தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
British parliament unites in praise of Margaret Thatcher மார்க்கரெட் தாட்சரைப் புகழ்வதில் பிரித்தானியப் பாராளுமன்றம் ஒன்றுபட்டு நிற்கிறது
By Julie
Hyland use this version to print | Send feedback முன்னாள் பிரதம மந்திரியான மார்க்கரெட் தாட்சர் மரணத்தை குறிப்பதற்காக நேற்று கூட்டப்பட்ட பிரித்தானியாவின் பாராளுமன்றம் அவருடைய அரசியல் வாரிசுகளின் கூட்டமாகும். 1979ல் இருந்து 1990 வரை கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய தாட்சர் சீமாட்டி, திங்களன்று 87 வயதில் மாரடைப்பினால் காலமானார். பிரித்தானியாவில் அவரது பிரதம மந்திரி பதவிக்காலம் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தனியார் செல்வகுவிப்பிற்கு எதிரான எத்தடையையும் அகற்றும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச அரசியலில் வலதுசாரி மாற்றத்தின் வெளிப்பாடாக இருந்தது. அவருடைய ஒரு தசாப்தத்திற்கு சற்றே அதிகமான ஆட்சியில் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கம் பெற்றிருந்த சமூக நலன்கள் தீவிரமாக வெட்டப்பட்டன. 1990ல் அவர் பதவியை விட்டு விலகும்போது, மிகஅதிக செல்வம் படைத்த 10% இனரின் கட்டுப்பாட்டில் இருந்த செல்வத்தின் விகிதம் இரு மடங்காகிவிட்டது. அதே அளவிற்கு குழந்தைகள் வறுமையும் இரு மடங்கு ஆயிற்று. இதையடுத்த தசாப்தங்களில் சமூக சமத்துவமின்மை இன்னும் அதிகமாக தீவிரமடைந்தது மட்டுமல்லாது, அவர் ஆரம்பித்துவைத்த வழிமுறையான, அதிகமாகிவிட்ட மற்றும் குற்றம்சார்ந்த நிதிய ஊகச் செயற்பாடுகள் 2008 உலக வங்கி நெருக்கடிக்கும் இப்பொழுது சர்வதேச அளவில் நடாத்தப்படும் பாரிய சிக்கன நடவடிக்கை கொள்கைக்கும் நேரடிப் பொறுப்பைக் கொண்டதாகும். பிரித்தானியாவில் மட்டும் 150 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவு வெட்டுக்கள் கொண்டுவரப்பட்டதுடன், இன்னமும் வெட்டுக்கள் வரவுள்ளன. இந்த சமூக வறிய நிலைதான் அடுத்த புதன்கிழமையன்று அவருடைய இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்காக மேற்கொள்ளப்படும் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான காரணமாகும். எதிர்ப்புகாட்டக்கூடியவர்களை பொலிசார் “முன்கூட்டி கைது” செய்யக்கூடும் என்ற அச்சுறுத்தல்களும் வந்துள்ளன. எனவேதான் அவருடைய இறப்பு பற்றிய புகழாரம் சூட்டுகையில் செய்தி ஊடகம் அவரை ஒரு “பிளவுகளை ஏற்படுத்தியவர்” என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் பொருள் அவர் தொழிலாள வர்க்கத்தால் பரந்த அளவு வெறுக்கப்பட்டதுடன், அவர் மிக நன்கு உதவிய சிறு அளவு செல்வந்தர்களால் முக்கியமாக பெரும் பாசத்துடன் நினைவுகூரப்படுவார் என்பதாகும். தாட்சருக்குப் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட புகழாரங்கள் தங்கள் அரசியல் குருவிடம் செல்வம் படைத்தவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தின. அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய அரசியல்வாதியை கொண்டாடினார்கள்: அவர்களை பொறுத்தவரை ஒரு “கடை உரிமையாளருடைய மகள், கண்ணாடிக் கூரையை உடைத்துக்கொண்டு” வந்து ஐக்கிய இராச்சியத்தின் முதல் பெண் பிரதம மந்திரியான ஒரு தேசிய வீரப்பெண்மணி எனலாம். தாட்சருடைய வாழ்வையும், அரசியல் தொழிற்போக்கை ஒரு புனிதமானதாக எடுத்துக்காட்டும் பழைமைவாத பிரதம மந்திரி டேவிட் காமரோனின் முயற்சி எதிர்பார்க்கப்பட்டதுதான். அவருடைய செயற்பட்டியலான தனியார்மயமாக்குதல், தொழிற்சங்கங்களை உடைத்தல் ஆகியவற்றை காமரோன் புகழ்ந்து, “பிரித்தானியாவை மீண்டும் பெரிய நாடாக ஆக்கிவிட்டார்” என்ற அபத்தமான கூற்றையும் கூறினார். 