World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Goodyear union in France touts cooperative to “save” Amiens plant பிரான்சின் குட்இயர் தொழிற்சங்கம் அமியான் ஆலையைக் “காப்பாற்ற”க் கூட்டுறவு முறையை பிரேரிக்கிறது
By Antoine
Lerougetel வடக்கு பிரான்சில் அமியானில் உள்ள அமியான் நோர்ட் குட்இயர் டயர் ஆலையின் முக்கிய தொழிற்சங்கமான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) பிணைந்துள்ள பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT), பெரும் கூட்டம் ஒன்றை அமியானில் கூட்டி ஆலையை “தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு” அல்லது Scop என மாற்றும் திட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டியது. விவசாயத்துறை டயர் உற்பத்தி நிறுவனம் டைட்டன் ஆலையின் பண்ணைப் பிரிவை வாங்கி 500 வேலைகளை தக்கவைக்கும் திட்டத்தில் இருந்து நழுவியவுடன், குட்இயர் ஜனவரி 31ம் திகதி தான் ஆலையை மூடப்போவதாக அறிவித்தது. இதில் 1,273 தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு திட்டமானது, ஆலை மூடலுக்கு எதிரான போராட்டம் ஒரு பரந்த அரசியல் அணிதிரள்வாகி தொழிலாள வர்க்கம் ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியுறுவதை தடுக்கும் வடிவமைப்பைக் கொண்டது. பிரெஞ்சு தொழிலாளர்கள் அலையென ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள், பெரும் வேலையின்மை விகிதங்கள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். கண்டம் முழுவதும் ஐரோப்பிய முதலாளித்துவம் நடத்தும் சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு பாகமாக இது உள்ளது. 160 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் கூட்டுறவு அமைப்புக்கள் முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு ஒரு தீர்வு எனக் கூறுவோர் “வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, வர்க்க வேறுபாடுகளுக்கு சமரசம் காண விரும்புகின்றனர்.... முதலாளித்துவத்தின் உணர்வுகளுக்கும் செல்வத்திற்கும் முறையீடு செய்யும் கட்டாயத்திற்கு உட்படுகின்றனர. ....அவர்கள் பிற்போக்குத்தன அல்லது கன்சர்வேட்டிவ் சோசலிஸ்ட்டுக்கள் என்ற வகைக்கு தள்ளப்படுகிறனர்.... எனவே அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய அரசியல் நடவடிக்கையையும் தீவிரமாக எதிர்க்கின்றனர்.” என்று சுட்டிக்காட்டினார். அச்சொற்கள் எழுதப்பட்டதில் இருந்து பாலத்தின்கீழ் நிறைய நீர் ஓடிவிட்டது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் அனுபவம், இலாப நோக்கு அமைப்புமுறையின் கீழ் நடத்தப்பட்ட “தொழிலாளர்களின் சொந்த” கூட்டுறவுகள், பேரழிவிற்கு உட்பட்டுவிட்டன என்பதுதான். போட்டித்தன்மையில் நீடித்திருத்தல் என்ற பெயரில் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியங்கள், ஊதியங்கள் இவற்றையும் இறுதியில் தங்கள் வேலைகளையும் இழந்தனர். தொழிலாளர்கள் வறுமையில் ஆழ்ந்த நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவம், “தங்களுக்கு எதிராகவே” வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தியது, அதைப் பயன்படுத்தி, பெருநிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இடம் பெற்று அதிக ஊதியங்கள் பெறும் நிலையை அடைந்தனர். உலகப் பொருளாதார நெருக்கடி, போட்டித்தன்மை, இலாபங்களுக்கான கூடுதல் உந்துதல்நிலை, இவற்றிற்கு இடையே, கூட்டுறவு அமைப்புகள் முறையில் வேலைகளை பாதுகாக்க செல்வதென்பது, குறிப்பாக குட்இயர் போன்ற