WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
அமெரிக்கத் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்கள்
Alex Lantier
14 September 2012
ஒரு
இஸ்லாமிய எதிர்ப்பு ஒளிப்பதிவு காட்சிக்கு மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கத்
தூதரகங்களுக்கு முன் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகள்
மீதான ஒரு பரந்துபட்ட பேரழிவுகரமான தீர்ப்பாகும்.
எகிப்து,
யேமன், லிபியா, ஈராக், துனிசியா, அல்ஜீரியா, ஜோர்டான், ஈரான், மொரோக்கோ, சூடான்
மற்றும் பங்களாதேஷ் என்று குறைந்தப்பட்சம் 11 நாடுகளிலேனும் எதிர்ப்புக்கள்
படர்ந்துள்ளன.
அமெரிக்க
வலதுசாரி வட்டங்களின் அரசியல் ஆத்திரமூட்டலான ஒளிப்பதிவு குறித்த மக்கள் சீற்றம்,
வாஷிங்டனின் மத்தியக் கிழக்குக் கொள்கைகள் மீதான ஆழ்ந்த மக்கள் சீற்றத்தை வெளியே
கொண்டுவந்துள்ளது. துனிசியா மற்றும் எகிப்தில் கடந்த ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற
சர்வாதிகாரங்கள் தொழிலாள வர்க்க எழுச்சிகளால் அகற்றப்பட்டதில் இருந்து, ஒபாமா
நிர்வாகம் இடைவிடாமல் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக வலதுசாரி ஆட்சிகளுக்கு ஆதரவு
கொடுத்து, லிபியா மற்றும் சிரியாவில் குருதிகொட்டும் பினாமிப் போர்களையும்
விரிவாக்கியுள்ளது.
எகிப்தில்
உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் பகல்நேரத் தொழிலாளியான யாசின் மேஹர் சிறந்த
வாழ்க்கை நிலைமைகளைக் கோருவதற்காக அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதி மகம்மத்
முர்சிக்கு எதிராகத் தான் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அல் அஹ்ரமிடம் கூறினார்.
எதிர்ப்புக்களைப் பொலிசார் வன்முறையில் அடக்குவதை அவர் கண்டித்தார்,
“முர்சியின்
ஆட்சியில் இருக்கும் பாதுகாப்புப் படைகள் முபாரக் சகாப்தத்தில் இருந்தவைதான்.
இரண்டும் அமெரிக்காவை பாதுகாக்கின்றன என்பதை நீங்கள் காணலாம்.”
என்றார் அவர்.
யேமனின்
தலைநகரான சானாவில் அமெரிக்கத் தூதரகத்தை தொழிலாளர்களும் இளைஞர்களும் சுற்றி
வளைத்துத் தாக்கினர். இது ஒரு வறிய நாடு. இங்கு ஒரு குருதி கொட்டும் உள்நாட்டுப்
போரில் ஈடுபட்டுள்ள ஊழல் மிகுந்த ஆட்சிக்கு மக்களின் எதிர்ப்புக்களுக்கு இடையே
வாஷிங்டன் ஆதரவு கொடுக்கிறது. அமெரிக்கப் படைகளோ வாடிக்கையாக சிறப்புப் படை
தேடுதல்கள் மற்றும் ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல்களை நாட்டினுள் நடத்துகின்றன.
கடந்த ஆண்டு ஒரு ட்ரோன் தாக்குதலால் அமெரிக்கக் குடிமகன் அன்வார் அல்-அவ்லகியைக்
கொல்லப்பட்டார்.
யேமனின்
ஜனாதிபதி ரப்போ மன்சூர் ஹடி எதிர்ப்புக்களை வாஷிங்டனுடன் யேமன் கொண்டுள்ள உறவுகளை
தகர்க்க முற்படும் ஒரு சதி என்று கண்டித்துள்ளார்.
