WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
தொலைக் காட்சிப் பேட்டியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்கள், சட்டம்-மற்றும்-ஒழுங்குப் பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுகிறார்
By
Alex Lantier
10 September 2012
TF 1
தொலைக்காட்சியில் நேற்று இரவு முக்கிய அரை மணி நேரத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்
சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சிக்கனக் கொள்கைகளை தீவிரப்படுத்துதல்,
பதவிக்கு வந்த பின் அவரைப் பற்றிய கருத்துக் கணிப்புக்கள் விரைவாக சரிவடைந்துள்ள
நிலையில் மீண்டும் ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையை பெற முயற்சித்தல் என்பவற்றிற்கு
முயற்சிக்கப்போதாக உறுதியளித்தார்.
OpinionWay
கருத்துக் கணிப்பு ஒன்று கடந்த மாதம் 14% சரிவிற்குப் பின், ஹாலண்டிற்கு அங்கீகார
தரம் 46% எனத்தான் உள்ளது எனக் காட்டுகின்றது.
பிரதம மந்திரி
Jean-Marc Ayrault
மற்றும் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் இருவருடைய கருத்துக் கணிப்பும்
13 புள்ளிகள் குறைந்து முறையே 46, 45 சதவிகிதங்களாகின.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகள் இதை எதிர்கொள்ளும் வகையில்
ஹாலண்ட் இன்னும் விரைவாக சமூகநலக் குறைப்புக்களைச் செயல்படுத்த வேண்டும்
எனக் கோரியுள்ளன.
See “French
trade unions urge spending cuts, labour market deregulation”)
வார
இறுதியில்
41
பில்லியன்
டாலர்
நிகர சொத்து மதிப்புக்
கொண்ட பிரான்சிலும்
ஐரோப்பாவிலும் முதல் இடத்தில் உள்ள பணக்காரரான
பேர்னார்ட்
ஆர்னோல்ட்,
ஆண்டு வருமானம் 1 மில்லியன் யூரோவிற்கு மேல் ($1.28 பில்லியன்) இருந்தால் 75
சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஹாலண்ட் முன்வைத்துள்ள திட்டத்தை தவிர்ப்பதற்கு
பெல்ஜியத்திற்கு
சென்றுவிடப்போவதாக அச்சுறுத்தினார்.
ஹாலண்ட்,
உள்நாட்டுக் கொள்கை
பற்றி
பிரத்தியேக
கவனம் செலுத்தி ஒரு
உரையை நிகழ்த்தி, பொதுநல செலவீனக்குறைப்புக்கள், வரி அதிகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு
உறுதியளித்து அதே நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குக் கொள்கைகள் ஏராளமான ரோமாக்களை
வால்ஸ்
இன்
பொலிஸ் படையினர் வெளியேற்றியதை பாதுகாத்தும் பேசினார்.
ஜேர்மனிய மாதிரியிலான குறுகிய நேரப் பணிக்கான சட்டம், நிறுவனங்கள்
ஒருதலைப்பட்சமாக தங்கள் தொழிலாளர்களை எத்தனை மணி நேரம் வேலைக்கு இருத்துவது என்பதை
அனுமதிப்பதை தயாரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இக்கொள்கைகள் ஜேர்மனிய
முதலாளித்துவத்தின் 2008 பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப அதிர்ச்சியை தாண்டுவதற்கான
சாத்தியப்பாட்டை, அதாவது முதலாளிகளை பெரிய அளவில் பணிநேரத்தைக் குறைத்தல்,
கொடுக்கப்படும் ஊதியத்தை குறைத்தல் ஆகியவற்றை அனுமதித்ததில் பெரும் பங்கை
கொண்டிருந்தன.