1970களில் பிரித்தானியா தொழில்துறை போர்க்குணம், தேசியமயமாக்கப்பட்ட தொழில்கள் என்ற “நோய்களை” கொண்டிருந்தன என குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது என்றார் காமரோன். “இன்று அபத்தமாக காணப்பட்டாலும்கூட, அரசு மிகப் பெரியதாக, அதனிடம் விமான நிலையங்கள், விமானசேவைகளும் இருந்தன, நம் வீடுகளில் தொலைபேசிகள் இருந்தன, நம் சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. குப்பை அகற்றும் நிறுவனத்தைக்கூட அது சொந்தமாக கொண்டிருந்தது.” தாட்சரைப் பற்றி இதையும் விட நாற்றமெடுக்கும் கருத்து தொழிற் கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் வழங்கிய சிறப்புப் புகழாரம்தான். “1980களில் வயதுமுதிர்வடைந்த” மூன்று உத்தியோகபூர்வ கட்சிகளான கன்சர்வேடிவ், லிபரல் டெமக்ராட் மற்றும் தொழிற்கட்சியுடைய தலைவர்கள் தாட்சருடைய அரசியலால் உருவமைக்கப்பட்டவர்கள் என்று மிலிபாண்ட் கூறினார். அவருடைய கருத்துக்கள் தெளிவாக்குவது போல், அவர் கூறுவது என்னவெனில் இத்தலைவர்கள் அனைவரும் அனைத்து அடிப்படை நிலைப்பாடுகளிலும் உடன்படுகின்றனர் என்பதுதான். முன்னாள் பிரதம மந்திரி ஒரு “பிரத்தியேகமான, மிக உயர்ந்த நபர்” என்றார் மிலிபாண்ட். அவர் செய்த சிலவற்றுடன் சிலர் “உடன்படாவிட்டாலும்”, அவருடைய சாதனைகள் போற்றப்பட வேண்டியவை என்றார். அவர் “ஆழ்ந்த நம்பிக்கை உடையவராகவும், அதன்படி செயல்படத்தயாராகவும் இருந்தார்” எனக்கூறினார். தொழிற் கட்சித் தலைவரின் கருத்துப்படி 1982ல் ஆர்ஜேன்டினாவிற்கு எதிராக மால்வினஸ்/பாக்லாந்து தீவுகளுக்காக போரிட்டதும் சரிதான். அவரின் கருத்துப்படி இது இங்கிலாந்து ஒருதரப்பாக விதித்திருந்த மோதல்விலக்கு மண்டலத்திற்கு வெளியே பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த ARA ஜெனரல் பெல்கிரனோ கப்பல் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டதில் 323 பேர் உயிரிழந்தது ஒரு ஏகாதிபத்திய தீரச்செயலாகும். ஒரு முன்னாள் சுரங்கத்தொழிற்துறை நகரான டொன்காஸ்டரின் பாராளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில், மிலிபாண்ட் சுரங்கத் தொழில்மீது தாட்சரின் தாக்குதல் ஏற்படுத்திய பேரழிவுப் பாதிப்பையும் குறிப்பிட்டார். இது நாட்டின் முழுப் பகுதிகளையும் தொழில்துறையில் அழிவு நிலங்களாக மாற்றிவிட்டது. அவருடைய செயல்களால் சுரங்கத் தொழிற்துறை சமூகங்கள் “சீற்றம் அடைந்தனர், கைவிடப்பட்டதாக உணர்ந்தனர்” என்றார் அவர். அதே நேரத்தில் “நம்முடைய பொருளாதாரம் மாற்றப்பட வேண்டிய தேவையை அங்கீகரித்தது” சரியானதுதான் என்றும் வலியுறுத்தினார். தாட்சருடன் கொண்டிருந்த ஒரே மற்றைய வேறுபாடு பற்றி மிலிபாண்ட் கூறுகையில் தாட்சர் பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை வளர்வது தடை செய்வதற்காகக் கொண்டுவந்த சட்டத்தடை ஆகும்; அரசாங்கத்தின் இச்செயலால் ஆண், பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் “தாங்கள் அவமான முத்திரையிடப்பட்டதாக உணர்ந்தனர்” என்றார். அப்படியும்கூட அவர் “இன்றைய கன்சர்வேடிவ் கட்சியை” அச்சட்டத்தை அகற்றிவிட்டதற்காக மிகவும் பாராட்டினார். விவாதம் ஆரம்பிக்க முன் மிலிபாண்ட் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தாட்சர் குறித்து “மரியாதையுடன்” பேசுமாறு வலியுறுத்தினார். அதற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு சில தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, சிலர் பேசாதிருந்தனர். தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, அவற்றின் மௌனம்தான் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கையும் தொழிற்சங்கங்கள் காங்கிரசால் –TUC- வெளியிடப்படவில்லை. தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவராக 1984-85ல் இருந்த ஆர்தர் ஸ்கார்கிலை பொறுத்தவரை அவர் தாட்சர் இறப்பு பற்றி கருத்து கூறவேண்டும் என்ற வேண்டுகோள்களை பலமுறை நிராகரித்துவிட்டார். வெளிவந்த ஒரேயொரு கட்டுரை கார்டியனில் TUC பொதுச் செயலர் பிரான்செஸ் ஓ’கிராடி