WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
Thousands of Foxconn workers clash with security guards in China
ஆயிரக்கணக்கான பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சீனாவில் பாதுகாப்புப் பிரிவினருடன் மோதல்
By John Chan
25 September 2012
தைவானை தளமாக கொண்ட பாக்ஸ்கான்,
வெளிநாடுகளில் உற்பத்தியைக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பெரிய மின்னணுக்கருவிகள்
நிறுவனம் அதன் முக்கிய நிலையங்களில் ஒன்றான வட சீனாவின்
Taiyuan
நகரத்தில் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியதாயிற்று; அங்கு 2,000
இணைப்புமுறைத் தொழிலாளர்கள்
(assembly line workers)
1,500 பாதுகாப்புப் பிரிவினருடன் மோதினர்.
இந்த அமைதியின்மை சீனாவில் சமூக அழுத்தங்களுக்கு மற்றொரு அடையாளம்
ஆகும்; இங்கு பொருளாதாரம் முக்கிய மேலைச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த சரிவினால்
தீவிரமாகச் சரிந்துவிட்டது; இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
(CCP)
ஆட்சியுடன் பெரும் தொழிலாள வர்க்கத்தை மோதல்களில் ஈடுபட
எரியூட்டுகிறது.
உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்று வரும் இயக்கங்களை
போலவே சீனாவிலும் பெருகிய முறையில் வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டுள்ளன; இவற்றுள்
தென்னாபிரிக்க பிளாட்டினம் சுரங்கத் தொழிலாளர்கள், ஒபாமா நிர்வாகத்திற்கு எதிரான
சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு
எதிராக தொழிலாளர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அடங்கும்.
ஷான்க்சி மாநிலத் தலைநகரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் 79,000
தொழிலாளர்கள் உள்ளனர். முக்கிய சர்வதேச நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி
செய்து வழங்கும் சங்கிலித் தொடரில் இது ஒரு பகுதியாகும்; பெறும் நிறுவனங்களுள்
ஆப்பிளின் புதிய
iPhone
5 ம் அடங்கும். பாக்ஸ்கான் பெரும்பாலும் இளம் 1.1 மில்லியன் தொழிலாளர்கள் உடன்
சீனாவில் மிக பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது.
பிரித்தானியாவின்
Telegraph
உடைய கருத்தின்படி, இந்த அமைதியின்மை ஞாயிறு இரவுக் கடைசியில்
“ஒரு
தொழிலாளருக்கும் ஆக்கிரோஷமான பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையே ஆலையின்
தங்குமிடங்களில் ஏற்பட்ட பூசல் கட்டுக்காடங்காமல் போய்”,
“ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள் தங்கள் பணிமுறையில் இருந்து விலகி வந்து நிறுவனத்தின் 1,500
பாதுகாப்புப் பிரிவினருக்கு எதிரான மோதலில் சேர்ந்த வகையில்”
தூண்டுதல் பெற்றது. இந்த அறிக்கை இணைய தளப் பகுதிகளில் போடப்பட்ட சாட்சியங்களின்
குறிப்புக்களுடன்
“ஊதியம்
மற்றும் பணி நிலைமைகளும் சுட்டிக்காட்டப்பட்டன”,
“ஆலையின்
பல்பொருள் அங்காடியும் தகர்க்கப்பட்டது”
என்று கூறுகிறது.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த சுமார் 10,000 பேர் பின்னர் மோதலில்
ஈடுபட்டனர்; அதிகாரிகளை இது 5,000 பொலிஸ் அதிகாரிகளை குழப்பம் அடக்க ஈடுபடுத்தும்
கட்டாயத்திற்கு உட்படுத்தியது. பெரும்பாலும் இணைப்புமுறைத் தொழிலாளர்கள் இதில்
பங்கு பெற்று பாதுகாப்புச் சாவடிகள், ஆலைக் வாயிற்கதவுகள் மற்றும் பொலிஸ் கார்கள்
உட்பட வாகனங்களை அடித்து நொருக்கினர்.
