World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A balance sheet of the Afghanistan war

ஆப்கானிஸ்தான் போரின் ஓர் இருப்புநிலைக் குறிப்பு

Patrick Martin
24 September 2012
Back to screen version
 

ஒரு பெரும் ஓசையுடன் அல்ல, மெதுவான குரலில்தான்: இதுதான் 2009 ம் ஆண்டுக் கடைசியில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட கடைசி எழுச்சி படைகள் இப்பொழுது போரில் ஆழ்ந்திருக்கும் நாட்டில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்று அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகத்தின் செயல்பாட்டு கொள்கை போல் தோன்றுகிறது. மொத்தம் 33,000 அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து அகன்று விட்டன; அதே நேரத்தில் முக்கியமாக தெற்கு,  கிழக்கு, மாநிலங்களில் இன்னும் 68,000 துருப்புக்கள் அங்கு உள்ளனர்.

பென்டகன் இப்படிப் படைகளை அகற்றிக் கொண்டது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா நியூசிலாந்திற்கு பயணித்துள்ளபோது வெளியிடப்பட்டுள்ள செய்தித்துறைக் குறிப்பில் வந்துள்ளது; அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் இரண்டில் இருந்துமே இந்த இடம் உலகில் மிகத் தொலைவில் இருக்கக்கூடும். இந்த உண்மை பற்றி ஜனாதிபதி ஒபாமா அல்லது ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆகிய இருவரிடம் இருந்தும் பகிரங்க ஒப்புதல் வரவில்லை.

இக்கணத்தைப் பற்றிச் சிந்திக்கையில், எழுச்சி அதன் நோக்கங்களான தாலிபனின் உத்வேகத்தைப் போர்க்களத்தில் மாற்றுதல் மற்றும் ஆப்கானிய தேசியப் பாதுகாப்புப் படைகளின் அளவு, திறன் ஆகியவற்றை வியத்தகு அளவில் அதிகரித்தல் என்பவற்றைச் சாதித்துள்ளது என்பதை அங்கீகரிக்கும் ஒரு வாய்ப்பாகும். என்று பானெட்டா அறிவித்தார்.

ஆனால் ஆப்கானிய படைகள் நிரூபித்துள்ள பெரும் திறன் அவர்களுடைய அமெரிக்க-நேட்டோ பிரபுக்களுக்கு எதிராகச் செயல்படும் விருப்பத்தைக் காட்டியுள்ளதுதான். பச்சைக்கும், நீலத்திற்கும் இடையே நடக்கும் தாக்குதல்கள், ஆப்கானிய சீருடை அணிந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிசார் அமெரிக்க, நேட்டோ துருப்புக்கள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளன; அவற்றில் குறைந்தப்பட்சம் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் அதிக எண்ணிக்கையினர் காயமுற்றுள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்க இராணுவம் மிக நேரடியான ஒத்துழைப்பை ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுடன் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது; இதற்குக் காரணம் பெருகிய முறையில் ஆப்கானிய துருப்புக்கள் மற்றும் பொலிசார் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் மீது நடத்தும் உள்ளிருப்புத் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதுதான். இந்த உண்மை மட்டுமே பானெட்டாவின் கூற்றை நகைப்பிற்கு இடமாக்குகிறது.

மேலும் ஒபாமா நிர்வாகம், தாலிபன் இன்னும் பிற கிளர்ச்சிக் குழுக்களின் இராணுவத் திறன்களை கணிசமாக குறைத்துவிட்டதாக கூறினாலும், செப்டம்பர் 14ம் திகதி நிகழ்வு வேறு உண்மையைத்தான் தெரிவிக்கிறது. கிளர்ச்சிக் குழு ஒன்று மிகத் தைரியமான நேரடித்தாக்குதல் ஒன்றை அதி பாதுகாப்பிற்குட்பட்ட பிரித்தானியத் தளம் ஒன்றில் ஹெல்மாண்ட் மாநிலத்தில் நடத்தியது. புற எல்லை ஊடாக உடைத்து நுழைந்து தரையில் இருந்த பல விமானங்களையும் அழித்தது.

