WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா ”பெரு
வெடிப்பு”
பொருளாதாரச்
சீர்திருத்தங்களை அறிவிக்கிறது
By Kranti Kumara
18 September 2012
கடன்
தரமதிப்பீட்டு
முகமைகள்,
பெருநிறுவன
ஊடகங்கள்
மற்றும்,
சர்வதேச
மற்றும்
உள்ளூர்
பெரு
வணிகங்களிடம்
இருந்து
வந்த
பெரும்
அழுத்தத்தின்
கீழ்,
இந்தியாவின்
அரசாங்கம்
”பெரு
வெடிப்பு”
(big bang)
பொருளாதாரச்
சீர்திருத்தங்களை
அறிவித்துள்ளது.
உழைக்கும்
மக்களின்
நலன்களைப்
பலியிட்டு
அரசின்
நிதிநிலைப்
பற்றாக்குறையைக்
குறைப்பது,
அந்நிய
முதலீட்டை
ஈர்ப்பது,
மூலதனத்திற்கு
கூடுதல்
இலாபகரமானதாகத்
தோற்றமளிக்கும்
வகையில்
முக்கியமான
பொருளாதாரத்
துறைகளை
மறுஒழுங்கமைப்பு
செய்வதற்கு
உத்வேகமளிப்பது
ஆகிய
நோக்கங்களுடன்
இந்த
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
சென்ற
வியாழனன்று
”வணிகமுத்திரையற்ற”
டீசல்
விலைகளை
14
சதவீதம்
உயர்த்தியும்
இந்தியாவின்
உழைக்கும்
வர்க்கம்
மற்றும்
நடுத்தர
வர்க்கத்தின்
கோடிக்கணக்கான
மக்களுக்கு
பிரதானமான
சமையல்
எரிபொருளாகத்
திகழக்
கூடிய
இயற்கை
எரிவாயு
உருளைகளுக்கான
மானியத்தை
பெருமளவில்
குறைத்தும்
காங்கிரஸ்
கட்சி
தலைமையிலான
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி
அரசாங்கம்
விடுத்த
அறிவிப்புடன்
பொருளாதார
“அதிர்ச்சி
வைத்தியம்”
தொடங்கியது.
இனிமேல்,
ஒரு
குடும்பம்,
அது
சிறிதோ
பெரிதோ,
வருடத்திற்கு
ஆறு
உருளைகளை
மட்டுமே
மானிய
விலையில்,
அதாவது
சந்தை
விலையின்
சுமார்
பாதி
விலையில்,
பெற
முடியும்.
“பெரு
வெடிப்பு
வெள்ளி”
என்று
பிரதமர்
மன்மோகன்
சிங்கினால்
அழைக்கப்பட்ட
மறுநாள்
வெள்ளிக்கிழமையன்று,
அரசாங்கம்,
சில்லரை
வணிகம்,
உள்நாட்டு
விமானப்
போக்குவரத்து,
மற்றும்
ஊடகத்
துறைகளை
இன்னும்
அதிகமான
அந்நிய
முதலீட்டுக்காய்
திறந்து
விடுவதை
அறிவித்தது.
வால்மார்ட்,
கேரிஃபோர்
போன்ற
கடல்கடந்த
பன்னாட்டு
சில்லரை
வணிகத்
துறை
பகாசுர
நிறுவனங்கள்
இப்போது
பல-பிராண்டு
கடைகளின்
உரிமைத்துவத்தில்
51
சதவீதம்
வரை
கொண்டிருக்க
அனுமதிக்கப்படும்.
உள்நாட்டு
விமானப்
போக்குவரத்து
சேவையில்
அயல்நாட்டு
முதலீட்டாளர்கள்
49
சதவீதம்
வரை
முதலீடு
செய்யலாம்,
ஒளிபரப்பு
ஊடகங்களில்
அயல்நாட்டு
ஊடகக்
கூட்டு
நிறுவனங்கள்
தமது
உரிமைத்துவத்தை
இப்போதிருக்கும்
49
சதவீதத்தில்
இருந்து
74
சதவீதம்
வரை
அதிகரித்துக்
கொள்ள
முடியும்.
