சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament overturns right to free, universal education

கிரேக்க பாராளுமன்றம், அனைவருக்குமான இலவச கல்விக்கான உரிமையை அகற்றுகிறது

By Robert Stevens
2 April 2013

use this version to print | Send feedback

வியாழனன்று கிரேக்கப் பாராளுமன்றம், இலவசமாக அரசு அளிக்கும் உயர் கல்வியை அழிப்பதை நோக்கமாக கொண்ட அதேனா திட்டம் (Athena Plan) எனப் பெயரிடப்பட்டுள்ள சட்டத்தை இயற்ற வாக்களித்துள்ளது. பல்கலைக்கழகங்களை அகற்றுவதை அரசியலமைப்பு அனுமதிக்காதபோதும் கிரேக்க அரசியலமைப்பை முற்றிலும் மீறியவகையில் இச்சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது.

இச்சட்டம் 148 பாராளுமன்ற பிரதிநிதிகள் ஆதரவாகவும் 125 பிரதிநிதிகள் எதிர்த்தும் வாக்களித்த நிலையில் இயற்றப்பட்டது. ஜனநாயக இடது, ஆளும் மூன்று கட்சி கூட்டணியில் சிறிய கட்சியான ஜனநாயக இடது, நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தது; கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயக PASOK  ஆகியவை மற்ற இரு கட்சிகள் ஆகும். அந்த ஆதரவின் அடிப்படையில்தான் அரசாங்கத்தின் சிக்கன மூலோபாயம் செயல்படுகிது; இல்லாவிடின் இடது என்பது அத்தி இலையாக அது செயல்படும் திறன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

உடனடியாக நான்கு பல்கலைக்கழகங்கள் மூடப்படும் விளைவை அதேனா தோற்றுவித்துள்ளது (எஞ்சியிருக்கும் 40ல் 10 சதவிகிதம்). இவை மத்திய கிரேக்க பல்கலைக்கழகம், மேற்கு கிரேக்கப் பல்கலைக்கழகம், இன்டர்நேஷனல் ஹெலெனிக் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு மாசிடோனியப் பல்கலைக்கழகம் ஆகியவையாகும்.

கிரேக்கத்தின் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20% அகற்றப்பட்டுவிடும், அவற்றில் சில தனியார் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுவிடும். தற்பொழுது 289 பல்கலைக்கழகத் துறைகளும் 235 தொழில்நுட்பக் கல்லூரித் துறைகளுமாக மொத்தம் 534 துறைகள் உள்ளன. மொத்தம் 129 பல்கலைக்கழக (AEI), மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (TEI) துறைகளும் உடனடியாக மூடப்படும், இன்னும் 26 பிற துறைகள் படிப்படியாக மூடப்பட்டுவிடும்.

அதேனா திட்டம் சிடுமூஞ்சித்தனமான வகையில் கிரேக்க ஞானம் மற்றும் அறிவு அளிக்கும் பெண் கடவுளின் பெயரிடப்பட்டுள்ளதுஜனவரி மாதம் முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் அது சட்டமாவதை தடுக்கும் முயற்சியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அது இயற்றப்படுகையில், பாட்ரஸ் இன்னும் பல நகரங்களின் ஆசிரியர்கள் உட்பட, 5,000 மாணவர்கள் ஏதென்ஸில் பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏதென்ஸ் பல்கலைக்கழகத்திற்கு எதிரே கூடிய இந்த எதிர்ப்பு ஓமோனியா சதுக்கம், ஸ்டேடியு தெரு வழியே முக்கிய சின்டக்மா சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றது. மிக அதிக பொலிஸ் பிரசன்னம் இருந்தும், எதிர்ப்பாளர்களைக் கலைக்க  கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டபோதும், பல மாணவர்கள் அப்பகுதியில் நீடித்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையின் பெயரில் நடத்தப்படும் சிக்கனத் திட்டத்தை எதிர்ப்பதற்கு, மாணவர்கள் அதன் கொடி ஒன்றிற்கு தீ வைத்துக் கொளுத்தினர்.