2003ல்
அமெரிக்காவின் படையெடுப்பிற்கு உட்பட்டு, பின்னர் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் நீடித்த
அமெரிக்க ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கிய
உயிர்களை இழந்த ஈராக்கில் ஆயிரக்கணக்கான சுன்னி மற்றும் ஷியா ஆர்ப்பாட்டக்காரர்கள்
பாக்தாத் மற்றும் பஸ்ராவில் ஒன்றாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
In
Libya, where a coordinated raid on the US consulate in Benghazi killed four US
officials, Washington is reaping what it sowed during last year’s war.
பெங்காசியில் நான்கு அமெரிக்க அதிகாரிகள் கொல்லப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தின் மீதான
ஒருங்கிணைந்த தாக்குதலில், வாஷிங்டன் கடந்த ஆண்டுப் போரில் அது விதைத்தவற்றைத்தான்
இப்பொழுது அறுவடை செய்கிறது.
அமெரிக்க,
ஐரோப்பிய சிறப்புப் படைகளினால் வழிநடப்பட்ட பினாமி சக்திகளுக்கு ஆதரவான
குண்டுவீச்சுத் தாக்குதல் மூலம் தளபதி முயம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்வதை ஒபாமா
நிர்வாகம் ஒழுங்குபடுத்தியது. ஆனால் இச்சக்திகளிடம் லிபியா மற்றும் அதன் எண்ணெய்
நிதி முழுவதின் மீதான கட்டுப்பாட்டையும் அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் விருப்பத்தை
கொண்டிருக்கவில்லை. அதேபோல் சர்வதேச உறவுகளிலும் அமெரிக்காவினால் கண்காணிக்கப்படாத
தடையற்ற செயற்பாடுகளைக் கொடுத்துவிடவில்லை. லிபியாவில் அமெரிக்காவிற்கும் அந்த
நாட்டில் இருக்கும் பினாமிப் படைகளுக்கும் இடையே பிளவுகள் தவிர்க்க முடியாததாகும்.
நாட்டின்
மீதான கட்டுப்பாட்டிற்கு வலதுசாரிப் போராளிகள் ஒரு கூட்டாக இணைந்து போராடும் நிலையை
ஏற்படுத்திய தன் தலையீட்டினால் அமெரிக்கா தோற்றுவித்த சமூகப் பெரும் குழப்பத்திற்கு
இடையே பெங்காசி தூதரகத்தை தாக்கிய குழு தனது நடவடிக்கையை திட்டமிட்டு செயல்படுத்த
முடிந்தது.
சிரியாவிலும் தன் இரத்தக்களரியான பினாமிப் போருக்கான கொள்கைகளைத்தான் வாஷிங்டன்
பொறுப்பற்ற முறையில் தொடர்கிறது. முழுமையான இழிந்த தன்மையில் அது ஒரு லிபிய
கைக்கூலியும், இரகசியமாக தாய்லாந்து சிறை ஒன்றில்
CIA
யினால்
சிலகாலம் அடைக்கப்பட்டிருந்த அப்தெல் ஹகிம் பெல்ஹட்ஜ் போன்ற சக்திகளை ஜனாதிபதி பஷர்
அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிரான பினாமிப் போரில் கட்டவித்துள்ளது.
இது
அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றான அல்குவைதாவிற்கு எதிராகத்தான் போராடுகிறது என்பதில்
உள்ள ஓர்வெல்லிய முறைப் பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒரு
முத்திரைகுத்தும் செயற்பாடாகும். இது அமெரிக்க மக்களை நம்பவைப்பதற்காக எடுக்கப்பட்ட
இழிந்த செயற்பாடு ஆகும். அதாவது மத்திய கிழக்கில் அமெரிக் நலன்கள்
பாதுகாக்கப்படுகின்றன என்பதை குருதி கொட்டி நிரூபிக்கும் செயல் ஆகும். தன்னுடைய
இலக்கு எவர் என்பதை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததை பொறுத்து, அல் குவைதா இலக்காகின்றது
அல்லது அமெரிக்க இராணுவத்தலையீட்டிற்கு ஒரு கருவியாகின்றது.
