சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

US sends fighter-bombers to Korea amid rising risk of war

அதிகரிக்கும் போர் ஆபத்தின் மத்தியில் அமெரிக்கா கொரியாவிற்கு போர் விமானங்களை அனுப்புகிறது

By Alex Lantier
1 April 2013

use this version to print | Send feedback

கிழக்கு ஆசியாவை நிலைமையை மயிரிழையில் மோசமடைய செய்யக்கூடியவகையில் அதன் அணுவாயுதத்திட்டத்தை  காரணமாக காட்டி வட கொரியாவுடனான மோதலை வாஷிங்டன் அதிகரிக்கையில் அமெரிக்க F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள் நேற்று தென்கொரியாவை வந்தடைந்தன.

பொதுவாக ஜப்பானின் கடேனா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்படும் ஜெட்டுக்கள், அமெரிக்க தென்கொரிய Foal Eagle இராணுவப் பயிற்சிகளின் மத்தியில் இப்பொழுது தென் கொரியாவில் ஒசான் விமானப்படை தளத்தில் நிலை கொண்டுள்ளன.

வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்க படைபலத்தை இராணுவ அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை மூலம் அதிகரிப்பது இரண்டு வாரங்களாக நடந்து வருவதை அடுத்து இந்த F22 பயன்படுத்தல் வந்துள்ளது. மார்ச் 19ம் திகதி அமெரிக்கா அணுவாயுதம் தாங்கிய B52 குண்டுத்தாக்குதல் திறன் உடைய விமானங்களை தென் கொரியாவிற்கு அனுப்பியது. கடந்த வாரம் அமெரிக்கா இரண்டு B-2 ஸ்டெல்த் விமானங்களை தென்கொரிய குண்டுவீச்சுப் பயிற்சி நிலையத்தில் போலிக்குண்டுகளை வீசிப் பயிற்சிபெற அனுப்பி வைத்தது.

அமெரிக்க கனரக குண்டுத்தாக்குதல் திறனுடைய விமானங்களை நிலை நிறுத்தியிருப்பது ஓர் அப்பட்டமான அச்சுறுத்தல் ஆகும். இது கிழக்கு ஆசியாவில் ஒரு இராணுவ மோதல் ஏற்பட்டால், அமெரிக்கா அதன் அணுவாயுதங்களை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்பதை காட்டுகின்றது. இந்த அச்சுறுத்தல் வட கொரியாவிற்கு எதிரே மட்டும் இல்லாமல் அப்பிராந்தியத்தில் அமெரிக்கச் செயற்பாடுகளுக்கு முக்கிய இலக்கான சீனாவிற்கு எதிராகவும் உள்ளது. சீனா பியோங்யாங்கில் இருக்கும் வடகொரிய ஆட்சிக்கு அடிப்படை உணவு, எரிபொருளை விநியோகிக்கின்றது.

25 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சிறு, வறிய நாடான வட கொரியாவைப் பொறுத்தவரை, B-2 விமானங்கள் வாஷிங்டன் நாட்டை அழிக்கத் தயார் என்பதற்கு அடையாளம் ஆகும். B-2 விமானங்கள்  B83 அணுகுண்டு 16 இனை வைத்திருப்பவை. இவை ஒவ்வொன்றும் 1.2 மெகா தொன் வீச்சைக் கொடுக்கும். இது அமெரிக்க ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது 1945ல் பொழிந்த குண்டுகளைப்போல் 75 மடங்கு சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு B2 குண்டுகள் வட கொரியாமீது போடப்பட்டால், அவை அந்நாட்டின் அனைத்துப் பெரிய, நடுத்தர நகரங்களையும் அழித்துவிடும்.

சனிக்கிழமை அன்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் அவர்கள் பியோங்யாங்கிற்கு எதிராக இன்னும் பலத்தை நிரூபிக்கும் தொடர்நிகழ்வுகளை தயாரிக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிரூபணங்கள் என்ன என்பதை “நடைமுறைப் பாதுகாப்பு தேவைகளுக்காக” கூறுவதற்கில்லை என்றும் மறுத்துவிட்டனர்.