தன்னுடைய கருத்துக்களில் இருந்த நகைப்பிற்கிடமான நம்பிக்கை ஒலியைக் குறைக்கும் முயற்சியில் பானெட்டா ஆக்லாந்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: இந்த நடவடிக்கையில் வருங்காலத்தில் கடினமான நாட்கள் தொடரும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் சேர்த்துக் கொண்டார், நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

வாஷிங்டன் போஸ்ட்,  அமெரிக்கத் தலைநகரிலுள்ள முக்கியமான நாளேடு பானெட்டாவிற்கு கடுமையான தலையங்கத்தின்மூலம் விடையளித்தது; ஆப்கானிஸ்தானில் சரியான பாதையில் இல்லை. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியப் போர்களுக்குப் பேராதரவு கொடுத்த போஸ்ட் , இப்பொழுது சிரியா, ஈரான் ஆகியவற்றில் வரவிருக்கும் புதிய போர்களுக்கும் ஆதரவு கொடுக்கும் போஸ்ட்,  எச்சரித்துள்ளது: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மூலோபாயம்..... திரு ஒபாமாவின் ஜனாதிபதிக் காலத்தில், வேறு எப்பொழுதும் இல்லாத அளவு அதிக ஆபத்திற்கு உட்பட்டிருக்கலாம்.

பச்சை நீலத்தைத்தாக்கிக் கொல்லுவதின் அரசியல் பாதிப்பு மூத்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் வியட்நாம் போரின் டெட் தாக்குதலுடன் ஒப்பிடப்படுகிறது; ஏனெனில் இவை துருப்புக்களின் மன நிலையில் பேரழிவு உளைச்சல் விளைவைக் கொடுக்கின்றன; அதேபோல் ஏற்கனவே போருக்கு நலிந்த உள்நாட்டு ஆதரவிலும் பாதிப்பைக் கொடுக்கின்றன.

வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்பட்ட இரு நீண்ட போர்களாகும்; இரண்டு முதலாளித்துவக் கட்சிகள், வாஷிங்டனில் மாறி மாறி பதவிக்கு வருபவை ஒவ்வொரு குருதிக் களரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. வியட்நாம், ஜனநாயகக் கட்சியினரின் கீழ் தொடங்கி குடியரசுக் கட்சியினரின் கீழ் விரிவாகி இறுதியில் ஒரு வரலாற்றுத் தன்மை நிறைந்த தோல்வியில் முடிவுற்றது. ஆப்கானிஸ்தான் போர் குடியரசுக் கட்சியின் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் தொடங்கி அவருக்குப் பின் வந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின் கீழ் விரிவாக்கம் அடைந்தது.

இரு போரினால் சீர்குலைந்த நாடுகளுக்கும் இடையே வரலாற்றுப் பின்னணி, புவியியல் தன்மை மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றில் பல வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால் ஒரு பெரிய ஒற்றுமையை இவை பகிர்ந்து கொள்கின்றன: ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்கள் மீது அமெரிக்க தலையீட்டு இனப்படுகொலை தாக்கம். இரண்டு மில்லியன் வியட்நாமிய மக்கள் அமெரிக்க ஆக்கிரோஷத்தால் கொல்லப்பட்டனர், அவற்றில் பெரும்பாலானவை வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஏற்பட்டன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு இன்னும் சிக்கல் வாய்ந்தது; மறைமுகமானது, ஆனால் பேரழிவுத்தன்மையில் சற்றும் குறைந்தது அல்ல. 30 ஆண்டுகளுக்கும் மேலான போர் மற்றும் ஏகாதிபத்தியச் சூழ்ச்சியில், மில்லியன் கணக்கானவர்கள் இறந்துவிட்டனர், காயமுற்றனர் அல்லது இடம் பெயர்ந்து விட்டனர்ஆரம்பத்தில் இது ஒரு சோவியத் படையெடுப்பு, ரஷ்ய வியட்நாம் வழிச் சேதப்படுத்தப்படுதல் என்று ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயக கட்சி நிர்வாகம் சோவியத் படையெடுப்பையும் ரஷ்ய வியட்நாமையும் தூண்டியதில் இருந்து CIA யின்கீழ் அல் குவைடாவாக மாறவிருந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து, தாலிபன் அதிகாரத்திற்கு பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் ஆதரவில் ஏற்றம் பெற்றதில் இருந்து தற்போதைய எதிர் கிளர்ச்சிப் போர் வரை வந்துவிட்டது.

