சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Socialist Party government bans protests against anti-Muhammad cartoons

பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் முகம்மது விரோத கேலிச்சித்திரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடை செய்கிறது

By Kumaran Ira 
24 September 2012
use this version to print | Send feedback

Charlie Hedbo என்னும் அங்கத வார ஏடு முகம்மது நபிகளை இழிவுபடுத்திய கேலிச்சித்திரங்களை வெளியிட்டபின், பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் பொலிஸ் உயரதிகாரிளை கேலிச்சித்திரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடைக்கு உட்படுத்துமாறும் தடையை மீறி ஏதேனும் எதிர்ப்புக்கள் வந்தால் அவற்றை உடைத்தெறியுமாறும் உத்திரவிட்டுள்ளது.

இஸ்லாமிய-விரோத திரைப்படம் Innocence of Muslims அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முஸ்லிம் உலகம் முழுவதும் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியபின், கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டது வந்துள்ளது.

உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் கூறினார்: பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இவ்வகையில் எக்கூட்டமும் தடை செய்யப்பட வேண்டும் என்று கடுமையான உத்திரவுகளை நான் பிறப்பித்துள்ளேன். அதில் சிறிது கூட விதிவிலக்கு இருக்காது. இந்த எதிர்ப்புக்கள் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும், கலைக்கப்பட வேண்டும்.

பிரான்சின் முந்தைய கன்சர்வேடிவ் அராசங்கத்தின் பர்க்கா அணிதல் தடைக்கு ஆதரவு மற்றும் நவ பாசிச தேசிய முன்னணி (FN) முஸ்லிம் இறைவணக்கங்கள் தெருக்களில் கூடாது என்ற ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவு கொடுத்த வால்ஸ் தொடர்ந்து கூறினார்: இந்த ஆர்ப்பாட்டங்களில், தெருக்களில் இறைப்பாடல்களையோ முழு உடலையும் மறைக்கும் அங்கிகளையோ நான் அனுமதிக்க மாட்டேன். .... நாடு ஒன்றுபட்டு அமைதி காத்து மதச்சார்பற்ற தன்மை என்னும் கொள்கையில் நிற்க வேண்டும்.

இழிந்த முறையில் மதசார்பற்ற தன்மை, ஜனநாயக உரிமைகள் என்ற சொல்லாட்சியில் கூறப்பட்டாலும், வால்ஸின் அறிக்கை Charlie Hebdo வெளியிட்டுள்ளவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனநாயக உரிமையையும் பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளை எதிர்க்கும் உரிமைகளையும் மிதிக்கிறது. அரசாங்கம் இக்கொள்கைகளுக்கு எதிரான அனைத்து அரசியல் எதிர்ப்புக்களையும் அற்பத்தன குற்றத்தன்மைத் தூண்டுதல் பெற்றது என்று அவதூறு கூறி பெரிய அளவிற்கு அவற்றை நசுக்குவதற்கு நியாயப்படுத்துகிறது. இது ஜனநாயக நிறுவனங்கள் ஆழ்ந்து அரிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகிறது; அதேபோல் ஒரு பொலிஸ்-அரசிற்கு பிரான்ஸ் விரைவில் சரிவதையும் காட்டுகிறது.

நாளேடு Le Parisien க்கு தடைக்குப் பின் பேட்டி கொடுத்த வால்ஸ், பிரெஞ்சு சமூகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது; அதேபோல் பாதுகாப்புப் படைகள் குடியரசை மீற உறுதியாக இருக்கும் நபர்களை எதிர்கொள்ளுவதிலும் அதே அளவிற்கு நம்பிக்கை உள்ளது; மீறுபவர்கள் இங்கு வந்து தூண்டிவிட்டு இளைஞர்களை மீறும்பாதையில் இழுக்கின்றனர்.... இந்த அரசாங்கத்திற்கு எப்படி உறுதியாக இருப்பது என்று தெரியும். எவரும் அதைப்பற்றிச் சந்தேகப்படத் தேவையில்லை. என்றார்.

எதிர்ப்புக்களை நசுக்குவதில் அது கொண்ட உறுதிப்பாட்டில் PS கடந்த தசாப்தத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பொலிஸ் அரசின் உள்கட்டுமானத்தை திரட்டுகிறது. பொலிசை நிலைப்பாடு கொள்ள வைக்கையில், இக்கட்சி இணையத்தள சமூக தளங்கள், தொலைபேசி இணையங்கள், பாரிஸ், மார்சை, லியோன், லீல், துலூஸ், ருவான் ஆகிய முக்கிய நகரங்களில் குறும் செய்திகள் அனுப்பப்படுதல் ஆகியவற்றையும் கண்காணிக்கிறது.

