தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா US threatens war with North Korea, demands China cut off support அமெரிக்கா வட கொரியாவை போர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துகிறது, சீனா ஆதரவை துண்டித்துக் கொள்ள வேண்டும் எனக் கோருகிறதுBy Alex
Lantier use this version to print | Send feedback வார இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ச்சியாக வட கொரியா மீது போர் என்னும் அச்சுறுத்தலைக் கொடுத்து, பியோங்யாங் ஆட்சிக்கு சீனா அதன் ஆதரவை முறித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரினர். பல வாரங்கள் பியோங்யாங்கின் அணுவாயுதத் திட்டத்தை இலக்கு கொண்ட அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு பின் இது வந்துள்ளது; அந்த அச்சுறுத்தல்களின்போது வாஷிங்டன் அணுவாயுதம் போடும் திறனுடைய விமானங்களை கொரியாவிற்கு அனுப்பிவைத்து வடக்கிற்கு எதிரான அணுவாயுதப் போரை நடத்தும் அதன் திறனை நிரூபிக்க முற்பட்டது. கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளின் இந்த நகர்வுகள் அமெரிக்க விரிவாக்கங்களுடைய“நெறிப்படுத்தலில்” (The playbook) தெளிவாக எழுதப்பட்டுள்ளதின் ஒரு பாகமாகும் என்பதை வெளிப்படுத்தினர்- இது வட கொரிய அரசாங்கம் மற்றும் மக்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவை. தென் கொரியாவின் முன்னாள் அமெரிக்க தளபதியாக இருந்த ஜெனரல் வால்டர் ஷார்ப், NPR எனப்படும் அமெரிக்க தேசிய பொது வானொலியில், “இந்த எதிர்-ஆத்திரமூட்டல் திட்டத்தை கட்டமைப்பதற்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நிறைய முயற்சிகள் இருந்தது. ஏனெனில் இது ஒரு வலுவான விடையிறுப்பின் கடினமாக சமநிலை தன்மையை கொண்டது: விரைவாகப் போகாதே, ஆனால் போருக்குச் செல்லத் தயாராக இரு” என்று கூறினார். அமெரிக்க, மற்றும் தென்கொரிய சக்திகள் எல்லையில் எந்த துப்பாக்கிச் சூட்டையும் விரைவில் எதிர்கொள்ளும் வகையில் வட கொரிய எல்லை பகுதி இருக்கும் என்பதுடன் பெருத்த விடையிறுப்பிற்கும் தயார் செய்துள்ளன என்று ஷார்ப் கூறினார். அவர் விளக்கினார்: “அதிகாரிகள் தயாரித்துள்ள பல விருப்பத் தேர்வுகள் உள்ளன, இவை நன்கு சிந்திக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டவை, இவை விரைவில் அந்நாட்டை ஜனாதிபதி பார்க் (க்யூன் ஹை, தென் கொரியா) மற்றும் ஜனாதிபதி ஒபாமாவிடம் கொண்டு வந்துவிடும்”. NPR கூறியது, “இதுதான் விரிவாக்க காட்சி; இது முழு நிறைப் போருக்கு வழிவகுத்துவிடும்.” நேற்று வட கொரியா ஒரு சோதனை ஏவுகணையை ஏப்ரல் 10ல் விட தயாரிப்பை கொள்ளலாம் என்னும் உளவுத்துறை தகவல்களை கொண்டு தென்கொரியா Aegis ஏவுகணை போர்க்கப்பல்களை கொரிய தீபகற்பத்தின் இரு புற நீர்நிலைகளுக்கும் அனுப்பியுள்ளது.” தானும், தன் போர்க்கப்பல்களை அப்பகுதியில் நிலைநிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக ஜப்பான் குறிப்புக் காட்டியுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா, டோக்கியோ “மோசமான காட்சிக்கு” தயார் செய்துவருவதாகவும் சீனாவும் ரஷ்யாவும் மோதலைத் தவிர்க்க “முக்கியமான பங்கை” கொள்ள வேண்டும் என்றும் கூறினார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி வாஷிங்டன் B1 கனரக