திங்கள் காலை 9 மணிக்குத்தான் பொலிசாரால் நிலைமையைக்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடிந்தது. திங்கள் நிலவரப்படி,
ஆலை
முடப்பட்டிருந்தது; 35 துணை இராணுவப் பொலிஸ் வாகனங்கள் ஆலைக்கு வெளியே
நிறுத்தப்பட்டுள்ளன. கலகப் பிரிவுப் பொலிசார் ஆலை நுழைவாயிலைக்காத்து,
ஒலிபெருக்கிகள் மூலம்
“குற்றம்
சார்ந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது”
என்றும் சட்டத்தை மதிக்குமாறும் தொழிலாளர்களை எச்சரித்தனர்.
ஏறத்தாழ 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாக்ஸ்கான் கூறியது;
பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
First Financial Daily
செய்தியாளர், சம்பவ
இடத்தில் இருந்தவர் குறைந்தப்பட்சம் 10 பேராவது கொல்லப்பட்டனர் என்றார்; ஆனால்
அதிகாரிகள் இந்த அறிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
இந்த மோதல்
“வேலையுடன்
தொடர்புடையது அல்ல”
என்று நிர்வாகம் கூறுகிறது. அதேபோல் உத்தியோகபூர்வ
Xinhua
செய்தி நிறுவனமும் பொலிசும் மோதலை ஷான்டோங் மற்றும் ஹெனன் ஆகிய
இடத்தில் இருந்து வரும் ஊழியர்களின் வகுப்புவாத வகையிலான மோதல்தான் என்று
விளக்கியுள்ளனர்.
உண்மையில், பாக்ஸ்கானின் பாதுகாப்புப் பிரிவினர் தொழிலாளர்களுக்கு
எதிரான தவறான நடவடிக்கைகளுக்கு பேர்போனவர்கள்; நிறுவனத்தின் இராணுவ வகை நிர்வாக
முறையின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர். சீன இணைய தளங்களில் வந்த கருத்துக்கள்
பாதுகாப்புப் பிரிவினர் ஒரு தொழிலாளியை அவர்கள் தங்குமிடத்திற்கு நுழைவதற்கான
அனுமதிச்சீட்டை காட்டமுடியாமல் போனதால் அடித்தனர் என்றும் இது ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களுக்கு சீற்றத்தைக் கொடுத்தது என்றும் தெரிவிக்கின்றன.
Shanghai Evening Post
சமீபத்தில்
அதன் நிருபர்கள் ஒருவரை
Taiyuan
பகுதிக்கு இரகசியமாக அனுப்பியிருந்தது; அவர் அங்கு ஏழு நாட்கள் பயிற்சி பெற்று அதன்
பின் மூன்று நாட்கள் புதிய
iPhone5
ன்
தகடுகள் இணைப்பு பகுதியிலும் வேலைபார்த்தார். எதிர்ப்பு வெடித்த தங்குமிடப் பிரிவு
குறித்து அவர் எழுதினார்:
“இந்த
தங்குமிடம் முழுவதும் குப்பைகளின் நுர்நாற்றத்தைக் கொண்டுள்ளது... குப்பை கூளங்கள்
ஒவ்வொரு அறைக்கும் வெளியே அகற்றப்படாமல் இருந்தன. என்னுடைய துணி வைக்கும் பகுதியில்
இருந்து கரப்புக்கள் ஊர்ந்து வெளிவந்தன; படுக்கை விரிப்புக்கள் சாம்பல் போல்
அழுக்கடைந்துள்ளன. அனைத்துச் சன்னல்களும் தடைகளைக் கொண்டுள்ளன.”