புதுப்பிக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சரிவிற்கு இடையே, பிரெஞ்சு ஆளும்
வர்க்கம் அதே போன்ற சட்டத்தை இயற்றுவது குறித்து அக்கறை கொண்டுள்ளது. ஹாலண்ட்
“இது
சமூக உரையாடலுக்குப் பின் செய்யப்படும்”
என்றார். அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகக் குழுக்கள் இவற்றிற்கு இடையே
உடன்பாட்டை அடுத்து செய்யப்படும், அது இயலாவிட்டால்,
“அரசாங்கம்
குறுக்கிடும்”
என்றார் அவர்.
அவர்,
பற்றாக்குறைக்காக
33 பில்லியன் யூரோக்ககள்
வெட்டுக்களை
செய்ய உறுதியளித்துள்ளார். இதில் செலவுக் குறைப்புக்களில் 10 பில்லியன் யூரோக்கள்,
வீடுகளின் மீது வரி விதிப்புக்களில் 10 பில்லியன் யூரோக்கள் மற்றும் பெருநிறுவன
வரிவிதிப்பில் இருக்கும் பிழைகளை அகற்றுவதில் 10 பில்லியன் யூரோக்கள் இருக்கும்.
மக்கள் மீதான வரிவிதிப்பு அதிகரிப்பில் முக்கியமாக மேலதிக பணிநேரத்திற்குக்
கொடுக்கப்படும் ஊதியங்கள் மீதான வரிவிலக்கினை முடிவிற்கு கொண்டுவரும். இது தொழிலாள
வர்க்கத்தில் வரிசெலுத்துபவர்களை கடுமையாகப் பாதிக்கும். இந்தக் குறைப்புக்கள்
1958ல்
ஸ்தாபிக்கப்பட்ட “ஐந்தாம்
குடியரசில் முன்னோடியில்லான தன்மையைக் கொண்டவை”
என்று ஹாலண்ட் கூறினார்.
தன்னுடைய நிர்வாகம் 2013ம் ஆண்டில் 0.8 சதவிகிதிம்தான் பொருளாதார
வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிட்டுள்ளதையும் ஹாலண்ட் ஒப்புக் கொண்டார். தன்னைப்
பேட்டி கண்ட
TF1
உடைய
Claire Chazal
அத்தகைய குறைந்த பொருளாதார வளர்ச்சி 2017க்குள்
வரவு-செலவுத் திட்டத்தை
சமச்சீர் நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரின் இலக்கிற்கு இன்னும் தீவிர
செலவுக் குறைப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கூறிய கருத்துக்களை உதறித்
தள்ளினார்.
PSA
கார்த்தயாரிக்கும் நிறுவனம் இன்னும் வேலைகளைக் குறைக்காது என்று கூறுவதற்கில்லை
என்று ஹாலண்ட் குறிப்பாகத் தெரிவித்தார் இந்நிறுவனம் ஏற்கனவே 8,000 பணிகளை
நீக்கிவிட்டது.
“இன்னும்
சில
வேலைகள் குறைக்கப்பட வேண்டும்”
என்றும் கூறியுள்ளது.
பேட்டியின் பெரும்பகுதி தன் பிரச்சாரமான 75 சதவிகித வரி,
உயர்மட்ட வருமானம் உடையவர்களுக்கு சுமத்தப்படுவது என்பது பொருளாதார நெருக்கடியை
நிதியப் பிரபுத்துவத்தின் சொந்த சொத்துக்களின் இழப்பில் சுமத்துப்படாது என்பதை
ஆளும் வர்க்கத்திற்கு உத்தரவாதப்படுத்துவதற்கு ஹாலண்ட் பயன்படுத்தினார். ஹாலண்டின்
தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்துக்களில் கூறப்பட்ட நிலைப்பாடு இப்பொழுது
வெற்று வாய்வீச்சு
என்பது அம்பலமாகிவிட்டது.
இந்த வரி உயர்வு ஆண்டு ஊதிய வருமானத்திற்குத்தான் பொருந்தும்,
மூலதனத்திற்கோ, மூலதன ஆதாயங்களுக்கோ அல்ல என்று ஹாலண்ட் வலியுறுத்தினர்.
