WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
The troika returns to Athens
முக்கூட்டு ஏதென்ஸிற்குத் திரும்பியது
By Christoph Dreier
12 September 2012
ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய
வங்கி எனப்படும் முக்கூட்டின் பிரதிநிதிகள் முன்பு கிரேக்க அரசாங்கத்துடன்
பேச்சுக்கள் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறிய 12 பில்லியன் யூரோக்கள்
(15.42 பில்லியன்
டாலர்கள்)
வெட்டுக்கள் கிரேக்கத்திற்கு கடன்கொடுத்தவர்களை திருப்திப்படுத்த போதாது என்பதை
தெளிவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஜூன் மாதத்தில் இருந்து உதவியாக
கொடுக்கப்பட வேண்டிய 31.5 பில்லியன் யூரோக்களை பெறுவதற்கு உழைக்கும் மக்கள் இன்னும்
கடுமையான வெட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற முன்னிபந்தனையை அவர்கள் இப்பொழுது
கோரியுள்ளனர்.
முக்கூட்டு பெருகிய முறையில் வெளிப்படையாக அரசாங்கத்தின் நிர்வாகப்
பணிகளை எடுத்துக் கொண்டு, கடைசி விவரம் வரை அரசாங்கம் செயல்படுத்த
வேண்டிய
வெட்டுக்களை பரிந்துரைக்கிறது.
ஜூலை கடைசியில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டமிடப்பட்ட சிக்கன
நடவடிக்கைகள்,
அப்பொழுது முதல் பலமுறை அறிவிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளது. இது
முக்கூட்டை சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனுமதிப்பதுடன் மக்கள் எதிர்ப்பையும்
மீறி அவற்றை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பதைத் திட்டமிடவும் அனுமதிக்கிறது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் வரவேண்டிய முக்கூட்டின் அறிக்கை இப்பொழுது அக்டோபர் மாதம்
வெளியிடப்பட உள்ளது.
கடந்த வாரம் முக்கூட்டு கிரேக்கம் வெட்டுக்களை விரைவில் செயல்படுத்த
வேண்டும் என்று கோரியது மட்டும் இல்லாமல், தொழில்துறைச் சட்டங்களையும் கடுமையாக்க
வேண்டும் என்று கோரியுள்ளது. கிரேக்கத்தின் அதி முக்கியமான அமைச்சரகங்களுக்கு
எழுதிய கடிதத்தில் முக்கூட்டு ஆறுநாட்கள் பணி வாரத்தைக் கோரியிருப்பதுடன், நாள்
ஒன்றிற்கு உழைக்க வேண்டிய மணி நேரத்தையும் அதிகரித்தல், ஊதியங்களில் புதிய
வெட்டுக்கள் மற்றும் தொழில்துறைச் சட்டங்கள் கிரேக்கத்தில் அகற்றப்படுதல்
ஆகியவற்றைக்கோரியுள்ளது.
இந்த வார இறுதியில் முக்கூட்டு ஏதென்ஸிற்குத் திரும்பியது. ஏதோ
அவர்கள் ஆக்கிரமிப்பு சக்தி என்பது போன்ற தோரணையுடன்,
அதன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிக்கனப் பொதியை கவனித்து பல
“திருத்தங்களை”க்
கூறியுள்ளனர்.
சிறிது சிறிதாகத்தான் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றாலும்,
அரசாங்கத்தின் சிக்கனத் திட்டம் முக்கிய சமூகநலப் பகுதிகளில் மிகப் பெரிய
வெட்டுக்களை எதிர்பார்க்கிறது. தொழிலாளர் துறை அமைச்சகத்தின் செலவுகள் ஐந்து
பில்லியன் யூரோக்கள் வெட்டப்படும்; பொதுத்துறையில் ஓய்வூதியங்களும், ஊதியங்களும்
கிட்டத்தட்ட 50% குறைக்கப்படும். சுகாதார, மற்றும் கல்வித் துறைகளில்
நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் வெட்டப்படும்.
