WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஆசியப் பயணத்தின்போது கிளின்டன் சீனாவுடனான அழுத்தங்களை தூண்டுகிறார்
Peter Symonds
11 September 2012
அமெரிக்க
வெளிவிவகாரச்
செயலர் ஹில்லாரி கிளின்டன் அவருடைய சமீபத்திய ஆசிய பயணத்தை
பிராந்தியம் முழுவதும் உள்ள பல கடல்வழிப்பாதைகள் பற்றிய அழுத்தங்கள் குறைக்கப்பட
வேண்டும் என்ற ஒரு இழிந்த அழைப்புடன் முடித்தார். ஒரு நிதானமான முறையீடு என்பதற்கு
முற்றிலும் மாறாக, கிளின்டன் அவருடைய 10 நாள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும்
சீனாவை குழிபறித்து, தனிமைப்படுத்துதலுக்கும், குறிப்பாக தென் சீனக் கடலில்
வேண்டுமென்றே மோதல்களை தூண்டிவிடுவதற்கும், ஒபாமா நிர்வாகத்தின் முயற்சிகளை
அதிகப்படுத்தும் வகையில் ஈடுபட்டார்.
கடந்த வார இறுதியில் விளாடிவொஸ்ரொக்கில்
(Vladivostok)
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கூட்டத்தில் நிருபர்களிடம் பேசிய கிளின்டன்
பின்வருமாறு அறிவித்தார்:
“நாம்
தென்சீனக் கடல் பற்றி அல்லது கிழக்குச் சீனக் கடல் பற்றிப் பேசினாலும், என் தகவல்
அனைவருக்கும் ஒன்றுதான். அனைவருக்கும் அழுத்தங்களைக் குறைக்க முயற்சிகளை
மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது.”
ஆசிய நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து நிலப்பகுதி குறித்த
முரண்பாடுகளை இன்னும் தீவிரமான பிரச்சினைகளை பரவிவிடமால் உறுதிப்படுத்த இருப்பதாக
அவர் உறுதியளித்தார்.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா இதற்கு முற்றிலும்
மாறாகத்தான் தெளிவாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில்
முன்னிலை எனப்படும் நிலைப்பாட்டிற்கு கிளின்டன் தான் இராஜதந்திர செயற்பாடுகளை
முன்னின்று நடத்துகிறார். 2009 இன் நடுவே ஆசியான்
(ASEAN)
மந்திரிகள் கூட்டத்தில் அவர் அமெரிக்கா
“தென்
கிழக்கு ஆசியாவிற்கு மீண்டும் வந்துவிட்டது”
என்றார். இதற்கு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், கிளின்டன் ஆத்திரமூட்டும் வகையில்
வாஷிங்டனுக்கு தென் சீனக் கடல் பகுதியில்
“சுதந்திரமான
கப்பல் போக்குவரத்தை நடத்துவதில்”
ஒரு
தேசிய நலன் உள்ளது என்றார். முன்பு ஒரு பிராந்திய பிரச்சினையாக இருந்ததில் இவர்
தலையிட்டுள்ளது சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீயசியை கிளின்டனின் கருத்துக்கள்
“கிட்டத்தட்ட
சீனா மீதான தாக்குதல்”
என்று கூற வைத்தது.
அவருடைய சமீபத்திய பயணத்தின்போது, கிளின்டன் பலமுறையும் ஆசியான்
நாடுகளை ஒன்றுபட்டு சீனாவிடம் தென் சீனக் கடலில் மோதல்களை கட்டுப்படுத்துவதற்காக
செயல்படுத்தப்படக்கூடிய
“ஒரு
வழிகாட்டி நெறிக்கு”
இணங்க அழுத்தும் கொடுக்குமாறு கோரினார். அமெரிக்காவின் திட்டம் சீனா அதன்
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான கடற்பாதை பூசல்கள் இருதரப்பினாலும் தீர்க்கப்பட
வேண்டும் என்பதற்கு முற்றிலும் எதிரிடையானது. பெய்ஜிங்கில் கிளின்டன் மீண்டும்
இப்பிரச்சினையை எழுப்பி அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி ஊடகத்தில் விரோதமிக்க
கருத்துக்களைத் தூண்டினார்.
The People’s Daily
அமெரிக்கா
“தன்
ஆதாயத்தை நாடுவதற்காக வேறுபாடுகளுக்கான விதைகளை தூவ முயல்கிறது”
எனக் குற்றம் சாட்டியது.
