சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

David North addresses meetings in Australia on 15 years of the WSWS

ஆண்டு நிறைவு மீதான ஆஸ்திரேலியக் கூட்டங்களில் டேவிட் நோர்த் பேசுகிறார்

By our correspondents
9 April 2013

use this version to print | Send feedback

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 ஆண்டுகள் நிறைவின் முக்கியத்துவம் குறித்து சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் சென்ற வார இறுதியில் மெல்போர்னிலும் சிட்னியிலும் நடத்திய கூட்டங்களில் நல்ல பங்கேற்பு இருந்தது.

15 ஆம் ஆண்டு தினத்தைக் குறிக்கும்முகமாக உலகமெங்கும் நடத்தப் பெறுகின்ற தொடர் கூட்டங்களின் பகுதியாக நடத்தப்பட்ட இக்கூட்டங்களில் WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் பிரதான உரையை வழங்கினார்.

இந்த ஆண்டுதினத்தை WSWS எப்படி அணுகியிருந்தது என்பதை விளக்குவதுடன் நோர்த் ஆரம்பித்தார். இது நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கின்ற விடயமல்ல, மாறாக கடந்த 15 ஆண்டுகளின் ஒரு றுபார்வையில் இருந்துநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தின் முக்கியத்துவத்திற்குள்ளாக ஒரு ஆழமான உட்பார்வையைப் பெற முனைவதாகும் என்றார் அவர். ”என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து  கொள்வதன்அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உலக முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை இயக்குகின்ற புறநிலை விதிகள் மீதான ஒரு விஞ்ஞானரீதியான புரிதலை மார்க்சிசம் வழங்கியிருந்தது என்பதை அவர் விளக்கினார்.



சிட்னியில் உலக சோசலிச வலைத் தள 15வது ஆண்டு நிறைவு கூட்டம

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றிலும் கடந்த நூற்றாண்டின் பாதையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் பெற்ற மூலோபாய அனுபவங்களிலுமே WSWS இன் வேலைத்திட்ட அடித்தளங்கள் பொதிந்திருக்கிறது என்பதை நோர்த் தனது விரிவான அறிக்கையில் விளக்கினார். வலைத் தளம் ஸ்தாபிக்கப்படுவதன் அடித்தளமாக அமைந்திருந்த அடிப்படைக் கோட்பாடுகளை அவர் சுருக்கமாக  விவரித்தார். அத்துடன் 1998 தொடங்கி 15 ஆண்டுகளில் நடந்திருப்பதன் ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தின் மீதும் ஆய்வு செய்தார்.

1998-2013 வரையான பதினைந்து வருட காலத்திற்கும் அதற்கு ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முந்தைய 1898 முதல் 1913 வரையான உலகப் போருக்கு முந்தைய பதினைந்து ஆண்டு காலத்திற்கும் இருந்த நம்பமுடியாத ஒற்றுமைகளையும் அவர் சுட்டிக் காட்டினார். இரண்டு காலகட்டங்களுமே தீவிரமான அரசியல், பொருளாதார, பூகோள-அரசியல் மற்றும் புத்திஜீவி நெருக்கடியால் குறிப்பிடக் கூடியதாக இருந்தன என்பதோடு புரட்சிகர எழுச்சிகளும் முக்கிய நாடுகளிடையே அதிகரிக்கும் பதட்டங்களும் இக்காலகட்டங்களின் அடையாளங்களாய் இருந்தன.

கடந்த 15 ஆண்டுகளின் அமெரிக்க தலைமையிலான போர்கள் மற்றும் நவ காலனித்துவ தலையீடுகளை கோடிட்டுக் காட்டிய நோர்த் அதன்பின் இராணுவவாதத்தின் வெடிப்பு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சமூக எதிர்ப்புரட்சி நடத்தப்படுதல், மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையிலமைந்த ஆழமான தொடர்பையும் குறிப்பிட்டுக் காட்டினார்.

உலக வரைபடத்தைக் கொண்டு திறனாய்வு செய்த நோர்த், எந்த நேரத்திலும் ஒரு பேரழிவூட்டும் உலகப் போருக்கு இட்டுச் செல்லக் கூடிய எளிதில் தீப்பற்றும் புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். குறிப்பாக அமெரிக்காதனது பொருளாதார மற்றும் உலகளாவிய புவி-மூலோபாய நலன்களுக்கான சவாலாக சீனாவின் எழுச்சியை ஏற்றுக் கொள்வதற்கோ சகித்துக் கொள்வதற்கோ தயாராக இல்லைஎன்பதால் ஆசிய பசிபிக் பிராந்தியம் தான் புவி-மூலோபாய பதட்டங்களின் மையப் புள்ளியாக ஆகிக் கொண்டிருக்கிறது என்றார் அவர். ஜனாதிபதி ஒபாமாவின் ஆசியாவுக்கானசுழல் அச்சுக்குப் பின்னால் அமைந்திருக்கும் கணக்குகளை நோர்த் சுருக்கமாக விவரித்தார். ஒபாமாவைப்  பொறுத்தவரை, “அமெரிக்கா எவ்வாறு சீனாவை முடக்க முடியும், அதன் வளர்ச்சியையும் செல்வாக்கின் விரிவையும் நிறுத்திப் பிடிக்க முடியும், அது தனது பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாகக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு அணுகலைத் தடுக்க முடியும்என்பதே அவரது கவலையாக இருக்கிறது என்றார் நோர்த்.

