WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
சர்டோரியஸ் அறிக்கை: பிரெஞ்சு அரசாங்கம்
PSA
கார்த்தயாரிப்பாளர் நிறுவனத்தின் பரந்த பணிநீக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது
By Pierre Mabut
15 September 2012
செப்டம்பர் 12ம் திகதி வெளியிடப்பட்ட,
கார்த்தயாரிப்பு நிறுவனம்
PSA
Peugeot-Citroen
தொடர்பான சோசலிஸ்ட் கட்சி
(PS)
அரசாங்கத்தின் அறிக்கை,
அழைக்கப்பட்டிருந்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் நிதி அமைச்சகத்தால்
அளிக்கப்பட்டது.
அரசு ஊழியர் எமானுவல் சர்டோரியஸ் தயாரித்த இந்த அறிக்கை,
PSA
இன்
திட்டங்களான ஏராளமான பணிநீக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது; மற்றும் சுருங்கிவரும்
ஐரோப்பிய சந்தைகளில்
PSA
காட்டும் நம்பிக்கை குறித்தும் குறைகூறியுள்ளது. தொழிலாளர்களின் சீற்றத்தைத்
தணிக்கும் வகையிலும், அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ள
Aulnay-sous-Bois
ஆலையையும் பணிநீக்கம் செய்யப்பட உள்ள 8,000 வேலைகளையும்
PS
அரசாங்கம் காப்பாற்றும் என்னும் போலித் தோற்றத்திற்கு ஊக்கம்
அளிக்கும் வகையில் சர்டோரியஸ் அறிக்கைத் தயாரிப்பிற்கு அரசாங்கம் ஊக்கம் அளித்தது.
ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களை பாதுகாக்கும் என்னும் நம்பிக்கைக்கு சர்டோரியஸ்
அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
கார்த்துறைத் தொழிலாளர்களை தேசிய வகையில் பிரிக்க அறிக்கை
முற்படுகிறது; மேலும்
PSA
உடைய திட்டமான ஔல்னேயை மூடுவதையும் குறைகூறியுள்ளது; மாட்ரிட்டில் இருக்கும் ஆலை
மூடப்படலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளது; அந்த ஆலையை சர்டோரியஸ்
“நலிந்த
திறனுடைய, பழைய ஆலை, நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, உதிரிபாகங்கள் அளிக்கும்
நிறுவனங்களில் இருந்து தொலைவில் உள்ளது”
என்று கூறுகிறது; ஆலை மூடலுக்கு இன்னும் சிறந்த ஆலை என்றும் அதை
விவரிக்கிறது.
“2012ல்
தொடந்துகொண்டிருக்கும் விற்பனைச் சரிவு குறித்தும் அறிக்கை விளக்குகிறது.
இந்நிகழ்வுப்போக்கு
PSA
ஐ இன்னும் கூடுதலாகப் பாதிக்கிறது; ஏனெனில் இது மூன்று முக்கிய சந்தைகளின்
பாதிப்பிற்கு, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவற்றிற்கு உட்படுகிறது.
கடைசி இரண்டும் நிதிய நெருக்கடியினால் மேலும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.
மீட்சிக்கான வாய்ப்பைப் பொறுத்தவரை, அது உறுதியற்றது, மிகத் தொலைவில்தான் உள்ளது”.
இதன்பின் அறிக்கை துயரம் நிறைந்த முன்கணிப்பை முரண்படுத்தி,
விற்பனைகள் மீட்சி, எஞ்சியிருக்கும் பணிகளைப் பராமரித்தல் ஆகியவை குறித்து
தொழிலாளர்களை முட்டாள்களாக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கிறது.
போட்டித்தன்மைக்காகவும், தொழிலாளர் செலவுக் குறைப்புக்களுக்காகவும் தொழிலாளர்கள்
பெரும் தியாகம் செய்தபின், இந்த அறிக்கை போலியாக கார்த்தயாரிப்பின் வருங்காலம்
குறித்து சாதகமான சித்திரத்தை வழங்குகிறது.
“PSA
நிர்வாகம் வழங்கிய மீட்பு திட்டம்,
இந்நிறுவனக் குழுவை 2014 இல் ஒரு சீரான செயல்பாடு பணப்புழக்கத்தை மீட்க அனுமதிக்க
வேண்டும். இத்தொடுவானத்தை ஒட்டித்தான் நாம் ஐரோப்பிய கார்த்தாயரிப்புச் சந்தையில்
ஒரு மீட்பு ஏற்படலாம் என நம்புகிறோம்.”
இறுதியில் இந்த இலக்கை ஒட்டி, அறிக்கை
PSA
மற்றொரு பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு கொள்ள வேண்டும் என
வலியுறுத்துகிறது. இது,
ஐக்கிய
கார்த் தொழிலாளர்களின் சங்கத்தின்
(UAW)
உதவியுடன் அமெரிக்காவில் ஊதியங்களைப் பெரிதும் குறைத்து, ஆயிரக்கணக்கான வேலைகளையும்
அகற்றிவிட்ட
ஜெனரல் மோட்டார்ஸுடனான
PSA
இன் இணைப்பைக் குறிக்கிறது.
(See, “French
unions prepare to back cuts in PSA-GM tie-up”)
தொழிற்சங்கங்கள் இழிந்த முறையில் அரசாங்கம் தொனியை
மாற்றியிருப்பது குறித்து அதிர்ச்சி அடைவதாக தெரிவித்தது.