இப்பகுதிகளில் உள்ள பொலிசார் பெரிய அளவில் எதிர்ப்புக்களுக்கு எதிராகத் தயாரிப்புக்களை கொண்டுள்ளனர். உள்துறை அமைச்சரகம், பொலிஸ் பிரிவுளும் உள்ளுர் இருப்புப் பிரிவுகளும் திரட்டப்பட தேவையானால் தலையிடத் தயார் நிலையில் உள்ளன. என்று அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் பொலிஸ் படைகள் முக்கிய நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன; பாரிஸில் மட்டும் 800 CRS பொலிஸ் கலகப் பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளது இதில் அடங்கும். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாரிஸின் தலைமை பொலிஸ் அதிகாரி Bernard Boucault Trocadéro வில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் பெரிய மசூதிக்கு அருகே சனிக்கிழமை திட்டமிடப்பட்ட எதிர்ப்புக்களை தடை செய்துள்ளார்.

லியோனில் ஓர் ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்பட்டது; சனிக்கிழமை அன்று லீல் இல் ஒரு எதிர்ப்பு தடை செய்யப்பட்டது. உள்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளபடி 35 பேர் கைது செய்யப்பட்டனர்; அவற்றுள் பர்க்கா அணிந்த மகளிரும் இருந்தனர்.

ஒரு 24 வயது ரயில்வே தொழிலாளி, அமெரிக்கத் தூதரகத்திற்கு முன் செப்டம்பர் 15 அன்று இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு மூன்று மாதக்காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

குடிபெயர்ந்துள்ளவர்கள் மற்றும் முஸ்லிம்களை மட்டும் PS இலக்குக் கொள்ளவில்லை; தொழிலாள வர்க்கம் முழுவதையுமே இலக்கு கொண்டுள்ளது. பொலிஸ் அரச கருவி தொழிலாள வர்க்கத்தின் குடியேற்ற அடுக்குகளில் இருக்கும் ஏகாதிபத்திய உணர்வை நசுக்குவதற்காக வளர்க்கப்படுகையில், முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அது PS உடைய வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராகவும், சமூக சிக்கன நடவடிக்கைகள் ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக முழங்குகையில் பயன்படுத்தப்படும்.

மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஐந்து மாதங்களில் PS கட்சியை சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவரைப் பற்றிய கருத்துக் கணிப்புக்களில் ஒரே மாதத்தில்11 சதவிகிதச் சரிவு என்னும் முறையில் தாழ்ந்துவிட்டார். மக்களில் கிட்டத்தட்ட 56% அவருடைய கொள்கைகளை ஏற்கவில்லை; மேலும் அவருக்கான ஆதரவும் PS, அதன்கூட்டணிக் கட்சிகளான பசுமை வாதிகள் ஸ்ராலினிச PCF என்னும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு இடையே சரிந்து கொண்டிருக்கிறது.

PS  இன் அடக்குமுறை நடவடிக்கைகள், அது சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தத் தயாராக இருக்கையில், வணிகச் சார்பு தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்கள், வெகுஜன பணிநீக்கங்கள் ஏற்பட்டு தொழிலாள வர்க்கத்தில் ஆழ்ந்த அதிருப்தியை கொடுத்திருக்கும் நிலையில் வருகின்றன. மேலும் இக்கட்சி வாஷிங்டனுக்குப் பின் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றுவதற்கான ஆதரவற்ற பினாமிப் போருக்கு மக்கள் எதிர்ப்பை மீறி நிற்கிறது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகள்2004ம் ஆண்டு பள்ளிகளில் தலை மறைப்பு அங்கி, பர்க்காத் திட்டம் அடங்கும்ஆகியவற்றிற்றாக ஆதரவு பற்றியும் PS தொடர்புகொண்டுள்ளது; சமீபத்திய ஆண்டுகளில் இவை கன்சர்வேடிவ் அரசாங்கங்களால் இயற்றப்பட்டவை. இப்பொழுது அது அதிகாரத்தில் இருக்கையில், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடர்கிறது. இது நவபாசிச தேசிய முன்னணியை FN யும் மற்ற கூறுபாடுகளையும் இன்னும்தீவிர லவதுசாரித் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஊக்கம் அளிக்கிறது; அரசிசயல் சூழ்நிலை இன்னும் வலதிற்கு மாற்றப்பட வேண்டும் என அவை கோருகின்றன.

FN   உடைய தலைவர் Marine Le Pen இப்பொழுது இஸ்லாமியத் தலைமறைப்புக்கள், யூத யார்முல்கே தலையங்கி ஆகியவை தெருக்களில் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் TF1  இடம் கூறினார்: மறைப்பு அங்கி நம் நாட்டில் அதிகம் பரவியிருப்பதையும் djellaba அணிவது வளர்வதையும் நான் இன்று காண்கிறேன். சில பகுதிகளில் ஒரு பொதுவான மக்கள் அழுத்தத்தின் விளைவு அது என்று நான் கருதிகிறேன்.... 2004 ம் ஆண்டுச் சட்டமான பள்ளிகளில் வெளிப்படை மத அடையாளங்களை அணிவது தடை என்பது பள்ளிகளில் இருந்து அனைத்துப் பொது இடங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என நான் கோருகிறேன்.