குண்டுவீசும் போர் விமானங்களை நிலைப்படுத்த தொடங்கிவிட்டது, இவை அமெரிக்காவில் இருந்து மேற்கு பசிபிக்கிற்கு செல்லும். ஞாயிறன்று கூறிய அமெரிக்க அதிகாரிகள், சீனா, வடகொரிய ஆட்சியை அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும் என்று கோரினர். பியோங்யாங் சீனாவைத்தான் முக்கியமான உணவு, எரிபொருள் அளிப்புக்களுக்கு நம்பியுள்ளது. CBS ல் கருத்துரைத்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் அரிசோனாவின் ஜோன் மக்கெயின் கூறினார்: “சீனாவின் நடத்தை ஏமாற்றம் தருகிறது; அது சைபர் பாதுகாப்பாயினும், தென் சீனக்கடல் மோதலாயினும், ஒரு பேரழிவு தரும் நிலைமையை கட்டுப்படுத்தாத அதன் தன்மை, சீனா விரும்பினால் வட கொரியாவின் பொருளாரத்திற்கு உதவுவதை நிறுத்திவிடலாம்.” ஜனநாயகக் கட்சியின் நியூயோர்க் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர் மேலும் சேர்த்துக் கொண்டார், “சீனர்கள் இங்கு நிறையச் செய்ய முடியும். இயல்பாக அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பவர்கள், ஆனால் அதை மிக அதிகம் இப்பொழுது கையாள்கின்றனர். அவர்கள் முயற்சியை முடுக்கிவிட்டு வட கொரியாவின் ஆட்சி மீது சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” பெய்ஜிங்கில் உள்ள சீன ஆட்சி, அரசு மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டிலும் தலைமை மாற்றத்தின் இடையே இருப்பது, கொரிய நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த கருத்து வேறுபாடுகளில் உள்ளது. ஞாயிறன்று சீன போவோவில் நடந்த பிராந்திய வணிக உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார்: “தன்னுடைய நலன்களுக்காக எவரும் ஒரு ஆட்சியை அகற்றவும், உலகம் முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்தவும், அனுமதிக்கப்படக்கூடாது.” வட கொரியாவையோ, அமெரிக்காவையோ பொறுப்பு என்று நேரடியாகக் கூறி குற்றச் சாட்டை சுமத்தாமல் இப்படி கவனமாக வெளிவந்துள்ள கருத்து பெய்ஜிங்கில் இராணுவ மோதல் வெடிக்கக்கூடிய வாய்ப்பு பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் பெய்ஜிங், பியோங்யாங்கிற்கு பெருகிய விரோதப் போக்கு குறித்து பல குறிப்புக்களை கொடுத்துள்ளது. ஏற்கனவே அது இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதன் அணுத்திட்டத்திற்காக வட கொரியாவிற்கு எதிரான ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கும் வாக்களித்துள்ளது. போவோ உச்சிமாநாட்டில், Xi ஆஸ்திரேலியாவின் ஆயுதப் படைகளுடன் பரந்த, தொடர்ந்த இராணுவப் பயிற்சிகள் மற்றும் பறிமாற்றங்களுக்கும் ஒப்புக் கொண்டார். ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் அரசாங்கம் நெருக்கமாக பிராந்தியத்தின் அமெரிக்க ஏகாதிபத்திய நலனகளுடன் பிணைந்துள்ளது; முன்னதாக ஆஸ்திரேலியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளது; இது ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை”யின், சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதன் ஒரு பகுதியாகும். Sections of the Chinese army and bureaucracy have openly questioned Beijing’s attempts to accommodate US policy, however. சீன இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தின் பிரிவுகள் வெளிப்படையாக