சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Court ruling on euro bailout fund heralds deeper attacks on working class

ஜேர்மனிய நீதிமன்றத்தின் யூரோப் பிணையெடுப்பு நிதி பற்றிய தீர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த தாக்குதல்களை முன்னறிவிக்கின்றது

By Peter Schwarz
14 September 2012
use this version to print | Send feedback

ஐரோப்பிய உறுதிப்பாட்டுக் கருவிக்கு (ESM) ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத்த வகையில், ஜேர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய தாக்குதல்களுக்கு ஒரு பச்சை விளக்கைக் காட்டியுள்ளது. ESM ஆரம்பிக்கப்படுவது ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைவதற்கு தவிர்க்க முடியாமல் வழிவகுக்கும்.

சமீபத்திய மாதங்களில் நிறுவப்பட்டுள்ள சில அமைப்புகள் மற்றும் கருவிகளில் ESM  ஒன்று ஆகும். இவை அனைத்தும் ஒரே இலக்கிற்காகச் செயல்படுகின்றன: தொழிலாளர்களின் இழப்பில் நிதிய மூலதனத்தை வலுப்படுத்துவது என்பதே அது.

வங்கிகளும், பெரும் வட்டி விகிதங்களில் அதிகம் கடன்பட்டுள்ள நாடுகளுக்குக் கடன் கொடுத்தவை அல்லது ஊகவணிகம் செய்த தனியார் முதலீட்டு நிதியங்களும் எதிர்காலத்தில் அரசாங்க நிதிகள் உட்செலுத்தப்படுவதின் மூலம் மீட்கப்பட முடியும் என்பதை ESM உறுதிப்படுத்தும். இந்த இலக்கை ஒட்டி ESM மூலதன இருப்பாக 700 பில்லியன் யூரோக்களைக் கொண்டுள்ளது.  இந்நிதிக்கு யூரோப்பகுதி அங்கத்துவ நாடுகள் உத்தரவாதமளிக்கின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), கடந்த வாரம் அறிவித்த இரண்டாம்தர சந்தையில் வரம்பற்று அரசாங்கப் பத்திரங்களை வாங்குவது என்பது இன்னும் பல பில்லியன் யூரோக்களை நிதிய நிறுவனங்களின் கருவூலத்திற்கு செலுத்த வகை செய்யும். இறுதியில் இது தொழிலாள வர்க்கத்தால் கொடுக்கப்படும்.

இறுதியில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் புதன் அன்று ஏற்கப்பட்ட ஐரோப்பிய நிதிய உடன்பாடு, கடன்களில் ஒரு வரம்பை நிறுவி அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் அதன் கடுமையான பற்றாக்குறை வரம்புகளை தேர்தல் முடிவுகளையும் மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜனநாயக நெறிகள் இரு விடயங்களில் அடிப்படையாக குறைமதிப்பிற்கு உட்படுகின்றன.

ESM இடம் இருந்து கடன்களை ஏற்கும் நாடுகள் அல்லது ஐரோப்பிய மத்திய வங்கியால் பத்திரங்கள் வாங்கப்பட்ட நாடுகள் முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சர்வாதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இவை எங்கு சென்று முடியும் என்பது கிரேக்கத்தின் உதாரணத்தில் இருந்து நன்கு தெளிவாகும். அங்கு முக்கூட்டு, ஏராளமான பணிநீக்கங்கள், ஓய்வூதியங்கள், ஊதியங்கள் மற்றும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு முறையில் பெரும் வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு ஆணையிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், சிலியில் பினோஷே ஆலும் 1960களின் கடைசி, 1970களின் ஆரம்ப வருடங்களில் கிரேக்கத்தில் ஆட்சியில் இருந்த இராணுவ சர்வாதிகாரங்கள் சுமத்திய நடவடிக்கையையும் விட அதிகம் சென்றுள்ளன.