ஒரு கூட்டு “ஆத்திரமூட்டலுக்கு எதிரான திட்டத்தையும்” பியோங்யாக்கிற்கு எதிராக தென் கொரியாவுடன் இணைந்து தயாரித்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதன் நோக்கம் எத்தகைய வட கொரிய இராணுவ நடவடிக்கையையும் 2010ல் நடந்தது போல் ஆக்கிரோஷத்துடன் எதிர்கொள்வது ஆகும். அப்பொழுது தென் கொரிய கடற்படை கப்பல் சீயோனான் மூழ்கடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து வட கொரியா பீரங்கித் தாக்குதல்களை தொடங்கியது. முன்னரைப்போல் அவ்வாறான நிகழ்வு ஏற்பட்டால் மோதல் தீவிரமடையும் அபாயத்தை தற்போதைய அமெரிக்க-தென்கொரிய திட்டம் கொண்டுள்ளது.

இந்த ஆபத்து தென் கொரியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழைமைவாத ஜனாதிபதி பார்க் கியூன் ஹை பதவிக்கு வந்தபின் அதிகரித்துள்ளது. இவர் தென் கொரிய இராணுவ சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ உடைய மகள் ஆவார். அவரது அரசாங்கம் தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து தென்கொரியாவின் அணுத்திட்டங்களை விரிவாக்குவதாக முன்மொழிந்தார். எல்லைப் போர் ஏதேனும் மூண்டால் இவர் மோதலை விரிவாக்க, அவருடைய வடக்கு கொரிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் கடுமைத்தன்மையை நிரூபிக்க ஆழ்ந்த அழுத்தங்களின் கீழ் வருவார்.

 “கடுமையான பிரதிபலிப்புத்தான் வடகொரிய ஆத்திரமூட்டல்களை நிறுத்தும்” என்ற தலைப்பில் தென் கொரியாவின் பழைமைவாத Chosun Ilbo பத்திரிகையில் வந்துள்ள சமீபத்திய தலையங்கம் 2010 மோதலுக்கு “குழப்பம் நிறைந்த, திறனற்ற பதிலிறுப்பை” கண்டித்துள்ளது. செய்தித்தாள் “ஆத்திரமூட்டலுக்கு எதிரான திட்டத்தை” விவரித்துள்ளது. இதில் அமெரிக்கத் தலைமையில், ஜப்பானிய உதவியுடன் நடத்தப்படும் பெரிய அளவு மோதல்களும் உள்ளடங்கியுள்ளன.

Chosun Ilbo எழுதுகிறது: “தென் கொரிய இராணுவம் ஆரம்ப விடையிறுப்பை கையாளும். அதே நேரத்தில் விமானந்தாங்கி கப்பலான ஜோர்ஜ் வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் 7வது கடற்படை,  ஜப்பானிய F22 போர் விமானங்களுடன் திரட்டப்பட்டு அமெரிக்க மரைன்கள் கூட்டுப் பணிகளை கையாள்வதற்கு பயன்படுத்தப்படுவர்.

ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” என்பதால் தூண்டிவிடப்பட்டுள்ள அழுத்தங்கள் சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க நட்பு நாடுகளின் கூட்டை இணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இப்பொழுது இது ஒரு முழு அளவு போர் நெருக்கடியாக வெடித்துள்ளது.

வெள்ளியன்று, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ் “நாம் நிலைமையை நம் கட்டுக்கு அடங்காமல் இலகுவாக நழுவ விட்டுவிடக்கூடும். அது ஒரு தீய வட்டம் என்னும் வடிவமைப்பிற்குள் சரிந்துவிடும்” என்று எச்சரித்தார்.

