WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
சீனா: இரண்டு சுரங்க விபத்துக்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்
By Mark Church
7 September 2012
சீன
நிலக்கரிச்சுரங்கங்களில் நிகழ்ந்த இரண்டு எரிவாயுவெடிப்புக்கள் சுரங்கத்
தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்தான மற்றும் சுரண்டும்
தன்மையான நிலைமையை மேலும் எடுத்துக்காட்டுகின்றது. சிச்சுவன்
மாகாணத்தின் பன்சூயிகாவின் சற்று வெளிப்பகுதியிலுள்ள ஸியாஒயியாவான் சுரங்கத்தில்
ஆகஸ்ட் 29
அன்று இடம்பெற்ற முதலாவது வெடிப்பில் 45 பேர்கள் கொல்லப்பட்டனர்.
ஐந்து நாட்களுக்கு பின்னர் ஜியன்ங்ஸி மாகணத்திலுள்ள பிங்ஷியாங் நகரத்திற்கு அருகில்
உள்ள காஒகென்ங் சுரங்கத்தில் வெடித்ததில் அடுத்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அதிகளவு
உற்பத்திக்கான உந்துதலாலும், பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளின் காரணமாகவும்
இடம்பெறும் ஏறக்குறைய முடிவற்ற தொடர்ச்சியான தொழிற்சாலை விபத்துக்களில் இந்த
பேரழிவுகள் இறுதியானவையாகும். 2001 மற்றும் 2011 இடையில் ஐம்பாதியிரத்திற்கு
அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் விபத்துக்களில் இறந்திருக்கிறார்கள் என
மதிப்பிடப்பட்டிருக்கின்றன.
45 பேர்
கொல்லப்பட்டதும் 54 பேர் காயப்பட்டதுமமான ஸியாஒயியாவான் வெடிவிபத்து மாலை ஆறு
மணியளவில் நடந்தது. கடந்த 3 வருடகாலத்தில் இந்த சுரங்க விபத்து மிகவும்
மோசமானதாகும். 108 நபர்கள் காப்பாற்றப்பட்டபோதிலும், போதிய உபகரண வசதிகளற்ற அவசரகால
பணியாளர்கள் மிகவும் கடுமையான மற்றும் ஆபத்தான நிலைகளை எதிர்நோக்குவதாக அறிக்கைகள்
குறிப்பிடுகின்றன.
அதிகாரிகளின் தகவல்களின்படி, அடிப்படை உபகரணங்களின் பற்றாக்குறையால் பேரழிவு நடந்த
இடத்திற்குள் மட்டப்படுத்தப்பட்டளவு அவசரகால பணியாளர்களே நுழையக்கூடியதாக இருந்தது.
கூரைச்சரியக்கூடிய மற்றும் அதிகளவு கார்பன் மொனாக்ஸைடின் அபாயத்தால் தங்கள்
முயற்சிகளுக்கு இடையூறுகளாக இருந்தன என பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களும்
அறிவித்திருந்தனர்.
மீட்பில்
ஈடுபட்ட தொழிலாளி டாங் சோங்
”China
Daily”
பத்திரிகைக்கு
”சுரங்கத்தில்
வெப்பநிலை மிக அதிமாக இருந்தது மற்றும் சுத்தமான காற்று இல்லை. பாதுகாப்பு
தொழிலாளர்கள் நீண்ட நேரம் நிற்பதற்கு சுவாசக் கருவிகள் தேவை என்று கூறினார்”.
மாநில
அதிகாரிகளால் ஸியாஒயியாவான் சுரங்க முதலாளிகள் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆண்டுக்கு 90000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கின்ற இந்த சுரங்கம் சென்ஜின்
தொழிற்துறை மற்றும் டிரேட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இதனை இயக்குவதற்கு அது
டிசம்பர் 2011ல் அனுமதியை பெற்றுக்கொண்டது.
அறிக்கைகளின்படி இந்த சுரங்கம் மிக அடர்த்தியான வாயுவைக் கொண்டிருக்கிறது. ஆனால்
சுரங்கத் தொழிலாளர்கள் துளைபோடும் இடத்தில் வாயுக்களின் அளவை கண்டுபிடிக்கும் கருவி
இல்லை. இந்த சுரங்கம் அனுமதி பெறப்பட்ட அளவுக்கு மேல் இயங்குவதுடன், மேலும்
சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப்படியான சுரங்க தொழிலாளர்களை நிலத்திற்கு
கீழ் அனுமதித்துள்ளது.
செப்டெம்பர்
2 அன்று அரசுக்கு சொந்தமான ஜியன்ங்ஸி நிலக்கரி குழு நிறுவனத்தின் கிளை நிறுவனமான
காஒகென்ங் சுரங்கத்தில் இரண்டாவது வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. வெடி விபத்தில்
பதினைந்து சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 11 தொழிலாளர்கள்
படுகாயத்துக்குட்பட்டனர். 23 தொழிலாளர்கள் தங்கள் முயற்சியாலும் மற்றும்
உதவியவர்களினாலும் தப்பித்துக்கொண்டனர்.
6 சுரங்கத்
தொழிலாளர்கள் பயங்கர தீக்காயங்களுடனும், மூளை அதிர்ச்சி மற்றும்
உட்சுவாசப்பாதிப்புக்களுடனும் அவர்களுடைய நிலை செப்டெம்பர் 4ல் இன்னமும்
கவலைக்குரிய நிலையில் இருக்கின்றன.
