WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
ஈரானுக்கு எதிராக புதிய
“சிவப்புக்கோடுகளை”
ஒபாமா பரிசீலிக்கிறார்
By
Peter Symonds
5 September 2012
இஸ்ரேல்
தாக்குதல் நடத்துவதை
திசைதிருப்பும் பாவனையில்,
ஈரானுக்கு எதிரான போர் ஏற்படும் சாத்தியப்படக்கூடிய பல ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை
ஒபாமா நிர்வாகம் பரிசீலிக்கிறது. ஞாயிறு நியூ யோர்க் டைம்ஸ் பெயரிடப்படாத
அமெரிக்க ஆதாரங்களின் அடிப்படையில் கொடுத்துள்ள தகவல்படி வெள்ளை மாளிகை
“போருக்குச்
சற்றே குறைந்த தன்மையில் பல வகை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது”;
இது ஈரானின் அணுச் சக்தி நிலையங்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்துவதை தள்ளிவைக்கும்
முயற்சி, தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்காக மேசைக்கு வரும் கட்டாயத்திற்கு
உட்படுத்துதல் ஆகும்.
“ஏற்ககனவே,
கடற்படைப் பயிற்சிகள், புதிய ஏவுகணை முறைகள் பாரசீக வளைகுடாவில்
திட்டமிடப்பட்டுள்ளன. ஈரானின் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை மூடும் பலமான
பிரச்சாரமும் நடக்கிறது. முன்பு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,
நிராகரிக்கப்பட்டுவிட்ட மறைமுக நடவடிக்கைகள் உட்பட அமெரிக்க இராணுவ நடவடிக்கையை
கொண்டுவரும் ஜனாதிபதியின் புதிய அறிவிப்புக்கள் குறித்து நிர்வாகம் பரிசீலிக்கிறது”
என்று கட்டுரை கூறுகிறது.
டைம்ஸ்
கட்டுரை, வெள்ளை
மாளிகையில் “ஈரானுக்கான
தெளிவான “சிவப்புக்
கோடுகள்”
குறித்த அவருடைய பேச்சுவார்த்தை மூலோபாயங்களுக்கு மறுவடிவம் கொடுக்க வேண்டுமா
மற்றும் அக்கோடுகளை மீறி அமெரிக்கா அந்நாட்டை நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்காது
என்பது”
பற்றி விவாதங்கள் உள்ளன என்ற அச்சமூட்டும் செய்தியைக் கொடுக்கிறது.
“சிவப்புக்
கோடுகளை”
துல்லியமாக உருவாக்கி வழங்குதல் என்பது, அதாவது போரைத் தூண்டக்கூடிய ஒரு
ஆத்திரமூட்டப்படாத, சட்டவிரோத அமெரிக்க தாக்குதலை ஈரானுக்கு ஒரு அடி அருகே
கொண்டுவரும் சாத்தியப்பாட்டைத்தான் கொண்டுள்ளது.
ஞாயிறன்று
ஒபாமாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வடிவமைப்பை கொண்ட கருத்துக்களில், இஸ்ரேலிய பிரதம
மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு
“சர்வதேச
சமூகம் ஈரானுக்குத் தெளிவான சிவப்புக் கோட்டை நிர்ணயிக்காததற்காக”
குறைகூறியுள்ளார்.
தன்னுடைய மந்திரிசபையில் அவர் கூறினார்:
“ஈரான்
ஒரு தெளிவான சிவப்புக் கோட்டைப் பார்க்கும் வரை, அத்தகைய உறுதிப்பாட்டைக் காணும்
வரை, அது தன் அணுத்திட்ட முன்னேற்றத்தை நிறுத்தாது, மற்றும் ஈரான் அணுவாயுதங்களை
வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படக்கூடாது.”
நெத்தென்யாகுவின் கருத்துக்கள் ஈரானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று
இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து விடுக்கும் அழைப்புகளில் சமீபத்தியவைதான். மேலும்
இவை அதிக மறைப்பு இல்லாத இராணுவ நடவடிக்கை குறித்த அச்சுறுத்தல்கள்தான். இஸ்ரேலின்
பாதுகாப்பு குறித்த ஆண்டு அறிக்கையை நேற்று நாட்டின் உளவுத்துறைப் பிரிவுகளின்
தலைவர்கள் அமைச்சரவைக்கு வழங்கிய நிகழ்ச்சிநிரலில் ஈரான் சந்தேகத்திற்கு இடமின்றி
முக்கிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
ஈரானிய
ஆட்சி பலமுறையும் அது அணுவாயுதத்தை தயாரிக்கிறது என்னும் ஆதாரமற்ற கூற்றை பலமுறை
மறுத்துள்ளது. மேலும் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளதுபோல், அமெரிக்க
உளவுத்துறை அதிகாரிகள் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் ஒரு அணுவாயுதத்தை தயாரிக்க
முடிவு எடுத்துள்ளனர் என்பதற்கு அவர்களிடம் சான்று ஏதும் இல்லை என்று
குறிப்பிட்டுள்ளனர்.
