செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
ஐ.நா. மாலி இல் பிரெஞ்சு ஆதரவு தலையீட்டிற்கு
தயார் செய்கிறது
By Ernst Wolff
25 September 2012
மேற்கு ஆபிரிக்க பொருளாதாரச் சமூகம்
(The West African Economic Community -ECOWAS)
மற்றும் மாலி அரசாங்கம் இரண்டும் வடக்கு
மாலியில் ஒரு இராணுவச் செயற்பாட்டிற்கான நிபந்தனைகளை ஒப்புக் கொண்டுள்ளன. ஞாயிறன்று,
மாலி மற்றும் ஐவரி கோஸ்ட்டின் பாதுகாப்பு மந்திரிகள்
ECOWAS
தூதுகுழு ஒன்று சில நாட்களுக்குள் மாலியின் தலைநகான பமக்கில் உடன்பாட்டை
முறைப்படுத்தும் என அறிவித்தனர்.
ஐவரி கோஸ்ட்டின் பாதுகாப்பு மந்திரி
Paul Koffi, “வெளிநாட்டினர்
இல்லாத”
3,000
ECOWAS
சிப்பாய்கள் கொண்ட படை ஒன்று, நிலைநிறுத்தப்படும் என தெரிவித்தார். எனினும்,
மாலியின் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் ஏற்கனவே அது மாலியில்
“துருப்புக்கள்
மூலம் என்று இல்லாமல் தளவாட வழிவகையில்”
தலையீட்டிற்கு உதவும் என்று அறிவித்துள்ளது.
வாஷிங்டனில்,
ஆபிரிக்க விவகாரங்களுக்கான உதவி வெளிவிகாரச் செயலர், ஜோனி கார்சன் சர்வதேச சமூகம்
மாலியின் அண்டை நாடுகளுடன் பிராந்தியத்தில்
ECOWAS
க்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரவாதக் குழுக்களுடன் போரிட இணைந்து
செயல்படுகிறது என்றார். இது முரண்பாட்டிற்கு உட்படும் சர்வதேச
உட்குறிப்புக்களைத்தான் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது.
ECOWAS
துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவது குறித்த பச்சை விளக்கு,
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூன் தலைமையில் ஐ.நா. பொது மன்றம் புதன் அன்று
கூடும்போது அதன் புறத்தே நடத்தும் கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐ.நா.
மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையினால் தயாரிக்கப்பட்டுள்ளது. பரந்த முறையில்
விமர்சிக்கப்பட்டுள்ள இவருடைய கருத்துக்களில், அவர் வடக்கு மாலியில் இருக்கும்
இஸ்லாமியர்கள் தீவிர மனித உரிமைகள் மீறலைச் செய்கின்றனர், ஒருவேளை போர்க்
குற்றங்களாகக் கூட அவை இருக்கலாம் என்று கூறியுள்ளார்—இதில்
உடல் உறுப்புக்களைச் சிதைத்தல், உடனடித் தூக்குப் போடுதல், திருமணமாகாமல்
உடன்வாழ்ந்து வந்த ஒரு தம்பதியை கல்லால் அடித்துக் கொல்லுதல் ஆகியவை அடங்கும்.
ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாலி விரைவில் ஓர் உள்நாட்டுப்போரில்
ஆழ்ந்தது. மார்ச் 22ம் திகதி நீண்டகாலமாக ஜனாதிபதியாக இருக்கும் அமடௌ டௌமனி டௌரே
அமெரிக்கப் பயிற்சி பெற்ற காப்டன் அமடௌ சானோகோவின் தலைமையில் ஒரு இராணுவ
சிப்பாய்கள் குழுவினால் அகற்றப்பட்டார். இதுவும் எண்ணெய் வளமுடைய வட ஆபிரிக்க நாடான
லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றி கைப்பாவை அரசாங்கத்தை
நிறுவிய நேட்டோ ஏகாதிபத்தியக் குறுக்கீட்டின் விளைவும் இணைந்து நடந்தன.