ஒபாமா நிர்வாகம் பல மோதல்களின் தான்
“நடுநிலையில்”
இருப்பதாக அறிவித்துள்ளபோதிலும்கூட, அதன் தலையீடு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை
தங்கள் கடற்பிரிவு உரிமைகளை இன்னும் ஆக்கிரோஷமாக இயக்க ஊக்கம் கொடுத்துள்ளது.
வாஷிங்டனின்
“நடுநிலைமை”
என்பது வெறும் பூசிமெழுகல்தான். கடந்த நவம்பர் மாதம் மணிலாவில்
கிளின்டன் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றின் மேல் தளத்தில் நின்று அமெரிக்காவிற்கும்
பிலிப்பைன்ஸிற்கும் இடையே உள்ள வலுவான இராணுவ உறவுகளை மறு உறுதிப்படுத்தி, தென்
சீனக் கடல் குறித்து அதற்கு புதிதாகப் பெயரிட்டுள்ள உள்ளுர் பெயரான மேற்கு
பிலிப்பைன் கடல் என்று ஆத்திரமூட்டும் வகையில் பேசினார்.
இப்பிராந்தியத்தில் அதன் இராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக
குறிப்பாக அதன் கடற்படைக்கு உதவியளிக்கும் வகையில் வாஷிங்டன் பாதுகாப்பு உதவியை
பிலிப்பைன்ஸிற்கு அளிக்கிறது. இரு நாடுகளும் புதிய தளங்கள் பற்றியும்
விவாதிக்கின்றன. இவை கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ஒபாமா கான்பெராவிற்கு விஜயம்
செய்திருந்தபோது கையெழுத்திட்ட உடன்பாட்டின் தன்மைக்கு ஒத்திருக்கிறது. அதில்
டார்வினில் கடற்படைப் பிரிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதும், ஆஸ்திரேலிய வான் மற்றும்
கடல் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவது விரிவாக்கப்படுவதும் இருந்தன. பென்டகன்
சிங்கப்பூரிலும் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதுடன், தாய்லாந்து, வியட்நாம்
ஆகியவற்றிலும் தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வாய்ப்பை நாடுகிறது.
இந்த நடவடிக்கைகள் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய கப்பல் பாதைகள் மீது அமெரிக்க
மேலாதிக்கத்தை உறுதி செய்தல் என்னும் பரந்த மூலோபாயத்தின் ஒரு பாகமாகும்.
இப்பாதைகளைத்தான் சீனா தன் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை மத்திய கிழக்கு
மற்றும் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நம்பியுள்ளது.
தென்சீனக் கடல் அமெரிக்கா வேண்டுமேன்றே எரியூட்டும் ஆபத்தான ஒரே
பகுதி அல்ல. ஒபாமா நிர்வாகம் ஜப்பான் அதன் சீனாவிற்கு எதிரான உரிமை கோரல்களை
வலுவாகச் செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் பிரச்சனைக்குட்பட்ட சென்காகு
தீவுகள் (சீனாவில் டையோயு என அறியப்பட்டுள்ளது) மீதான அழுத்தங்கள்
அதிகரித்துவிட்டன. ஆகஸ்ட் 2010ல் ஜப்பான் சீன மீன்பிடிக்கும் படகு ஒன்றின்
காப்டனைக் காவலில் வைத்தபோது பெரிய இராஜதந்திர பூசல் உருவாகியது. அப்படகு ஒரு
ஜப்பானிய கடலோரக் காவல் படகுடன் மோதியதாகக் கூறப்பட்டது. ஜப்பானின் வெளியுறவு
மந்திரியுடம் கிளின்டன் அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையீன்கீழ் சீனாவுடன்
போர் ஏற்பட்டால் அமெரிக்கா எப்படியும் ஜப்பானின் உதவிக்கு வரும் என்றார்.
