World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The two paths open to Chicago teachers

சிகாகோ ஆசிரியர்கள் முன்னுள்ள இரு பாதைகள்

Statement of the Socialist Equality Party
19 September 2012
Back to screen version

சிகாகோ ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் மன்றத்திற்கு வெளியே புதன் அன்று வேலைநிறுத்தம் தொடரலாமா வேண்டாமா என முடிவெடுக்கக் கூட்டப்பட்ட கூட்டத்தில் இந்த அறிக்கை வினியோகிக்கப்பட்டது. பிளவுற்றிருந்த பிரதிநிதிகள் அமைப்பு வேலைநிறுத்தம் முடிக்கப்படுவதற்கு வாக்களித்தது. (பார்க்கவும், “Delegates meeting votes to end Chicago teachers strike.”)

ஆசிரியர்களின் பிரதிநிதிகள் இன்று ஒரு மிக மோசமான முடிவை எடுப்பதற்கு மீண்டும் கூடிக்கொண்டனர். ஞாயிறன்று பணிக்குத் திரும்புவதில்லை என ஒரு ஒழுங்குமுறையான மற்றும் தைரியமான நிலைப்பாடைப் எடுத்திருந்தனர். இப்பொழுது இரண்டு நாட்களுக்குப் பின் CTU  தலைமையானது  இறுதிக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட அதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு முயன்றுவருகிறது.

இன்று வேலைநிறுத்தம் முடிந்துவிட்டால், பிரதிநிதிகள் மேசையில் இருக்கும் ஒப்பந்தத்திற்கு ஒரு ஆதரவு வாக்கு அளிப்பதற்கு ஒப்பாகும். இப்பொழுது ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பினால், மூன்றில் இருந்து நான்கு வாரங்களுக்குள் உடன்படிக்கை மீது வாக்களிக்கப்பட்டு, அனைத்து உத்வேகங்களும் இழக்கப்பட்டுவிடுவதுடன், ஆரம்பிக்கப்பட்ட முயற்சி எமானுவல் நிர்வாகத்தின் கரங்களில் உறுதியாக போய்ச் சேர்ந்துவிடும். பொதுக்கல்வி முறையை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். இது சிகாகோ மட்டுமின்றி, நாடு முழுவதற்குமானதாகும்.

சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத் தலைமை முன்வைத்த ஒப்பந்தத்தை வாசித்தால், இந்த ஒப்பந்தம் எமானுவல் நிர்வாகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை அனைத்தையும் ஏற்கிறது என்பதைத்தான் உறுதிபடுத்துகிறது. குறிப்பாக தேர்வுமுறையை அடித்தளமாக கொண்ட மதிப்பீட்டு முறைகளுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். இதனால் ஆசிரியர்களுக்கு வேலைப் பாதுகாப்பு அகற்றப்பட்டுவிடும். ஆசிரியர்களை பொறுப்பாக்குதல் என்னும் முற்றிலும் இழிந்த, பாசாங்குத்தன போலிக்காரணத்தின் கீழ் நிர்வாகம் ஏராளமான பணிநீக்கங்களை செய்வதற்கு இதை  காரசமாக உருவாக்க முயல்கிறது. மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தில் ஒரு பகுதியான கிட்டத்தட்ட 120 பொதுப்பள்ளிகளில் இதனால் இலாபம் கொடுக்கும் உரிமை ஆவணம் பெறுவதாக விரிவடையும்.

பொதுக் கல்வி முறையின் வருங்காலம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டின் அரசியல்வாதிகள் பெருநிறுவன மற்றும் செல்வந்தர்களின் சார்பாக பேசுகின்றனர். பொருளாதார நெருக்கடியைப் பார்த்து இதை ஒரு வாய்ப்பாக கருதி நிறுவனத்தின் வேர்களை கீழறுக்கும் தன்மையானது அமெரிக்க புரட்சி காலத்திற்கு இட்டு செல்வதாக உள்ளது. ஒபாமா அரசின் பிற்போக்கு பள்ளிச் சீர்திருத்தம் நிகழ்ச்சிநிரலில் சிகாகோ ஒரு சோதனைக் கூட நிகழ்வு ஆகும்.

பொதுக்கல்வி முறையின் மீதான தாக்குதல் பல தலைமுறைகள் தொழிலாளர் வர்க்கத்தினர் போராடிப் பெற்ற சமூக நலன்கள் ஒவ்வொன்றையும் கிழித்தெறியும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இது மிக விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற உறுதியை ஒப்பந்தம் விளக்குகிறது. மேலும் அரசியல் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆசிரியர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு தங்கள் வெறித்தனத்தை ஒட்டி நிற்கும் சீற்றத்தில், இது அடிமைகளின் எழுச்சிபோன்றது அவ்வாறே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கொண்டிருக்கும் ஒருமைப்பட்ட நிலைப்பாட்டினாலும் விளக்குகிறது.