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போரைப்”
போலவே அமெரிக்கா
“ஜனநாயகத்தை
முன்னெடுத்தல்”
என்று கூறுவதும் ஒரு வார்த்தைஜாலமாகும். ஆனால் உண்மையில் நடப்பது
கொலைகள், அழிவுகள் மற்றும் வறுமை என்று அமெரிக்கப் போர்கள் மற்றும் பிராந்தியத்தை
அது தன் பினாமி ஆட்சிகளுடன் இணைந்து ஒழுங்கமைக்கும் கொள்ளை ஆகியவைதான்.
இப்பகுதியில் மக்கள் எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளதற்கு எதிரான வாஷிங்டனின்
சமீபத்திய விடையிறுப்பில் அது செய்வது பிராந்தியத்தில் தன் இராணுவச் சக்தியைத்
திரட்டி மக்கள் எதிர்ப்பை அச்சுறுத்துவதாகும். அதேபோல் ஒரு புதிய சுற்று
இரத்தக்களரிக்கும் அரங்கு அமைப்பது ஆகும். லிபியக் கடலோரப் பகுதியில் ரோந்து
வருவதற்கு அமெரிக்காவின் பெரும் நாசம் விளைவிக்கும் போர்க் கப்பல்களை அது
அனுப்பியுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பு என்று அது சந்தேகிக்கும் இடங்களில்
நாட்டில் உள்ள இலக்குகள் மீது க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்துகிறது.
சிரியாவுடன்
நடத்தும் பினாமிப் போருக்கு இடையே லெபனானின் ஹெஸ்போல்லா அமைப்பு போன்ற ஈரானுடன்
தொடர்புடையவற்றிற்கு அச்சுறுத்தல்கள் போன்ற அமெரிக்க செயற்பாடுகளின் புதிய
விரிவாக்கம் ஈரானுடன் ஒரு போருக்கான அரங்கத்தையும் அமைக்கிறது. இதைத்தான் இஸ்ரேலிய
ஆட்சியும் அமெரிக்க ஆளும் வட்டத்தின் பெரும் பிரிவுகளும் கோருகின்றன.
சமீபத்தின்
அமெரிக்க உயர்கல்வியாளர் குழுவினர், இராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை
அதிகாரிகள் அடங்கிய குழுவான
Iran Project
அளித்துள்ள அறிக்கை ஒன்று அத்தகைய போரில் எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளைப் பற்றி
எச்சரித்தது. இவற்றுள் ஹார்முஸ் ஜலசந்தி என்னும் மூலோபாயப் பகுதியில் ஏற்படும் போர்
உலக எண்ணெய் வணிகத்தைத் தடைக்கு உட்படுத்துதல், முழு மத்திய கிழக்கையும் சூழக்கூடிய
அமெரிக்காவிற்கு ஆதரவான சக்திகளுக்கும் ஈரானிற்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையேயான
போர், ரஷ்யா மற்றும் சீனா உட்பட மற்ற முக்கிய சக்திகள் பெருகிய முறையில் ஈரானுக்கு
ஆயுதங்கள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.
அமெரிக்க
ஏகாதிபத்தியம்,
அதன் மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிரான எழுச்சி பெறும் தொழிலாள
வர்க்க எதிர்ப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வன்முறையான முறையில்
முகம்கொடுப்பது இன்னும் இரத்தக்களரிகளை ஏற்படுத்தும் பேரழிவுகளுக்குத்தான் அரங்கு
அமைக்கிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் 1930 களில் நடந்ததைப் போல்,
உள்ளூர்ப் போர்களுக்கான தயாரிப்புக்கள் பேரழிவு தரும் விளைவுகளை தரும் ஒரு பொது
மோதலுக்கான தயாரிப்புக்கள் ஆகும். |