அத்துடன்
அரசுக்கு-சொந்தமான
பல
பெரிய
நிறுவனங்களின்
பங்குகளில்
150
பில்லியன்
ரூபாய்
(2.7
பில்லியன்
அமெரிக்க
டாலர்)
மதிப்புக்கு
பங்குகளை
விற்கவிருப்பதையும்
அரசாங்கம்
வெள்ளியன்று
அறிவித்தது.
அத்துடன்
வருகின்ற
நாட்களில்
அரசாங்கம்
இன்னும்
கூடுதலான
“சீர்திருத்தங்களை”
அறிவிக்கவிருப்பதாக
நிதி
அமைச்சர்
சிதம்பரம்
திங்களன்று
தெரிவித்தார்.
அவை
என்னவென்று
அவர்
கூறாவிட்டாலும்
கூட,
அரசாங்கச்
செலவினங்களிலான
மேலதிக
வெட்டுகள்,
வணிகங்களுக்கான
புதிய
வரிக்
குறைப்புகள்,
அத்துடன்
முதலீட்டாளர்களுக்கு
ஒரு
கூடுதல்
“வெளிப்படையான”,
பின்னோக்கிச்
செயற்படுத்தவியலாத
வரியமைப்புமுறை
ஆகியவை
இதில்
இருக்கும்
என்று
அவர்
சூசகம்
செய்தார்.
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி
அரசாங்கம்
முதலீட்டாளர்-ஆதரவு
“சீர்திருத்தங்களின்”
ஒரு
புதிய
அலையை
முன்னெடுக்க
வேண்டும்
என்று
பெரு
வணிகங்கள்
வெகு
நாட்களாகக்
கோரி
வருகின்றன.
ஆயினும்,
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியின்
பிரதானக்
கட்சியும்
இந்திய
முதலாளிகளின்
முதன்மை
அரசியல்
கட்சியுமான
காங்கிரஸ்
கட்சி,
இப்போது
வரை
அந்த
சீர்திருத்தங்களை
நெருக்கி
முன்
தள்ளுமளவுக்கு
அரசியல்ரீதியான
வலிமை
கொண்டிருக்கவில்லை.
அரசின்
சொத்துகளை
தள்ளுபடியில்
விற்பது,
மொத்தமாய்
சன்மானம்
போல
அளிப்பது
ஆகியவற்றில்
இருந்து
எழுந்த
ஊழல்
மோசடிகளால்
அரசாங்கம்
தொடர்ந்து
உலுக்கப்பட்டு
வந்திருக்கிறது.
வாக்கு
வங்கி
சரிவுக்கு
அஞ்சி,
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியின்
முக்கியமான
கூட்டணிக்
கட்சிகள்
பலவும்,
மானிய
வெட்டுகள்
மற்றும்
இப்போது
கோடிக்கணக்கான
மக்களுக்கு
சிறு
கடைகளின்
மூலம்
வேலைவாய்ப்பு
அளித்து
வருகின்ற
சில்லரை
வணிகத்
துறையை
உலகளாவிய
விநியோகச்
சங்கிலிகளுடனான
நாடு
கடந்த
பகாசுர
சில்லரை
விற்பனை
நிறுவனங்களுக்குத்
திறந்து
விடுதல்
போன்ற
வெகுஜன
விரோதக்
கொள்கைகளை
அமல்படுத்துவதற்கு
முட்டுக்கட்டை
போட்டு
வந்திருக்கின்றன.
ஆனால்
பொருளாதார
வளர்ச்சி
6
சதவீதத்திற்கும்
கீழாய்
சரிந்து
செல்கின்ற
நிலையிலும்,
2012-13
நிதி
ஆண்டின்
முதல்
காலாண்டில்
அந்நிய
முதலீடு
67
சதவீதம்
வரை
சரிந்த
நிலையிலும்,
ரூபாயின்
மதிப்பு
டாலருக்கு
நிகராக
முன்னெப்போதும்
இருந்திராத
வீழ்ந்த
மதிப்பில்
பரிவர்த்தனையுற்ற
நிலையிலும்,
அத்துடன்
உயர்ந்த
எண்ணெய்
விலைகள்
நிதிநிலைப்
பற்றாக்குறையை
மேல்நோக்கித்
தள்ளுகின்ற
நிலையிலும்,
சர்வதேச
மற்றும்
உள்நாட்டு
பெரு
வணிகங்கள்
அவற்றின்
சார்பாக
முக்கியமான
நடவடிக்கைகளை
எடுப்பதற்கு
அரசாங்கத்தின்
மீது
இடைவிடாத
நெருக்குதலை
அளித்து
வந்திருக்கின்றன.