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அவர்கள் முயற்சிகள் எப்படி இருந்தாலும், எமானுவல் பின்னடித்த நிலையில்தான் உள்ளார். நிர்வாகம் சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத்   தலைமையைப் பயன்படுத்தி விட்டுக்கொடுப்புகளை  செய்யும் ஒப்பந்தத்திற்கு உடன்பட வைக்க வேண்டும் என்ற மூலோபாயத்தை பணயம் வைத்துள்ளது. ஞாயிறன்று பிரதிநிதிகள் மன்றத்தின் செயல் இது சாத்தியமில்லை என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

இன்று காலை சிகாகோ டிரிபூன் தலைவர் கரென் லீவிஸ் உடைய மிகப் பெரிய சவால் நீண்டு போராடும் ஆசிரியர்களின் துத்தத்தை அடக்கி ஒரு உடன்பாட்டை முடிக்க வேண்டும் எனக்கூறியதாகத் தெரிவித்துள்ளது. லெவிஸும் சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத்   தலைமையின் மற்றவர்களும் நகரவை அரசாங்கத்திற்கும் சிகாகோ பொதுப்பாடசாலைகளுக்கும் கூடுதல் போர்க்குணமிக்க எதிர்ப்பாளிகள் என்று காட்டிக் கொண்டு அதிகாரத்திற்கு வந்தவர்கள். இப்பொழுது இவர்கள் முந்தைய தலைமை ஒப்புக் கொண்டிருக்கக்கூடிய ஒப்பந்தத்தில் இருந்து மாறுதல் இல்லாத ஒப்பந்தத்தைத்தான் கட்டாயப்படுத்தித் திணிக்கின்றனர். ஆசிரியர்களிடம் பெரும் பகைமை போராட்டும் டிரிபூன் பத்திரிகை லெவிஸை ஒரு பொதுப் பிரச்சாரத்தில் நண்பர் என அங்கீகரிக்கிறது.

இது இயலவில்லை என்று போனால், நகரவை அடக்குமுறை, ஏராளமான கைதுகளுக்காக திட்டம் B ஐ வைத்துள்ளது. எமானுவல் நீதிமன்றத் தடையை வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிக்க நாடியுள்ளது அத்திசையில் ஒரு அடி ஆகும். அது ஆசிரியர்களை சரியான முறையில் இன்றைய கூட்டத்தில் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது; இந்த நம்பிக்கையைத்தான் லெவிஸும் சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத் தலைமையும் பகிர்ந்து கொள்கின்றன.

ஆசிரியர்கள் முன் இருக்கும் இரு பாதைகள்

ஒன்று தோல்வியை ஏற்று, பணிக்குத் திரும்பி எமானுவல் கோருவதற்கு ஒப்புக் கொள்ளுதல். இதைத்தான் லெவிஸும் மற்றவர்களும் இன்று ஆலோசனையாகக் கூறுவர். ஒப்பந்தம் சிறந்தது. அதுதான் அடையப்பட முடியும் என்று அவர்கள் கூறுவர். லெவிஸும் ஜேசி ஷார்க்கியும் பலமுறை ஞாயிறன்று கூறியது போல் நமக்குக் கிடைத்துள்ள உடன்பாடு இதுதான். இதைத்தான் எமானவலும் சிகாகோ பொதுப்பாடசாலைகளும் கொடுக்கின்றனர் என்று அவர்கள் வலியுறுத்துவர். ஆசிரியர்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறுவர்.

இதைவிட நன்கு போராடும் திட்டம் ஏதும் இல்லை என்பதை ஏற்கனவே தலைமை தெளிவுபடுத்திவிட்டது. ஒரு கௌரவமான பொதுக் கல்வி கொடுப்பதற்கு பணம் இல்லை என்ற கூற்றை அவர்கள் முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஒரு சிக்கன ஒப்பந்தம், கடுமையான பொருளாதாரச் சிக்கல் காலத்தில் ஏற்கப்படுகிறது என்று லெவிஸ் இன்று காலை கூறினார். பள்ளிகள் மூடப்படுவதை பொறுத்தவரை, லெவிஸ் தான் சிகாகோ பொதுப் பாடசாலைகளுடன் சேர்ந்து இது இயன்றளவு நியாயமாக செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதாக உறுதியாகத் தெரிகிறது. இது உண்மையானால் வேலைநிறுத்தம் நடத்துவானேன்?

இரண்டாவது பாதை போராட்டத்தை விரிவுபடுத்துவது. சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத் தலைமையின் தோல்வி மனப்பான்மையை நிராகரிப்பது. பணம் இல்லை என்னும் கூற்றை நிராகரிப்பது; அதுவும் வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கில் பணம் கொடுக்கும் நிலையில் இருக்கும்போது. சிகாகோ பொதுப் பள்ளிகளின் முழு வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையும் மிகச் செல்வம் படைத்த தனியார் முதலீட்டு நிதிய மேலாளர்கள் ஓராண்டில் சம்பாதிப்பதைவிடக் குறைவு ஆகும்.

