தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி David North to speak on Leon Trotsky at historians meeting in Mainz, Germanyஜேர்மனியின் மைன்ஸ் நகரில் வரலாற்றாசிரியர்கள் கூட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்22 September 2012use this version to print | Send feedbackஜேர்மனியின் மைன்ஸ் நகரில் செப்டம்பர் 27 அன்று நடைபெறுகின்ற 49வது வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் ஏற்பாடாகியுள்ள ஒரு பொதுக் கூட்டத்தில் ’லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து’ என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் உரையாற்றவிருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இந்த வரலாற்றாசிரியர்களின் மாநாடு ஐரோப்பாவில் வரலாற்று அறிஞர்களின் மிகப் பெரிய மற்றும் மிகப் பெருமைவாய்ந்த சந்திப்பாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக் கூடிய ஒன்றாகும். போட்ஸ்டாமில் இருக்கும் சமகால வரலாற்று மையப் பேராசிரியரான மரியோ கெஸ்லரும் இக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார். இயான் தாட்சர், ஜெப்ரி ஸ்வெயின், மற்றும் ராபர்ட் சேர்விஸ் ஆகியோர் ட்ரொட்ஸ்கி மீது தொடுத்திருந்த தாக்குதல்கள் உண்மைகளைப் பிழையாக வழங்கியிருந்தன அல்லது வரலாற்று அறிஞர்களுக்குரிய தகமையின் அடிப்படை நிர்ணயங்களை மீறியிருந்தன. ட்ரொட்ஸ்கி என்கிற மகத்தான ரஷ்ய மார்க்சிஸ்ட் குறித்து இவர்கள் வெளியிட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து நோர்த் விவாதிக்க இருக்கிறார். ரோபர்ட் சேர்விஸ் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு நூலின் மீது நோர்த் வைத்த விமர்சனங்களை ஆதரித்தும் சேர்விஸின் புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சுக்ராம் பிரசுரத்திற்கு அறிவுறுத்தியும் வெளியிடப்பட்ட வரலாற்றாசிரியர்களின் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் பேராசிரியர் கெஸ்லரும் ஒருவராவார். நிகழ்ச்சி விவரம்: Thursday, September 27, 2012 at 6:00 p.m. Johannes Gutenberg University-Mainz (Room N1, in the "Muschel") Johann-Joachim-Becher-Weg, 55128 Mainz |
|
|