WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு
வாகனத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை வெட்டுகளுக்கு எதிராகக் குரலெழுப்புகின்றனர்
By Antoine
Lerougetel
26 September 2012
PSA
Peugeot-Citroën’s Aulnay-sous-Bois
வாகன
உற்பத்தித் தொழிற்சாலை தொழிலாளர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS)
அரசாங்கம் வேலைகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராய்
போராடுகின்றனர்.
சென்ற
வாரத்தில் ஒல்னே ஆலையின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT)
தொழிற்சங்கப் பிரதிநிதியான ஜோன்-பியர் மேர்சியேயை சந்தித்த ஹாலண்ட்,
PSA
அதன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிறுத்தி வைக்க அதனை நிர்ப்பந்திக்க
தான் முயலப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஒல்னே ஆலை மூடப்படுவது உள்ளிட 8,000
வேலை வெட்டுகளுக்கு அழைப்பு விடுக்கின்ற இந்த மறுசீரமைப்புத் திட்டமானது,
ஒல்னே ஆலை அமைந்திருக்கக் கூடிய வடக்கு பாரிஸின் புறநகர்ப்
பகுதியில் ஏற்கனவே கடுமையான பாதிப்பில் சிக்கியிருக்கும்
Seine-Saint-Denis
பகுதியை
மேலும் நாசமாக்கும்.
ஒல்னே
தொழிலாளர்களில் பாதிப் பேர் வரை மற்ற
PSA
ஆலைகளுக்கு மாற்றி விட்டு எஞ்சியோரை “விருப்ப ஓய்வுத் திட்ட”த்தை
ஏற்கச் செய்வதற்கான விவாதமும் நடைபெற்று வருகிறது. புதிதாக வந்த ஹாலண்ட்
நிர்வாகத்தை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இதற்கு ஊக்கமளிக்கிறது.
அத்தகையதொரு
ஒப்பந்தம் சரிந்து செல்லும் பொருளாதாரத்திற்கு மேலுமொரு சமூகச் சீரழிவை பங்களிப்பு
செய்யும். விருப்ப ஓய்வு தொகையைப் பொறுத்தவரை,
Seine-Saint-Denis
பகுதியில்
வேலை தேடி அலைகின்ற தொழிலாளர்களுக்கு அது தீர்வாகாது. இப்பகுதியில்
வேலைவாய்ப்பின்மை என்பது தேசிய சராசரியான முதிர்ந்த வயதினருக்கு 10 சதவீதம்
மற்றும் இளைஞர்களில் 20 சதவீதத்தினருக்கும் மேல் என்பதை விடவும் அதிகமாய்
இருக்கிறது. எயர் பிரான்ஸ் மற்றும்
L’Oréal
போன்ற அப்பகுதியின் நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே பெரிய அளவிலான வேலை
வெட்டுக்களை அறிவித்திருக்கின்றன.
வெள்ளியன்று
PSA
தொழிற்சாலையின் வாயிலில் தொழிலாளர்கள் பலருடன் உலக சோசலிச வலைத் தளம் உரையாடியது.
யூசுப்
கூறினார்: “எதுவுமே தெளிவாக இல்லை.
PSA
எப்போதும் பொய் கூறி வந்திருக்கிறது. தொழிலாளர்கள் புதிய
வேலைகளுக்கு மாற்றப்படவிருப்பதாகக் கூறுவதெல்லாம் பொய்களே. எங்களது குடும்பங்களும்
வீடுகளும் இங்கே தான் இருக்கின்றன,
தொழிலாளர்கள் வேறு எங்கு செல்ல முடியும். விருப்ப ஓய்வு தொகைகள்
கிடைக்குமென்று நம்புகிறோம் - ஒவ்வொருவரும் அவரவர் பிரச்சினைகளைச் சமாளிக்க
முயன்று கொண்டிருக்கின்றனர். தொழிற்சங்கங்கள் எங்களைப் பாதுகாத்து நிற்பதில்லை.”
மிஷேல்
கூறினார்: “இனி நிலைமை திரும்பப் போவதில்லை,
PSA
முடிவெடுத்து விட்டது. அவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.
[ஆகஸ்ட்]
விடுமுறைக்கு முன்பாக வேலை இடமாற்றங்கள் மற்றும் விருப்ப ஓய்வுத்
தொகுப்பு திட்டங்களுடனான சிற்றேடுகளை
PSA
கொடுத்து விட்டது. எந்த விவாதமும் கிடையாது.
PSA
அந்த சிற்றேடுகளில் கூறியிருந்த ஆலோசனைகள் குறித்து
தொழிற்சங்கங்களும் விவாதிக்கவில்லை.