இந்நாட்டில் எதுவும் போராடாமல் வெற்றி அடைவதில்லை. எட்டு மணி நேர நாள் போராட்டத்தின் தாயகமாகும் சிகாகோ. இது நீடித்த கடுமையான மோதலை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் கொண்டபின் வெற்றி அடையப்பட்டதாகும். தொழிற்சங்கங்களுக்கான வெகுஜன இயக்கங்களில் இருந்து, சிறுவர் உழைப்பு தடுப்பு, குடியுரிமைகளுக்கான போராட்டங்கள், சமூக சீர்திருத்தங்கள் என்று அனைத்துமே புரட்சி எழுச்சிகளின் துணை விளைவுகள்தான். இவ்வாறுதான் இருந்தன, இப்படித்தான் இருக்கும்.

பொதுக் கல்வியைக் பாதுகாப்பதற்கான போராட்டம் ஒரு புதிய அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். வேலைநிறுத்தம் நடத்தும் முறை சிகாகோ ஆசிரியர்கள் தொழிற்சங்கத்   தலைமையின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். ஒரு சுயாதீன வேலைநிறுத்தக்குழு இதற்கென நிறுவப்பட வேண்டும். தொழிற்சங்கத்தின் ஜனநாயகக் கட்சியுடனான அரசியல் பிணைப்பிற்கு போராட்டம் தாழ்த்தப்படக்கூடாது. அதேபோல் பெருநிறுவனம் இயலும் என்று கூறுவதற்குத் தாழ்த்தப்படவும் கூடாது. பொதுக்கல்வி முறைப் பாதுகாப்பு மற்றும் பெரும் முன்னேற்றம் என்பது வங்கிகளின் பிடியில் இருந்து முறித்துக் கொள்ளுவதின் மூலமும் தனியார் இலாபம் என்று இல்லாமல் சமூகத்தின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு கொண்டுவரவதின் மூலம்தான் முடியும்.

ஆசிரியர்களே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் தனித்திருக்கவில்லை!

பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய உயரடுக்கிற்கு எதிரான ஆசிரியர்களின் உறுதியான போராட்டத்திற்கு வெகுஜன ஆதரவு கிடைக்கும். செய்தி ஊடகம் ஆசிரியர்களை உறுதிதளரச்செய்ய வேலைநிறுத்தம் பொதுமக்கள் எதிர்ப்பைத்தான் தோற்றுவிக்கும் என வலியுறுத்துகிறது.

இதற்கு முற்றிலும் மாறான நிலைதான் உண்மை! பெருநிறுவன உயரடுக்கின் மிகப் பெரிய அச்சம் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த போராட்டத்தின் ஆரம்பக் கட்டம் ஆகிவிடும் என்பதுதான். ஆனால் இதுதான் ஆசிரியர்களுடைய மிகப்பெரிய வலிமையும் ஆகும். ஆசிரியர்களுக்கு பாரிய மக்கள் பரிவுணர்வு உள்ளது. இறுதியில் ஒருவராவது ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்!

அரசாங்கத்தின் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் தொழிலாள வர்க்கம் மிகப் பரந்த அளவில் அணிதிரட்டப்படுவதின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும்; இதில் பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பும் அடங்கும். நகரவைத் தொழிலாளர்கள், தீயணைப்போர், அரசாங்க ஊழியர்கள் என அனைவரும் எமானுவல் நிர்வாகத்தின் உறுதியான வேலைகளை தாக்குதல், ஊதியங்களை தாக்குதல், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்களைத் தாக்குதல் என்பவற்றை எதிர்த்து நிற்க வேண்டும். வெகுஜன வேலையின்மை, வறிய ஊதியங்கள், உயரும் வாழ்க்கைச் செலவுகள் இவைதான் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவின் மீதும் சுமத்தப்படும் புதிய இயல்புநிலை ஆகும்.

நகரம் முழுவதும், அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராடுவதற்கு ஒரு வழிவகையை நாடுகின்றனர். மிக நீண்ட காலமாக செல்வந்தர்களின் ஆணைகள் எதிர்ப்பிற்கு உட்படாமல் போய்விட்டன. நீண்டகாலமாகவே தொழிற்சங்கங்கள் வெகுஜன அதிருப்தியை திசை திருப்புவதிலும் அடக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளனர்! சிகாகோ ஆசிரியர்களின் உறுதியான நிலைப்பாடு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பரிவுணர்வை பெறும்.

வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்துக! பள்ளி மூடல்கள், தனியார் மயமாக்கல் வேண்டாம்! பொதுக்கல்வியைக் பாதுகாப்பதற்கு முழுத் தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டு!