World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Media rush to judgment in Boston Marathon bombing

போஸ்டன் நெடுந்தூர ஒட்டப்போட்டி மீதான குண்டுத்தாக்குதலுக்கு செய்தி ஊடகம் விரைந்து தீர்ப்புக் கூறுகிறது

By Barry Grey
16 April 2013

Back to screen version

திங்கள் பிற்பகல் போஸ்டன் நெடுந்துதூர ஓட்டப் போட்டியில் இரு குண்டுகள் வெடித்ததோடு இணைந்து, செய்தி ஊடகம் தீர்ப்புக் கொடுக்க விரைவாக வந்துள்ளது, எந்தவித உண்மையான ஆதாரமும் இல்லாமல் பரந்த புதிய பயங்கரத் தாக்குதல் பற்றிய கூற்றுக்கள் வெளிப்பட்டுள்ளன.

நெடுந்துதூர ஓட்டப் போட்டியின் முடிவுக் கோட்டிற்கு அருகே, நகரத்தின் பிரதான பகுதியின் இதயத்தானத்தில், குண்டுகள் வெடித்தன. செய்தி ஊடகத் தகவல்களின்படி, குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் தீவிர காயங்களுடன் 144 பேர் காயமுற்றனர். தளத்தில் இருந்த சாட்சிகளும், மருத்துவ மனையில் உள்ள சாட்சிகளும் காயங்களில் உடலின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதும் அடங்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த வெடிப்புக்கள் ஒன்று வெடித்த 20 வினாடிக்குள் மற்றொன்று என்று நடந்துள்ளன; 50 முதல் 100 கஜ தூரத்திற்குள், ஆயிரக்கணக்கான ஓடுவோர் இன்னமும் ஓடிக் கொண்டிருந்தனர். பல ஆயிரம் பார்வையாளர்கள் வழி முழுவதும் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். வெடிப்புக்கள் கடைகளின் முன் சன்னல்களை சிதைத்தன, கண்ணாடித் துண்டுகளையும் மற்ற எச்சங்களையும் கூட்டத்திற்குள் தள்ளின.

எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ இதுவரை இந்த மிருகத்தனக் குற்றச் செயலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

கோப்லீ சதுக்கம் காலி செய்யப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்திற்கு மூடிவைக்கப்படும் எனத் தெரிகிறது. நகரத்தின் பொதுப் போக்குவரத்து முறையில் ஒரு பகுதி மூடப்பட்டது விமானங்கள் பல மணி நேரம் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன; ஆனால் பணிகள் மாலை சீக்கிரமே மறுபடியும் தொடங்கின.

கூட்டாட்சி அரசாங்கம் வெள்ளை மாளிகை மற்றும் நியூ யோர்க் நகரத்தை சுற்றிப் பாதுகாப்பை அதிகப்படுத்தி, அதன் பாதுகப்பு நடவடிக்கைகளை உயர்த்தியுள்ளதாகவும் அறிவித்தது.

வெடிப்புக்களுக்கு பல மணி நேரம் கழித்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில், போஸ்டன் பொலிஸ் ஆணையர் எட்வர்ட் டேவிஸ் ஒரு மூன்றாம் வெடிப்பு பல மைல்கள் தள்ளி ஜோன் எப். கென்னெடி நூலகத்தில் இருந்து தள்ளி வெடித்தது என்றார்; அதிகாரிகள் இது நெடுந்தொலை ஒட்டத்தில் வெடித்த குண்டுகளுடன் தொடர்புடையவையாகத்தான் கருதுகின்றனர். ஆனால் அதிகாரிகள் பின்னர் JFK நூலக நிகழ்வு “தீ தொடர்புடையது”, நெடுந்தொலை ஓட்டத்துடன் தொடர்பற்றது எனக்கூறினர்.

ஆரம்ப வெடிகளுக்குப்பின், மூன்றாம் குண்டு வேண்டுமென்றே அதிகாரிகளால் வெடிக்கப்பட்டது என்று பல செய்தித் தகவல்கள் கூறின; அசோசியேட்டட் பிரஸ் பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறைந்தப்பட்சம் மற்றொரு கருவி ஓட்டப் பந்தயப் பகுதியில் காணப்பட்டதாக மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.

தெளிவான உண்மைகளோ, குற்றவியல் தடையங்களோ இல்லாத நிலையில், செய்தி ஊடகம் வெளியிடும் அறிக்கைகள் பல முற்றிலும் ஊகமானவைதான்; இவை கூறப்படாத அரசியல் செயற்பட்டிலை வளர்த்து பீதி உணர்வுக்கும் ஊக்கமளிக்கின்றன. பல அறிக்கைகள் ஒன்றையொன்று முரண்படுத்துகின்றன. உதாரணமாக சில வர்ணனையாளர்கள் வெடிப்புப் பொருட் கருவிகள் சிறிய, பழைய தன்மை உடையவை என்று கூறுகின்றனர்; மற்றவர்கள் அவை நயமானவை என்றும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தது என்றும் குறிப்புக் காட்டுகின்றனர்.