விரிவாக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டது ஒன்றும் முடிவைக் குறிக்கவில்லை; ஆப்கானிய மக்கள் படும் துயரத்தின் மற்றொரு கட்டத்தைத்தான் குறிக்கிறது. அந்நாட்டில் இன்னும் 68,000 அமெரிக்கத் துருப்புக்கள் உள்ளன; இதைத்தவிர கணிசமான நேட்டோப் படைகளும் காபூலில் கர்சாயின் ஊழல் கைக்கூலி ஆட்சியும் பிற பிராந்திய மையங்களில் வெற்றுத்தனப் போர்ப்பிரபுக்களும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையெடுப்பின் அரசியல் காரணம் காட்டுதல் பின்னர் நடந்த நிகழ்வுகளால் சிதறிப்போயிற்று. புஷ் நிர்வாகம், இரு கட்சிகளுடைய ஆதரவுடனும், தாலிபன் ஆட்சியை அது அகற்றுதல் உலகளாவிய பயங்கரவாதத்தின் மீதான போரில் தேவையான முதல் படி என்றும் அது செப்டம்பர் 11, 2001 நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விடையிறுப்பு என்றும் கூறியது. 11 ஆண்டுகள் கழித்து, அல் குவேடா, ஆப்கானிஸ்தானில் இன்னும் தாக்குதலுக்கு முக்கிய இலக்கு எனக் கூறப்படுவது, சிரியாவில் அசாத் ஆட்சியை அகற்றும் அதன் முயற்சிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நட்பு அமைப்பாக உள்ளது; இது ஈரான் மீது நேரடித்தாக்குதலுக்கு வழிவகுக்கிறது. ஆயினும் ஆப்கானிஸ்தானில் போர் நீடிக்கிறது.

இப் படுகொலையை ஒரு முடிவிற்கு கொண்டுவருவதற்கான அரசியல்  முன்முயற்சி அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவில் இருந்து வராது, அதையும் விட முக்கியமாக குடியரசுக் கட்சியினர் நடத்திய ஏகாதிபத்தியப் போர்களை எதிர்ப்பதாகக் கூறிய, ஆனால் ஜனநாயகக் கட்சியினரின் போர்களைப் பாராட்டும் மத்தியதர வகுப்பின் போலி இடது குழுக்களிடம் இருந்தும் வரப்போவதில்லை. அச்செயல் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மூலம்தான் செய்யப்படமுடியும்; அது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக வெகுஜன இயக்கம் ஒன்றைக் கட்டமைத்து அனைத்து அமெரிக்க, நேட்டோத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் எனப் போராட வேண்டும். போர் குற்றங்களுக்கு உடைந்தயான நாடு, சிதைவுற்றுள்ள அந்நாடு மறு கட்டமைப்பதற்கு பல பில்லியன் டாலர்கள் அளிக்க வேண்டும்; அதேபோல் இந்த இரத்தக்களரியைத் தொடர்வதற்கு உத்தரவுகளைக் கொடுப்பவர்கள் கொடுத்தவர்கள் மீது போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணையை நடத்த வேண்டும்.