அரசாங்கத்தின்
“கொள்கை
முடக்கத்திற்காக”
உள்நாட்டு
மற்றும்
சர்வதேச
பெருநிறுவன
ஊடகங்கள்
பலமாதங்களாகவே
அரசாங்கத்தின்
மீது
தாக்குதல்
நடத்தி
வருகின்றன.
டீசல்
விலைகளை
உயர்த்துவதற்கும்
எரிவாயு
உருளைகள்
மீதான
மானியத்தை
வெட்டுவதற்கும்
வியாழனன்று
எடுக்கப்பட்ட
முடிவிற்குக்
காரணம்
மூடி’ஸ்,
ஃபிட்ச்
மற்றும்
பிற
கடன்
தரமதிப்பீட்டு
முகமைகள்
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி
அரசாங்கம்
நிதிநிலைப்
பற்றாக்குறையை
GNP
விகிதத்திற்குக்
குறைக்காத
பட்சத்தில்
இந்தியாவிற்கான
தரமதிப்பீட்டை
’குப்பைப்
பத்திர
நிலை’க்கு
தாங்கள்
குறைக்கவிருப்பதாக
விடுத்த
எச்சரிக்கைகள்
தான்
காரணம்
என்று
இந்திய
ஊடகங்கள்
நேரடியாகவே
கூறியுள்ளன.
அமெரிக்க
பெருவணிகத்தின்
“தலைமைப்
படைத்தளபதி”யான
பராக்
ஒபாமாவும்,
தன்
பங்கிற்கு,
இந்தியா
மேலதிக
முதலீட்டாளர்-ஆதரவு
சீர்திருத்தங்களை,
குறிப்பாக
சில்லரை
வணிகத்
துறையை
வால்மார்ட்
போன்ற
நிறுவனங்களுக்குத்
திறந்து
விடுவதை,
நிறைவேற்ற
வேண்டும்
என்று
பகிரங்கமாக
வலியுறுத்தினார்.
“உலகப்
பொருளாதாரத்தில்
இந்தியாவின்
போட்டித்திறனை
அதிகப்படுத்தும்
பொருட்டு
பொருளாதாரச்
சீர்திருத்தங்களின்
இன்னுமொரு
அலை
வேண்டும்
என....
இந்தியாவில்
ஒருமனதான
சிந்தனை
ஒன்று
பெருகி
வருவதாகத்
தோன்றுகிறது”
என்று
சென்ற
ஜூலையில்
பிடிஐ
செய்தி
நிறுவனத்திற்கு
அளித்த
நேர்காணலில்
கூறிய
ஒபாமா,
“கடினமான
அதே
சமயத்தில்
அத்தியாவசியமான
இந்த
சீர்திருத்தங்களை”
நிறைவேற்றுவதில்
இந்திய
அரசாங்கத்திற்கு
அமெரிக்கா
தனது
முழு
ஆதரவை
வழங்கும்
என்றும்
சேர்த்துக்
கொண்டார்.
எதிர்பார்த்தபடியே
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியின்
கொள்கைக்கு
உள்நாட்டின்
பெரு
வணிகங்களும்
பெருநிறுவன
ஊடகங்களும்
கொண்டாட்டமான
பதிலிறுப்பை
அளித்தன.
“இது
நிச்சயமாக
அந்நிய
முதலீட்டாளர்களிடையே
இந்தியாவின்
பிம்பத்தை
உயர்த்தும்
அத்துடன்
இந்தியா
மீண்டும்
நகரத்
துவங்கி
விட்டது
என்கிற
சமிக்கையை
அளிக்கும்”
என்று
இந்தியாவின்
மிகப்
பிரசித்தமான
தொழிலதிபர்
ரத்தன்
டாட்டா
கூறினார்.
வியாழனன்று,
டீசல்
விலை
அதிகரிப்பு
மற்றும்
சமையல்
எரிவாயு
மானியக்
குறைப்பு
ஆகியவற்றையொட்டி,
இந்தியாவின்
முக்கியமான
பங்குச்
சந்தைக்
குறியீடான
சென்செக்ஸ்
2.5
சதவீதம்
உயர்ந்தது.