சர்வதேசப் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் தொழில்களில், கற்பனைத்தனமானது, தொழிலாளர் தொகுப்பு அதிக அளவில் சுரண்டப்படுவதற்குத்தான் வழிவகுக்கும். குட்இயர் தொழிலாளர்கள் ஆலை மூடலுக்கு எதிராக போராடுகின்றனர்; ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு காட்டுமிராண்டித்தன விரைவு திட்டத்தை மறுத்ததில் இருந்து இப்போராட்டம் நடைபெறுகிறது. CGT செயலர் மைக்கேல் வாமனும் அவருடைய சட்ட ஆலோசகர் பியோடோர் ரிலோவும் கூட்டத்தில் இருந்த 200 தொழிலாளர்களிடம் அவர்கள் Scop அமைத்து அதன் பண்ணைப் பிரிவை வாங்கும் வகையில் ஆலையை “காப்பாற்றலாம்” என்றனர். கூட்டம் முடிந்த பின், செய்தி ஊடகத்திடம் வாமன் அனைத்து வேலைகளையும் காப்பாற்றுவது என்பதற்கு முற்றிலும் அப்பால், “Scop திட்டம், விவசாயத்துறை உற்பத்தியை தக்கவைக்கும் திட்டத்துடன், தாமாகவே பணியை விட்டு விலகும் திட்டமும் இருப்பதாகவும், அது கார் டயர் உற்பத்தியை இரண்டு ஆண்டுகள் தொடரவைக்கும்” என்றும் கூறினர். அமியான்-நோர்ட் இல் உள்ள தகவல் பலகையில் மார்ச் 20ல் வெளிவந்த செய்தியில், தொழிற்சங்கம் அமெரிக்காவில் குட்இயரில் தலைமை நிர்வாகியாக இருக்கும் ரிச் கிரேமருக்கு Scop பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறும், இது “தன்னார்வமுடையவர்களுக்கு” மட்டும் இருக்காது என்றும் கூறுகிறது. இதைத்தவிர, தொழிற்சங்கம் மற்ற தொழிலாளர்களுக்கும் திட்டம் உரியது என்றும் “குட்இயர் இடம் நிதி உள்ளது அது டைட்டன் திட்டம் என அழைக்கப்பட்டதற்கு கொடுக்க இருந்ததுபோல் இதற்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. கூட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் வாமனை அவர் Scop இன் மேலாளராக இருப்பாரா என்று கேட்டனர். அவர் அத்தகைய விழைவுகளை மறுத்தார்; ஆனால் மற்றொரு தொழிலாளியிடம் “நாங்கள்தான் அதை நடத்துவோம்” என்றார். ஊதியங்கள் எப்படி இருக்கும் என்றும் அவர் கூறவில்லை. கூட்டம் முடிந்த பின், ஒரு தொழிலாளி WSWS இடம், “இது ஆலையை எடுத்துக் கொள்வது அல்ல. நாங்கள் இயந்திரங்கள், உற்பத்தியுடன் ஈடுபாடு கொண்டிருப்போம், குட்இயர் –வணிகத்தன்மை— உடன் ஒரு பங்காளித்தனம் போல். நாங்கள் துணை ஒப்பந்தக்காரர்கள் போல் இருப்போம். CGT யின் மந்திரம் முதலாளிகள் அதிக இலாபம் ஈட்டுகின்றனர் என்பதாகும். இது ஒரு குட்டி முதலாளித்துவ மனப்பான்மை, பெரிய முதலாளித்துவத்துடன் இலாபங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் தன்மை.” தொழில்துறை ஆலோசகர்கள் Secafi, விவசாய டயர் பிரிவு நடத்தப்படுவதற்கு 20 மில்லியன் யூரோக்கள் முதலீடு தேவை என்று கணக்கிட்டுள்ளனர். வாமன், ஒரு கன்சர்வேட்டிவ் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதி Phillippe Boulland ஐயும் சோசலிஸ்ட் கட்சி பிராந்திய, அரசாங்கத்துறை தலைவர்களையும் Scop ற்கு நிதி வழங்க அணுகியுள்ளார்: இதே சக்திகள்தான் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்கள் மீது மிருகத்தனத் தாக்குதல்களை நடத்துபவை. இதற்கு முந்தைய தினம், பிரான்சின் குட்இயர் மத்திய பணியகம் (CCE) ஆலை மூடல் ஏற்பாடுகளை விவாதித்தபோது, தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் பாரிஸிற்கு சென்ற 300 அமியான் நோர்ட் தொழிலாளர்கள், நிறுவன தலைமையகத்தை காவல் காத்த பொலிசுடன் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்பு இருமுறை அவர்கள் மோதியுள்ளனர். இம்முறை முட்டைகளை வீசுவதற்குபதில், அவர்கள் பொலிசார் மீது ரோஜா பூக்களை எறிந்தனர். இது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு