WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
“Counterculture or Scientific Socialism”
Sri Lankan SEP to hold Piyaseeli Wijegunasingha
commemorative lecture
"எதிர்கலாச்சாரம்
அல்லது
விஞ்ஞான
சோசலிசம்"
இலங்கை
சோசலிச
சமத்துவக் கட்சி
நடத்தும் பியசீலி
விஜேகுணசிங்க நினைவுப் பேருரை
25 September
2012
இலங்கையில்
சோசலிச
சமத்துவக்
கட்சியும்
(சோ.ச.க.)
சமூக
சமத்துவத்துக்கான
அனைத்துலக
மாணவர்களும்
(ஐ.எஸ்.எஸ்.ஈ.)
வாழ்நாள்
முழுவதும்
ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்த பியசீலி விஜே குணசிங்கவின் நினைவு நாளை ஒட்டி
கொழும்பில்
ஒரு
விரிவுரையை நடத்துகின்றன.
அவர்
செப்டம்பர்
2,
2010
அன்று
67
வயதில்
இறந்தார்.
பியசீலி
இலக்கிய
ஆய்வில்
ஒரு
முழு
தலைமுறைக்கே
கல்வியூட்டினார்.
ஒரு
பல்கலைக்கழக
விரிவுரையாளர்
என்ற
வகையில்,
அவர்
இலக்கியம்
மற்றும்
இலக்கிய
விமர்சனத்துக்கு
ஒரு
மார்க்சிச
அணுகுமுறையை
விரிவுபடுத்தினார்.
1982ல்
வெளியிடப்பட்ட
அவரது
முதல்
புத்தகமான
இலக்கியம்
பற்றிய
ஒரு
பொருள்முதல்வாத
ஆய்வு,
இலங்கையில்
இலக்கிய
விமர்சனத்தில்
ஆதிக்கம்
செலுத்திய
தத்துவார்த்த
கருத்தியல்
மற்றும்
மதக்
கருத்துக்களை
கொண்ட
பிரச்சினைகளை ஆராய்ந்தது.
அவர்
அந்த
விடயம்
சம்பந்தமாக பல
புத்தகங்களை
எழுதியுள்ளார்.
அவரது
பணி,
சோசலிச
சமத்துவ
கட்சியும்
அதன்
முன்னோடியான
புரட்சிக்
கம்யூனிஸ்ட்
கழகமும்
(பு.க.க.)
மார்க்சிசத்தைப்
பாதுகாக்க
முன்னெடுத்த
போராட்டத்தின்
ஒரு
பாகமாக
இருந்தது.
இந்த
விரிவுரை,
பியசீலியை
"எதிர்கலாச்சார
சிந்தனையாளர்களின்"
ஒரு
பிரதிநிதியாக
சித்தரித்து,
இலக்கிய
திறனாய்வுக்கு
பியசீலி செய்த
பங்களிப்பை திரிபுபடுத்திய
சிரேஷ்ட
பல்கலைக்கழக
விரிவுரையாளரான
லியனகே
அமரகீர்த்தி
சமீபத்தில்
தெரிவித்த கருத்துக்களில் குவிமையப்படுத்தப்படும்.
சோ.ச.க. விரிவுரையாளர்,
பியசீலியின்
படைப்புக்கள்
பற்றிய
இந்த
பின்நவீனத்துவ திரிபுபடுத்தலுக்கு பதிலளிப்பதோடு அவரது
புரட்சிகர
மார்க்சிச
நிலைப்பாட்டையும்
விளக்குவார்.
நாம்
தொழிலாளர்கள்,
இளைஞர்கள்
மற்றும்
புத்திஜீவிகளை இந்த விரிவுரைக்கு வருகை தருமாறும்
கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறும் மனமுவந்து
அழைக்கின்றோம்.
விரிவுரையாளர்:
சோ.ச.க. அரசியல்
குழு
உறுப்பினர்
பாணினி
விஜேசிறிவர்தன
இடம்:
தேசிய
நூலக
கேட்போர் கூடம்,
டொரிங்டன்
அவென்யூ,
கொழும்பு
07
(சுதந்திர சதுக்கத்துக்கு அருகில்)
திகதி
மற்றும்
நேரம்:
செப்டெம்பர்
30,
ஞாயிறு,
பி.ப. 3.00
மணி |