மேற்கின் செய்தி ஊடகங்கள் வட கொரியாவைக் கண்டித்துள்ளது ஒருபுறம் இருக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு முக்கிய பொறுப்பையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் வாஷிங்டன் ஒரு கண்டம்தாண்டும் ஏவுகணை எதிர்ப்புக்கேடயத்தைக் கட்டமைக்கும் திட்டங்களை அறிவித்தது. இது சீனாவை இலக்குவைக்கப்பட்டபோதும், வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை என நியாயப்படுத்தப்பட்டது. இது ஜப்பானுக்கும் சீனாவிற்கும் சென்காகு (டயோயு) தீவுகள் குறித்த மோதலையும் ஊக்குவித்துள்ளது.

பெய்ஜிங் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிவகையாக வடகொரியாவை வாஷிங்டன் பயன்படுத்தியுள்ளது. சிரியா, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதல்களுக்கு ஒரு பெரிய தடையாக சீனா வெளிப்பட்டுள்ளது. ஆனால் இதுதான் அமெரிக்காவிற்கு மிக அதிகம் கடன் கொடுத்துள்ள நாடாகும். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் இன்னும் நேரடியாக இணைந்து கொள்ள இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

நேற்று சீனாவின் அரசாங்கம் நடத்தும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் “நிதானமான சிந்தனை கொரியத் தீபகற்பத்தில் இருக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் கூறப்படுவதாவது: “இப்பிராந்தியத்தில் ஒரு மூலோபாய பங்காளியான சீனா நீண்டகாலமாகவே கொரிய தீபகற்பத்தில் சமாதானம் தேவை என அழைப்புக் கொடுத்து வருகிறது. இப்பொழுது DPRK [கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அதாவது வட கொரியா] மற்றும் அமெரிக்கா தங்கள் வார்த்தையாடல்களை குறைத்துக் கொண்டு பெய்ஜிங்குடன் இணைந்து செயல்பட்டு நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டுவரும் ஆறு நாடுகள் பேச்சுக்களை நடத்த வேண்டும்.”

பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் வருமாறு அழுத்துகையில், பெய்ஜிங் வாஷிங்டனுக்கு எதிராக சீனா பியோங்யாங்கிற்கு ஆதரவு கொடுக்காது என்ற அடையாளத்தையும் காட்டுகிறது. இம்மாதம் முன்னதாக அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் பியோங்யாங்மீது அதன் அணுவாயுதத் திட்டத்திற்காக பொருளாதாரத் தடைகளை சுமத்த ஆதரவாக வாக்களித்தது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்படி, சீன ஆட்சியின் சில பிரிவுகள் பியாங்யாங்கை “தொந்தரவு கொடுக்கும், கெடுதல் நிறைந்த குழந்தை” என்று காண்கின்றன.

கடந்த வார இறுதியில் பியோங்யாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கொரியத் தீபகற்பத்தில் “போர்க்கால நிலை” உள்ளது என அறிவித்துள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து வெள்ளியன்று பியோங்யாங்கில் பெரிய இராணுவ அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது.

ஆனால் பியோங்யாங்கின் முரட்டுத்தன வார்த்தையாடல்களுக்கு அப்பால், கிடைக்கும் தகவல்கள் வட கொரியாவிற்குள் ஒரு விந்தையான அமைதி நிலவுவதைக் குறிப்பிடுகின்றன. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தங்கள் வட கொரிய இராணுவம் பற்றிய உளவுத்துறை அசாதாரண நடவடிக்கை எதையும் குறிக்கவில்லை எனக் கூறுகின்றனர். பியோங்யாக் நிலைமையைப் பொறுத்தவரை, அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர்கள் இராணுவ அணிவகுப்பிற்கு அப்பால், “எல்லா இடங்களிலும் வழக்கம் போல் உணவு விடுதிகள், கடைகள், பண்ணைகள், ஆலைகள்  ஆகியவற்றில் வழக்கம்போல் செயற்பாடுகள் உள்ளன. இவை போன்ற அறிவித்தல்களை பலமுறை தொழிலாளர்கள் முன்பும் கேட்டுள்ளனர்” என்று கூறுகின்றனர்.

