சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A lost generation and the struggle for socialism

ஒரு இழந்த தலைமுறையும் சோசலிசத்திற்கான போராட்டமும்

Andre Damon
6 September 2012
use this version to print | Send feedback

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் புதிய கல்வி ஆண்டை ஆரம்பிக்கையில், இளைஞர்கள் பாரிய வேலையின்மை, பொதுக்கல்வி மீது புதிய தாக்குதல்கள் மற்றும் பெருகும் வறுமையை எதிர்கொள்கின்றனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரங்கள் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவர்களில் 25 வயதிற்குட்பட்டோரின் வேலையின்மை விகிதம் 22.5% ஐ தொட்டுவிட்டது என அறிவித்துள்ளது. யூரோ நெருக்கடியில் தத்தளிக்கும் கிரேக்கமும் ஸ்பெயினும் இளைஞர் வேலையின்மையில் 50%க்கும் மேலாக கொண்டுள்ளன.

அனைத்து குறிப்புகளின் படி, பாரிய வேலையின்மை அண்மை வருங்காலத்தில் மோசமாகத்தான் போகும். இளைஞர்களுடைய உலகளாவிய வேலையின்மை 2017ல் 12.9 ஐ தொடும். இது அதன் 2012 மதிப்பீட்டில் இருந்து 0.2 சதவிகிதம் அதிகம் என்று திங்களன்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

வளர்ச்சியுற்ற நாடுகளில், இளைஞர் வேலையின்மை வரவிருக்கும் ஆண்டுகளில் சற்றே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ILO குறிப்பிட்டுள்ளது; இதற்குக் காரணம் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தொழிலாளர் பிரிவில் இருந்தே நீங்கிவிடுவர் என்பதுதான்.

இளைஞர் வேலையின்மை வளர்ச்சிக்கு இடையே, கல்வி மீதான புதுப்பிக்கப்படும் தாக்குதல் குறிப்பிடத்தக்க வகையில் பேரழிவுப் பாதிப்பைக் கொண்டுள்ளது. இளைஞர் வேலையின்மை மற்றும் கல்விச் செலவுகளில் குறைப்பு இவற்றின் இணைந்த விளைவு வேலையிலும் இல்லாமாலும், பள்ளியிலும் இல்லாமலும் இருக்கும் இளைஞர்களின் பெருகிய பிரிவைத் தோற்றுவிக்கிறது. அவர்களுடைய ஒரு தொழில்வாழ்க்கைக்கான சாதகமான தன்மை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பயிற்சிக் கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. கல்வி வழங்குவதற்காக இளைஞர்களிடம் இருந்து நூறாயிரக்கணக்கில் வசூலிக்கின்றனர். பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான விண்ணப்ப மனுக்கள் கிட்டத்தட்ட 8% குறைந்துவிட்டன. ஏனெனில் நூறாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்ந்த பயிற்சி கட்டணம் செலுத்த இயலாததாலாகும்.

அமெரிக்காவில் பொதுக் கல்விமுறை இதேபோல் அழிக்கப்படுவதற்கு உட்பட்டுள்ளது. மாநில மற்றும் உள்ளூர் கல்வி முறை 2008 முதல் சரிந்து விட்டன என்று புதன் கிழமை Center on Bundget and Policy Priorities (CBPP) வெளியிட்டுள்ள ஆய்வு கூறுகிறது.

CBPP அறிக்கை 17 மாநிலங்கள் கல்விப் பிரிவில் 2008 தொடங்கி ஒரு மாணவருக்கு 10%க்கும் மேல் செலவைக் குறைத்துவிட்டன என்று கண்டறிந்துள்ளது. மூன்று மாநிலங்களில் செலவுக் குறைப்பு 20%க்கும் அதிகமாகும். அதிக மக்கள் வாழும் கலிபோர்னியா மாநிலத்தில், ஒரு மாணவருக்கான செலவு என்பது 17% குறைக்கப்பட்டுள்ளது. இல்லிநோய்ஸிலும், டெக்சாஸிலும் இது 11% ஆகும். 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் பள்ளி மாவட்டங்கள் 328,000 வேலைகளுக்கு மேல் அகற்றிவிட்டன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

அதிருஷ்டவசமாக வேலைகிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள இளைஞர்கள் அதிகரித்தளவில் வறுமைநிலை ஊதியத்தைத்தான் பெறுகின்றனர். ஒரு சமீபத்திய National Employment Law Project (தேசிய வேலைச் சட்டத் திட்டம்) 7.69 டாலருக்கும் 13.83 டாலருக்கும் என்று குறைவூதிய வேலைகள் கொடுப்பதுதான் அமெரிக்காவில் 2008 சரிவிற்குப் பின் பெரும்பாலும் நடைபெற்றுவருகிறது என்று கண்டறிந்துள்ளது.