இப்பிரச்சினை கடந்த மாதம் மீண்டும் ஹாங்காங் தளமுடைய சீனத்
தேசியவாதிகள் சென்காகு/டையோயு தீவுகளில் இறங்கியபோது வெடித்தது. இது வலதுசாரி
ஜப்பானிய தீவிரவாதிகளையும் அவ்வாறு செய்ய வைத்தது. ஜப்பானின் பிரதம மந்திரி
யோஷிஹிகோ நோடா சீனாவுடனான மோதலை அதிகப்படுத்தும் வகையில் தன் அரசாங்கம் ஜப்பானின்
கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் தீவுகளை அவற்றின் தனி உரிமையாளரிடம் இருந்து
வாங்கும் என்று ஆத்திரமூட்டிவிடும் வகையில் கூறினார். இந்த நடவடிக்கை
பெய்ஜிங்கினால் கண்டனத்திற்கு உட்பட்டது. நோடாவும் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும்
முறைசாராக்கூட்டம் ஒன்றை ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டு
(APEC)
காலத்தில் நடத்தினர். ஆனால் தீர்வு ஏதும் ஏற்படவில்லை.
இந்த மோதல்களை நிதானப்படுத்த கிளின்டன் எந்த முயற்சியையும்
மேற்கொள்ளவில்லை என்பதில் வியப்பு ஏதும் இல்லை. கிளின்டன் அக்கறை கொண்டிருந்த
அழுத்தங்களைக் குறைத்தல் ஒன்றே ஒன்று வடகிழக்கு ஆசியாவில் அதன் நட்பு நாடுகளான
ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் இடையே மோதல் தோன்றியபோதுதான். நோடாவையும் தென்
கொரிய ஜனாதிபதி லீ மையுங் பாக்கையும்
“ஆத்திரத்தை
குறைத்து ஒருங்கிணைந்து உழைக்குமாறு”
வலியுறுத்தினார்: அப்பொழுதுதான் அவர்களுடைய மோக்டோ/தகேஷிமா தீவுகள்
குறித்த பூசல்கள் தீர்க்கப்படமுடியும் என்றார். கடந்த மாதம் லீ வேண்டுமென்றே
மோதல்களை அதிகரிக்கும் வகையில் இத்தீவுகள் ஒன்றிற்கு ஜனாதிபதி விஜயத்தை
மேற்கொண்டார்.
லீ, நோடா இருவருமே இப்பிரச்சினையைப் பயன்படுத்தி உள்நாட்டில் தேசிய
உணர்வைத் தூண்டினர். இதையொட்டி தங்கள் மதிப்பிழந்த உள்நாட்டுக் கொள்கைகளுக்கு
ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்களை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் சியோலுக்கும்
டோக்கியோவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் வாஷிங்டனின் முயற்சியான அதன் இரு
நட்பு நாடுகளும் இன்னும் நெருக்கமாக சீனாவை அடக்க வேண்டும் என்னும் அமெரிக்க
முயற்சிகளுக்கு எதிராயிற்று. இரு நாடுகளையும் உளவுத்துறைப் பகிர்வு உடன்பாட்டில்
கையெழுத்திட அமெரிக்கா ஊக்கம் அளித்தது, ஆனால் அவருடைய நாட்டில் தேசயவாத
எதிர்ப்புக்கள் தோன்றிய நிலையில், லீ ஜூலை மாதம் அந்த உடன்படிக்கையைக் கைவிட்டார்.
கிளின்டன் லீ மற்றும் நோடாவை விளாடிவொஸ்ரொக்கில் சந்தித்து உறவுகளைச் சீரமைக்க
முயன்றார்.
கிளின்டனின் சமீபத்திய ஆசியப் பயணம் ஒபாமா நிர்வாகத்தின்
வெளியுறவுக் கொள்கையின் சட்டவிரோத தீ வைக்கும் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது. இது அமெரிக்காவின் பாரிய இராணுவ வலிமை அதன் பொருளாதாரச் சரிவை
ஈடுகட்டவும் உலக மேலாதிக்கத்தை தக்க வைக்கவும் பயன்படுத்தப்படும் என்ற கருத்தை
தளமாகக் கொண்டுள்ளது. ஒபாமாவின்
“முன்னிலை”
ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் நடத்திவரும் நவகாலனித்துவ போர்களை
மத்திய கிழக்கிலும் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து ஆசியாவிற்கு வந்துள்ளது.
சீனாவுடன் ஒரு மோதலுக்கு தயாராக என்பது, மனிதகுலத்திற்கு பெரும் ஆபத்துக்களை
கொண்டுள்ளது. பிராந்திய நெருக்கடி நிலைமைகளைத் தன் இராஜதந்திர இலக்குகளுக்கு
சாதகமாக பயன்படுத்தும் வகையில், அமெரிக்கா இரு அணுவாயுதங்கள் உடைய சக்திகளுக்கு
இடையே பேரழிவுத்திறன் உடைய மோதல்களுக்கு அரங்கை அமைக்கிறது. |