சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Japan and China face off in island dispute

ஜப்பானும் சீனாவும் தீவுகள் பற்றிய மோதலில் முரண்படுகின்றன

By Peter Symonds
26 September 2012
use this version to print | Send feedback

பிரச்சினைக்குட்பட்ட கிழக்கு சீனக் கடலில் உள்ள சென்காகு/டயோவு தீவுகளை தொடர்பான ஓர் பதட்டமான போக்கு ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தொடர்கிறது. ஜப்பானிய கடலோரக் காவல்படை கப்பல்கள் சீனக் கண்காணிப்பு மற்றும் மீன்பிடிப்பு ரோந்துக் கப்பல்களை முகங்கொடுத்து நிற்கின்றன. இவை அண்மைகாலத்தில் ஜப்பான் உரிமை கோரி, கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் ராக்கி பாறைகளுக்கு அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு நுழைந்தன.

50 தைவான் நாட்டு மீன்பிடிக் கப்பல்களும் 10 தைவான் கண்காணிப்புக் கப்பல்களும் பிரச்சனைக்குட்பட்ட நீர்நிலையில் நேற்று நுழைந்தபின் நிலைமை இன்னும் சிக்கலாயிற்று. ஜப்பானிய கடலோர பாதுகாப்புக் கப்பல்கள் ஒலிபெருக்கிகள் மற்றும் மின்னியல் சைகைகளால் அவற்றை தடுக்க இயலாத நிலையில் மீன்படிக்கும் படகுகுகள் மீது நீர்பாய்ச்சினர். சீனாவைப் போல் தைவானும் இத்தீவுக்கூட்டம் வரலாற்றுரீதியாக சீனப் பகுதி என்று வலியுறுத்துகிறது.

தைவானின் பாதுகாப்பு மந்திரி கேயோ ஹுவா-சு முன்னதாக பாராளுமன்றத்தில் நாட்டின் இராணுவம் எந்த நெருக்கடிக்கும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் நேற்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜப்பானின் தலைமை மந்திரிசபை செயலர் ஓசாமு புஜிமூரா செய்தி ஊடகத்திடம்: நாம் தொடர்ந்து சென்காகுத் தீவுக்கூட்டங்களைச் சுற்றியிருக்கும் பகுதியைத் தொடர்ந்து பாதுகாப்போம். என்றார்.

நேற்று சீன துணை வெளியுறவு மந்திரி ஜாங் ஜிஜுனுக்கும் ஜப்பானிய துணை வெளியுறவு மந்திரி சிகாவோ கவாய்க்கும் இடையேயான பேச்சுக்கள் அழுத்தங்களை குறைக்கவில்லை. ஜாங் கவாயிடம் ஜப்பானிய அரசாங்கத்தின் முடிவான சென்காகு/டயோயு தீவுக்கூட்டத்தை வாங்கும் முடிவு வரலாற்று உண்மைகள் மற்றும் சர்வதேச ஆதிக்க வரம்பைத் தீவிரமாக மீறுதல் ஆகும் என்று கூறியதாக தெரிகிறது. தற்போதைய ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின்போது நியூயோர்க்கில் வெளியுறவு மந்திரிகள் பேசுவதற்கான உடன்பாடு ஏதும் அடையப்படவில்லை.

ஜப்பானின் வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் நாவோகோ சைகி, ஜப்பான் தீவுக்கூட்டத்தின் மீது கொண்டுள்ள உரிமை முரண்பாட்டிற்கு அப்பாற்றப்பட்டது என அறிவித்தார். நாங்கள் போர்களையோ மோதல்களையோ, வன்முறையையோ பயன்படுத்த விரும்பவில்லைஎன்ற அவர் சீன மற்றும் தைவானியக் கப்பல்கள் அங்கு நிலைப்பாடுகொள்ளுவது ஒரு தவறான கணக்குஅல்லது விபத்து என்னும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்தார்.

ஜப்பானின் பிரதம மந்திரி நோடா தற்போதைய முரண்பாட்டை தூண்டும் வகையில் இம்மாதம் முன்னதாக அவருடைய அரசாங்கம் ஐந்து தீவுகளில் மூன்றை ஒரு தனியார் ஜப்பானிய உரிமையாளரிடம் இருந்து வாங்கியுள்ளதாக அறிவித்தார். வலதுசாரி டோக்கியோ ஆளுனர் ஷின்டரோ இஷிகரா இத்தீவுகளை வாங்குவதை இல்லாதுசெய்யும் நோக்கத்திலேயே  இவ்வகையில் வாங்கப்பட்டுள்ளது என்னும் கூற்றுக்கள் இருந்தபோதிலும், நோடாவின் முடிவு ஜப்பானிய தேசியவாதத்தை தூண்டி, பெய்ஜிங்கிடம் இருந்து ஒரு பிரதிபலிப்பை காண வேண்டும் என்பதுதான்.

