு பழங்குடிக் குழுக்கூட்டத்தின் மீது வடக்கு வஜீரிஸ்தானில் டட்டா கேல் கிராமத்தில் குண்டுபோட்டு டஜன் கணக்கான மக்களைக் கொன்றது. மஷேட்டிபெரும் தாக்குதல் சிஐஏ அதன் டேவிஸ் நிகழ்வு பற்றிய சீற்றத்தை பெரிதும் வெளிப்படுத்துகிறதுஎன்று பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகத் தெரிவித்துள்ளார். (பார்க்க, CIA killer Raymond Davis released by Pakistani authorities .)

மஷேட்டியின் கருத்துப்படி, பாக்கிஸ்தானுக்குள் ஆழ்ந்த எதிர்ப்புக்களை தூண்டிய டெட்டா கேல் படுகொலை, ஒபாமா நிர்வாகத்திற்குள் குற்றம்சாட்டியவர்கள் மீது கசப்பான குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்தியது. பாக்கிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர் காமரொன் முன்டர், சிஐஏ தாக்குதல்கள் நடத்தப்படுமுன் அவற்றிற்கு ஒப்புதல் கொடுக்கும் உரிமையை நாடினார். இது ஒரு கூட்டத்திற்கு வழிவகுத்தது; அதில் அப்பொழுது சிஐஏ இயக்குனராக இருந்த லியோன் பானெட்டா முன்டரிடம் கூறினார்; “நான் உங்களின் கீழ் இயங்கவில்லை.” வெளிவிவகார செயலர் கிளின்டன், தூதருக்கு ஆதரவாகப் பேசியபோது, பானெட்டாஇல்லை, ஹில்லாரி, நீங்கள்தான் முற்றிலும் தவறு.” என பதிலளித்த்தாக மஷேட்டி எழுதுகிறார்.

இதற்கு சற்றுபின் ஒபாமா, பானெட்டாவை பாதுகாப்பு மந்திரியாக நியமித்தார். செனட்டும் அந்நியமனத்தை ஏகமனதாக உறுதிப்படுத்தியது.

சிஐஏயின் பாக்கிஸ்தானில் டிரோன் கொலைத்திட்டம் பற்றிய சமீபத்திய வெளிப்பாடுகள், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களில் போர்க்குற்றத்திற்கான குற்றச்சாட்டுகளில் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உடனே கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய தேவையை உறுதிப்படுத்துகிறது.