கொரியாவில் “போர்க்கால நிலைமை” என்னும் பியோங்யாங்கின் அறிக்கையைப் பொறுத்தவரை, இது ஒரு சட்டபூர்வ உண்மையாகும். 1950-1953 கொரியப் போரை முடிவிற்குக் கொண்டு வந்த போர் நிறுத்தம் உண்மையில் கொரியாவில் போர்க்கால நிலைமையை நிறுத்திவிடவில்லை. ஒரு முறையான சமாதான ஒப்பந்தம் தேவை என்று நீண்ட காலமாக பியோங்யாங் கோரிவருகிறது. இது 1953 இலேயே அமெரிக்காவாலும் குறிப்பாக சிங்மன் ரீயினால் தலைமைதாங்கப்பட்ட அதன் தென்கொரியக் கைப்பாவை பாசிச அரசினாலும் எதிர்க்கப்பட்டது. அப்பொழுது முதல் சமாதான உடன்படிக்கைக்கான வடகொரிய கோரிக்கைகளை வாஷிங்டன் பொருட்படுத்துவதில்லை.

பியோங்யாங்கின் அறிக்கைகள் வட கொரிய அதிகாரத்துவத்தின் பிரிவுகள் வாஷிங்டனுடன் ஓரளவு சமாதான முறையை அடைய முயல்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன.

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழு ஒரு “முக்கிய பிரச்சினைக்குத்” தீர்வு காணும் என்று புதிரான அறிவிப்பைச் செய்த பிறகு நேற்றுக் கூடி, வட கொரிய பாராளுமன்றத்தின் ஒரு நாள் கூட்த்திற்கு முன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் அணுத்திட்டத்திற்கு ஆதரவைத் தொடர்ந்து உறுதியளிக்கையில், அறிக்கை பியோங்யாங் “அணுவாயுதப் பரப்பைத் தடுக்கும் முற்போக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்” என்று கூறுகிறது.

இந்த அறிக்கை பியோங்யாங் வட கொரியாவை வெளிநாட்டு மூலதனத்தை நம்பி இருக்கும் ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு திறந்துவிடத் தயாராக இருப்பதை அடையாளம் காட்டியுள்ளது. வட கொரியத் தொழிலாளர்களின் மலிவுக்கூலியைச் சுரண்டும். அறிக்கை “அறிவைத் தளமுடைய பொருளாதாரத்திற்கு” மாற்றம் வேண்டும், வெளிநாட்டு வணிகம் “பன்முகமாகப் படர்ந்து விரிந்திருக்க அது உதவும்” என்றும், முதலீடு “பரந்த அளவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே பியோங்யாங் பல ஏற்றுமதிப் பிராந்தியங்களை, குறிப்பாக தென் கொரியாவுடன் கீசாங்கிலும் செயல்படுத்தியுள்ளது.

ஆனால், வாஷிங்டனுடன் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு, உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ளும் பியோங்யாங்கின் முயற்சிகள் பல முறையும் அமெரிக்க எதிர்ப்பினால் பயனற்றுப் போய்விட்டன. அமெரிக்காவிற்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கும் தங்கள் பொருளாதாரத்தை திறந்துவிட்டபின் பியோங்யாங்கின் தலைவர்களின் பாதுகாப்பிற்கு வாஷிங்டன் எத்தகைய உறுதிகளைக் கொடுக்கும் என்பது தெளிவாகவில்லை. குறிப்பாக அமெரிக்காவிற்கும் பியோங்யாங்கின் முக்கிய பிராந்திய நட்பு நாடான சீனாவிற்கும் இடைய அழுத்தங்கள் விரைவாகப் பெருகிய நிலையில்.

புஷ் நிர்வாகத்தால் வட கொரியா “தீய அச்சில்” ஒரு அங்கத்துவநாடு என்று 2001ல் கூறப்பட்டது. மேற்கு செய்தி ஊடகத்தில் நிரந்தரமாக தீமையாகச் சித்தரிக்கப்படும் இலக்காகவும் அது இருந்து வருகிறது.