சமாதான சைகையாகும்; அதுவோ சிக்கனம், பணிநீக்கங்களுக்கு எதிரான எதிர்ப்புகளுக்கு கடுமையான அடக்குமுறையைத் தயாரித்து வருகிறது. உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் ஜனவரி 30 அன்று SDIG பொலிஸ் உளவுத்துறையிடம் தொந்திரவிற்குட்பட்டுள்ள நிறுவனங்களின் போக்கை “நெருக்கமாக” கவனிக்குமாறு உத்தரவுகள் கொடுத்தார்; ஏனெனில் அங்கு தொழிலாளர் அமைதியின்மை வெடிக்கக் கூடும். இந்த உத்தரவு பொலிஸ், தொழிலாளர் நடவடிக்கைகளை கண்காணிக்கும் திட்டங்களை மேற்கொள்ளுமாறும், “மோதலில் தீவிரமயப்பட்ட தன்மை ஏற்பட்டு உற்பத்திக்கு அச்சுறுத்தல்கள்” உள்ளனவா என்பதைக் கவனிக்குமாறும் கூறுகிறது.”ஒரு பொருளாதாரச் சரிவின்போது.... பாதிப்புத்திறன் இருக்கும் நிறுவனங்கள், துறைகளில் நெருக்கமான கண்காணிப்பு இருப்பது முக்கியம்.” என்று உத்தரவு கூறுகிறது. ஹாலண்டின் தேர்தலுக்கு CGT ஆதரவு கொடுத்த்தோடு, கட்சியின் தேசியவாத வேலைத்திட்டமான பிரெஞ்சு முதலாளித்துவத்தை இன்னும் “போட்டித்தன்மை உடையதாக” தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மற்றும் தேட்டங்களின் மீது வரலாற்று தன்மை கொண்ட தாக்குதலை நடத்த உறுதி கொண்டுள்ளது. மார்ச்18க்கும் 22க்கும் இடையே நடந்த 50 வது மாநாட்டில் இருந்து, CGT தொழிலாளர்களின் போராட்டங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுவதைத் தடுக்கவும், அது ஆதரிக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சவால் விடுவதை தடுக்கவும் ஒரு வழிவகையாக கூட்டுறவு அமைப்புக்களை விளம்பரப்படுத்துகிறது. வேலையின்மையை எதிர்க்கும் ஒரு வழிவகையாக அமியான் நோர்ட்டில் Scop க்கு CGT முக்கியத்துவம் கொடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு l’Humanite மார்ச் 19 அன்று பெரும் ஆர்வத்துடன், “போராட்டத்தில் இருக்கும் அதிக நிறுவனங்கள், Scop க்களை அமைத்து தங்களை பங்குதாரர்களிடம் இருந்தும் முற்றிலும் நிதிய நிலைப்பாட்டில் இருந்தும் விடுவித்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.” சில “முற்றிலும் செயல்படத்தக்க” கூட்டுறவுகள் காங்கிரசில் பிரதிபலிக்கப்படுவதை அது குறிப்பிட்டு, CGT அமியான் நோர்ட்க்குக் கொடுக்கும் திட்டம் “கிட்டத்தட்ட 1,200 வேலைகளில் சிலவற்றைக் காக்கும். கருத்து சிறப்பாகத்தான் உள்ளது, புதிய தாராளவாத பொருளாதார தர்கத்திற்கு எதிர்ப்புக்காட்டுவதில் அதிக உருப்படியான தன்மையை காட்டுகிறது.” மார்ச் 12ம் திகதி ஸ்ராலினிச நாளைடு, Hélio-Corbeil அச்சகத்தாருக்கு “தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் திட்டத்தை” உதாரணம் எனக் காட்டியது, ஆனால் ஹெலியோ தொழிலாளர்கள் 1.8 மில்லியன் யூரோக்களை உற்பத்தியை தொடரக் கைவிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது. இன்னும் ஆலையில் இருக்கும் 120 தொழிலாளர்களில் 80 பேர் 3 மாத ஊதியத்தையும் அவர்களுடைய பணிநீக்க நிதியையும் 5000 யூரோக்கள் நபருக்கு என முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பிராந்தியக்குழு கூட்டுறவு நாணய வங்கியில் இருந்து கடன்கள் வாங்க வேண்டும்; ஆயுதங்கள் தயாரிப்பாளர்களான Dassault இடம் இருந்தும் கடன் வாங்கி, பின்னர் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஹெலியோவின் முன்னாள் CGT தலைவர் ப்ரூனோ அர்சா, இப்பொழுது நிறுவனத்தின் நிர்வாகியாக, மிக அதிக ஊதியம் பெறுகிறார். அவர் கேட்கிறார், “எப்படி ஒரு தொழிற்சங்கம் —தொழிலாளர்கள் Scop அமைத்துள்ளபோது— உண்மையான முதலாளித்துவ எதிர்ப்பு சக்தியாக வரமுடியும்?” |
|