எதிர்ப்பாளர்களில் ஒருவர் Press TV இடம் புதிய சட்டத்தின் சர்வாதிகாரத் தன்மையை வலியுறுத்திக் கூறினார்: இன்று அவர்கள் முன்னோடியில்லாத சட்டவரைவை இயற்றுகின்றனர்; இது கல்வி மந்திரியை புதிய சட்டபூர்வ தடைகளையும், செலவு வெட்டுக்களை செய்வதற்கும் அனுமதிக்கும்; அவற்றிற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பு தேவையில்லை. அவருடைய கையெழுத்தே அதற்குப் போதுமானதாகும். ஆனால் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். எங்கள் வருங்காலத்தை அவர்கள் நாசப்படுத்துகின்றனர், நாங்கள் அவர்களுக்கு எதிராக இருப்பதைக் காண்பர்.

அதே தினம் கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகியில் மற்ற எதிர்ப்புக்களும் நடைபெற்றன. இதில் செரிஸ் நகர மாணவர்களும் பங்கு பெற்றனர். தெசலி பிராந்தியத்தின் தலைநகரும் மிகப் பெரிய நகரமுமான லாரிசாவிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மாணவர் எதிர்ப்புக்கள் முறையான இளைஞர் வேலையின்மையினால் எரியூட்டப்படுகின்றன; இது இப்பொழுது கிட்டத்தட்ட 60% என உள்ளது. பல மாணவர்களும், லாரிசாவில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மார்ச் முற்பகுதியில் கார்பன் மானோ ஆக்சைட் (carbon monoxide) நச்சினால் இறந்துவிட்டதை அவர்கள் முகங்கொடுக்கும் கொடூர நிலைமைகளுக்கு குறிகாட்டியாக கூறுகின்றனர். இந்த இருவரும் தாங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு அடுப்பை கொழுத்த முயன்ற போது, அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது சிறிதாக உணர்விழந்து இறந்து போயினர். வீட்டில் இருந்த மற்ற மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இருவர் ஒன்றும் அறியா கோமா நிலையில் சாவிற்கு அருகே உள்ளனர்.

நாடெங்கிலும் இருக்கும் 53 சிறு நகரங்களில், 12 ல் அதேனா திட்டம் உயர்கல்வி நிறுவனம், துறை அல்லது பள்ளி ஏதும் இல்லாமல் செய்துவிடும். 20,000 மாணவர்கள் கிட்டத்தட்ட தங்கள் படிப்பைக் கைவிட நேரிடும், வேறு நகரத்திற்கு குடிபெயர வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களும் துறைசார்ந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவர்.

எலும்பளவிற்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்பதால், இலாப நோக்கு உடைய பாடத் திட்டங்கள் மட்டுமே தப்பிப் பிழைக்கும்; வெட்டுக்கள உயர்கல்வி கற்க விரும்பும் பட்டதாரிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் வெற்றிகரமாக விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டு இருந்த 77,000தில் இருந்து 55,000 எனச் சரிந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஓர் உதாரணம் மேற்கு மாசிடோனியா பல்கலைக்கழகத்தில் காணப்படுகிறது; அது ஒரு தன்னாட்சி நிறுவனம் என்னும் முறையில் இருந்து அகற்றப்படும். அதன் 6 துறைகளில் 5 துறைகள் (நான்கு பிளோரினா நகரத்திலும் இரண்டு கோஜனியிலும் உள்ளன) தெசலோனிகி மற்றும் மாசிடோனியாப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும்; ஒரு துறை அகற்றப்பட்டுவிடும்.

மேற்கு மசிடோனியக் தொழில்நுட்பத்துறை கூடத்தில் வந்துள்ள வெட்டுக்கள், இறுதியாக அதேனா திட்டத்தில் முதலில் முன்வைத்தவற்றைவிட மிக அதிகம் ஆகும்: 20 துறைகளில் 9 தான் நீடிக்கும், முதலில் 13 நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேனா திட்டத்தை அவசரமாக இயற்றுகையில், கிரேக்க ஆளும் உயரடுக்கு கல்வி முறையைக் கிழித்தெறிந்து, தனியார் துறை கல்வியை எடுத்துக் கொள்ள தளம் அமைக்கிறது; இது கிரேக்க அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும்.

