சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

9/11 anniversary: The terror pretext in tatters

9/11 நினைவுதினம்: பயங்கரவாதப் போலிக்காரணம் கந்தலாகிக் கிடக்கிறது

Bill Van Auken
12 September 2012
use this version to print | Send feedback

செப்டம்பர் 11 ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களின் 11வது ஆண்டு நினைவு நாள் செவ்வாயன்று மிகக்குறைந்த உத்தியோகபூர்வ நினைவுடன் கழிந்தது. அன்றைய தினம் நடந்த துன்பியலான மரணங்கள் வாஷிங்டனின் முடிவிலா போர்களுக்கு போலிக்காரணமாக பயன்படுத்தும் வெற்றுமுயற்சிகளாக அதிகரித்துவிட்டன.

நியூ யோர்க் நகரத்தில் இரட்டைக் கோபுரங்கள் சரிந்ததில் 2,700 பேர் மரணமுற்றனர், இங்கு அரசியல்வாதிகள் எவரும் பேசவில்லை. நினைவுக் கூட்டத்தில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். அங்கு நீண்ட இறந்தவர்கள் பட்டியல் வாசிக்கப்பட்டு, இழக்கப்பட்டுவிட்ட பெற்றோர்கள், குழந்தைகள், சகோதர சகோதரிகள் மற்றும் கணவன்/மனைவியர் நினைவிற்கு கொண்டுவரப்பட்டனர்.

வாஷிங்டனில், பென்டகனுக்கு வெளியே 125 பேர் இறந்த இடத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவும் வெற்றுத்தன, பாசாங்குத்தன உரைகளை நிகழ்த்தினர். 9/11 தாக்குதல்களின் பாதிப்பாளர்களை ஒபாமா புகழ்ந்து அவர்களின் தியாகத்தால் அவர்கள் அமெரிக்கா இன்றுள்ள நிலைக்கு உதவியுள்ளனர். இந்த அமெரிக்கா முன்னிலும் வலுவாக வெளிப்பட்டுள்ளது என்று கூறினார்.

எந்த அளவீட்டில் அமெரிக்கா வலுவாகியுள்ளது? அவருடைய உரையின் வேறுபகுதியில் ஒபாமா, வரலாற்று நூல்கள் எழுதப்படுகையில் 9/11 இன் மரபியம் இந்நாடு அதன் பின்னர் பாதுகாப்பாகவும் கூடுதலான ஒன்றுபட்ட நிலையிலும், முன்னைக்காட்டிலும் விளங்கியது எனக்கூறப்படும் என்றார்.

இவருடைய அமெரிக்கா, வெற்று வார்த்தைகளில் உருவாக்கப்படுவதாகத்தான் இருக்க முடியும். ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை கிடைக்காத நிலையில், இவர் பிரதிபலிக்கும் நிதியத் தன்னலக்குழுவிற்கும் மக்களின் பெரும்பாலானவர்களை கொண்ட தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிளவு, இந்த அளவிற்கு எப்பொழுதும் இல்லை என்ற நிலையில்தான் நாட்டின் உண்மையான நிலை உள்ளது.

வரலாற்று நூல்களை பொறுத்தவரை, அவற்றின் முதல் பணி செப்டம்பர் 11 நிகழ்வுகள் என்னவென்பதை விளக்குவதுதான். 10 ஆண்டு காலத்திற்கு பின்பும்கூட அவை புதிரிலும் மூடிமறைப்பதிலும் ஆழ்ந்துள்ளன. அமெரிக்க வரலாற்றின் உளவுத்துறையிலேயே மிகப் பேரழிவான தோல்வி என்று வெளிப்படையாக இருக்கும் நிலையில், அமெரிக்க உளவுத்துறை/இராணுவக் அமைப்பு அல்லது புஷ் மற்றும் கிளின்டன் நிர்வாகங்களில் எவரும் இதற்குப் பொறுப்பு ஏற்க வைக்கப்படவில்லை.

உத்தியோகபூர்வக் கதை, அல் குவைதாவைச் சேர்ந்த 19 அரபு உறுப்பினர்கள் அமெரிக்காவினுள் நுழைய முடிந்தது, பல மாங்கள் தங்கியிருந்து, சிலர் விமானிகளாக சிறந்த பயிற்சியைப் பெற்றனர் மற்றும் வாஷிங்டனின் பரந்த உளவுத்துறை அமைப்பில் எவருக்கும் அவர்கள் என்ன செய்ய உள்ளனர் என்பது பற்றி ஊகம் இல்லை என்பதுதான். இது மிகவும் நம்பகத்தன்மை இல்லாத விளக்கமாகத்தான் உள்ளது. இது இந்நபர்களில் பலர் கண்காணிப்பில் இருந்தனர், பலவித எச்சரிக்கைகள் புஷ் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற சான்றுகளினால் முரணாகின்றது.