ஆசாவாட் தேசிய விடுதலை இயக்கத்தி (MNLA)
உள்ள துரெக் போராளிகள்—அவர்களில்
பலரும் லிபியாவில் இருந்து கடாபிக்குப் பணி புரிந்த பின் கனரக ஆயுதங்களுடன்
திரும்பியவர்கள்—இஸ்லாமியக்
குழுக்களுடன் இணைந்தனர். அவர்கள் நாட்டின் வடக்குப் பகுதியைத் தங்கள்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அதை ஆசாவாட் சுதந்திரமான அரசு என்று அறிவிப்பதில்
வெற்றி அடைந்தனர்.
இறுதியில் இஸ்லாமிய சக்திகள்,
துரெக்குகளை டிம்பக்டு, காவோ, கிடால் ஆகிய நகரங்களில் இருந்து
விரட்டி அடித்தன. அவை ஷரியாச் சட்டத்தை அறிமுகப்படுத்தி பல இஸ்லாமிய புனித
இடங்களையும் அழித்தன.
ஏப்ரல் 6ம் தேதி முன்னாள் தொழில்துறை மந்திரி, பிரெஞ்சுப் பயிற்சி
பெற்ற
Diouncounda Traore
இராணுவத்தால் இடைக்கால ஜனாதிபதியாக
நியமிக்கப்பட்டார். இது
ECOWAS
இன் பெரும் அழுத்தத்தை ஒட்டி நடைபெற்றது. மே 21ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஜனாதிபதி அரண்மனையை தாக்கி
Traore
ஐ அதிகம் காயமடையச் செய்தனர். பாரிஸில் இரண்டு மாதக் கால மருத்துவச்
சிகிச்சைக்குப்பின் அவர் ஜூன் கடைசியில் திரும்பி, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஒரு
தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவினார்.
ஆனால் இந்த அரசாங்கம் பமகோவையும் தெற்கு மாலியையும் மட்டும்தான்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுள்ளது. இது டெக்சாஸ் அளவு பரப்பை உடைய பகுதியாகும்;
மூன்று வெவ்வேறு தீவிர இஸ்லாமியக் குழுக்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. அன்சர்
டைன்,
MUJAO
எனப்படும் மேற்கு ஆபிரிக்க ஒற்றுமை மற்றும் ஜிகட் இயக்கம்,
AQIM
எனப்படும் இஸ்லாமிய மக்ரெப்பில் உள்ள அல் குவேடா.
AQIM
மேலை பணையக் கைதிகளைப் பிடிப்பதின் மூலம் தனக்கு நிதி
திரட்டிக் கொள்கிறது; குவைத்தில் இருந்து நிதிய ஆதரவைப் பெறுவதாகச்
சந்தேகிக்கப்படுகிறது.
மாலியின் இராணுவத் தலைவர்களும் இராணுவப் படைகள்மீது கட்டுப்பாட்டை
இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. உத்தரவுகளுக்கு எதிராக கிளர்ச்சியுற்ற சிப்பாய்களால்
டயபோலிக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் 16 மதகுருமார்களைக் கொன்றது, இராணுவத்தின்
கட்டுப்பாட்டு அமைப்பு சிதைந்துவருகிறது என்பதைத்தான் தெரிவிக்கிறது.
ஏற்கனவே மாலி அரசாங்கம்
ECOWAS
ஐ
செப்டம்பர் முற்பகுதியில் இராணுவ உதவிக்காக நாடி,
“முன்னணியில்
ஐந்து பட்டாலியன் துருப்புக்கள், மறு வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டைக்
கொண்டுவர படிப்படியாக நிலைநிறுத்தப்பட வேண்டும்”
என்று கோரியுள்ளது. ஆனால் மாலி நாட்டு இராணுவம்—வெளிநாட்டுத்
துருப்புக்கள் தங்கள் நிலைமையை மாலியில் வலுவிழக்கச்செய்யும் என்ற அச்சத்தில்—ஞாயிறு
பேச்சுக்கள் வரை வெளிப் படைகள் ஈடுபாடு கூடாது என நிராகரித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் இவை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு கடந்த புதனன்று
நடந்த கூட்டத்தில் தெளிவாக்கப்பட்டது; அப்பொழுது
UNTM
என்னும் தேசியத் தொழிலாளர்கள் சங்கம், சுதந்திர மாஜிஸ்ட்ரேட்டுக்கள் சங்கம் (SAM)
மற்றும்
SYNAC
எனப்படும் சுதந்திர ஆட்சித்துறை நிர்வாகிகள் சங்கம் ஆகியவை பமகோவில் ஒன்றாகக்
கூடினர்.