கடனை வாங்கியுள்ள அரசுகளின் பாராளுமன்றத்தின் இறையாண்மை உரிமையானவரவு-செலவுத் திட்ட கொள்கையை தீர்மானிப்பது என்பது பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதற்குப் பதிலாக ஜனநாயக முறையில் பொறுப்பு ஏற்காத ESM, ECB போன்றவை நிதிய உடன்பாட்டின் மூலம் மிகப் பெரிய நிதிகள் பற்றி முடிவெடுக்கும். இவை கடுமையான பல சமூகநலச் செலவின குறைப்புக்கள் மூலமாக மிச்சம்பிடிக்கப்பட முடியும்.

இவை அனைத்தும் யூரோவைக் காப்பாற்றுதல் என்ற பெயரில் செய்யப்படுகின்றன. யூரோ மிகத் தெளிவாக ஐரோப்பாவைக் கொள்ளையடிக்கும் நிதிய மூலதனத்தின் ஒரு கருவியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகளும் செய்தியாளர்களும் ஐக்கியம்பற்றி குறிப்பிடுவது அபூர்வம் என்று ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக அவர்கள் வங்கிகளின் ஒன்றியம், மற்றும் நிதிய ஒன்றியம் பற்றித்தான் பேசுகின்றனர். இதனால் அவர்கள் உண்மையை வெளியிட்டுவிட்டனர். அவர்கள் ஐரோப்பிய மக்களின் ஐக்கியத்திற்கு ஆதரவாக இல்லை. முழு ஐரோப்பிய ஒருங்கிணைப்புத் திட்டமும் கண்டத்தை வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளின் ஆணைகளுக்கு மிருகத்தனமாக உட்படுத்துவது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.

யூரோ தப்பிப் பிழைக்குமா என்பது பிரச்சினைக்கு உரியதுதான். பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸில் இருந்து ஆணையிடப்படும் சிக்கனக் கொள்கைகள் மையத்தில் இருந்து பிரிந்து செல்லும் உணர்வுகளை அதிகப்படுத்தி நிதிய ஒன்றியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இவை ஐரோப்பாவை தேசிய மற்றும் சமூக வழிகளில் பிரிக்கின்றன. மிகப் பெரிய கடன்பட்டுள்ள நாடுகள் மிக அதிக வட்டி விகிதங்களைக் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு, இன்னும் ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கன நடவடிக்கைகள் ஆணைகள் மூலம் முன்கூட்டிய மந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்நாடுகளில் இருக்கும் குறைந்த ஊதியங்கள் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் குறைக்கும் ஒரு நெம்புகோலாக பயன்படுகின்றன.

வேர்சாயில்ஸ் உடன்படிக்கையில் விளைவாக, எஃகு பெருமுதலாளிகள் மற்றும் வங்கிகளின் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் சான்ஸ்லர் ப்ரூனிங்கின் கடுமையான சிக்கனக் கொள்கைகள் ஆகியவை இணைந்து கண்டத்தை பெரும் பள்ளத்தில் தள்ளிய 1939 களின் ஐரோப்பாவின் நிலைமைகளை ஞாபகப்படுத்துகின்றன.

ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாது இருந்திருக்கலாம் ஆனால் பெரும்பான்மையான மக்களைப் பற்றி அவ்வாறு கூறிவிட முடியாது. அப்பேரழிவுத் தன்மை மீண்டும் வருவதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பின் பிற அடையாளங்கள் பெருகி வருகின்றன. வன்முறை வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என ஆகிவிட்டன.

இப்போராட்டங்களை தடைக்குட்படுத்துவது ஒரு செயல்படக்கூடிய முன்னோக்கு இல்லாததுதான். தொழிற்சங்கங்கள், போராட்டங்களைச் சேதப்படுத்தவும் அவற்றை பயனற்ற எதிர்ப்புக்களாக மட்டுப்படுத்தவும் தங்களால் இயன்றவற்றை செய்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்துவது சாத்தியம், செழுமை அடையப்பட முடியும், இதன் வடிவமைப்பிற்குள் சமூக நீதி ஏற்படும் என்னும் போலித் தோற்றத்தை வளர்க்கும் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன.

