சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

NDP prepares for government by emphasizing its kinship with Obama

தேசிய ஜனநாயகக் கட்சி ஒபாமாவுடனான அதன் உறவை வலியுறுத்தி ஆட்சி செய்யத் தயாராகிறது

By Keith Jones
17 April 2013

use this version to print | Send feedback

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியும், தொழிற்சங்க ஆதரவுடையதுமான தேசிய ஜனநாயகக் கட்சி (NDP), கடந்த வார இறுதியில் நடைபெற்ற கட்சிக் கொள்கை மாநாட்டை தான் ஆட்சி செய்ய தயாராக இருப்பதற்கு நடத்தப்பட்ட காட்சி என்றும், அந்த இலக்கை ஒட்டி நடைமுறைக் கொள்கைகளை ஏற்று, அதன் வார்த்தைஜாலங்களை நவீனப்படுத்தி, அதன் உறவை பிற முற்போக்கான கட்சிகளான பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி ஆகியவற்றுடன் வலியுறுத்தியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், கனடாவின் சமூக ஜனநாயகக் கட்சியினர் இந்த மாநாட்டை, தாங்கள் லிபரல்களுக்கு உரிய மாற்றாக அதன் இடது கட்சி அரசாங்கமாக செயல்படும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு நிரூபிக்க ஒரு புதிய வாய்ப்பாக பயன்படுத்தினர். இக்கட்சி சமூக நீதி, சமத்துவ வாய்ப்பு ஆகிய வெற்று வார்த்தைஜால சொற்களை, முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், ஏகாதிபத்தியப் போரை நடத்துவதற்கும் ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்துகிறது.

இம்மாநாடு 92.3% வாக்குகளை அவருடைய தலைமைக்கு எதிரான பரிசீலனையை எதிர்த்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய ஆதரவை மத்திய கட்சித் தலைவர் தோமஸ் முல்கேய்ருக்கு கொடுத்தது. ஒரு கியூபெக் லிபரல் அமைச்சரவை மந்திரியாக 2003 முதல் 2006 வரை இருந்த முல்கேய்ர் 2007ல் கியூபெக்கின் அப்போதைய NDP தலைவர் மறைந்த ஜாக் லேட்டனுடைய உதவியாளராக பணிபுரியுமுன் ஸ்டீபன் ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் வழங்க முன்வந்த வேலையை எடுத்துக் கொள்ளலாமா என நினைத்திருந்தார்.

மாநாட்டிற்கு வழங்கிய உரையில், முல்கேய்ர் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மைக்கு மாற்றுத்தரும் விமர்சனங்களைக் கூறி, கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் வேலையற்றோர் நலன்கள் வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதலைப் பற்றியும் குறைகூறினார். ஒப்பந்தங்களுக்கு தொழில்களை கையளித்தது, அரை மில்லியன் பொதுத்துறைத் தொழிலாளர்கள் மீது ஏழாண்டு காலத்திற்கு ஊதிய வெட்டு ஒப்பந்தங்களை சுமத்திய கியூபெக் லிபரல்களின் சட்டத்திற்கு ஆதரவாக இவர் அளித்த வாக்குகள் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

NDP யின் பொறுப்புடன் ஆளத்தயார் என்னும் தயார்நிலைக்கு நிரூபணமாக, அவர் மாநில NDP அரசாங்கங்களின் வரலாற்றை சுட்டிக்காட்டி, அவை பொது நிர்வாகத்திற்கு சிறந்த தரத்தை நிர்ணயித்துள்ளன என்றார். உண்மையில், NDP மாநில அரசாங்கங்கள், கடந்த இரு தசாப்தங்களில், சமூக சமத்துவமின்மை, பொருளாதார பாதுகாப்புத் தன்மை இரண்டும் தீவிரமடைந்துள்ளதற்குத்தான் தலைமை தாங்கியுள்ளது. அவை பொதுப்பணிகளை இல்லாதொழித்து, பயன்பாட்டுக் கட்டணங்களை அதிகரித்து, பொதுத்துறை தடைத் திட்டங்கள் மூலம் ஊதிய வெட்டுக்களை சுமத்தி, பெரு வணிகத்திற்கு பாரிய வரி வெட்டுக்களும் பிற சலுகைகளையும் கொடுத்திருந்தன.

தன்னுடைய பங்கிற்கு முல்கேய்ர், ஒரு கூட்டாட்சி NDP அரசாங்கம் தனிப்பட்ட வருமானத்தின்மீது வரியை உயர்த்தாது, செல்வந்தர்களின் முதலீட்டு இலாபங்கள் மீதும் உயர்த்தாது மற்றும் கன்சர்வேடிவ்களின் உறுதிமொழியான கூட்டாட்சி ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறையை 2015-16க்குள் அகற்றுவோம் என்பதைத் தாங்களும் செய்வதாக உறுதியளித்தார்.