முதலாளித்துவத்தினர் அவர்களுடைய வருமானத்தை மூலதனத்தில் இருந்து அதிக அளவில்
பெறுகின்றனர் என்ற நிலையிலும் பெருநிறுவன நிர்வாகத்தின் மூலம் இல்லை என்னும்
நிலையில், இதன் பொருள் ஹாலண்டின் வரி அதிகரிப்பு என்பது கிட்டத்தட்ட 2,000
பேர்களுக்கு மட்டும், அதுவும் விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குத்தான்
பொருந்தும் என்பதாகும்.
கிட்டத்தட்ட 900,000 யூரோக்கள் ஊதியமும் 5 மில்லியன் யூரோக்கள் தன்
சொத்துக் குவிப்பில் இருந்து வட்டி வருமானமும் பெறும் ஒரு பெருநிறுவன நிர்வாகி,
ஹாலண்டின் வரி உயர்வை ஒட்டி எந்தப் புதிய வரியையும் செலுத்தத்
தேவையில்லை.
அரசாங்கத்திற்கு வரி அதிகரிப்பின் மூலம் கூடுதலாகக் கிடைக்கும்
வருமானம் ஒரு சில நூறு மில்லியன் யூரோக்கள்தான் இருக்கும் என்று
Le Monde
மதிப்பிட்டுள்ளது. பிரான்ஸில் உயர்மட்ட 10 சதவிகிதத்தினர் 5.6 டிரில்லியன்
யூரோக்களுக்கும் மேலான சொத்துக்களை கொண்டுள்ளனர் என்று பரிசீலிக்கும்போது, அதாவது
தேசிய சொத்தில் முற்றிலும் 62% என்ற நிலையிலும் சமூகத்தில் உயர்மட்ட 1 சதவிகிதம்
தேசிய சொத்தில் கால் பகுதியை ஏகபோக உரிமையாகக் கொண்டிருக்கையில், ஹாலண்ட்
முன்மொழிந்துள்ள
வரி
அதிகரிப்பின் அற்பத்தன்மை தெளிவாக
உள்ளது.
ஹாலண்ட் விளக்கினார்:
“துணை
இலாபவளங்களை நாடும் பிரச்சினை இங்கு இல்லை... அதையொட்டி அதிக வருமானம் ஈட்டுபவர்கள்
“பொதுமுயற்சியில்
நாங்கள் பங்கு பெறுகிறோம்”
என்று கூறமுடியும்.”
அதாவது, தொழிலாள வர்க்கத்தின்மீது பாரிய வெட்டுக்களைச் சுமத்தி,
செல்வந்தர்கள், பெரும் செல்வந்தர்களின் பாரிய சொத்துக்களை பாதுகாக்கையில், அவர்
ஆளும் வர்க்கம் தானும் பெரும் தியாகங்களை செய்வதாகக் கூறும் கூற்றுக்களை
வெளியிடுவதற்குத்தான் உதவ முயல்கிறார்.
ஆர்னோல்ட்டின்
பிரான்சை விட்டு நீங்குவது என்னும் அச்சுறுத்தல் பற்றி
Chazal
குறிப்பிட்டு, பிரெஞ்சு உயரடுக்குகள் 75% வரிவிதிப்புத் திட்டம் குறித்து கவலை
கொண்டுள்ளன என்று கூறுகையில், ஹாலண்ட் செல்வந்தர்கள் முன் தன்னை அவர்களுக்கு ஆதரவாக
அடிபணியச் செய்துகொண்ட வகையில் பின்வருமாறு பதிலளித்தார்:
“உயர்தட்டினர்
அங்கீகரிக்கப்பட வேண்டும். வேலைகளுக்காக தியாகம் செய்பவர்கள், நம் பகுதிகளின் உண்மை
நிலையை மாற்றுபவர்கள், சந்தைகளை வெற்றி அடைபவர்கள், பணம் ஈட்டுபவர்கள், அவர்கள்
நாட்டினால் அங்கீகரிக்கப்பட தகுதியானவர்கள்.”