சில செய்தி ஊடகத்தகவல்கள், குறிப்பாக பொதுமக்களை போஸ்டன் நிகழ்வுகள், 9/11 வழிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று நம்பவைக்க ஆர்வம் காட்டின. CNN உடைய வொல்ப் பிளிட்சர் இணையத்தின் தகவல் தொகுப்பை இவ்வகையில் இயக்கி, தன்னுடைய வல்லுனர் வர்ணனையாளர்களுக்கு பரந்த கூற்றுக்களை வெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குள் கூற ஊக்கம் அளித்தார்; அதே நேரத்தில் போஸ்டன் தெருக்களில் குழப்பம் நீடித்துத்தான் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மன்ற உளவுத்துறை குழு தலைவர் ஜேன் ஹார்மன் CNN வர்ணனையாகத் தோன்றி, குண்டுகள் அல் குவேடா திசைப்பக்கம் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.

மூர்டோக் செய்தி ஊடகத்தின் நியூயோர்க் போஸ்ட் ஒரு பெரிய தலைப்பில், “உறுதியாக ஒரு பயங்கரவாதச் செயல்” என்று எழுதி, இரண்டாம் கட்டுரை ஒன்றிற்கு “அதிகாரிகள் நெடுந்தொலை ஓட்டப் பகுதி குண்டுகளில் சௌதி நாட்டைச் சேர்ந்தவரை சந்தேகிக்கின்றனர், அவர் போஸ்டன் மருத்துவமனையில் காவலில் உள்ளார்” என்ற தலைப்பும் கொடுத்திருந்தது.

NBC மாலைச் செய்திகள் அதன் பயங்கரவாத வல்லுனர் மைக்கேல் லெயிட்னரைக் கொண்டு வந்தது. இவர் அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குனராக புஷ், ஒபாமா நிர்வாகங்களில் இருந்துள்ளார். எந்தவித உண்மை ஆதாரமும் இல்லாமல் லெயிட்னர் குண்டுக்கள் “பயங்கரவாத அமைப்பு” ஒன்றின் செயல் என்று அறிவித்தார்.

ஆனால் ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், மாலை 6 மணிக்கு, குறிப்பாக நிகழ்வை பயங்கரவாதச் செயல் என முத்திரையிடுவதைத் தவிர்த்தார். “கூட்டாட்சி அரசாங்கத்தின் முழு இருப்புக்களும்”, நீதியின் முழு கனமும்” இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்றார்; அதே நேரத்தில் அரசாங்கத்திற்கு “இதை யார், ஏன் நடத்தினார்கள்” என்று தெரியாது என்றும் ஒப்புக் கொண்டார்.

அரசாங்கத்திற்குள் சிறிது குழப்பம் அல்லது மோதல், குண்டுத் தாக்குதல் பற்றிய விடையிறுப்புக்களில் இருந்தது போல் தோன்றியது. பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் குண்டுத்தாக்குதல்கள் பயங்கரவாதச் செயல் என்று அறிவித்ததாக செய்தி ஊடகம் பரந்த முறையில் கூறியது.  ஒபாமாவின் வெள்ளை மாளிகை அறிக்கை வந்த சில நிமிடங்களில், ஒரு “மூத்த நிர்வாக அதிகாரி” பாக்ஸ் நியூசிடம் “பல கருவிகள் செயல்படும்போது, அது ஒரு பயங்கரவாதச் செயல்தான்” என்றார்.

செய்தி ஊடகத்தின் ஆரம்ப அறிக்கைகள் அனைத்தையும் மிக அவநம்பிக்கையுடன் காணவேண்டியது முக்கியமாகும். போஸ்டன் குண்டுத்தாக்குதல்கள், அல் குவேடா உடைய பயங்கரவாதத் தாக்குதலோ அல்லது உள்நாட்டு வலதுசாரி அமைபின் செயலோ, இச்செயல் அரசாங்கத் தொடர்புடன் நடத்தப்பட்டதோ, இவை அனைத்தும் அறியப்படவில்லை.

ஒரு விமர்சன போக்கை பராமரிக்க, செய்தி ஊடகத் திரித்தலுக்கு இரையாகாமல் இருக்க, செய்தி ஊடகம் முந்தைய பயங்கரவாதச் செயல்களின் தாக்குதலின் போது கொண்டிருந்த பங்கை நினைவிற்குக் கொண்டுவருவது பயனளிக்கும். 9/11 தாக்குதல்களுக்குப் பின் நடந்த ஆந்திராக்ஸ் சம்பவங்களில், உதாரணமாக, செய்தி ஊடகம் பெரும் கருத்துக்களை அல்குவேடா மற்றும் இஸ்லாமியத் தொடர்பு பற்றிக்கூறியது; இவை எதுவுமே உண்மை இல்லை என நிரூபணம் ஆயிற்று.