“ஹாலண்டும்
சார்க்கோசி மாதிரித்தான்,
முதலாளிகளைப் பாதுகாக்கிறார்,
ஆலை மூடலை ஆதரிக்கிறார். முத்தரப்பு பேச்சுவார்த்தைகள்
[அரசாங்கம்,
தொழிற்சங்கங்கள் மற்றும்
PSA
நிர்வாகத்திற்கு இடையிலானது]
எல்லாம் விருப்ப ஓய்வு தொகுப்புகளை விவாதிப்பதற்கு மட்டுமே. வேலை
கிடையாது. இந்த இடத்தை மறுதொழிற்மயப்படுத்துவது குறித்து அவர்கள் பேசினார்கள்,
என்றாலும் எந்த நிறுவனமும் அதை வாங்க விருப்பம் காட்டவில்லை.
“தொழிற்சாலையைக்
காப்பாற்ற அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்திருந்தால்,
அது ஏற்கனவே அதைச் செய்திருக்கும். ஹாலண்ட் தொழிலாளர்களின் பக்கம்
நிற்கவில்லை.
“தொழிற்சங்கத்
தலைவர்கள் எங்களின் தலைக்குமேல் தங்களை அமர்த்திக் கொண்டுள்ளனர். அவர்கள்
தொழிலாளர்களிடம் இருந்து தனியாகவுள்ளனர். எதிலும் கையெழுத்திட தயாரானவர்களாய்
அவர்கள் இருக்கின்றனர். நிர்வாகத்தின் பெரிய அதிகாரிகளுடன் ஒன்றாக உட்கார்ந்து
அவர்கள் உணவருந்துகிறார்கள். எங்கு பார்த்தாலும் இதே கதைதான். தொழிற்சங்கங்களில்
இருந்து சுயாதீனப்பட்ட போராட்டத்திற்கான அமைப்புகள் நமக்குத் தேவை என்பதை நான்
ஒப்புக் கொள்கிறேன்.”
CGT
நிர்வாகியான மேர்சியேக்கு ஆதரவான குண்டர்கள் தொழிற்சாலையில்
துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த உலக சோசலிச வலைத் தளத்தின்
ஆதரவாளர்களை மிரட்டினர். அந்தப் பிரசுரம் ஹாலண்டின் கொள்கைகளையும் அவரது
நிர்வாகத்துடன்
CGT
சேர்ந்து வேலை செய்வதையும் கண்டனம் செய்திருந்தது.
பிற்பகல்
2-3 மணிக்கு இடையிலான ஷிப்ட் மாற்றத்தின் போது வாசலில்
WSWS
ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த
சமயத்தில்,
அவர்களை அணுகிய நான்கு குண்டர்கள் “எங்களது தொழிற்சங்கப்
பிரதிநிதியான ஜோன்-பியர் மேர்சியேயை நீங்கள் அவமதிக்கிறீர்கள்” என்று குற்றம்
சாட்டினர்.
WSWS
ஆதரவாளர்கள் உடனே அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று அவர்கள்
கோரினர்.
அவர்களில்
ஒருவர் கத்தியை தனது பையில் இருந்து எடுத்து
WSWS
ஆதரவாளர்களை நோக்கிக் காட்டினார்,
அவர்கள் இடத்தை விட்டு அகலவில்லையென்றால் அதைப் பிரயோகிக்க
வேண்டிவரும் என அவர் அச்சுறுத்தினார்.
”எங்கள்
தொழிற்சங்கப் பிரதிநிதியை அவமதிப்பதற்குப் பதிலாக ஹாலண்டுக்கு எதிராகப் போராட
வேண்டியது தானே?”
என்று இன்னொருவர் கத்தினார். மேர்சியே ஹாலண்டுக்கு ஒத்துழைத்து வேலை செய்கிறார்
என்று பதில் கூறியபோது கோபமடைந்த அவர்கள்,
“நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்களா?
இது தொழிற்சாலை இடம்,
இங்கே நீங்கள் இருக்க உரிமை கிடையாது” என்றனர்.
ஆலையை மூடி
விட்டால் எந்தத் தொழிலாளர்களுக்குமே அங்கு நிற்க உரிமையில்லாது போய் விடும்,
ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே
ஹாலண்டின் மற்றும்
PSA
இன் திட்டங்களை நிறுத்த முடியும் என்று அவர்களிடம் கூறியபோது
அவர்கள் பதிலுக்கு கத்தினர்: “அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,
எங்களுக்கு மற்ற தொழிலாளர்கள் எல்லாம் தேவையில்லை,
நாங்களே அதை செய்து கொள்ள முடியும். எங்களுக்கு உங்கள் உதவி
அவசியமில்லை. வெளியில் செல்லுங்கள்!”
அந்த
குண்டர் மறுபடியும் தனது கத்தியை எடுத்தார்,
பின்
WSWS
ஆதரவாளர்கள் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தனர்.