நேற்று
சென்செக்ஸ்
ஜூலை
2011க்குப்
பிந்தைய
அதன்
மிக
அதிகப்பட்ச
அளவில்
முடிவுற்றது.
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி
சென்ற
வாரத்தின்
பிற்பகுதியில்
செய்திருக்கும்
அறிவிப்புகளைப்
போற்றிய
வாஷிங்டன்
போஸ்ட்,
“மன்மோகன்
சிங்
2004
ஆம்
ஆண்டில்
பதவியேற்றுக்
கொண்டது
முதலான
காலத்தின்
மிகப்
பெரிய
மற்றும்
இன்னும்
சொன்னால்
மிகக்
கடினமான
பொருளாதாரச்
சீர்திருத்தங்கள்
என்று
இதனைக்
கூறலாம்”
என்றது.
முன்னதாக
இம்மாத
ஆரம்பத்தில்
வந்த
ஒரு
முக்கியமான
வாஷிங்டன்
போஸ்ட்
கட்டுரைக்கு,
இந்திய
அரசாங்கம்,
தன்
பலவீனம்
மற்றும்
அந்நிய
முதலீட்டாளர்களின்
எதிர்மறை
மனோநிலை
குறித்த
தன்
கவலை
ஆகியவற்றின்
ஒரு
சந்தேகமற்ற
அடையாளமாக,
வெளிப்படுத்திய
கடுமையான
சீற்றத்தைக்
கொண்டு
பார்த்தால்
தான்,
வாஷிங்டன்
போஸ்ட்டின்
இந்த
ஆமோதிப்புப்
பாராட்டின்
குறிப்பான
முக்கியத்துவம்
புரியும்.
செப்டம்பர்
5
அன்று
முதல்
பக்கத்தில்
வந்த
ஒரு
கட்டுரையில்
வாஷிங்டன்
போஸ்ட்
பிரதமர்
மன்மோகன்
சிங்கை
“ஆழமாய்
ஊழலடைந்த
ஒரு
அரசாங்கத்திற்குத்
தலைமை
வகிக்கிற
ஒரு
உறுதித்திறமற்ற,
பயனளிக்காத
அதிகாரி”
என்று
விளாசியது.
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி
அரசாங்கத்தின்
திடீர்
கொள்கை
மாற்றத்திற்கு
அமெரிக்க
மற்றும்
அந்நிய
முதலீட்டின்
மற்ற
ஊதுகுழல்கள்
கூடுதல்
முன்னெச்சரிக்கையுடன்
எதிர்வினையாற்றியுள்ளன.
ஸ்டாண்டர்டு
&
பூவர்’ஸ்
இந்த
மாற்றங்களை
வரவேற்றது.
ஆயினும்,
“இந்தக்
கட்டத்தில்
இந்த
நடவடிக்கைகள்
அமலாக்கப்படுமா
இல்லையா
என்பது
இன்னும்
உறுதியாகாத
நிலையில்”
குறைந்தபட்சம்
கொஞ்ச
காலத்திற்கேனும்
இந்தியாவிற்கான
தரமதிப்பீட்டுக்
கண்ணோட்டத்தை
“எதிர்மறை”யாகவே
தொடர்ந்து
காட்டவிருப்பதாக
அது
கூறியது.
இதனிடையே
புதிய
நடவடிக்கைகளுக்கான
“எதிர்ப்பு”
அநேகமாய்
“மிகக்
கடுமையாய்
இருக்கும்.
அப்படியே
அவர்கள்
உறுதிப்பட
நின்றாலும்
கூட,
அந்நிய
முதலீடு
வெள்ளமாய்ப்
பாய்ந்து
விடும்
என்று
சொல்வதற்கில்லை”
என்று
வோல்
ஸ்ட்ரீட்
ஜர்னல்
கூறியுள்ளது.