9/11 பாதிப்பாளர்களின் தியாகம் அமெரிக்காவை இன்னும் வலுவாகச் செய்துள்ளது என்னும் ஒபாமாவின் குறிப்பு பழைய செய்தி ஒன்றத் தெரிவிக்கிறது. வாழ்க்கையையே குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக அர்ப்பணிக்கும்போது தியாகம் என்பது பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு சிலரிடம் ஒரு உணர்மையுடையதாக இருந்தது என்பதைக் குறிக்கும். ஜனாதிபதி தேர்ந்தெடுத்த சொற்கள் அவர் நினைத்ததைவிட அதிகமாகவே கூறக்கூடும்.

உலக வணிக மையத்திற்கோ பென்டகனுக்கோ செப்டம்பர் 11, 2001 காலையில் அவர்கள் இறக்கப்போகின்றனர் என்ற சிந்தனையுடன் எவரும் செல்லவில்லை. அவர்கள் இறப்பு, ஒரு தசாப்த போர்களைத் தூண்டும், அதனால் மில்லியன் ஈராக்கியர்கள் நூறாயிரக்கணக்கான ஆப்கானியர்கள், 6,600 அமெரிக்கத் துருப்புகளின் உயிர்களைப் பறிக்கும் என்ற நினைப்புடன் செல்லவில்லை.

ஆயினும்கூட, அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவம், உளவுத்துறைப் பிரிவுகளின் உயர்மட்டத்தினர் இத்தாக்குதல்களை பயன்படுத்தி முன்பே திட்டமிட்டிருந்த இராணுவ ஆக்கிரமிப்புகளை செயல்படுத்த நேரத்தை வீணடிக்கவில்லை. 9/11 க் காட்டி ஆக்கிரமிப்புப் போர்களை நியாயப்படுத்தினர். இப்போர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார சரிவை ஈடுகட்டும் வகையில் பாரசீக வளைகுடாவில் இருந்து மத்திய ஆசியா வரை எரிசக்தி செழிப்புப் பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்தில் நடத்தப்பட்டன.

இப்போர்கள் அல்குவைதாவைத் தோற்கடிக்க நடத்தப்படுகின்றன என்ற கூற்று நம்பத்தகுந்ததாகவில்லை. அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்ததற்குக் காரணம் அல் குவைதாவின் விரோதியான சதாம் ஹுசைனின் ஆட்சியை அகற்றுவதற்கு. இப்போர் பேரழிவு ஆயுதங்கள் குறித்துப் பல பொய்கள் இட்டுக் கட்டப்பட்டபின் நடந்தது. அதேபோல் அங்கு இல்லாத பயங்கரவாத தொடர்புகளை அகற்றவதற்கும் எனக் கூறப்பட்டது. ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை மும்மடங்கு அதிகரித்தார். அதுவும் அமெரிக்க, இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அந்நாட்டில் அல்குவைதாவின் பிரசன்னம் கிட்டத்தட்ட இல்லை என்று ஒப்புக் கொண்டபின்னரும்கூட.

9/11 ஐக் காட்டி கடந்த தசாப்தத்தில் நடத்தப்பட்ட குற்றங்களை நியாயப்படுத்துவதும் மற்றும் இனி வரவிருக்கும் குற்றங்களை நியாயப்படுத்துவது என்பது பெருகிய முறையில் ஏற்கமுடியாமல்தான் உள்ளது. அமெரிக்க மக்கள் இப்போர்கள் பொய்களை அடித்தளமாகக் கொண்டவை என்பதை நன்கு அறிவர். அதைத்தவிரவும் இதனால் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களும் அதே பொய்களைத்தான் தளம் கொண்டவை என்பதையும் அறிவர். எங்கும் படர்ந்திருக்கும் பயங்கரவாதம் எனக் கூறப்படுவது குறித்து மக்களை இடைவிடாமல் அச்சுறுத்தினாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் அமெரிக்க பெருநிறுவன, நிதிய ஆட்சியாளர்களின் பெரிய அச்சமான பொருளாதார, சமூக அச்சுறுத்தல்களை பற்றித்தான் கொண்டுள்ளனர்.