பெய்ஜிங் அமெரிக்க கொள்கைகளுக்கு ஒத்துப் போவதை வினாவிற்கு உட்படுத்தியுள்ளன. Sydney Morning Herald ல் தகவல் வந்துள்ளபடி, மக்கள் விடுதலை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேர்னல் Dai Xu ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “சீனாவைச் சுற்றிவளைத்து படைகளை நிறுத்த வேண்டும் என்னும் அமெரிக்காவின் கருத்தில் ஆஸ்திரேலியா ஒரு இணைப்பு ஆகும். அமெரிக்காவின் மூலோபாய கிழக்குப்புற நடவடிக்கையின் முதல் படி ஆஸ்திரேலியாவிற்குப் படைகளை அனுப்பிவைப்பது ஆகும். சீன-ஆஸ்திரேலிய உறவுகள் எப்பொழுதும் நல்ல முறையில் இருந்துள்ளன—மிக நல்லமுறையில். அப்படி கில்லர்ட் கூறலாம், ஆனால் சீனாவில் உள்ள நாம், “அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கேளுங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காணுங்கள் என’ கூறுகிறோம். அமெரிக்க ஆஸ்திரேலியாவை ஒரு தளமாகக் கொண்டுள்ளது, அது எவரை எதிர்க்கும் நோக்கம் கொண்டது?’ மேற்கத்தைய செய்தி ஊடகம், Zhou Yongkang, பெய்ஜிங்கின் சக்திவாய்ந்த பொலிட்பீரோவின் நிரந்தரக்குழு உறுப்பினர், வட கொரிய ஆட்சிக்கு செல்வாக்கு மிகுந்த ஆதரவாளர் ஆவார் என்று ஊகித்துள்ளது. CCP அதிகாரியான இவர் எண்ணெய் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கு பொறுப்பானவர்; 2011ல் வட கொரியாவில் கிம் ஜோங் அன் பதவிக்கு வருவதற்கு ஆதரவு கொடுத்தார் என்று கூறப்படுகிறது. வாஷிங்டன் பெரும் அழுத்தங்களை சீனா மீது சுமத்துகிறது. அமெரிக்கச் செய்தி ஊடகம் மற்றும் வெளியுறவு கொள்கை நடைமுறையின் பிரிவுகள் இப்பொழுது வாஷிங்டன் போருக்குச் செல்லும், வட கொரியத் தலைமையைக் கொல்லும் என்னும் வாய்ப்பை வெளியிடுகின்றன—அந்நாடுகள் மீது படையெடுத்துக் கைப்பற்றியபோது, ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் மற்றும் லிபிய கர்னல் முயம்மர் கடாபியைக் கொன்றது போல். இதுதான் சமீபத்தியல் Foreign Affairs கட்டுரை ஒன்று உயர்கல்விக்கூடத்தினர் கீர் லீபர் மற்றும் டெரில் பிரஸ், “அடுத்த கொரியப் போர்” என்பதில் இருக்கும் முக்கிய கருத்தாகும். அவர்கள் எழுதுகிறார்கள், பியோங்யாங்கின் இராணுவ வலுவற்ற தன்மையோடு போர் தொடங்கினால், “வட கொரியவின் உள்வட்டம் மிக கடினமான முடிவை எதிர்கொள்ளவேண்டும்: சதாம் ஹுசைன் மற்றும் முயம்மர் அல்-கடாபி போன்ற தோல்வியுற்ற தலைவர்களின் கொடூர விதிகள் போல் வராமல் எப்படித் தடுப்பது.” லீபரும் பிரஸ்ஸும் பியோங்யாக் தலைவர்கள் அமெரிக்க, தென்கொரிய சக்திகளின் கைகளில் கொலையை தவிர்க்க இரு வாய்ப்புக்களை காண்கின்றனர்; ஒன்று பெய்ஜிங்கிற்குத் தப்பி ஓடும் உடன்பாடு, அல்லது அமெரிக்க இராணுவ நடவடிக்கையை பின்வாங்கச் செய்ய வடகொரியாவின் அணுகுண்டுகளை பயன்படுத்துதல். இந்த அடிப்படையில், அவர்கள் பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுத்து, வாஷிங்டன் பியோங்யாங் ஆட்சிக்கு முடிவு கட்டுவதை ஏற்பாடு செய்து, சீனாவிற்கு அதன் தலைவர்கள் ஓட வேண்டும் என வாதிட்டுள்ளனர். “அமெரிக்கா மற்றும் தென்கொரியத் தலைவர்கள் சீனாவை “தங்க பாரசூட்” திட்டங்களை வளர்த்து வடகொரியத் தலைமை, அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். .... கடந்த காலத்தில் சீனா ஒரு நட்பு