ஆஸ்திரேலியா மூலோபாயரீதியாக சீனாவின் முக்கியமான கடல்வழிப் பாதைகளின் தொடு தூரத்தில் அமைந்திருப்பதால், அதன் தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமலேயே சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் தயாரிப்புகளுக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நோர்த் வலியுறுத்தினார்.

அமெரிக்க-சீன மோதல் இப்போது எவ்வாறு ஆஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நோர்த் திறனாய்வு செய்தார். அமெரிக்க ஆதரவு கவிழ்ப்பில் பிரதமர் கெவின் ரூட் அகற்றப்பட்டதற்கு - ஆஸ்திரேலியாவில் இதன் பெயர்ஆட்சி மாற்றம்” - பின்னர் கிலார்ட் அரசாங்கம் ஒபாமாவின்சுழல் அச்சுதிட்டத்தில் இணைந்து வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க போர் துருப்புகளையும் போர் விமானங்களையும் நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டிருந்தது. ரூட் பிரதமராக இருந்த சமயத்தில் ஆஸ்திரேலிய பயணங்களை பலமுறை ஒத்தி வைத்த ஒபாமா 2011 நவம்பரில்சுழல் அச்சுதிட்டத்தை அறிவிப்பதற்கான களமாக ஆஸ்திரேலிய  நாடாளுமன்றத்தை பயன்படுத்தினார். அவர் அறிவித்தார்: “இங்கே ஆஸ்திரேலியாவில் எங்களது புதிய தோற்றத்தை நாங்கள் காண்கிறோம்.”

இதன்மூலம் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒபாமா மறைமுகமாக சொல்லியிருந்தது: “எங்களுக்கு இன்னும் அதிகமான இராணுவத் தளங்கள் வேண்டும், இராணுவப் படைகளில் உங்கள் பணம் இன்னும் அதிகமாக செலவிடப்பட வேண்டும், அத்துடன் ஆஸ்திரேலிய இளைஞர்களை களப் பலி  கொடுக்க பயன்படுத்துவதற்கு எங்களுக்கு கூடுதலான ஆஸ்திரேலிய உயிர்கள் தேவைஎன்பதைத் தான். ”இதைக் குறித்து ஆஸ்திரேலிய மக்களிடம் கேட்கப்படவில்லைஎன்றார் நோர்த்.

சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை முடக்குவதற்கான திட்டம்ஏற்கனவே வரையப்பட்டு விட்டதை எடுத்துக்காட்டிய நோர்த், சீனாவுக்கு கச்சாப் பொருட்களுக்கான மூலவளமாக ஆபிரிக்காவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதையும் இதனால் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு  ஆசியாவின் வழியான பெய்ஜிங்கின் வணிகப் பாதைகளைத் துண்டிப்பதற்கு வசதியளிக்கின் ஒரு முக்கியமான மூலோபாய தளமாக ஆஸ்திரேலியா ஆகியிருப்பதையும் நோர்த் அடிக்கோடிட்டுக் காட்டினார். சீனாவுக்கு எதிரான ஒரு அணு ஆயுதப் போரின் சாத்தியத்திற்குள், “பெண்டகன் மற்றும் வோல் ஸ்ட்ரீட் கனவு காண்கின்ற வெறித்தனமான அமெரிக்க திட்டங்களுக்குள் ஆஸ்திரேலியத்  தொழிலாள வர்க்கம் பலவந்தமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்றார் நோர்த்.

அமெரிக்க மூர்க்கத்தனத்திற்கான மாற்றீடு, ஆக்கிரமிப்பு வெறி கொண்டு அலையும் முதலாளித்துவ அரசுகளை மீண்டும் ஒரே அணியில் கொண்டு வருவதில் இல்லை, மாறாக போரை நிறுத்த திறம் படைத்த ஒரே சக்தியான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதில் தான் உள்ளது என கேள்வி நேரத்தின் போது நோர்த் வலியுறுத்தினார்.

அமெரிக்க போர்த் தயாரிப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆதரித்தது ஏன்? என்று கேட்டபோது நோர்த் கூறினார்: “அமெரிக்கா எந்த எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ளாது!” அமெரிக்காவுடன் முழுமையாக ஓரணியில் நிற்கும் பொருட்டு தான் பிரதமர் ஜூலியா கிலார்ட் அமர்த்தப்பட்டு, அவரும்அவசியமான மாற்றங்களை நடத்தி முடிக்கும் இடத்தில்தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். கேள்விகள் இவ்வாறாக முன்வைக்கப்பட வேண்டும்: “கிலார்டு என்ன ஒப்பந்தங்கள் செய்தார்? என்ன உடன்பாடுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்? வாக்காளர்களின் முதுகின் பின்னால் கையெழுத்திடப்பட்டிருக்கும் ஒன்றைக் குறித்து அவர்களுக்குத் தெரிய வேண்டாமா?”