Ha’aretz
செய்தித்தாளின்
கருத்துப்படி, இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறையும்
“ஈரானின்
மிக்குயர் தலைவரான அலி காமெனேனி அணுவாயுதம் ஒன்றை உருவாக்கும் முடிவு எதையும்
எடுக்கவில்லை எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.”
நெத்தென்யாகுவின் ஈரானிய அணுவாயுத அச்சுறுத்தல் குறித்த கருத்துக்கள் முற்றிலும்
பாசாங்குத்தனம் ஆகும். சர்வதேச அணுச்சக்தி நிறுவனத்தின்
(IAEA)
ஆய்வுகளை
அனுமதிக்கும் அணுவாயுதப்பரவா உடன்படிக்கையில் (NPT)
கையெழுத்திட்டுள்ள ஈரான் போலன்றி, இஸ்ரேல் அணுவாயுதப்பரவா
உடன்படிக்கையில் கையெழுத்து இடவில்லை, அதனிடம் கணிசமாக அணுவாயுத கிடங்கும் உள்ளது.
அமெரிக்காவும் சர்வதேச செய்தி ஊடகமும் சமீபத்திய சர்வதேச அணுச்சக்தி நிறுவனத்தின்
அறிக்கையைப் பற்றி எடுத்துள்ளன; கடந்த வாரம் வெளிவந்த இந்த அறிக்கை ஈரானின் அணுத்
திறன்களை மிகையாக்கி பயமுறுத்தும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்கப்
பகுப்பாய்வாளர்
Gareth Porter
சுட்டிக்காட்டியுள்ளதுபோல், ஈரானின் யுரேனிய அடர்த்தி 20% என உயர்த்தப்பட்டுள்ள
சேமிப்பு உண்மையில் குறைந்துவிட்டது. ஏனெனில் அவை மருத்துவ ஐசோடெப்புக்கள்
தயாரிக்கும் ஆய்வு உலைக்கூடத்திற்கு இந்த எரிபொருள் தொகுப்பை அனுப்பிவிட்டது—அவை
உற்பத்தி செய்வதின் துல்லிய நோக்கமும் அதுதான். மேலும் 20% அடர்த்தி உடைய யுரேனியம்
ஆயுதங்களை தயாரிக்கத் தேவையான 90% மட்டத்திற்கு மிக, மிகக் குறைந்த அளவிலான
அடர்த்தியாகும்.
ஈரான் அதன்
20 சதவிகித அடர்த்தி உடைய யுரேனிய உற்பத்திக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதன் கிடங்களில் இருக்கும் யுரேனியத்தை
நாட்டை விட்டு அகற்ற வேண்டும். அதன் போர்டோ நிலத்தடி ஆலையை மூட வேண்டும் என்றும்
கோருகிறது. தெஹ்ரானுக்கு எத்தகைய கணிசச் சலுகைகளையும் தர மறுக்கும் வாஷிங்டனின்
நிலைப்பாடு, குறிப்பாக அபராதம் நிறைந்த கடுமையான பொருளாதாரத் தடைகளை
நிறுத்திவைத்தல் என்பது—P5+1
குழுவிற்கும் (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா
மற்றும் ஜேர்மனி) ஈரானுக்கும் இடையே நடந்துவந்த பேச்சுக்களை ஜூன் மாதம் முறிக்க வகை
செய்துவிட்டது.
சர்வதேசப்
பேச்சுக்களை உதறித்தள்ளும் நெத்தென்யாகு அனைத்து யுரேனிய அடர்த்தித் திட்டமும்
நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். இக்கோரிக்கையை தெஹ்ரான்
நிராகரித்து, அணுவாயுதப்பரவா உடன்படிக்கையின் உடன்பாட்டின்கீழ் அதற்கு
சமாதானத்திற்காக அணுச்சக்தியை பயன்படுத்தும் உரிமை உள்ளது என வலியுறுத்துகிறது.
இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு பொழுதும் அதன்
“சிவப்புக்
கோடு”
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு என்ன என்பதை பகிரங்கமாக
அறிவித்ததில்லை. ஆனால் ஈரானின் போர்டோ ஆலை முழுச் செயல்திறன் உள்ளதாகுமானால் தான்
நடவடிக்கை எடுக்கவிருப்பதாக வலுவான குறிப்புக்களை காட்டியுள்ளது.
இக்கட்டத்தில் ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்த
பச்சை விளக்கை காண்பித்த அடையாளம் ஏதும் இல்லை. அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தலைவர்
மார்ட்டின் டெம்ப்சே பிரித்தானியாவின் கார்டியனிடம்
அமெரிக்கா,
இஸ்ரேல் ஒருதலைப்பட்சத் தாக்குதல் நடத்துவதில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்
கொண்டுள்ளது என்ற குறிப்பைக் காட்டியுள்ளார்.
“அவர்கள்
அதைச் செய்யவிரும்பினால், நான் அதற்கு உடந்தையாக இருக்கத் தயாராக இல்லை.”