ஆனால் முக்கூட்டின் பிரதிநிதிகள் வருவதற்கு முன்பே, முக்கூட்டு
வெட்டுக்கள் போதாது என்று அறிவித்துள்ளது. இதை எதிர்பார்த்து, ஞாயிறுக் கூட்டம்
ஒன்றில், கிரேக்கத்தின் நிதி மந்திரி அயோனிஸ் ஸ்டௌமரஸ் 11.5 பில்லியன் யூரோக்கள்
என்று முதலில் கோரியதற்குப் பதிலாக 17 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களுக்கான
திட்டத்தை அளித்தார். முக்கூட்டுப் பிரதிநிதிகள் வெட்டுக்களைக் குறிப்பிடும்படி
அழைக்கப்பட்டனர்; இது கிரேக்கத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்புக்களை திறமையுடன்
அவர்களே எடுத்துக் கொள்வது போலாகும்.
ஆயினும்கூட
Stournaras
பிரதிநிதிகள் பின்னர் அளிக்கப்பட்ட வெட்டுக்கள் வரவு-செலவுத்
திட்ட குறைப்பு இலக்குகளை அடையப் போதுமானவை அல்ல என்று கூறினார். குறிப்பாக அவர்கள்
இரு இளைய கூட்டணிக் கட்சிகள்
PASOK, Democratic Left (DIMAR)
ஆகியவை கோரிய வண்ணப்பூச்சுத் திட்டத்தை நிராகரித்தனர்; அக்கட்சிகள் வரி ஏய்ப்பிற்கு
எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று கூறியிருந்தன—இது
சமூக வெட்டுக்களை செயல்படுத்த ஆதரவைக் கொடுக்கும். இது நடைமுறைக்கு ஏற்றது அல்ல
என்று முக்கூட்டின் பிரதிநிதிகள் கூறி, இவற்றிற்குப் பதிலாக இன்னும் உறுதியான
முன்முயற்சிகள் தேவை என்றனர்.
திங்களன்று கன்சர்வேட்டிவ் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸைச் (புதிய
ஜனநாயகம்
ND)
சந்தித்தபின், இரண்டு ஜேர்மானிய முக்கூட்டு வல்லுனர்களான மத்தியாஸ் மோர்ஸ் மற்றும்
கிளாஸ் மசுச், மற்றும் டேனின் போல் தொம்சனும் இதன் பொருள் என்ன என்பதைத்
தெளிவுபடுத்தினர். அரசாங்கம் குறைந்தப்பட்சம் 150,000 ஊழியர்களை பொதுத்துறையில்
இருந்து 2015க்குள் நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்; இதையொட்டி
கணிசமான மற்றும் நீண்டகால வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்கள் செய்யப்பட முடியும்.
முன்பு அரசாங்கம் இதைச் செய்வதை தவிர்த்திருந்தது; ஏனெனில் இதற்கு
ஏற்படக்கூடிய மகத்தான எதிர்ப்பு நாடு முழுவதையும் முடக்கிவிடும் என அது
எதிர்பார்த்தது. மாறாக சமரஸ் தொழிலாளர்களை ஒரு மாற்று நிறுவனத்தில் குறைந்த
ஊதியத்தில் இருத்தவும், பணிநீக்கங்களை படிப்படியாக செயல்படுத்தவும் விரும்பினார்.
அரச ஊழியர்களின் பதவிக்காலம் கிரேக்க அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.
கிரேக்கத்தின் வெட்டுக்கள் ஏற்கனவே சமூகப் பேரழிவு மற்றும் வெகுஜன
வறியை நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை தலையைச் சுற்றவைக்கும்
உயரத்திற்குப் போய்விட்டது. இதற்கிடையில் ஸ்பெயினுக்கு அடுத்து கிரேக்கத்தில்தால்
உலகிலேயே வேலையின்மை அதிகம் உள்ளது. ஜூன்மாதம் வேலையின்மை உத்தியோகபூர்வமாக 24.4%
என்று இருந்தது. இளைஞர்களிடையே இந்த விகிதம் 55% என்று உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறையில் பணிநீக்கங்கள் மற்றும்
மிருகத்தனமான சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் என்பவை தொழிலாளர்களின் இழப்பில்
வங்கிகளின் சேமிப்புக்களை காப்பாற்றத்தான் உதவும். ஐரோப்பிய, சர்வதேச
நிறுவனங்களுக்கு குறைவூதியத் தொழிலாளர்களை வழங்கும் நோக்கத்திற்கும் உதவும்.