ஏதேனும் உலோகப் பொருட்களை வைத்திருந்தால் தொழிலாளர்கள் பணிநீக்கம்
செய்யப்படுவர். நீண்ட மணி நேரங்கள் வேலைபுரிகையில் அவர்கள் அசையாமல்
உட்கார்ந்திருக்க வேண்டும். இணைப்பு முறை வரிசையில் அவர்கள்
iPhone5
பின்தட்டை மூன்று வினாடிக்குள் தயாரிக்க வேண்டும்; நிருபர் ஒவ்வொரு பாகத்தையும்
எடுத்து நான்கு இடங்களைக் குறிக்க வேண்டும்; இதற்கு எண்ணெய் வகையிலான பேனா உள்ளது.
“ஒவ்வொரு
10 மணி நேரத்திற்குள்ளும் நான் 3,000 பின்தட்டை முடிக்க வேண்டும். பல மணி
நேரத்திற்குப் பின்னர் எனக்குப் பொறுக்க முடியாத கழுத்து வலி ஏற்பட்டது.”
என்று அவர் எழுதியுள்ளார்.
2010ம் ஆண்டில் 10 இளந் தொழிலாளர்கள் பொறுக்க முடியாத சூழ்நிலையை
ஒட்டி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாக்ஸ்கான் சர்வதேச கவனத்தை முதலில்
ஈர்த்தது. பொது உறவுகளை சீரமைக்கும் முயற்சியில், அதன்பின் பாக்ஸ்கான் பெயரளவிற்கு
ஊதிய உயர்வைக் கொடுத்தது; ஆனால் அதிக உற்பத்தியை கடலோரப் பகுதிகளில் இருந்து
தொழிலாளர் ஊதியங்கள் குறைவாக இருந்த உட்பகுதி மாநிலங்களுக்கு மாற்றியது.
தொழிலாளர்கள் மீது நிறுவனம் கொண்டுள்ள இகழ்வுணர்வு சற்றும் மாறாமல் உள்ளது. இந்த
ஆண்டு முன்னதாக, பாக்ஸ்கானின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி
Terry Gou
அவருடைய ஆலைகளை ஒரு மிகப் பெரிய மிருகக் காட்சி சாலையுடன் ஒப்பிட்டு, ஒரு மில்லியன்
“விலங்குகளை”
நிர்வாகம் செய்வது எளிதல்ல என்றார்.
உற்பத்தியை வெளிநாடுகளில் கொண்டுள்ள பல நிறுவனங்களைப் போலவே
பாக்ஸ்கான் இப்பொழுது கடல் கடந்த விரிவாக்கத்தை கொண்டுள்ளது. இதற்கு பிரேசிலில்
எட்டு ஆலைகள் உண்டு; இதன் அடுத்த முக்கிய உற்பத்தி நிலையங்கள் இந்தோனிசியாவில்
உள்ளன; அங்கு சாரசரி மாத ஊதியம் சீனாவில் இருப்பதைப் போல் மூன்றில் ஒரு பகுதிதான்.
சீனத் தொழிலாளர்களுக்கு சலுகைகளை கொடுத்தல் என்பதற்கு முற்றிலும் மாறாக, பாக்ஸ்கான்
அவர்கள்மீது அழுத்தங்களை அதிகப்படுத்தியுள்ளது; வேலை முடிக்கவில்லை என்றால் அவர்கள்
பணிநீக்கத்திற்கு உட்பட்டுவிடுவர்.
இதன் விளைவாக வேலைநிறுத்தங்களும் அமைதியின்மையும் பாக்ஸ்கானின்
ஆலைகளை அதிர்விற்கு உட்படுத்தியுள்ளன; ஜனவரி மாதம் வுகான் ஆலையில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் கூட்டாகத் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக அச்சுறுத்தியிருப்பதில்
இருந்து இந்நிலை உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்
Taiyuan
ஆலையில் நுழைவு நிலை தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வை
நிறுவனம் கொடுக்காததால் வேலைநிறுத்தம் செய்தனர்; அவர்களுக்கு சாதாரணமாக 1,550
யுவான்கள் ($245) ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படுகின்றது. ஜூன் மாதம் பாக்ஸ்கானின்
Chengdu
ஆலையில் ஆயிரம் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு எதிராகக்
கலகம் செய்தனர்.
