WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan SEP holds election meeting in
Kegalla
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி
கேகாலையில் தேர்தல் கூட்டத்தை
நடத்தியது
By our
reporter
11 August 2012
Back to
screen version
இலங்கையில் சோசலிச சமத்துவ கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக
மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேகாலை நகர மையத்தில்
ஒரு வெற்றிகரமான பொதுக் கூட்டத்தை நடத்தின. செப்டம்பர்
8
அன்று நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக சோ.ச.க. நடத்தும்
தொடர் கூட்டங்களில் இது முதலாவதாகும். இதில் வங்கி,
தபால்,
பொது
நிர்வாக மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சோ.ச.க.-
ஐ.எஸ்.எஸ்.ஈ. குழுவினர், தமிழ் பேசும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் போகொல
காரீய சுரங்க தொழிலாளர்கள்,
அத்துடன் விவசாயிகள்,
இல்லத்தரசிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு
பிரிவினர்
மத்தியில் கூட்டத்துக்காகப் பிரச்சாரம் செய்தன. கட்சியின் தேர்தல் வேலைத் திட்டத்தை
விளக்கும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களும் உலக சோசலிச வலைத் தள
கட்டுரைகளும்
விநியோகிக்கப்பட்டன.
இலங்கை
ஐ.எஸ்.எஸ்.ஈ. அழைப்பாளர் கபில பெர்னான்டோ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர்
சோ.ச.க. தேர்தல் பிரச்சாரமானது வெறும் வாக்குகளை பெறுவதை இலக்காகக் கொண்டதல்ல,
மாறாக தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை வழங்குவதாகும் என
விளக்கி தனது உரையை தொடங்கினார். ஒரு சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராடுவதோடு
சமுதாயத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட தட்டினருக்கும் தலைமை வழங்கக் கூடிய தொழிலாள
வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சியை கட்டுயெழுப்புவதன் மூலம் மட்டுமே, அதிகரித்து
வரும் இளைஞர்களின் வேலையின்மை,
கல்விச் செலவிலான வெட்டு மற்றும் பிற சமூகத் தாக்குதல்களுக்கு பதிலளிக்க முடியும்,
என அவர் தெரிவித்தார்.
சோ.ச.க.யின் 21
வேட்பாளர்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் ஆனந்த தவுலகல பிரதான அறிக்கையை
வழங்கினார். அவர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் நிர்வாகமானது "அரச வளங்கள் மற்றும்
அரசியல் அதிகாரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம்" செய்வதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற
முயற்சிக்கும் என்று கூறினார். பின்னர் அது "மக்கள் அதன் பின்னால் இருக்கின்றார்கள்
என்று மோசடியான முறையில் கூறிக்கொண்டு, அதன் கொள்கைகளுக்கு பெருகிவரும் மக்கள்
எதிர்ப்பை அடக்க முயற்சிக்கும்".
2006
இல் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கிய அரசாங்கம்,
அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் எதிராக ஒரு பொருளாதார
யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று தவுலகல எச்சரித்தார். "இராஜபக்ஷ
அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கோரும் கடுமையான சமூக செலவு வெட்டுக்கள் மற்றும்
தொழிலாளர்களின் ஊதியத்தை முடக்குதல் போன்ற சிக்கன திட்டத்தை செயல்படுத்த எந்த
தயக்கமும் காட்டாது,"
என்று
அவர் கூறினார்.
இராஜபக்ஷவின் பொருளாதார நடவடிக்கைகள் உலக முதலாளித்துவ முறைமையின் ஆழ்ந்த
நெருக்கடியில் இருந்து நேரடியாக ஊற்றெடுக்கின்றது என்று தவுலகல விளக்கினார். "இந்த
நெருக்கடியினால், உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள், மக்கள் கடந்த அரை
நூற்றாண்டு காலமாக போராடிப் பெற்ற சமூக நலன்களை துடைத்துக் கட்டும் இத்தகைய
கடுமையான நடவடிக்கைகளின் ஊடாக அழிவுகரமான சுமைகளை உழைக்கும் மக்கள் மீதும் ஏழைகள்
மீதும் சுமத்த முயற்சிக்கின்றன.”