தொழில்துறை மீட்பு அமைச்சர்
Arnaud Montebourg,
ஜூலை மாதம்
PSA
இன் பணிநீக்கத் திட்டங்களை
“
ஏற்க இயலாதவை”
என்று கூறியவர் சர்டோரியஸ் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தலையீட்டில் நம்பிக்கை வைப்பதன்
அடித்தளத்தில்
PSA
இன் திட்டத்திற்கு எதிராக போராட தொழிலாளர்கள் அணிதிரட்டப்படுவதை தள்ளிப்போடுகிறது.
பெருநிறுவனங்களின் போட்டித்தன்மை, தொழிலாளர்கள் பிரிவுச் செலவுகளைக்
குறைப்பதற்கு மிக வெளிப்படையான ஆதரவைக் கொடுக்கும்
CFDT
தலைவர் பிரான்சுவா
சிரேக்,
"அதிகபட்ச பாதிப்பை குறைக்க" வேண்டும் என அறிவித்து
PSA
எதுவும் செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.
CGT
தலைவர் பேர்னார்ட் தீபோ சர்டோரியஸ் அறிக்கைக்கு
Le
Monde
க்குக் கொடுத்துள்ள பேட்டியின் மூலம் முகங்கொடுத்துள்ளார். அதில்
அவர் தொழிற்சங்கங்கள் அக்டோபர் 15ல் செர்காபி நிறுவனம் வெளியிட இருக்கும் அதன்
சொந்த கண்டுபடிப்புக்கள் வரை கருத்துத் தெரிவிக்க காத்திருக்கப் போவதாகத்
தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் இன்னும் அதிகமான வகையில் நிர்வாகக் கட்டமைப்பிற்குள்
ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; இது ஜெனரல்
மோட்டார்ஸில் ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்தின் நிலைப்பாட்டின் எதிரொலி ஆகும்.
CGT (தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு) தொழிற் சங்கம் வெறுமனே பாரிசில் அக்டோபர் 9ம் திகதி ஒரு-நாள்
போராட்டம் நடத்தப்படுவதற்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது.
PSA
யிலும்
ஐரோப்பாவில் மற்ற நிறுவனங்களிலும் வேலைகளை பாதுகாக்க போராடும் தொழிலாளர்கள்,
அரசாங்கம், தொழிற்சங்கங்கள் அல்லது அவற்றின் முன்னாள் இடது ஆதரவாளர்கள் மீதோ
நம்பிக்கை வைக்கலாகாது.
PSA
அமைப்பின்
“மூலோபாயம்”
அதன் முதலீட்டாளர்களுக்கு அது கொடுக்க வேண்டிய கிட்டத்தட்ட
5 பில்லியன்
யூரோக்களைப் பெறுதல் என்று உள்ளதே அன்றி வேலைகளைக் காப்பாற்ற தொழிலாள வர்க்கத்தை
சுயாதீனமாக அரசியல் ரீதியாக அணிதிரட்டுதல் என்பது அல்ல.
Aulnay PSA
ல்
இருக்கும்
CGT
தொழிற்சங்கப் பிரதிநிதி
Jean-Pierre Mercier
தொழிலாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை முற்றிலும் தங்கள் ஆதரவிற்காக அரசாங்கத்தின்
தலையீட்டில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசாங்கம்
“பணிநீக்கங்களை
தடைக்கு உட்படுத்த வேண்டும்”
என்று கூறியுள்ள அவர் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்
“வியர்வை
சிந்தி சட்டை நனையும் வகையில்”
உழைத்து வேலைகளைக் காக்க முயலவேண்டும் என்றார்.
L’Express
இதழிடம் பேசிய
Mercier
ஆலைகள்
மூடல், பணநீக்கம் இவற்றிற்கான திட்டங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக அடையாளம்
காட்டினார். வாடிக்கையான உத்தரவாதமான
“ஒரு
தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட நான் பேச்சு வார்த்தை நடத்த மாட்டேன்”
என்று கூறியபின், அவர் தொடர்ந்தார்:
“நம்மை
விற்கத்தான் வேண்டும் என்ற கட்டாயம் வந்தால், அதிக விலைக்கு விற்க முயல்வேன்; மறு
வேலைக்கான, பயிற்சிக்கான, கௌரவமான பணிநீக்க நிதி இவற்றைப் பெற முயல்வேன்.”
குட்டி முதலாளித்துவ
Lutte Ouvriere (தொழிலாளர்
போராட்டம்)
அமைப்பின் முக்கிய உறுப்பினரான மெர்சியல் 2010ல்
Continental Tires’ Clairoix
ஆலையில்
செயல்படுத்தப்பட்ட
LO
கொள்கையைத்தான் மீண்டும் செய்ய முயல்கிறார். அங்கு 1,200 தொழிலாளர்கள் அற்பத்
தொகையான 50,000€
நீக்குதல் பொதியுடன் வெளியேற்றப்பட்டனர்; அவர்களுடைய போராட்டங்கள்
விற்கப்பட்டன; மிகப்பரந்த பொதுமக்கள் ஆதரவு இருந்து இந்த நிலைதான் மிஞ்சியது.
சர்டோரியஸ் அறிக்கை குறித்து
LO
கருத்து ஏதும்தெரிவிக்கவில்லை;அதன் உறுப்பினர்கள் தீவிரமாக தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின்
PSA
நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் தந்திர உத்திகளில்
ஈடுபட்டிருந்தாலும் கூட.
அனைத்துக் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகள் ஆதரவிலும் தொழிற்சங்கங்கள்
CGT
அணிவகுப்பில் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ஹாலண்ட் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தில்
தேர்ந்தெடுக்கப்பட உதவின. இப்பொழுதும் அவை போலியாக இந்த அரசாங்கம் ஒரு
“இடது”
அரசாங்கம் என்று கூறுகின்றன. |