டைம்ஸ்
கட்டுரை எத்தகைய
“சிவப்புக்
கோடுகளை”
ஒபாமா கருத்திற்
கொண்டிருக்கலாம் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. அது கூறியிருப்பது எல்லாம் ஈரான்
அணுவாயுதக் கட்டமைப்பு குறித்த நடவடிக்கைகளை எடுத்தால்,
“அனைத்து
விருப்பத் தேர்வுகளும்”
மேசை மீது உண்டு
என்பதுதான். வெள்ளை மாளிகை செய்தித்துறைச் செயலர் ஜே கார்னே இஸ்ரேலுக்கும்
அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றிக் குறைத்துப்
பேசினாலும், வாஷிங்டனின் இராஜதந்திரத் தீர்வு குறித்துப் பலமுறை கூறினாலும்,
“பேச்சுக்களுக்கான
யன்னல் காலவரையற்றுத் திறந்திருக்காது”
என்று எச்சரித்துள்ளார்.
அதே
நேரத்தில் ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ஏற்கனவே உள்ள கடுமையான தடைகளை இன்னும்
கடுமையாக்க முயல்கிறது. இத்தடைகள் அதன் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிகளை பெரிதும்
குறைக்கின்றன. மேலும் அமெரிக்க இராணுவம் பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து கட்டமைத்தலை
மேற்கொண்டுள்ளது. இம்மாதம் பிற்பகுதியில் அமெரிக்காவும் 25க்கு மேற்பட்ட நாடுகளும்
மிக அதிக கண்ணிவெடிகள் தகர்ப்புப் பயிற்சியை பாரசீக வளைகுடாவில் மேற்கொள்ள
இருக்கின்றன. இச்செயற்பாடு தற்காப்பிற்குத்தான் என்று பென்டகன் கூறுகையில், இதன்
நோக்கம் ஈரான் அமெரிக்க தாக்குதல் ஒன்று ஏற்பட்டால் பதிலடி கொடுக்கும் திறனை
மழுங்கடிப்பதாகும்.
இதேபோல்
அமெரிக்காவும் இஸ்ரேலும் அக்டோபர் கடைசியில் இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு எதிரான
முறைகளைப் பரிசோதிக்க முக்கிய கூட்டுப் பயிற்சி ஒன்றிற்குத் தயாரிப்புக்களை
நடத்துகின்றன. ஈரானில் இருந்து வெளிப்படக்கூடிய பதிலடி ஏவுகணைகளின் திறன்களை
இஸ்ரேல் செயலிழக்க செய்யும் வகையில் அமெரிக்கா போர் வாய்ப்பை அதிகப்படுத்துகிறதே
அன்றி, குறைக்கவில்லை. டைம்ஸ் அமெரிக்காவும்
“அடுத்த
சில மாதங்களில் ஒரு புதிய ராடர் முறையை கட்டாரில் நிறுவுவதற்கு விரைந்து
செயல்படுகிறது”
என்று கூறியுள்ளது. அதுவும் இதேபோல் இஸ்ரேல் துருக்கியிலும் ஒப்புமையில் அதேபோல்
இருக்கும் முறைகள் அமெரிக்காவிற்கு கண்டம்தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை
கண்டுபிடித்தல், அவற்றைப் பின்பற்றுதல் மற்றும் சுட்டு வீழ்த்தும் திறனை பெரிதும்
அதிகரிக்கும்.
டைம்ஸ்
கட்டுரை ஒபாமா நிர்வாகம்
ஈரானுக்குள் சில இரகசியநடவடிக்கைகளை முடுக்கிவிடுவது குறித்தும் பரிசீலிக்கிறது
என்ற தகவலைக் கொடுத்துள்ளது. இச்செய்தித்தாள் அமெரிக்க வலைத் தள செயற்பாடு ஒன்றைப்
பற்றி நேரடியாக குறிப்பிட்டுள்ளது. அது
Stuxnet
கணினித்தொற்றை ஈரானின் யுரேனிய அடர்த்தி நிறுவனத்தில் புகுத்தியதுடன், அதன் வாயு
பிரிக்கும் இயந்திரங்களை கட்டுப்பாட்டிற்கு உட்படாமல் செய்துவிட்டது. ஆனால் இது ஒரு
இரகசிய நடவடிக்கைதான். பல ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானிகள் படுகொலைக்கு
உட்பட்டுவிட்டனர். அநேகமாக இவை அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுக உதவியுடன்
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைப் பிரிவினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
வெள்ளை
மாளிகையில் பரிசீலனையில் இருக்கும் ஈரானுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் பெரும்
ஆத்திரமூட்டும் தன்மை உடையவையும், போரையும் ஏற்படுத்தலாம். அவை பகிரங்கமாக
வெளிப்படுத்தப்படுகின்றன என்னும் உண்மையே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின்
பொறுப்பற்ற இராணுவாத தன்மைக்கு சாட்சியம் ஆகும். தெஹ்ரானுடன் அழுத்தங்களை வாஷிங்டன்
அதிகரிப்பது ஈரானின் அணுச்சக்தி ஆயுதங்கள் பற்றிய கவலையினால் அல்ல, மாறாக இது அதன்
பரந்த மூலோபாயமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள எரிசக்தி
செழிப்புப் பிராந்தியங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை சவாலுக்கு இடமின்றி
நிறுவுதலின் ஒரு பகுதிதான். |