World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Cahuzac tax scandal, neo-fascist ties stagger France’s ruling Socialist Party கௌசாக் வரி ஊழல், நவ-பாசிச பிணைப்புகள் பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை அதிர்விற்கு உடபடுத்துகின்றன.
By Alex Lantier
பிரான்சின் முன்னாள் வரவு-செலவுத் திட்ட மந்திரி ஜெரோம் கௌசாக்கின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு வங்கி கணக்குகள் பற்றிய பெருகிய ஊழல்கள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சில் கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பல பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களுக்கு சிற்பியாக இருந்த கௌசாக், பேர்லினால் இயக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வாதிடுபர் ஆவார்; இவர் PS உடைய வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரச்சாரம் என கூறப்படுவதற்கு தலைவர் ஆவார்—இவர் தன்னுடைய வரிகளையே கொடுக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தார் என்பது வெளிப்படை. கௌசாக் செவ்வாயன்று வெளிநாட்டுக் கணக்குகள் வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார்; ஒரு வலைத் தள தகவலில் சிங்கப்பூர் வங்கி ஒன்றில் தான் வைத்திருக்கும் 600,000 யூரோக்களை (அமெரிக்க $776,000) தன் பாரிஸ் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளார். ஹாலண்டின் ஒப்புதல் மதிப்பீடுகள், புதிய மோசமான நிலையான கிட்டத்தட்ட 30% க்குச் சரிந்த நிலையில் கௌசாக் இராஜிநாமா செய்தார், தொழிலாள வர்க்கம் இவருடைய சிக்கனக் கொள்கைகள் மற்றும் சிரிய, மாலிப் போர்க் கொள்கைகள் குறித்து பெருகியசீற்றம் கொண்டுள்ளதற்கு நடுவே இது நடந்துள்ளது. புதன் அன்று மொரோக்கோவிற்கு இரண்டு நாட்கள் வணிகப் பேச்சுக்களுக்கு செல்லுமுன், அவசர அவசரமாக ஹாலண்ட் ஒரு சிறு உரையை நிகழ்த்தி பொது அதிகாரிகள் கூடுதலான நிதிபற்றிய தகவல்களை வெளியிட வேண்டிய தேவையை முன்வைத்தார். பிரான்சின் முக்கிய செய்தித்தாட்களும் ஒளிபரப்பு சேவைகளும் வாரம் முழுவதும் இந்நிகழ்வை வெளியிடுகையில், அதிகாரிகளும் செய்தியாளர்களும் இதைப்பற்றி ஹாலண்டும் பிரதம மந்திரி Jean Marc Ayrault ம் எவ்வளவு அறிவர் எனக் கேட்கின்றனர். ஹாலண்ட் டிசம்பர் மாதமே பலமுறையும் கௌசாக் வரி ஏய்க்கிறார் என்னும் கூற்றுக்களை ஆதாரங்களுடன் பெற்றிருந்தார், அதுவும் நிகழ்வு Médiapart வலைத் தளத்தில் வெளிவந்தபின். ஆயினும்கூட, ஹாலண்ட் நிர்வாகமும் செய்தி ஊடகத்தின் பல பிரிவுகளும் இந்த வாரம் வரை அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தன. கௌசாக்கின் இரகசிய வங்கிக் கணக்குகள் பற்றிய வெளிப்படுத்தல்கள் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) உடன் அவருடைய பிணைப்புக்களை பகிரங்கமாக்கியுள்ளன. சிங்கப்பூரில் வைத்திருக்கும் கௌசாக்கின் நிதிகள் முதலில் சுவிட்சர்லாந்தில் கௌசாக்கிற்காக ஒரு உயர்மட்ட FN அதிகாரியும் 1992ல் FN தலைவர் மரின் லு பென்னின் ஆலோசகருமான பிலிப் பெனான்க் இனால் திறக்கப்பட்டது. அப்பொழுது Le Monde கூற்றுப்படி, கௌசாக் 1970கள்-1980களின் பாசிச மாணவர் அமைப்பான ஒற்றுமைப் பாதுகாப்புக் குழுவின் (Union Defense Group -GUD) உறுப்பினர்களுடன் நிதிய மற்றும் தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருந்தார்; அதில் பெனான்க்கும் இருந்தார். இன்று இந்த சக்திகள், FN உடைய “கறுப்பு எலிகள்” பிரிவு என அழைக்கப்படுகின்றன. பெனான்க் பலமுறையும் கணக்கை தோற்றுவித்து GUD உறுப்பினரான லியோனல் க்கேடோ இடமிருந்து பணத்தை பெற்றிருந்தார்; க்கேடோ கௌசாக்கிற்கு ஒரு தோற்றுவிட்ட பெருவிய சுரங்கத் திட்டத்தில் அவர் செய்திருந்த முதலீட்டை திருப்பிக் கொடுத்தார்; அத்திட்டம் க்கேடோ தயாரித்தது. மரின் லு பென், பெனான்கை பாதுகாக்கும் வகையில், “அது முற்றிலும் ஒரு வெற்று நடவடிக்கை ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன் நான் சட்டப்பள்ளியில் இருக்கையில் என்னுடைய வக்கீல் நண்பர்களில் ஒருவர் வாடிக்கையாளருக்காக ஒரு வெளிநாட்டுக் கணக்கை திறந்தார்.” என்றார். ஆளும் வட்டங்களில் தெளிவாக இந்த ஊழல், அதுவும் ஹாலண்டின் கன்சர்வேடிவ் முன்னோடிகளை ஊழல் அலைகள் தாக்கியபின்னர் முழு அரசியல் அமைப்பு முறையையும் இழிவுபடுத்தும் என்று அஞ்சுகின்றன. சார்ல்ஸ் பாஸ்குவாவும் ஜனாதிபதி ஜாக் சிராக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர்; சிராக் குற்றவாளி என அறியப்பட்டார், சார்க்கோசி நிர்வாகத்தின் வரவு-செலவுத் திட்ட மந்திரி எரிக் வோர்த், பில்லியனர் லில்லியன் பெத்தான்கூர் இடம் இருந்து சார்க்கோசியின் பிரச்சாரத்திற்கு நிதியை சட்டவிரோதமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இராஜிநாமா செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. லு மொண்டின் முன்னாள் ஆசிரியரும் குட்டி முதலாளித்துவ LCR உடைய முன்னாள் உறுப்பினருமான Médiapart இன் ஆசிரியர் எட்வி ப்ளேனெல், பின்புலத்தில் இருந்து கௌசாக் விவகாரத்தை ஊக்குவித்து கொண்டிருக்கிறார். “கௌசாக் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை என்று கூறும் அவர், ஜனநாயகத்திற்கு இழிவு கொடுப்பது செய்தியாளர்களுக்கு ஒன்றும் களிப்பு அல்ல” என்றார். அதுவும் பல மாதங்கள் கௌசாக்கை தாக்கியிபின் இது அவருடைய நிலைப்பாட்டில் ஒரு மாற்றமாகும். ஸ்ராலினிச நாளேடான L’Humanité, “பிரவுண் அலை” ஒன்று, PS இன் நெருக்கடியில் இலாபமடைகிறது என நவ-பாசிஸ்ட்டுக்கள் பற்றி எச்சரித்து “குடியரசின் வண்ணங்களை வலுப்படுத்த வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளது. ஆரம்பத்தில் கௌசாக் இராஜிநாமாவை “ஜனநாயகத்திற்கு ஆபத்து” என்று விமர்சித்த Le Point, அரசாங்கம் “அதன் இதயத்தில் தாக்கப்பட்டுள்ளது” என எழுதியுள்ளது. PS அரசியல் வாதிகள், கௌசாக் வெளிநாட்டில் மறைமுகக் கணக்கு வைத்திருந்தார் என்னும் செய்தியைக்கேட்டு, இப்பொழுது “இடி விழுந்தது போல் உள்ளோம்” என அறிவிக்கின்றனர். இந்த நிலைப்பாடு அதிகம் நம்பகத்தன்மை கொண்டதல்ல; ஏனெனில் ஹாலண்டின் நண்பரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் நிதி மேலாளருமான Jean Jacques Augier, கேமன் தீவுகளில் வெளிநாட்டு கணக்குகளை வைத்திருந்தார். ஹாலண்ட் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட நேர்ந்தது; அதில் அவருடைய பிரச்சாரக் கணக்குகள் “முற்றிலும் நெறியானவை” என்றும் Augier இன் முதலீடுகள் பற்றி எதுவும் தெரியாது என்றும் மறுத்தார். கன்சர்வேட்டிவ் மற்றும் நவ-பாசிச அரசியல் வாதிகளிடம் இருந்து நிதி மந்திரி Pierre Moscovici அல்லது பிரதம மந்திரி Jean Marc Ayrault இராஜிநாமா செய்யவேண்டும் என்பவற்றையும் ஹாலண்ட் எதிர்கொண்டார். “அரசாங்கம் செயல்படுவதை பொறுத்தவரை, இந்த பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஏனெனில் அது அரசாங்கம் இதில் ஊக்கம் கொண்டிருக்கிறது என்ற கருத்தை ஏற்படுத்தும்” என்றார் அவர். உண்மையில், கௌசாக்கின் நிதிகள் பிரான்சில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக வெளிவந்துள்ளது என்றால், அதற்கு அவருடைய சொந்த வரி மீறல்கள் மட்டும் காரணம் இல்லை. இவை நிதிய அளவில் சோசலிஸ்ட் கட்சியினுடைய ஊழல் அவதூறுகளான Péchiney, அல்லது ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் 1980கள் 1990 காலங்களில் நடந்த Taiwan க்கு கப்பல் விற்றலில் பெற்ற பணங்கள், அல்லது மார்சேயிக்கு பிராந்திய ஒப்பந்தங்களை வழங்குவதில் மாபியாவின் பங்கு பற்றிய தற்போதைய