முல்கேய்ர், NDP எதிர்பாராமல் பெரிய அளவில் 2011 தேர்தல்களில் கியூபெக்கின் மத்திய பாராளுமன்றத்தில் உள்ள 75 இடங்களில் 59ஐ வெற்றிகண்டது கூட்டாட்சி சக்திகளை வலுப்படுத்தியுள்ளது எனப் பெருமை பேசி, இதனால் NDP கனேடிய ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவாக, அதன் பிற்போக்குத்தன அதிகாரப் போராட்டத்தில் சுதந்திர முதலாளித்துவ கியூபெக் குடியரசுக்கு ஆதரவான கியூபெக் ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவுடன் நிற்பதாகக் கூறினார்.

கியூபெக் மற்றும் கனேடிய பெருவணிகங்களின் அனைத்துப் பிரிவுகளும் பெருமந்த நிலைக்குப் பின் உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்தப்பட வேண்டும் என்பதில் ஒன்றுபட்டுள்ளன. தன்னுடைய உரையில் முல்கேய்ர் உட்குறிப்பாக அவருடைய கட்சிக்குள்ளிருந்தும், அதன் தொழிற்சங்க நட்பு அமைப்புக்களிடம் இருந்தும் லிபரல்களுடன் ஒரு தேர்தல் கூட்டு வேண்டும் என்னும் அழைப்புக்களை நிராகரித்து, NDP அனைத்து 338 கூட்டாட்சித் தொகுதிகளிலும் 2015 தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி வைக்கும் என உறுதியளித்தார். ஆனால் மாநாட்டிற்கு புறத்தே லிபரல்களுடன் கூட்டு பற்றிய வாய்ப்பை பற்றிக் கேட்கப்பட்டதற்கு முல்கேய்ர், 2008 ல் NDP அதன் முன்னுரிமையாக ஸ்டீபன் ஹார்ப்பரை நீக்குவது என்பதைக் கொண்டிருந்ததால்,  அது லிபரல்களுடன் கூட்டணிக்கு விரும்பியது என்றார். அக்கூட்டணியில் NDP,  நிதியப்பொறுப்புக்கு உறுதியளித்து, 50 பில்லியன் டாலர்கள் லிபரல்-கன்சர்வேடிவ் பெருநிறுவன வரிவெட்டுத் திட்டத்தை செயல்படுத்தி, ஆப்கானிஸ்தானுடன் போரையும் நடத்திய ஒரு அரசாங்கத்திற்கு இளைய பங்காளியாக சேவைசெய்திருகிறது.

NDP, ஒன்டாரியோவில் ஏற்கனவே லிபரல்களுடன் கூட்டணியில் இருந்து, சிறுபான்மை லிபரல் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தியுள்ளது. அந்த அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் இருந்து பல பில்லியன்களைக் குறைத்துவிட்டது, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தங்களை மாநிலத்தில் ஆசிரியர்கள் மீது அரசாங்க ஆணையாகச் சுமத்தியுள்ளது.

லேட்டனின் கீழும், இப்பொழுது முல்கேய்ரின் கீழும் NDP, அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடன் அதன் நெருங்கிய தொடர்பை வலியுறுத்தியுள்ளது. NDP தலைமை, ஜனநாயகக் கட்சி நிர்வாகத்திற்கு புகழை அள்ளி வீசியுள்ளது. இந்த நிர்வாகம்தான் நிதியப் பிரபுத்துவத்தை பிணையெடுத்து, சமூக நலச் செலவுகளில் இருந்து பல டிரில்லியன்களைக் குறைத்து, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் கொள்ளைப் போர்களை நடத்தி, புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை விரிவாக்கியுள்ளது. அதில் டிரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்கக் குடிமக்களையும் விசாரணையின்றிக் கொல்லும் உரிமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

NDP மேலும் ஜனநாயகக் கட்சியினருடன் அமைப்புமுறை ரீதியான உறவுகளையும் வளர்த்துள்ளது. அமெரிக்காவிற்கு ஒபாமா என்பதின் தேசியத் தள இயக்குனர் ஜெரிமி பைர்ட் மாநாட்டில் ஒரு முக்கிய பேச்சாளராக இருந்தார். அவ்விதமே  கிளின்டனின் முன்னாள் ஆலோசகரும் பொருளாதார வல்லுனருமான ஜோப் ஸ்டிக்லிட்ஸ், தொழில் அதிபர் ருமா போஸ், ஆஸ்திரேலிய தொழிற் கட்சி (ALP) அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினரும் தொழிற்துறை உறவுகள் மந்திரி பில் ஷோர்ட்டென் ஆகியோரும் இருந்தனர்.

ஆஸ்திரேலிய தொழிற் கட்சி பலமுறையும் முதலாளித்துவ மறுகட்டமைப்புச் சுற்றுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளது. அவற்றை ஒட்டி, சுகாதாரப்பாதுகாப்பு முறையின் பெரும்பிரிவுகள் தனியார்மயமாக்கப்பட்டன, ஊதியங்கள் குறைக்கப்பட்டன, ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் பெரும் அதிகரிப்பு வந்துவிட்டது. சமீபத்தில் அது ஒரு சட்டத்தை, அனைத்துத் தொழிலாளர்களினதும் தொழிற்துறை நடவடிக்கைகளையும் குற்றத்தன்மையாக்குவதை ஏற்றது. ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்தின் சீனாவுடனான போர்த்தயாரிப்புக்களிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, சமீபத்தில் அமெரிக்கத் துருப்புக்கள் அந்நாட்டில் நிறுத்திவைக்க ஒப்புக் கொண்டுள்ளது.

பழைய அரசியலமைப்பின் முன்னுரை NDP அதன் தொழிற்சங்கங்களுடன் இணைந்து வர்க்கப் போராட்டத்தை முறையாக அடக்குவதற்குத் தடை செய்யவில்லை. இதில் வேலைநிறுத்த முறியடிப்புச் சட்டங்களை பயன்படுதுவது, சமூகநலச் செலவுகளை வெட்டுவது, கனடா ஏகாதிபத்தியப் போர்களில் பங்கு பெறுவது அல்லது இன்னும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான், லிபியா, மாலிப் போர்களில் பங்கு பெறுவது ஆகியவையும் அடங்கும்.

ஆயினும்கூட, கட்சித் தலைமை பழைய முன்னுரையை அகற்ற உறுதி கொண்டுள்ளது. ஏனெனில் இது இன்னும் வலதிற்கு மாற்றத்தைக் கொண்டுள்ளது என்பதற்கான நிரூபணமான சான்றாகும். மாநாட்டிற்கு முன்னர், மரபார்ந்தவகையில் கனடாவின் நிதிய உயரடுக்கின் குரலான Globe and Mail பத்திரிகை வெளியிட்ட தலையங்கத்தில், அதே வலியுறுத்திய வகையில், அதன் தற்போதைய அரசியலமைப்பில் வரையறை செய்துள்ளதுபோல், NDP இன் வேர்கள், நச்சுத் தரையில் உள்ளது, என்ன விலை கொடுத்தாவது இது கைவிடப்பட வேண்டும். என வலியுறுத்தியுள்ளது.

பெருநிறுவனச் செய்தி ஊடகம் கணிசமாக NDP யின் சோசலிச தன்மையை பாதுகாப்பதற்கான போராட்டம் பற்றித் தகவல் கொடுத்துள்ளது. இது போலி சோசலிசக் குழுக்களான Socialist Caucus மற்றும் Fightback ஆகியவற்றால் செய்யப்படுகின்றது. இக்குழுக்கள் NDP தலைமையினால் பொறுத்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் அவை தளர்வுறாமல் தொழிலாள வர்க்கத்தைத் தங்கள் அரசியல் கட்டப்பாட்டின்கீழும், முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின்கீழும் வைத்திருக்க முயல்கின்றன. இதனால் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தப்படவும், தொழிலாள வர்க்கத்தை அடக்கும் போலிஸ் போல் செயற்படுகின்றனஅவர்களுடைய தோல்வியைத் தொடர்ந்து, போலி இடதுகள் விரைவில் தங்களை சமரசப்படுத்திக் கொண்டுவிட்டனர், தாங்கள் NDP க்கும் முல்கேர்ருக்கும் அடுத்த தேர்தலில் ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளனர். Socialist Caucus இன் தலைவர் பாரி வைல்டெர், நெருக்கடியின்போது முதலாளித்துவத்தை தழுவ விரும்புவோரிடம் இக்கட்சியை கைவிடுதல் பைத்தியக்காரத்தமானது என்று அறிவித்தார். வேறுவிதமாகக் கூறினால், வைல்டெரும் அவரது கூட்டாளிகளும் பெருவணிக NDP இற்கு அவசியமாகத் தேவைப்படும் அரசியல் மூடுதிரையை தொடர்ந்து வழங்க விரும்புவதுடன், தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பையும் மூச்சுத்திணறச்செய்ய முற்படுகிறனர்.