பல பில்லியன்களை
உடைய
ஒருவர்
வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு நீங்குவேன் என்று
அச்சுறுத்தலை
விடுக்கையில்,
நாட்டிற்கு பெருவணிகத்தின் பங்களிப்புக்கள் பற்றிய இத்தகைய தடையற்ற சந்தை குறித்த
புகழாரங்கள், கோழைத்தனமானதும்
அபத்தமானதுமாகும்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் ஒரு புதிய
அரசாங்கத்தைக் கட்டாயமாகச் சுமத்த வேண்டும் என்று விடுத்த அழைப்பு, ஜேர்மனிய
அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவை கிரேக்கத்தின் மீது பாரிய சிக்கன
நடவடிக்கைகளைச் சுமத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்தது போன்ற சர்வதேசப்
பிரச்சினைகள் பற்றிய விவாதத்தையும் இந்த உரை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஆறு நாள் பணி வாரம், குறைந்தப்பட்ச ஊதியத்தில் இன்னும் குறைப்பு, புதிய செலவுக்
குறைப்புக்கள் பில்லியன் கணக்கில் என்று உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்
கிரேக்கத்திற்கான
நிகழ்ச்சிநிரல்
பற்றிய எவ்விதமான விவாதமும் ஹாலண்ட் தன்னை
“வளர்ச்சி
சார்புடையவர்”
என்று காட்டிக் கொள்ளும் முயற்சிகளை சின்னாபின்னமாக்கியிருக்கும்.
இந்த உரை சோசலிஸ்ட்
கட்சியின் பிற்போக்குத்தன்மையைத்தான் அம்பலப்படுத்துகிறது இதில் சோசலிசம் குறித்து
பெயரைத் தவிர வேறு ஏதும் இல்லை. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்
கட்சி
போன்ற குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சி, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தல்களில்
ஹாலண்டிற்கு நிபந்தனையற்ற வாக்குகளை போடவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
உள்துறை மந்திரி வால்ஸ்,
இனவழியில் ரோமாக்கள் ஏராளமாக
நாடுகடத்தப்பட
வேண்டும் என்பதற்கு திமிர்த்தனமாக
ஆதரவைக் கொடுத்துத் தன் பேட்டியை ஹாலண்ட் முடித்தார். ஹாலண்ட்
தொடரும்
இக்கொள்கை அவருக்கு முன் ஜனாதிபதியாக செல்வாக்கற்று இருந்த நிக்கோலோ சார்க்கோசியால்
முன்னெடுக்கப்பட்டது.
சார்க்கோசியின் கீழ் பல செய்தி ஊடக விமர்சகர்கள் இனவழி நாடுகடத்தல் சட்டவிரோதமானது,
பிரான்ஸின் பாசிச விச்சி
ஆட்சியில் இரண்டாம் உலகப்போரின் போது இத்தகையவை நடந்தன என்று
சுட்டிக்காட்டியிருந்தனர். எவ்வாறாயினும் இத்தாக்குதல்களை ஹாலண்ட் வரவேற்றுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்
“இடது
சாரிச் சிந்தனைகளுடன் இயைந்துள்ளனவா”
என்று
Chazal
ஆல் கேட்கப்பட்டதற்கு ஹாலண்ட்,
“அவைதான்
தன் அரசாங்கத்தின் கடமை, கட்டாயம் செய்யவேண்டியவை”
என்று விடையிறுத்தார். தங்கள் முகாம்களில் இருந்தும் பிற வீடுகளில் இருந்தும்
ரோமாக்கள் அகற்றப்படுவர்—வெளிநாட்டில்
இருந்து வந்த ரோமாக்கள்-- அவர்களுடைய தாய்நாட்டிற்கு அனுப்பப்படுவர் என்று ஹாலண்ட்
கூறினார். |