சீனாவிலுள்ள
சுரங்கத் தொழில் உலகளவில் மிக அதிகளவு ஆபத்து நிறைந்த தொழில்களில் ஒன்றாக உள்ளது.
அங்குள்ள நிலைமைகளில் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியா இருந்த முதலாளித்துவ
சுரண்டலின் மோசமான அம்சங்களை மீண்டும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆகஸ்ட்டில் 85 மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 32 நபர்கள் தொலைந்து விட்டனர் என்று
சீனாவின் சுரங்க அதிர்வுகளை கண்காணிக்கும் ஒரு இணைய தளத்தை பராமரிக்கிற அமெரிக்க
சுரங்க பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது. 2012 தொடக்கம் முதல் 359 சுரங்கத்
தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன், 94 நபர்கள் காணாமல் போயுள்ளனர்.
ஒவ்வொரு 100
மில்லியன் டன் நிலக்கரியை எடுக்கும்போதும் 35 சுரங்கத் தொழிலாளர்கள் சீனாவில்
கொல்லப்படுகிறார்கள் என்று தற்போதைய பேரழிவுக்கு விடையளிக்கும் தொழில்
பாதுகாப்பிற்கான அரச நிர்வாகத்தின் [State
Administration of Work Safety (SAWS)]
செய்தித்
தொடர்பாளர் ஹாங் ஜி தெரிவிக்கிறார். இந்த இறப்பு விகிதம் அமெரிக்காவை விட 10 மடங்கு
அதிகம். அது 1,973 சுரங்கத் தொழிலாளர்கள் 2011ல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று
சீன அரசாங்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது சென்ற வருடத்தைக் காட்டிலும் 19
சதவிகிதத்தால் குறைந்துள்ளதால் இந்த புள்ளிவிபரங்களை அதிகாரிகள்
பாராட்டியுள்ளார்கள்.
சீனாவின்
12,000 உற்பத்தி சுரங்கங்களில் சிறிய நிலக்கரி சுரங்கங்கள் சுமார் 85 சதவீதமாக
கணிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி
உற்பத்தி செய்கின்றன என ஹாங் கூறியுள்ளார். இயக்குவதற்கான செலவுகளை குறைப்பதற்கான
முயற்சியில் பயிற்சி பெறாத தொழிலாளர்களை பணியமர்த்துதல் மற்றும்
அகழ்ந்தெடுக்கப்படும் டன்னின் அளவின்படியே முதலாளிகள் சம்பளம் வழங்குவதாலேயே
இவ்வாறான சிறிய சுரங்கங்களில் இடம்பெறும் மரணங்களில் மூன்றில் இரண்டு விகிதமானவை
நிகழ்கின்றன.
SWAS
600
சிறிய
நிலக்கரிச் சுரங்கங்களை வரும் அண்மைக்காலங்களில் மூடிவிடுவதாக அறிவித்துள்ளது.
இது நிழ்ந்தால் இதன் நோக்கம் சீனாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலை
பெரும் இலாபங்கள் பெறுவதற்காக தனியார் மற்றும் மாநில நிறுவனங்களுக்காக மட்டும்
மறுகட்டமைக்கப்படுவதாகவே இருக்கும்.
கூடுதலான நிலக்கரியின் தேவைகளுக்கிடையில்
2011
இல்
3.5
பில்லியனுக்கும் அதிகமான மெட்ரிக் டன் நிலக்கரி
பிரித்தெடுக்கப்பட்டுள்ளபோதிலும், மோசமடையும் உலகப்பொருளாதார மந்தநிலையின்
தாக்கத்தால் பொருளாதாரம் சுருக்கமடைவதால் இதன் தேவையும் வீழ்ச்சியடைந்து
வருகின்றது.
காஒகென்ங்
நிலக்கரி சுரங்க பேரழிவில் அரசுக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனம் தொடர்புபட்டிருப்பது
சீனச்
சுரங்கத்
தொழிலாளர் முகம்கொடுக்கும் ஆபத்தான நிலைமை தனியாருக்கு சொந்தமான
சிறிய நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு நின்றுவிடவில்லை, மாறாக
நாடுமுழுவதும் பரந்தளவில் இருப்பதையே தெளிவாக காட்டுகிறது. உண்மையில், சுரங்கத்
தொழிற்துறையில் மனிதப் படுகொலை பிரதானமாக சீன முதலாளித்துவத்தின் கொடூரமான
தன்மையின் ஒரு விவரமான வெளிப்பாடாகும்.
பாதுகாப்பு
தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமான நடவடிக்கைகள் முற்றிலும்
பூசுமெழுகும் தன்மை உடையவையாகும்.
ஏனெனில் சந்தையினுடைய கட்டளைகள் ஒவ்வொரு தொழிற்சாலையும்
இலாபத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க கோருகின்றது.
பூகோள பொருளாதாரம் மெதுவாதலின் அழுத்தங்களுக்கிடையில் செலவினைக்
குறைப்பதும் போட்டியுள்ளதாக இருப்பதும் என்பது சுரங்கத் தொழிலில் கூடிய
இறப்புகளுடனான விபத்துக்கள் தவிர்க்க முடியாதாவைகளாகும். |