பிரான்ஸில் சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹாலண்ட் ஜனாதிபதித் தேர்தலில் இத்தகைய உறுதிமொழிகளைக் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். ஆனால் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குள் அவர் அவருக்கு முன் பதவியில் இருந்த பழைமைவாதிகளின் அடிகளைப் பின்பற்றி, கடுமையான சிக்கனத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர் சார்க்கோசியின் இராணுவவாதம், இனவெறிக் கொள்கைகளையும் தொடர்கிறார்.

நெதர்லாந்தைப் பொறுத்தவரையிலும் இதுவேதான் உண்மை. அங்கு சமூக ஜனநாயகக் கட்சியின் Diederik Samsom பிரெஞ்சு ஜனாதிபதியின் வழியைப் போலவே ஒரு பிரச்சாரத்தை நடத்தியுள்ளார். அவர் கூட்டணியில் வலதுசாரி புதிய தாராளவாதிகள் மார்க் ருட்டேயின் தலைமையில் புதிய அரசாங்கத்தில் நுழையத் தயாராக உள்ளார். ருட்டேயின் முந்தைய அமைச்சரவை கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கான அதன் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதிய மூலதனத்தின் அதிகாரங்களை பேச்சளவில் குறைகூறி நடைமுறையில் அவற்றுடன் இணைந்து கொள்ளும் போலி இடது கட்சிகளின் பங்கு இன்னும் அதிக அளவில் தீமை பயப்பது ஆகும்.

இந்த ஆண்டு கிரேக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரிசா (தீவிரவாத இடது கூட்டணி-SYRIZA) முக்கூட்டின் சிக்கனத் திட்டம் பற்றி மறு பேச்சுக்களை நடத்தும் என உறுதியளித்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதியுடன் அது தன்னைப் பிணைத்துக் கொண்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் வங்கிகளுக்கும் நியாயமான சிக்கன நடவடிக்கைக்கான சக்தி தான் என்று காட்டிக் கொண்டு, அதிகாரத்திற்கு வந்தால் கிரேக்கத்தின் கடன்களை வங்கிகளுக்கு திருப்பியளிக்கும் என்றும் கூறியது.

ஜேர்மனியில் இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவு ESM ற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கையில் பங்கு கொண்டது; இந்த தந்திரோபாயம் அதன் ஆதரவாளர்களையே ஏமாற்றும் நோக்கத்தைக் கொண்டது. இப்பொழுது இதே கட்சி நீதிபதிகள் ESM ற்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத்துள்ளதை ஜனநாயகத்தின் வெற்றி என்று பாராட்டுகிறது.

தொழிலாள வர்க்கத்தினரின் நலன்களையொட்டி ஐரோப்பிய ஒன்றியம் சீர்திருத்தப்பட முடியாதது ஆகும். இது சக்தி வாய்ந்த வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவை தங்கள் நலன்களுக்கு ஏற்ப ஐரோப்பாவை அடிபணியச் செய்வதற்கான முக்கியமான கருவியாகும். அதன் அதிகாரத்தை முறிக்காமல் ஒரு சமூக நலன் அல்லது ஜனநாயக உரிமையைக் கூட பாதுகாத்தல் என்பது இயலாத செயல் ஆகும்.

இதற்கு பழைய கட்சிகள், தொழிற்சங்கங்கள் இவற்றுடன் முறித்துக் கொண்டு, ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக அணிதிரட்டுவது முக்கியமாகும்.

வங்கிகள், தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் பெருநிறுவனங்கள் கைப்பற்றப்பட்டு அவற்றின் பெரும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பெருநிறுவனங்களின் இலாப நோக்கங்களுக்காக என்பதற்கு பதிலாக சமூகத்தின் தேவைகள் நிறைவேற்றப்படும் வகையில் பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் அரசாங்கங்கள் அமைக்கப்பட வேண்டும்.