பரந்த வேலையின்மை,
ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள தொழில்துறைச் சட்டங்கள் தளர்த்தப்படுவதுடன்
இணைந்து, ஊதியங்களை தரைமட்டமாக்கும் நெம்புகோலாக ஆக்கிவிட்டது. ஜேர்மனிய தொழிற்துறை
கூட்டமைப்பின்
(BDI),
தலைவர்
Hans-Peter Keitel
இதை
மிகவும் வெளிப்படையாக செய்தி இதழ்
Der Spiegel
இடம் திங்களன்று தெரிவித்தார். அவர் கிரேக்கம் முழுவதையுமே
“ஒருவித
சிறப்புப் பொருளாதார பகுதியாக”
ஆக்க வேண்டும், இதையொட்டி
“கிரேக்கத்திற்கு
வெளிநாட்டு ஐரோப்பிய ஒன்றிய நபர்கள்”
கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
முக்கூட்டுடன் இப்பொழுது நடத்தப்படும் விவாதங்களின் உள்ளடக்கமும்
அதுதான். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை தாமதப்படுத்துவதின்
காரணம் பாரிய எதிர்ப்பு ஏற்படும் என அது அஞ்சுவதால்தான்.
PASOK, DIMAR
பிரதிதிநிதிகள் சிலர் இந்த அடிப்படையில் சில குறிப்பிட்ட
வெட்டுக்கள்மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அநேகமாக ஒவ்வொரு நாளும், வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் மற்றும்
ஆர்ப்பாட்டங்கள் என்று சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடக்கின்றன. கடந்த வாரத்தில்
இருந்து பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவமனைகளில் வந்துள்ள வெட்டுக்களுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விதிக்குட்பட்டு பணி புரிகின்றனர். ஆசிரியர்கள்
இரண்டாம் நாளாக பள்ளிகளில் வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளனர்; பேராசிரியர்கள்
அவர்களுடன் சேர்ந்துள்ளனர். சனிக்கிழமை அன்று 30,000 பேர் அரசாங்கத்தின் திட்டங்களை
எதிர்த்து தெசலோனிகியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல அமைச்சரகங்களும் தொழிற்சங்கங்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டு
தொழிலாளர்களின் சீற்றத்தை தீமை பயக்கா வழிவகைகளில் திருப்ப முற்படுகின்றன. இரண்டு
முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான
GSEE, ADEDY
இரண்டும்
“பொது
வேலைநிறுத்தத்தை”
அறிவித்துள்ளன. இதைப்போல் கடந்த காலத்தில் அவை இரண்டு டஜன் முறை
செய்துள்ளன. இது குறுகிய காலத்திற்கு இருக்கும், மிகவும் முன்னரே அறிவிக்கப்படும்,
அதையொட்டி அரசாங்கமும் பெருவணிகமும் அதற்கான தயாரிப்புக்களை நடத்த முடியும். இது
தொழிலாளர்கள் சீற்றத்தை வெளிப்படுத்தவும் இறுதியில் அவர்கள் மனத்தளர்வு பெறவும்தான்
உதவும்.
திவாலாகிவிட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை கட்டுப்பாட்டிற்குள்
நிறுத்த திறன் குறைந்து விட்டதால், அரசாங்கம் பெருகிய முறையில் நேரடி
அடக்குமுறையைப் பயன்படுத்துகிறது. பொலிசார் சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தை
முறிப்பதற்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதுடன், ஏழு சிறார்கள் உட்பட,
எதிர்ப்பாளர்கள் 31 பேரை கைது செய்துள்ளனர். |