இதற்கு முற்றிலும் மாறாக, பொருளாதாரச் சரிவின்போது வேலை இழப்புக்கள் 60% ஆகவிருந்த நடுத்தர ஊதியம் உடைய வேலைகள் பொருளாதார மீட்சி காலத்தில் 22% வேலை வளர்ச்சியைத்தான் பிரதிபலித்தன. பெரிதும் உயர்ந்து விட்ட பயிற்சிக் கட்டணம், குறையும் ஊதியங்கள் இவை இணைந்துள்ளது கல்லூரிக் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது. இதில் பயில்பவர்களுக்கோ வாழ்நாள் முழுவதும் கடன் நிற்கும் என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.

ஆளும் வட்டத்தில் ஒரு இழந்து விட்ட தலைமுறை என்று முதலாளித்துவ அமைப்பு முறையில் அவநம்பிக்கை கொண்டவர்கள் என்னும் தலைமுறை வந்துவிட்ட நிலை பெரும் அச்சங்களை தூண்டியுள்ளது. அடுத்து ILO தலைமை இயக்குனராக வரவிருக்கும் கை ரைடர் பைனான்சியல் டைம்ஸில் தற்போதைய பரந்த வேலையின்மை மட்டம் சமூக அடிப்படையில் ஏற்க இயலாதவை, ஓரளவிற்கு சமூகத்திற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அரசியல் ஆளும்தட்டின் ஒரு பாதுகாவலர் என்னும் முறையில் அவர் கவலைப்படுவது சரியே. இளைஞர்கள் முகங்கொடுக்கும் பேரழிவு நிலைமைகள் ஏற்கனவே 2011 எகிப்திலும் துனிசியாவிலும் ஆரம்பித்து இந்த ஆண்டு கியூபெக் மாணவர் பகிஸ்கரிப்பு வரை பரந்த சமூக இயக்கங்களுக்கு வழிசெய்துள்ளன.

ஆனால் இப்போராட்டங்கள், இளைஞர்கள் ஒரு கௌரவமான வாழ்வைக் கோரும் பகுதி வெளிப்பாடுகளும் மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினையான, அதாவது ஒரு புரட்சிகர தலைமையின் தேவை என்பதாகிவிட்டது.

எங்கும் படர்ந்திருக்கும் இளைஞர் வேலையின்மை, பொதுக் கல்விமுறையின் மீதான தாக்குதல் போல ஒரு விதிவிலக்கான நிகழ்வல்ல. இவை முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைவாகும். அம்முறை வாழ்க்கையின் அனைத்துக் கூறுபாடுகளையும் செல்வந்தர்களுக்கு இலாபத்தை தோற்றுவிப்பதற்காக அடிபணியச் செய்கின்றது. அதே நேரத்தில் ஆளும் வர்க்கம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான நிலைமையைப் பயன்படுத்தி, ஊதியங்களையும் நலன்களையும் மூத்த தொழிலாளர்களுக்குக் குறைத்தல், மற்றும் மக்கள் முழுத் தொகுப்பையும் வறுமைக்கு உட்படுத்துவது என்ற நிலையில் தள்ள முற்படுகின்றது.

இளைஞர்களுக்கான எதிர்காலப் போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும், ஒரு புதிய வகையில் சமூகத்தை ஒழுங்கமைப்பதற்கான சோசலிசத்திற்கான போராட்டமாகும். இந்த முன்னோக்கை எடுத்துக் கொண்டு, இழிவுற்ற முதலாளித்துவ அமைப்பு முறையை சீர்திருத்துவதற்கு மாறாக அதனுடன் முறித்துக் கொள்வதின் மூலம் மட்டும்தான் இப்போராட்டத்தினால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சமூக நலன்களைக் பாதுகாக்க முடியும்.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும், தங்கள் வாழ்க்கை தரங்களைக் பாதுகாக்கும் முயற்சிக்கான இயல்பான கூட்டு தொழிலாள வர்க்கத்திடம்தான் உள்ளது. பொதுக் கல்வி மற்றும் கௌரவமான வேலைகளை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட இயக்கத்துடன் இணைந்து செயல்படும் முறையில்தான் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கமுடியும் என நம்பலாம்.

புதிய கல்வியாண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு (International Youth and Students for Social Equality) சோசலிச வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்திடம் சார்புடைய ஒரு இயக்கத்தை தீவிரமான முறையில் கட்டிமைக்க முயல்கிறது.

அனைத்து மாணவர்கள், இளைஞர்களையும் சோசலிசத்திற்கான போராட்டத்தை கையில் எடுக்கும்படி நாங்கள் அழைப்பு விடுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாறு மற்றும் முன்னோக்குகளை பயிலுமாறும், International Youth and Students for Social Equality இல் இணையுமாறும் அழைப்பு விடுகிறோம்.