இன் தலையங்கபக்க கட்டுரையாகத்தான் இருந்தது. இதில் தாட்சர் தொழிற்சங்கங்களை உடைத்தது பற்றி ஏதும் இல்லை. மாறாக அரசாங்கச் சொத்துக்களை தனியார்மயமாக்கியதின் மூலம் வந்த பணத்தை “பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்கு பதிலாக வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்ததற்காக” அவருடைய அரசாங்கத்தை குறை கூறியுள்ளது. இந்த நிகழ்வுகள் உலக சோசலிச வலைத் தளம் கூறிய கருத்துக்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; அது கூறியது: “இரும்புப் பெண்மணி” என்று சித்தரிக்கப்படும் தாட்சர் கொண்டிருந்த மிகப்பெரும் அனுகூலம் என்னவென்றால், தோல்வியடைய தீர்மானித்திருந்தவர்களை மட்டுமே எதிரிகளாக எதிர்கொண்டதுதான். இது தான் அவர் குறித்து பெருமையுடன் கூறப்படும் வெற்றிகளுக்கான காரணமாய் இருந்தது.” அத்தீர்ப்பு சோவியத் ஒன்றியம், அதன் ஆதரவு நாடுகள் அனைத்திலும் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கும் பொருந்தும் பாராளுமன்ற விவாதத்தில் உலகை கம்யூனிசத்தில் இருந்து “காப்பாற்றியவர்” எனச் சித்தரித்தது ஒரு கேலிக்கூத்தாகும். அவர் பதவியை விட்டு ஓராண்டுக்குப்பின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் பல தசாப்த அரசியல் காட்டிக்கொடுப்பின் விளைவினால் ஏற்பட்ட துன்பகரமான முடிவாக டிசம்பர் 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மறுசீரமைப்பது என்னும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டது. இது குறிப்பாக தொழிற் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உண்மையெனப் பொருந்தும். தாட்சர் 1984ல் சுரங்கத் தொழிலாளர்களுடன் மோதுகையில், இவை இரண்டும் ஏற்கனவே எவ்விதமான எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டிருந்தன. ஆண்டு முழுவதும் நீடித்திருந்த வேலைநிறுத்தத்தின்போது, சுரங்கத் தொழிலாளர்கள் கடுமையான அரச அடக்குமுறையை எதிர்கொண்டபோது, அவர்களைப் பாதுகாக்க தொழிற்கட்சியோ தொழிற்சங்கமோ எதுவும் செய்யவில்லை. வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுத்தபின், தொழிற்கட்சி இத்தோல்வியை பயன்படுத்தி தாட்சரின் தோற்றத்தில் தன்னை நேரடியாகவே பெருவணிகத்திற்கு ஆதரவு கொடுக்கும் வலதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. வரியைப் பற்றி கட்சிகள் வாதிடக்கூடும் என்று கூறிய காமெரோன், ஆனால், “நம்மில் எவரும் 1970 இருந்த வரிவிகிதங்களான 98 இற்கு திரும்பவேண்டும் என வாதிடவில்லை” என்று கூறியபோது, அவருக்கு அனைவரிடத்திலுருமிருந்தும் ஆதரவு கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாராளுமன்றத் தலைவர்களும் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாட்சரின் இயல்பான வெறுப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒற்றுமையாக உள்ளனர். இது தங்கள் வேலைகள், சமூகங்களை பாதுகாக்க போராடிய சுரங்கத் தொழிலாளர்களை அவர் “சொந்தநாட்டின் விரோதிகள்” என விவரித்ததிலும், மேலும் இன்று அவர்கள் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் எனக்கொண்டுள்ள உறுதிப்பாட்டிலும் வெளிப்பாடாகின்றது. ரூபர்ட் மேர்டொக்கின் டைம்ஸ் செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியர் டானி பிங்கிள்ஸ்ரைன் தாட்சர் மரபியம் பற்றி ஒரு பிபிசி Newsnight நிகழ்ச்சியில் கூறியது போல், 2008 பொருளாதார நெருக்கடியின் பொருள் “பாரிய வேலை செய்ய வேண்டியுள்ளது, செலவு குறைக்கப்பட வேண்டும்”. “இது அனைத்து அரசியல் கட்சிகளையும் இறுதியில் தாட்சரிச உண்மையைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கும், உங்களிடத்தில் இல்லாத பணத்தை நீங்கள் செலவழிக்க முடியாது.” இச்செயற்பட்டியலுக்கான தொழிற் கட்சியின் ஆதரவை புதன் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் மிலிபாண்ட் முன்வைத்துள்ளார். |
|
|