இப்பகுதிக்கு கண்காணிப்பு மற்றும் மீன்படிக்கும் படகுகளை அனுப்பிவைத்துள்ளதுடன், ஜப்பானுடன் இராஜதந்திர உறவுகள் சீராக்கப்பட்டதை குறிக்கும் 40ம் ஆண்டு நினைவுநாளுக்காக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியை சீன அரசாங்கம் இரத்து செய்தது. இந்த முடிவு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே உறவு மிகவும் உறைந்த நிலையில் இருந்தபோதும், முன்னாள் ஜப்பானியப் பிரதம மந்திரி ஜுனிசிரோ கொய்சுமி விவாதத்திற்குரிய ஜப்பானின் போரில் இறந்தவர்களுக்கான யசுகுனி தலத்திற்கு விஜயம் செய்ய இருந்த நிலையிலும் 30ம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் சீராக்கப்படுவதை குறித்த நிகழ்ச்சி ஏதும் இரத்துசெய்யப்படவில்லை.

இரண்டு அரசாங்கங்களும் பொருளாதாரப் பதிலடி பற்றிய குறிப்பைக் காட்டியுள்ளன. அரசாங்கத்திற்கு சொந்தமான China Daily ல் கடந்த வாரம் எழுதிய வணிக அமைச்சரக அதிகாரி ஜின் பைசோங் சீனா ஜப்பானுக்கு மிக அதிகம் கடன் கொடுத்துள்ள நாடு என்ற நிலைமையைப் பயன்படுத்தி ஜப்பான் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில் பொருளாதாரத் தடைகளைச் சுமத்த வேண்டும்என்று எழுதினார். The Hong Kong Economic Journal பெய்ஜிங் தாதுப்பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தலை நிறுத்துவது குறித்துப் பரிசீலிக்கிறது என்று எழுதியது: அப்படித்தான் 2010ல் சென்காகு/டயோயு தீவுகளில் அழுத்தங்கள் அதிகரித்தபோது அது செய்தது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கடந்த வார இறுதியில் கொடுத்த பேட்டி ஒன்றில், நோடா கூறினார்: பல முதலீடுகளைப் பெற்றுள்ளதன் ஊடாக சீனா வளர்ச்சி அடைய வேண்டும். இக்கருத்து அதிக மறைப்புடைய குறிப்பு அல்ல. அதாவது ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை நிறுத்தக்கூடும் என்னும் குறிப்புத்தான் இது. ஜப்பானிய முதலீடு சீனாவில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடம் இருந்து  சமீபத்திய ஆண்டுகளில் வரும் நிதிகளைப் போல் இரு மடங்கு பாய்ந்து வருகிறது.

பொருளாதார விமர்சகர்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் உலகப் பொருளாதாரத்திற்கு இது கொண்டுள்ள விளைவுகளின் தன்மை பற்றி எச்சரித்துள்ளனர். உலகின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரங்களாக முறையே இருக்கும் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே இருநாட்டு வணிகம் கடந்த தசாப்தத்தில் ஆண்டிற்கு $340 பில்லியன் என மும்மடங்கு அதிகரித்துள்ளது. சீனா இப்பொழுது ஜப்பானின் மிகப் பெரிய வணிகப்பங்காளி ஆகும்; ஜப்பான் சீனாவின் இரண்டாம் பெரிய வணிகப் பங்காளி நாடாகும்.

தென் கொரியாவில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த ஸ்டீபன் போஸ்வொர்த் CNBC  இடம் கூறினார்: ஜப்பானின் கடந்த ஆண்டு நிலநடுக்கம், சுனாமியில் இருந்து ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பை பெற்றுள்ளது.... எவரும் பொருளாதாரச் சேதம் எந்த அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இவை அனைத்திற்கும் விளைவுகள் உண்டு. வணிகம் மற்றும் முதலீடு என்ற வகையில் உலகிலேயே மிக இறுக்கமாக ஒருங்கிணைந்துள்ள பகுதியாக இது இருக்கலாம்.

இரண்டு அரசாங்கங்களும் தீவுகள் பற்றிய மோதலைப் பயன்படுத்தி தேசிய உணர்வைத் தூண்டி, அவற்றின் மெதுவாகிச் செல்லும் பொருளாதாரம் தோற்றுவித்துள்ள சமூக, அரசியல் அழுத்தங்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கின்றன. பெய்ஜிங் மறைமுகமாக கடந்த வாரம் பரந்த ஜப்பானிய எதிர்ப்புக்களுக்கு பச்சை விளக்குக் காட்டியது; அவற்றில் தீவிர சோவனிச  கோஷங்கள் இருந்ததுடன் ஜப்பானிய வணிகங்கள், குடிமக்கள் மீது தாக்குதலையும் விளைவித்தன.