அமைப்பின் கலைப்பிற்கு வசதி செய்ய அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்த தயக்கம் காட்டியது அறிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் அடுத்த வீட்டில் அணுவாயுதப்போர் என்பது பெய்ஜிங்கை இன்னும் நேரடியான நடவடிக்கைகளை எடுக்கச் செய்யலாம்.” இந்த வரிகள் அப்பட்டமாக வாஷிங்டன் பெய்ஜிங்கை அணுசக்தி மிரட்டல் குறித்து அச்சுறுத்துகின்றது. சீனா அணுவாயுதத்தை எதிர்கொள்ளலாம் அல்லது பியோங்யாங்கில் ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளலாம், சீன வெளியுறவுக் கொள்கையில் ஒரு மாற்றம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதிக சாதாகமாக இருக்கும். பெய்ஜிங்கை மிரட்ட முற்படுவதில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மிக அதிக பணயத்திற்கு விளையாடுகிறது—கிழக்கு ஆசியாவில் புவி மூலோபாய மேலாதிக்கம் மட்டுமின்றி, மத்திய கிழக்கு மற்றும் உலகப் பொருளாதாரம் முழுவதிலும் மேலாதிக்கத்தை விரும்புகிறது. பியோங்யாக்கிற்கு எதிராகச் செயல்படுகையில், வாஷிங்டன் ஈரானையும் அது அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால் போர் என்று அச்சுறுத்துகிறது. இது பியோங்யாங்கை அதன் அணுவாயுதங்களை வைத்திருப்பதில் இருந்து தடுக்கும் இலக்கைக் கொண்டுள்ளது; இதையொட்டி அது ஈரானின் அணுவாயுதத் திட்டத்திற்கு மாதிரியாக இருக்க முடியாது; சீனாவையும் அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஈரானைப் பாதுகாக்காமல் தடுத்துவிடும். இது வாஷிங்டனுக்கு அதிக உந்துதலை மத்திய கிழக்கில் போர்களைத் தொடர்வதற்குக் கொடுக்கும். வாஷிங்டன், சீனாவில் இருந்து எந்தப் பொருளாதார அழுத்தத்தையும் நிறுத்த முயல்கிறது. அமெரிக்க நிதி அமைச்சரகப் புள்ளிவிவரங்களின்படி, சீனா செப்டம்பர் 2012ல் அமெரிக்க பொதுக் கடன் பத்திரங்களை 1.6 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு கொண்டுள்ளது. வட்டிவிகிதத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் என்றாலோ, கிழக்கு ஆசிய நாடுகள் அமெரிக்க அரசாங்கத்திற்குக் கடன் கொடுப்பதை நிறுத்துவது என்று முடிவெடுத்தாலோ, அது பேரழிவு தரும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். Foreign Affairs ல் அமெரிக்க வணிக மற்றும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் ஒபாமாவின் முதல் பதவிக் காலத்தில் இருந்தது பற்றி எழுதியுள்ள பொருளாதார வல்லுனர் பிரெட் பெர்க்ஸ்டென் “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு கட்டத்தில் இப்பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க, அமெரிக்க வளமையுடன் பொருந்தும் வகையில், மறுக்கக் கூடும். திடீரென அமெரிக்காவிற்குக் கடன் கொடுப்பதை நிறுத்துவது டாலரைச் சரியச் செய்யும், பணவீக்கத்தையும் வட்டி விகிதங்களையும் அதிகரிக்கச் செய்யும், அமெரிக்காவுக்கு ஒருவேளை கடினமான வழிவகையை ஏற்படுத்தும்—உலகப் பொருளாதாரத்திற்கும் கூட.” இவற்றிற்கு வாஷிங்டனின் விடையிறுப்பு இரக்கமற்ற முறையில் அதன் அழுத்தம் மற்றும் போர் அச்சுறுத்தல்கள் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, போர் அச்சுறுத்தல்கள், அணுசக்தி மிரட்டல்கள் ஆகியவற்றின் மூலம் பொருளாதார சரிவைத் தவிர்ப்பது என உள்ளது. |
|
|