விசாரணையினால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளன. கௌசாக்கின் செயல்பாடுகள், ஹாலண்ட் நிர்வாகம் மற்றும் PS உடைய செயல்களுக்கு ஒரு அடையாள குறியீடாக உள்ளது. தான் செலுத்த வேண்டிய வரிகளைத் தவிர்க்கும் ஒரு வரவு-செலவுத் திட்ட மந்திரி, பிறர் வரி ஏய்ப்பை கண்டிப்பது என்பது, PS இன் இயல்போடு ஒத்துப் போகிறது; அதன் மிருதுவான சீர்திருத்த வனப்புரை வலதுசாரி, வணிக சார்புக் கொள்கைக்கு ஒரு மறைப்பு மட்டுமே, அது தன்னுடைய தேர்தல் உறுதிமொழிகளை ஒவ்வொரு கட்டத்திலும் மீறுகிறது. “சிக்கனம் என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல” என்ற உறுதிமொழியில் அதிகாரத்திற்கு வந்த ஹாலண்ட், செல்வந்தர்கள் மீது 75% வரி சுமத்தப்படும் என உறுதியளித்தவர், மக்கள் அவருடைய முன்னோடி சார்க்கோசிக்குக்காட்டிய எதிர்ப்பின் அடிப்படையில்தான் முக்கியமாக வெற்றி பெற்றார். தேர்தலுக்குப்பின் அவர் பல பில்லியன் யூரோக்களை சமூக வெட்டுக்களில் சுமத்தியுள்ளார், ஏதென்ஸுக்கு பெப்ருவாரி மாதம் சென்றிருந்தபோது கிரேக்கத்தை அழித்துவிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை பாராட்டினார், அவருடைய 75 சதவிகித வரித் திட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதையும் கண்டுள்ளார். 1 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வருமானம் உடையவர்கள் மீது மட்டும் சுமத்ததப்பட்டால், இந்த வரியே ஒரு மோசடி ஆகும். இது மூலதன வருமானத்தின் மீது வரியை தவிர்க்கிறது; அதுதான் ஆளும் வர்க்கத்தின் வருமானத்தில் மொத்தத்தை அளிப்பது ஆகும். ஒரு PS உறுப்பினர் என்னும் முறையில் கௌசாக்கின் அறிக்கை, “நான் ஒரு பெரிய புரட்சியையோ, பெரிய சீர்திருத்தத்தையோ நம்பவில்லை” என்பது, PS இன் தன்மையைத்தான் அதிகம் எடுத்துக் காட்டுகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவிக்கும் சீர்திருத்தங்களுக்கு விரோதப் போக்குடையதும் சோசலிசப் புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இன்னும் விரோதப் போக்கை உடையதுமான இது ஒரு முதலாளித்துவக் கட்சி; இதன் உறுப்பினர்கள் எளிதில் பாசிஸ்ட்டுக்களுடன் சொந்த, வணிக உறவுகளை வளர்க்கலாம்--கௌசாக் காட்டியுள்ளபடி. இத்தகைய பிணைப்புக்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல; ஆனால் PS உடைய அரசியல் வரலாற்றில் ஆழ்ந்து பொதிந்துள்ளது; இக்கட்சி 1968 பொது வேலை நிறுத்தத்திற்குப்பின் பிரான்சுவா மித்திரோனுக்கு ஒரு தேர்தல் கருவியாக அமைக்கப்பட்டது, இரண்டாம் உலகப்போரின்போது பாசிசி விஷி ஆட்சியில் ஒரு அதிகாரியாக தன் தொழிலை ஆரம்பித்த ஒரு சமூக ஜனநாயகவாதி. அது ஒரு முதலாளித்துவ கட்சியில் உத்தியோகபோக்கை காணமுற்பட்ட முன்னாள் மாணவ தீவிரப்போக்குகளுடன் கூட்டணியாக தொடக்கப்பட்டது, இதற்கு மித்திரோன் தலைமை தாங்கினார்; அவர்களுள் பலர் முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதிகள் மற்றும் முதலாளித்துவ இளைஞர்கள், அரசியலில் மித்திரோன் மீதான கவர்ச்சியால் நுழைந்தவர்கள். கௌசாக் பிந்தைய குழுவில் இருந்திருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. 1980 களின் கடைசிப் பகுதியில், மித்திரோன் தன்னுடைய நண்பரும் வக்கீலுமான ரோலண்ட் டுமாவை FN தலைவர் ரோலண்ட் கௌச்சருடன் பேச்சுக்கள் நடத்தி, 1988 ஜனாதிபதி தேர்தல்களில் வலதுசாரி வாக்குகளை பிரிக்க FN இன் உறுதிமொழியைப் பெற்றார். இது மித்திரோனையும் PS ஐயும் வெற்றிபெற உதவி செய்து, 1983 ல் “சிக்கன நடவடிக்கை திருப்பத்திற்கு” பரந்த எதிர்ப்பையும் மீறி உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படவும் வகை செய்தது. கௌசாக்கின் உத்தியோக வாழ்க்கை போக்கு காட்டுவது போல, இந்த உறவுகள் இன்று வரையும் தொடர்வதோடு, சோசலிஸ்ட் கட்சியின் அரசியலை தொடர்ந்தும் வடிவமைக்கும். |
|