இந்தியாவை
உலக
முதலாளித்துவச்
சந்தைக்கான
மலிவு-உழைப்பை
உற்பத்தி
செய்கின்ற
நாடாக
மாற்றுவதற்கான
முதலாளி
வர்க்கத்தின்
அபிலாசையை
அமல்படுத்துவதில்
கடந்த
இரண்டு
பத்தாண்டுகளாக
ஒரு
அதிமுக்கியமான
பாத்திரத்தை
ஆற்றி
வந்திருக்கக்
கூடிய
ஸ்ராலினிச
நாடாளுமன்றக்
கட்சிகள்,
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியின்
“பெரு
வெடிப்பு”
சீர்திருத்தங்களை
திரும்பப்
பெறக்
கோரி
ஒருநாள்
அகில-இந்திய
வேலைநிறுத்தத்திற்கு
அழைப்பு
விடுக்க
பல்தரப்பட்ட
பிராந்திய
மற்றும்
சாதி-அடிப்படையிலான
முதலாளித்துவக்
கட்சிகளுடன்
கைகோர்த்துள்ளன.
இந்து
மேலாதிக்கவாதக்
கட்சியும்,
இந்திய
நாடாளுமன்றத்தின்
உத்தியோகப்பூர்வமான
எதிர்க்கட்சியுமான
பாரதிய
ஜனதாக்
கட்சியும்,
விலை
உயர்வாலும்
வால்மார்ட்
மற்றும்
பிற
மிகப்பெரும்
சில்லரை
விற்பனை
நிறுவனங்களின்
நுழைவினால்
பெரும்
சமூக
இடப்பெயர்வைக்
காணக்
கூடிய
அச்சத்தாலும்
தோன்றியிருக்கும்
வெகுஜனக்
கோபத்தை
சுரண்டிக்
கொள்வதற்கு
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறது.
செப்டம்பர்
20
அன்று
ஒரு
பொது
வேலைநிறுத்தத்திற்கான
அழைப்பை
அதுவும்
தனியாக
விடுத்துள்ளது.
காங்கிரஸ்
கட்சியின்
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியைச்
சேர்ந்த
கட்சிகள்
பலவும்
கூட
சென்ற
வாரத்தின்
“பெரு
வெடிப்பை”,
அதிலும்
குறிப்பாக
எரிவாயுக்
கட்டுப்பாடு
மற்றும்
டீசல்
விலை
அதிகரிப்பினை
(இவை
துரிதமாக
உணவுப்
பொருள்
விலையேற்றமாகவும்
பொதுப்
போக்குவரத்து
விலை
அதிகரிப்பாகவும்
மாற்றம்
காணத்தக்கவை)
எதிர்ப்பதாகக்
கூறிக்
கொள்கின்றன.
பல-பிராண்டு
சில்லரை
விற்பனைத்
துறையை
அந்நிய
முதலீட்டுக்குத்
திறந்து
விடும்
காங்கிரஸ்
தலைமையிலான
அரசாங்கத்தின்
திட்டத்தை,
சென்ற
ஆண்டில்,
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணியின்
இரண்டாவது
பெரிய
கட்சியும்
மேற்கு
வங்கத்தை
அடிப்படையாகக்
கொண்டு
செயல்படுவதுமான
திரிணாமூல்
காங்கிரஸ்
கட்சி,
மக்களவையில்
தனது
19
நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
அளித்து
வரும்
ஆதரவை
திரும்பப்
பெறவிருப்பதாக
எச்சரித்ததன்
மூலம்
நிறுத்தி
வைக்கும்படி
செய்தது.
ஆயினும்,
இந்தமுறை,
மன்மோகன்
சிங்கும்
காங்கிரஸ்
கட்சியும்,
சமூகத்தில்
தீப்பற்றவைக்கும்
பெரு
வணிகங்களின்
திட்டநிரலை
முன்செலுத்துவதற்கு
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணிக்குள்ளான
எந்த
எதிர்ப்பையும்
சந்திக்க
தாங்கள்
தீர்மானத்துடன்
உள்ளதை
எடுத்துக்
காட்டியிருக்கின்றனர்.
சென்ற
வெள்ளியன்று
பேசிய
மன்மோகன்
சிங்
அறிவித்தார்:
“பெரு
வெடிப்பு
சீர்திருத்தங்களுக்கான
நேரம்
வந்தாகி
விட்டது.
நாங்கள்
வீழ்வதாய்
இருந்தால்,
போராடி
வீழ்வோம்.” |