இலவசக் கல்வி உரிமை என்பது அரசியலமைப்பில் 1974 ஆண்டு இராணுவ ஆட்சிக் குழுவின் சரிவிற்குப்பின் பொதிக்கப்பட்டது. 1975ம் ஆண்டு விதி 16 அரசியலமைப்பின் ஒரு பகுதியாகி, கூறியது: அனைத்துக் கிரேக்கர்களும் எல்லா மட்டங்களிலும் அரச கல்வி நிலையங்களில் இலவசக் கல்விக்கு உரிமை படைத்தவர்கள் ஆவர். அது மேலும் கூறியது: பல்கலைக்கழக தரக் கல்வி முற்றிலும் தன்னாட்சியை கொண்ட பொதுச் சட்ட அறிவுடைய சட்டபூர்வ நபர்களால் பிரத்தியேகமாக அளிக்கப்படும்.

அரசியலமைப்பின் விதி 16.8 கூறுவதாவது: தனியார் பல்கலைக்கழக தர நிறுவனங்களை நிறுவுதல் தடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக தர நிறுவனங்களை இணைத்தல் அல்லது பிரித்தல் அரசியலமைப்பில் அனுமதிக்கப்படுகையில், அது அவை அகற்றப்பட அனுமதிக்கவில்லைஆனால் அதேனா திட்டம் அப்படித்தான் ஆணையிட்டுள்ளது.

அதேனாவின் கீழ், தனியார் நிறுவனங்கள் துறைகளில் முதலீடு செய்வது எளிதாகும்; தாங்கள் விரும்பும் நபர்களை துறையில் நியமிக்கலாம்; இதையொட்டி கல்வி அளிப்பதில் தனியார் நிர்வாகம் கொண்டுவரப்படும். நிறுவனங்கள் தனியார் ஆதரவை நாட வேண்டும், தங்கள் கல்வித் திட்டங்களை அதிக அளவில் சந்தைத் தேவைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ள வேண்டும். அதேனாவின் குவிப்பு இத்துறைகளை வளர்த்து, பொருளாதாரம், வணிகத் துறைகளில் சிறப்புப் பயிற்சிகளுக்கு வகை செய்தல் ஆகும்; மற்ற துறைகள் சுவரில் மோதிக்கொள்ள வேண்டியதுதான்.

அதேனா திட்டம் அரச கல்விக்கு எதிரான பாரியத் தாக்குதலின் உச்சக் கட்டம் ஆகும்; இதைத்தான் கிரேக்கத்திற்குக் கொடுத்த 240 பில்லியன் யூரோப் பிணைஎடுப்பின்போது முக்கூட்டான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதே நாணய நிதியம் ஆகியவை கோரின. கடந்த ஆகஸ்ட் மாதம், கல்வி மந்திரி கான்ஸ்டான்டினோஸ் அர்வனிடோபௌலௌஸ், 11 மில்லியன் மக்கள் இருக்கும் நாடு 40 பல்கலைக் கழகங்களைக் கொண்டிருப்பது இயலாது; மற்ற நாடுகள் இஸ்ரேல் போன்றவை 7 அல்லது 8 தான் கொண்டுள்ளன என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் கல்விக் கூடத்தினர் ஊதிய வெட்டுக்களாக 50%க்கும் மேல் இழந்துள்ளனர்; பல நிறுவனங்களின் வரவு-செலவுத் திட்டம் பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் சமீபத்தில் கல்விக் கூடத்தினருடனும் மாணவர்களுடனும் ஆயிரக்கணக்கில் துவக்க, இடைநிலைத்தரப் பள்ளிகளுக்கான வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

கல்வி வரவு-செலவுத் திட்டங்களின் வெட்டுக்களின் தரத்தின் தன்மையினால் பெரும்பாலான பள்ளிகளின் உட்கட்டுமானம் அழிக்கப்பட்டுவிட்டது. குளிர்கால மாதங்களில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் நாடெங்கிலும் வெப்பமேற்றும் எண்ணெய் இல்லாமல், கணினிகள் இல்லாமல், போதுமான பாடப்புத்தகங்கள் இல்லாமல் செயல்படுமாறு கட்டாயத்திற்குள்ளாயின.