பாக்ஸ்கான்
iPhones
ன்
மொத்த உற்பத்தியில்ல் 85% இணைக்கிறது. இது,
ஆண்டு ஒன்றிற்கு 50 மில்லியனுக்கும் மேலாகும். இந்த ஆண்டு முன்னதாக நிறுவனத்தின்
அடிமை உழைப்பு நிலைமையை அம்பலப்படுத்தும் வகையில்
Apple
உடைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சீனாவில் இருந்து பாக்ஸ்கானின் ஆலைகளை
சுற்றிப்பார்த்து தன் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் அவல நிலைகுறித்துக்
கவலை தெரிவித்தார்.
“உலகெங்கிலும்
உள்ள எங்கள் அளிப்புச் சங்கிலியில் ஒவ்வொரு தொழிலாளி குறித்தும் நாங்கள் அக்கறை
கொண்டுள்ளோம்.... நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது
முற்றிலும் தவறானாதாகும், எங்களைப் பாதிப்பதாகும்.”
சீனாவின் துணைப் பிரதமர் லி கெக்கியாங்கும் பரிவுணர்வைக் காட்டுவது
போல் நடித்து, ஆப்பிள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களை அவர்கள் சுரண்டும்
மில்லியன் கணக்கான சீனத் தொழிலாளர்கள் மீது அதிக
“அக்கறை”
எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், இப்படிக் காட்டிக் கொள்வது விரைவில் மறைந்துவிடுகிறது;
குறிப்பாக புதிய
iPhone
களுக்கு ஏராளமான தேவை வந்தபின். சில இடங்களில் அதிகாரிகள் மாணவர்களை பாக்ஸ்கான்
தொழிலாளர் தொகுப்பில் சேருமாறு கட்டாயப்படுத்துகின்றனர்; உற்பத்தி இலக்கு
அப்பொழுதுதான் அடையப்பட முடியும். ஜியாங்சு மாநிலத்தில் ஹுவையன் நகரத்தில் சில
மூன்றாம் நிலை கல்விக்கூடங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை இரண்டு மாத காலத்திற்கு
பாக்ஸ்கானில்
“உட்பயிற்சி
பெறுவர்களாக”
பணிபுரியக் கட்டாயப்படுத்துகின்றன;
iPhone
5ன்பகுதிகள் இவ்வகையில் தயாரிக்கப்படும். ஹெனன் மாநிலத்தில் உள்ளூராட்சிகள்
பாக்ஸ்கானின் சம்பளப்பட்டியிலுக்கு உதவித் தொகை கூட வழங்குகின்றன; ஆலை உற்பத்தி
இலக்குகளை அடைவதற்காக இத்தகைய உதவி செய்யப்படுகிறது.
பாக்ஸ்கான் மற்றும் பிற சீனாவிலும் ஆசியாவிலும் இருக்கும்
ஒப்பந்தக்கார உற்பத்தியாளர்கள் இப்பொழுது தங்கள் இலாபங்களில் கீழ்நோக்கிய
அழுத்தத்தைக் காண்கின்றனர்; இதற்குக் காரணம் மோசமாகிவரும் உலகப் பொருளாதார
நெருக்கடியாகும். பாக்ஸ்கானின் நிகர இலாபத் தொகுப்பு இந்த ஆண்டு முதல் காலாண்டில்
இருந்த 1.5 % உடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் 1.4 % ஆக சரிந்தது. இதன்
கையடக்க உற்பத்தி வணிகத்தில் அதிக நஷ்டங்களினால்
முதல்
அரை
ஆண்டில்
வெறும்
0.5
சதவீதம் மட்டுமே இலாபம் உயர்ந்தது.
சீனாவில் உற்பத்தி தொடர்ச்சியாக 11 மாதங்களாக சுருக்கம்
அடைந்துவருவதால், நாட்டின் பல மில்லியன் மக்கள் கொண்ட தொழிலாள வர்க்கத்திடையே
அமைதியின்மை பரந்த அளவில் வெடிப்பதற்கு அதிக காலம் பிடிக்காது. |