இன்று அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய செயற்பாடுகள் அல் குவைதாவை நசுக்குவதை நோக்கமாக கொண்டுள்ளவை என்ற போலித்தனம் அபத்தம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த ஆண்டு லிபியாவில் ஆட்சிமாற்றத்திற்காக நடத்தப்பட்ட போருக்கும், தற்போது சிரியாவில் அதே போன்ற விளைவுகளைக் கொண்டுவருவதற்காக நடத்தப்படும் செயல்களிலும், வாஷிங்டன் அல் குவைதா உடன் பிணைப்புள்ள சக்திகளுக்கு நிதியுதவி, பயிற்சிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்துள்ளது. இக்கூறுபாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மதசார்பற்ற அரபு அரசாங்கங்களை கவிழ்க்கவும் ஈரானுக்கு எதிரான இன்னும் குருதிகொட்டும் போருக்காகவும் பாதை அமைக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சாகச செயல்களில் ஒரு முழு வட்டத்தை அடைந்துவிட்டது. CIA க்கும் அல்குவைதாவிற்கும் இடையே இருந்த உறவுகள் மறுபடி தோற்றுவிக்கப்பட்டுள்ளன; முன்பு அல்குவைதாதான் 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான போரை நடத்தத் தோற்றுவிக்கப்பட்டது.

பாதுகாப்பு மந்திரி பானெட்டா தடையற்ற போரையும் இராணுவ வாதத்தையும் புகழ்ந்து செவ்வாயன்று கூறிய கருத்துக்கள் 9/11 எவருக்கு எதிராகவும், எங்கும் போருக்கான அனைத்து நோக்கத்தைக் கொண்ட நியாயப்படுத்துதலுக்கு உதவுவதைத்தான் பிரதிபலித்தது.

 “செப்டம்பர் 11 நம் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கப் போராடும் கடுமையான உறுதிப்பாட்டிற்கு ஊக்கம் கொடுத்துள்ளது என்று அவர் அறிவித்தார். யேமன், சோமாலியா மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க தொடர்ந்து இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபடும் என்று உறுதியளித்த அவர் தொடர்ந்து கூறினார்: நம் விரோதிகள் எங்கு சென்றாலும், எங்கு மறைந்து இருந்தாலும், எங்கு புகலிடம் நாட விரும்பினாலும், நாம் அவர்களைத் தொடர்வோம், போராடுவோம்அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நாம் உறுதி செய்யும் வரை நிறுத்த மாட்டோம். என்றார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாரக் ஒபாமா போர் எதிர்ப்பு உணர்வு அலை, புஷ் நிர்வாகம் நடத்திய குற்றங்கள் குறித்த மக்கள் இகழ்வுணர்வு என்ற அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்றார். இன்று அவர் அவருக்கு முன் பதவியில் இருந்தவருடைய போர்களும் குற்றங்களும்தான் அமெரிக்காவை வலுவாக்கியுள்ளது, கூடுதலாக ஒன்றுபடுத்தியுள்ளது என்று உறுதிப்படுத்துவதுடன் தன்னுடைய சொந்தக் கொடூர போர்களைப் புதிதாகக் கட்டவிழ்த்து விடுவதாகவும் கூறுகிறார்.

தங்கள் இராணுவவாதத்திற்கான தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையைக் காட்டும் தேர்தலை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளவில்லை. புதிய இராணுவத் தலையீடுகள் குறித்த அச்சுறுத்தல், இறுதியாக மற்றொரு உலகப் போர் என்பதுதான் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவற்றின் பிற்போக்குத்தன கொள்கைகளில் இருந்து வெளிவந்துள்ளன. இது 1930களின் பெருமந்த நிலையை தொடர்ந்து மிக ஆழமாகியுள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் தவிர்க்க முடியாத விளைவுதான்.

இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான வெற்றிகரப் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் இதன் மூலமான முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிராக சுயாதீனமாக அரசியல் அணிதிரள்வை மேற்கொள்ளுதல் தேவைப்படுகிறது. இந்த முன்னோக்கிற்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி, அதன் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெரி வைட் மற்றும் பிலிஸ் ஷேரர் ஆகியோர் போராடுகின்றனர்.