நேற்று, பெரும் பரபரப்பிற்கு இடையே, சீன அரசாங்கம் முறையாக நாட்டின் முதல் விமானந்தாங்கி கப்பலை கடற்படைக்கு வழங்கியது.  ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதம மந்திரி வென் ஜியாபோ இருவரும் நிகழ்வில் பங்கு கொண்டனர். விமானத்தளம் கொண்ட இக்கப்பல், உக்ரைனில் இருந்து வாங்கப்பட்டு, புதிப்பிக்கப்பட்டது; குறைந்தப்பட்ச இராணுவ மதிப்பைத்தான் கொண்டுள்ளதுடன், முக்கியமாக பயிற்சி நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். மூலோபாயப் பகுப்பாய்வாளர் யூ ஜி நியூ யோர்க் டைம்ஸிடம்  சீன இராணுவம் இப்பொழுது விமானந்தாங்கி கப்பலில் இறங்குவதற்கான விமானத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார்.

ஜப்பானுடனான மோதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தசாப்தத்திற்கு ஒரு முறை தலைமை மாற்றத்திற்காக வெற்று முத்திரையிடும் காங்கிரசைக் கூட்டுவதற்குத் தயாராகுகையில் வந்துள்ளது. குறிப்பாக பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளின் சார்பு பற்றி தீவிர உட்பிரிவுப் பிளவுகள் இந்த ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெளிப்பட்டுள்ளன. அடுத்த மாதம் காங்கிரஸ் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திகதி எதுவும் அறிவிக்கப்படாதது வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதற்கான அடையாளம்தான்.

ஜப்பானின் பிரதம மந்திரி நோடாவும் அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார். கடந்த வெள்ளியன்று அவர் ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கான ஆண்டுப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்றார். ஆனால் வரவிருக்கும் மாதங்களில் ஒரு தேசியத் தேர்தல் என்னும் நிலையை அவர் முகங்கொடுக்கிறார். சமீபத்தில் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று நோடா உறுதியளித்தார். LDP என்னும் எதிர்த்தரப்பு லிபரல் ஜனநாயகக் கட்சி விற்பனை விர அதிகரிப்பிற்கான அரசாங்கத்தின் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததின் அரசியல் விலைதான் இது.

ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஒரு தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளக்கூடும். கருத்துக் கணிப்புக்களில் இதற்கான ஆதரவு 20%க்கும் குறைவானது; இது விற்பனை வரி உயர்விற்குப் பரந்த எதிர்ப்பு மற்றும் நாட்டில் அணுச் சக்தி மின்னாலைகளை மீண்டும் துவக்கும் முடிவிற்கு எதிரான எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது. சென்காகு/டயோயு தீவுகளை வாங்கியது, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் சீனாவிற்கு எதிராக மோதலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்வதற்காக நடந்தது.

ஜப்பானிய தாராளவாதக் கட்சிக்குள்ளேயே தலைமைக்கான போட்டி இன்று நடைபெற உள்ளது. அனைத்து முக்கிய வேட்பாளர்களும் வலதுசாரித் தேசிய நிலைப்பாடுகளைத்தான் கூறுகின்றனர். முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிஜெரு இஷிபா போன வாரம் ஜப்பான் பூசலுக்குட்பட்ட தீவுகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறினார். டோக்கியோவின் ஆளுனர் ஷின்டரோ இஷிஹரா முன்பு இதைத்தான் கூறியிருந்தார். இந்த நடவடிக்கை தவிர்க்கமுடியாமல் சீனாவுடனான அழுத்தங்களுக்கு எரியூட்டும். இஷிஹராவின் மகன் நோபுடேருவும் தலைமைப்பதவிக்கான போட்டியில் உள்ளார். 

அமைதிக்கு அழைப்புவிடும் ஒபாமா நிர்வாகம் தீவுகள் குறித்த மோதலை தூண்டிவிடுவதற்கு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரோஷமான இராஜதந்திர பிரச்சாரத்தை ஆசியா முழுவதும் நடத்திவருகிறது; இதன் நோக்கம் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்பதுதான். ஒபாமாவின் ஆசியாவில் முன்னிலை என்பது ஜப்பானுக்கு சீனாவுடன் ஒரு கடினப் போக்கைக் கொள்ளுவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. வாஷங்டன் சென்காகு/டயோயு தீவுகள் பற்றிய மோதலில் நடுநிலை கொண்டுள்ளதாக அறிவித்தாலும், அமெரிக்க அதிகாரிகள் பலமுறையும் சீனாவுடனான எந்த மோதலிலும் அமெரிக்கா ஜப்பானுக்கு ஆதரவைக் கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.