வெளிப்படையான அடையாளங்கள் யார்முல்கேயையும் உள்ளடக்குமா என்று கேட்கப்பட்தற்கு Le Pen அவருடைய கருத்தில் அது உட்படும் என்றார்.

லு பென் விடும் அழைப்புக்கள் யூதநெறி மற்றும் இஸ்லாத்தை இலக்கு கொள்ளுகின்றன; இவை மீணடும் பிரெஞ்சு அரசாங்கம் மதச் சிறுபான்மையினரை மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தல் என்ற மறைப்பில் இலக்கு கொள்ளும் பிற்போக்குத்தன உட்குறிப்புக்களைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது FN  ஐ செமிடிச எதிர்ப்புத் திட்டத்தை அளிக்க அனுமதித்துள்ளது; சமீப காலம் வரை அது ஒரு பாசிசத் தூண்டுதல், பிரெஞ்சு அரசியல் முக்கிய பகுதியின் ஒரு பகுதி என்று கண்டிக்கப்பட்டது.

Charlie Hebdo  முகம்மது நபிக்கு எதிரான கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது என்னும் உண்மை இத்தகைய பொலிஸ் அடக்குமுறை மற்றும் பாசிச உணர்வு பெரிதும் வந்துள்ளதற்கு வழிவகுத்துள்ளது; இது கடந்த புதன் பதிப்பில் இக்கேலிச் சித்திரங்களை வெளியிடுதல் என்னும் முடிவிலுள்ள பிற்போக்குத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் Charlie Hebdo  பல முறையும் இஸ்லாமிய விரோதப் பொருளுரையைத் தூண்டிவிடும் வகையில் வெளியிட்டுள்ளது. 2005 இலையுதிர்காலத்தில் பரந்த எதிர்ப்பு நகர் கலகங்கள் அடக்கப்பட்ட பின் பெப்ருவரி 2006ல் அது மீண்டும் வலதுசாரி டேனிஷ் செய்தித்தாள் Jyllands-Posteri வெளியிட்டிருந்த நபிகள் பற்றிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டது. மார்ச் 1, 2006ல் அது ஒரு பிரகடனத்தில் அமெரிக்க வலது இஸ்லாமோ-பாசிசத்தை கண்டித்ததை எதிரொலித்து வெளியிட்டது; அது இஸ்லாமியத்தை உலகச் சர்வாதிகார தீமை, பாசிசம், நாஜிசம், ஸ்ராலினிசம் போன்றவற்றிற்கு ஒப்பிடத்தக்கது எனக் கூறியது.

2006ம் ஆண்டில் Charlie Hebdo இஸ்லாமிய எதிர்ப்புக் கேலிச் சித்திரங்களை வெளியிட்டபின்அது செய்தி ஊடகத்தில் பரபரப்பு, பெரும் விற்பனையை ஏற்படுத்தியதுஉயர்மட்ட ஆசிரியர்கள் 825,000 யூரோக்களை (அமெரிக்க $1.07 மில்லியன்) தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்; கலாச்சார அமைச்சரகத்தால் மிகப் பெரிய விருந்திற்கு அழைக்கப்பட்டனர். கன்சர்வேடிவ் மந்திர ஹென்றி போல் அவர்களை சுதந்திரச் செயலர்கள் என்று பாராட்டினார்.

இதழின் ஆசிரியர் குழு, PS, PCF  உடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டது, ஐயத்திற்கு இடமின்றி கணிசமான நிதிய ஆதாயங்களைச் சமீபத்திய கேலிச்சித்தரங்களை வெளியிட்டதின் மூலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 75,000 பிரதிகளை அவர்கள் சமீபத்திய பதிப்பில் வெளியட்டது விரைவில் விற்றுத் தீர்ந்தன; செய்தி ஊடகத்தில் கேலிச்சீத்திரங்கள் தீவிரமான முறையில் தகவல் பெற்றன.

Charlie Hebdo  இவ்வகையில் மீண்டும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைத் தூண்ட ஒரு கருவியாக பயன்பட்டுள்ளது மற்றும் கேலிச்சித்திரங்களால் சீற்றம் அடைந்த முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதாகக் கூறும் போலி ஜனநாயக மறைப்பையும் அளிக்கிறது; ஆனால் அது ஜனநாயக உரிமைகளைத்தான் தாக்குகிறது.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:

European media publish anti-Muslim cartoons: An ugly and calculated provocation
[4 February 2006]