தன்னுடைய சக ஊழியர்களின் ஆதரவைப்பெற்ற
UNTM
தலைவர் சியாகா டயாகிடே
“தொழிற்சங்கங்கள்
இந்த பெரும் குழப்பமான நிலையில் அரசியலில் குறிப்பிட்ட பங்கு எதையும் கொள்ள
முயலவில்லை”
என்று அறிவித்தார்.
“நம்
நாடு மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும். நாட்டின் ஒற்றுமை ஒருங்கிணைக்கப்பட
வேண்டும், நம் நிலப்பகுதியின் இறைமை பாதுகாக்கப்படுதல் தேவை”
என்றும் விளக்கினார்.
பமகோவில் இருக்கும் மத்திய அரசு மாலிப் பகுதிகள் பலவற்றைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டிராத, கொண்டுவரமுடியாத நிலையில், இத்தகைய கருத்துக்கள்
ஏகாதிபத்திய தலையீட்டிற்கு அதிக மறைப்பில்லாத ஒப்புதல் என்றுதான் கூறப்பட வேண்டும்;
அது மக்களுக்கு பிராந்திய சக்திகள் மாலியில் மறு ஒற்றுமைக்குப் பாடுபடுவதாகக்
காட்டப்படும். ஆனால் முக்கிய கருவிகள், உளவுத்தகவல்கள் மற்றும் தளவாட ஆதரவுகள்
ஆகியவை ஏகாதிபத்திய சக்திகளால் அளிக்கப்படும். ஐவரிய அரசாங்கம்,
பிரெஞ்சு-ஐ.நா.தலையீட்டினால் கடந்த ஆண்டு ஜனாதிபதி லௌரென்ட் எக்பகோவை அகற்றியபின்
நியமிக்கப்பட்ட இது மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமாகப்
பிணைந்துள்ளது.
மாலியில் தற்போதைய வாழ்நிலைமைகள்,
நாள் ஒன்றிற்கு $1 க்கும் குறைவான தலா நபர் வருமானம் மற்றும்
ஆயுட்கால எதிர்பார்ப்பு 48 ஆண்டுகள்தான் என்பவை அடங்கியுள்ளன. நாட்டில் கல்வி
அறிவற்ற தன்மை 81% ஆக உள்ளது; மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு குடிநீர் வசதி கூடக்
கிடையாது.
பெரும்பாலான மக்களின் வறிய நிலை அதன் பெரும் இயற்கை வளச்
செழிப்புக்களுக்கு முற்றிலும் முரண்பட்ட நிலையில் உள்ளது. தங்கம், பருத்தி ஆகியவை
இயற்கை வளங்களில் அடங்கியுள்ளன. பொஸ்பேட், சுண்ணாம்பு, கல் உப்பு, இரும்பு,
மங்கநீசியம், பாக்சைட், யுரேனியம், மற்றும் பெரும் எண்ணெய் இருப்புக்களும்
இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன.
பிராந்தியத்தின் வளங்கள் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கைக்
கொண்டன—முக்கியமாக
பிரான்சின் அணுச்சக்தித் துறை மேற்கு ஆபிரிக்க யுரேனியத்தை நம்பியுள்ளது.
இப்பிராந்தியம் அமெரிக்கா, பிரான்ஸ், பிற ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகியவற்றிற்கு
இடையேயான பொருளாதார, புவியில் செல்வாக்கிற்கான போட்டியிடும் பகுதியாகிவிட்டது. இந்த
நலன்கள்தான் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவை மேற்கு ஆபிரிக்காவில் மற்றொரு
திட்டமிட்ட தலையீட்டிற்கான தயாரிப்புக்களுக்கு பின்னணியில் உள்ளன. |