இதே
சமயத்தில்,
குட்டி முதலாளித்துவ ”இடது” கட்சியான புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு
கட்சியின் (NPA)
உறுப்பினர்கள்
CGT
குண்டர்களின் எந்த தொந்தரவுக்கும் ஆளாகாமல் துண்டுப் பிரசுரங்களை
விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
NPA
இன் அறிக்கை ஹாலண்ட் மற்றும்
PSA
நிர்வாகத்துடன்
CGT
நடத்தும் பேச்சுவார்த்தைகளை வழிமொழிந்ததோடு வேலை வெட்டுகளுக்கு
எதிரான ஒரு உருப்படியான போராட்டத்திற்கான அடிப்படையாக அவற்றைச் சித்தரித்தது.
”செப்டம்பர் 20 வியாழனன்று,
தொழிலாளர்கள் வீதியில் திரண்டு நிற்க,
ஒல்னேயின் தொழிற்சங்கங்களை வரவேற்ற ஹாலண்ட்,
தொழிற்சங்கங்கள்-அரசு-முதலாளிகள் ஆகிய முத்தரப்பின் ஒரு கூட்டத்தை
அக்டோபர் மத்தியில் கூட்டுவதற்கு ஒப்புக் கொள்ளத் தள்ளப்பட்டார். ‘ஒல்னே ஆலையின்
மறுமலர்ச்சிக்கான திட்டம்’ என்கிற (PSA
தலைமை நிர்வாக அதிகாரி பிலிப்) வாரனின் மோசடியான திட்டத்தை அவர்
மனதிற்குள்ளேயே முழுங்கிக் கொள்ளச் செய்வதற்கு இதுவே வாய்ப்பாகும்.”
உலக சோசலிச
வலைத் தளத்திற்கு எதிரான மிரட்டல்களுக்கு அரசியல் பொறுப்பு கொண்டதான
CGT
மற்றும் குட்டி முதலாளித்துவ “இடது” குழுவான
Lutte
Ouvrière (LO,
தொழிலாளர்
போராட்டம்) இவற்றில் மேர்சியே ஒரு முன்னணி உறுப்பினராக இருக்கிறார். இந்த வசந்த
காலத்தில்,
LO
ஜனாதிபதி வேட்பாளரான நதாலி ஆர்த்தோவின் பிரச்சார மேலாளராக அவர்
பணியாற்றினார்.
வாகனத் துறை
தொழிலாளர்களுக்கு எதிராக ஹாலண்ட் நிர்வாகம் தொடுக்கின்ற தாக்குதல்களுக்கு எதிராய்
தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான
WSWS
ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு இந்த அமைப்புகள் எல்லாம்
குண்டர்களைக் கொண்டு பதிலிறுப்பு செய்கின்றன,
ஏனென்றால் இவை ஹாலண்டை ஆதரிக்கின்றன என்பதோடு அவரது
தொழிலாளர்-விரோதக் கொள்கைகளில் உடந்தையாகவும் இருக்கின்றன. தொழிலாளர்கள் மீதான ஒரு
பாரியத் தாக்குதலுக்கு
CGT
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கு
வழியில்லாமல்,
ஒல்னே தொழிலாளர்கள் இடையே ஜனநாயக ரீதியிலான விவாதத்தை ஒடுக்குவதன்
மூலம்
CGTயினது
திட்டங்களுக்கான எதிர்ப்பை மட்டுப்படுத்த இவை முனைந்து வருகின்றன.
இந்தத்
திட்டங்கள் எல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் ஹாலண்டுக்கு பயனளிக்கும் வகையில்
CGT
மற்றும்
LO
அளித்த ஆதரவின் தொழிலாள-வர்க்க விரோதத் தன்மையை அம்பலமாக்குகின்றன.
CGT
இடது
முன்னணியின் வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனை வழிமொழிந்தது,
அவர் இறுதிக்கட்டத் தேர்தலில் ஹாலண்டுக்கு நிபந்தனையில்லாமல்
ஆதரவளிக்க அழைப்பு விடுத்தார்.
LOஐப்
பொறுத்தவரை,
ஆர்தோ,
முதல் சுற்றில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு இறுதிக் கட்ட
தேர்தலில் ஹாலண்ட் தான் ஒரு உருப்படியான தெரிவு என்று தான் கருதுவதைத்
தெளிவாக்கினார்.
ஒல்னே
தொழிலாளர்களின் போராட்டத்தையும் கூட தமது தேர்தல் நோக்கங்களை முன்செலுத்துவதற்குப்
பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த அமைப்புகள் முனைந்தன. ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதித்
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒல்னே தொழிற்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும்
கலந்து கொண்டு அவை விளம்பரம் தேடிக் கொண்டன.
ஹாலண்டின்
வேலைவெட்டுகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமானது,
அந்த வேலைவெட்டுகளை தொழிலாளர்களின் மீது திணிப்பதற்கு முயல்கின்ற
தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து சுயாதீனப்பட்ட
வகையில்,
ஒழுங்கமைக்கப்படுவதற்கான அவசியத்தை தொழிலாளர்களுக்கு விளக்குவதில்
இருந்து
WSWS
ஆதரவாளர்கள்
CGT-LO
இன் குண்டர்
பலத்தினால் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். |