கூட்டங்களின் நிறைவில் சோசலிச சமத்துவக் கட்சியின் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரம் ஒரு சக்திவாய்ந்த மறுமொழியைப் பெற்றது. 12,000 டாலருக்கும் அதிகமான தொகை சேர்க்கப்பட்டது. SEP இன் பிரச்சாரம் சீனாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய போர் தயாரிப்புகளை எதிர்க்கும் என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதும் ஜனநாயக  உரிமைகளின் மீதும் நடத்தப்படும் ஆழமான தாக்குதலையும் எதிர்க்கும்.



ரீஸ்

கூட்டத்திற்குப் பின்னர் கலந்து கொண்டவர்களில் சிலர் WSWS செய்தியாளர்களிடம் பேசினர். மெல்போர்னில் ரீஸ் கூறினார்: “முதலில் இந்தக் கூட்டத்தில் என்ன கருத்து பகிரப்படப் போகிறது என்பது எனக்கு கொஞ்சமும் தெரியாதிருந்தது, ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் கடந்த நூற்றாண்டில் முதலாம் உலகப் போருக்கு முன்னால் வந்த 15 ஆண்டுகாலகட்டத்திற்கும் இடையிலிருந்த மிகச் சிறப்பான ஒற்றுமைகள் குறித்து நோர்த் உண்மையிலேயே சுருக்கமாக  அழகாகக் கூறினார். இந்த ஒற்றுமையை நான் முன்னர் கவனித்ததில்லை. அந்த காலத்தின் வரலாறு எனக்கு கொஞ்சம் தெரியும், ஆனால் இந்த இரண்டு காலகட்டத்தின் பொருளாதார நெருக்கடியையும் போரின் அதிகரித்த வெடிப்பிற்கும் இடையிலமைந்த ஒற்றுமைகளை அவர் அழகாகக் படம்பிடித்துக்  காட்டினார்.”


என்ரிகோ

1960களின் பிற்பகுதியில் இத்தாலியில் இருந்து புலம் பெயர்ந்து வந்திருந்தவரான ஒரு ஓய்வுபெற்ற கட்டிடத் தொழிலாளியான என்ரிகோ கூறினார்: “அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து டேவிட் நோர்த் கூறியவை முற்றிலும் உண்மை. தான் உலகை மேலாதிக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்க அரசாங்கம் எண்ணியிருக்கிறது. நான் சொல்வது அமெரிக்கத் தொழிலாளர்களை பற்றியல்ல, மாறாக தொழிலாளர்களைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறையில்லாத செல்வந்தர்களைப் பற்றி. கில்லார்ட் குறித்தும், ரூட் அகற்றப்பட்டது குறித்தும், அமெரிக்கா எப்படி இதன் பின்னால் இருந்தது என்பது பற்றியும் (இந்த விடயம் பற்றி எனக்கு கொஞ்சமும் முன்னர் தெரியாது) நோர்த் கூறியதைக் கேட்டபின், கிலார்ட் அரசாங்கம் ஆஸ்திரேலியாவுக்குள் துருப்புகளை அனுமதிப்பதற்கு விடும் என்று நான் நம்பவில்லை. அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.”


பென்

சிட்னி கூட்டத்தில், மெக்கரி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் ஒரு மாணவரான பென், நோர்த் முதலாம் உலகப் போருக்கு முந்தைய 15 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு விவரித்தது மலைக்க வைத்து விட்டது என்றார். "15 வருட காலத்தில் பதட்டங்கள் தொடர்ச்சி கண்டு, துருப்புகள் நெருங்கி  வந்திருப்பதை எங்களால் காண முடிகிறது. இப்போதைய காலத்திற்கும் முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்திற்கும் இடையிலான ஒப்பீடு மிக சுவாரஸ்யமான ஒன்று... அருமையான ஒப்பீடு.”

தொழிலாளியும் முன்னாளில் நுண் கலை மாணவருமான கிர்பி கூறினார்: “இந்தக் கூட்டத்தில் தெரிந்து கொண்ட மிகமுக்கியமான விடயம் என்னவென்றால் எப்படி வரலாறு ஒரே தொனியில் இயங்கி வந்திருக்கிறது என்பது சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. விடயங்கள் இன்னொரு உலகப் போரில் முடிவதற்கு இட்டுச் செல்வது போலத் தோன்றுகிறது. அது நடக்கப் போகிறது என்று டேவிட் நோர்த்  கூறியது போல நீங்கள் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அது எங்கும் எழுதப்படவில்லை. நாம் அதை இப்போதும் மாற்ற முடியும், ஆனால் அவர் ஏராளமான புள்ளிகளை விவரித்தார், அவை நிச்சயமாக சாத்தியமானவையாகவே தோன்றுகிறது. வரலாற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு முன்னோக்கை கேட்பது உண்மையிலேயே ஏதோ அறிவுபுகட்டுவது போல் இருந்தது.”