தொழிலாளர்கள் போராட்டம் இன்றி இந்த தாக்குதல்களை ஏற்க தயாராக இல்லை என்று வேட்பாளர்
கூறினார். கடந்த 18
மாதங்களில் இது வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க மற்றும்
ஐரோப்பா போன்ற உலக முதலாளித்துவத்தின் மையங்கள் வரை உலகம் முழுவதும் வெகுஜன
போராட்டங்களால் நிரூபிக்கப்பட்டது. தூனிசியா மற்றும் எகிப்திய மக்கள், தசாப்த கால
பழைய ஏகாதிபத்திய சார்பு சர்வாதிகாரத்தை கவிழ்த்த போதிலும்,
அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் அங்கு தமது பொம்மை ஆட்சிகளை மீண்டும்
ஸ்தாபிப்பதற்கு தலையீடு செய்தன என தவுலகல எச்சரித்தார்.
"ஒரு
சோசலிச அனைத்துலக முன்னோக்கும் ஒரு புரட்சிகர தலைமையும் இன்றி தொழிலாள வர்க்கம்
முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வெல்ல முடியாது என்பது பூரணமாக
தெளிவாகியுள்ளது,"
என்று தவுலகல தெரிவித்தார்.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் உலக
சோசலிச வலை தளமும் மட்டுமே இந்த வேலைத்திட்டத்துக்காகப் போராடும்
அமைப்புகளாகும் என அவர் தெரிவித்தார்.
"உலகம்
முழுவதும் உள்ள நமது சக சிந்தனையாளர்களுடன் சேர்ந்து சோ.ச.க. முன்னெடுக்கும்
போராட்டம்,
இந்த
முன்னோக்கின் அடிப்படையில்
உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வியூட்டி அணிதிரட்டுவதற்கானதாகும். இந்த
தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லும் செய்தி
இதுவேயாகும்."
கூட்டத்தில் உரையாற்றிய சோ.ச.க. பொது செயலாளர் விஜே டயஸ்,
உலக நிலைமையை பற்றி விரிவான ஆய்வு கேட்க முதல் முறையாக சோ.ச.க. கூட்டத்திற்கு
வந்துள்ளவர்களுக்கு இது "ஒரு புதிய அனுபவமாகும்" என்று தெரிவித்தார். "ஏனைய சகல
கட்சிகளதும் தேர்தல் மேடைகளில் இந்த உலக அபிவிருத்திகள் பற்றி குறிப்பிடுவது கூட
கிடையாது,"
என்று
அவர் கூறினார்.
“நாம்
உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் உலக அரசியலின் ஒரு சகாப்தத்தில் வாழ்வதனால்,
நாம்
உலக
நிலைமை பற்றிய புரிதலின் அடிப்படையிலேயே இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியா நிலைமை
சம்பந்தமான எமது பகுப்பாய்வை தொடங்குகிறோம். எனவே இந்த பிராந்தியத்தில் இடம்பெறும்
வர்க்கப் போராட்டங்கள்,
உலக ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்ளூர் முதலாளித்துவ முகவர்கள் மற்றும் முன்னாள்
தீவிரவாத கைக்கூலிகளுக்கு
எதிராக
சர்வதேச அளவில் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின்
சூழ்நிலையில் இருத்தி மதிப்பீடு செய்யப்பட வேண்டும்."
2008
முதல் தொடங்கிய தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய
சக்திகளின் தீவிரமான புதிய காலனித்துவ கொள்கைகளும் முழு முதலாளித்துவ முறையின் மரண
ஓலத்தின் வெளிப்பாடாகும் என்று டயஸ் விளக்கினார்.
"2011ம்
ஆண்டானது துனீசியா மற்றும் எகிப்தில் ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக நீண்டகாலமாக
ஆட்சிசெய்து வந்த சர்வாதிகாரிகளை வெளியேற்ற அந்த நாடுகளின் மக்கள் மற்றும்
இளைஞர்கள் மேற்கொண்ட ஒரு எதிர்த் தாக்குதலுடன் தொடங்கியது. இந்த பிராந்தியத்தில்
உள்ள உழைக்கும் மக்கள், இங்குள்ள ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கத்திற்கும்
எதிராக வேறு பாதையில் பயணிக்க மாட்டார்கள் என்று நம்புவதற்கு எந்த காரணமும்
கிடையாது.
"அதே
நேரத்தில்,
நாம்,
சோசலிச புரட்சிகர கட்சி என்ற வகையில்,
அந்த நாடுகளில் கிளர்ச்சி செய்யும் மக்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பிரச்சினை,
சோசலிச முன்னோக்கு மற்றும் தலைமை நெருக்கடியே என்று அடையாளம் கண்டுள்ளோம்."
சோ.ச.க.யின் தேர்தல் பிரச்சாரமானது
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அத்தகைய ஒரு
புரட்சிகர தலைமையை உருவாக்குவதன் பேரிலானதாகும் என்று டயஸ் தொடர்ந்தார்.
இந்த
அறிக்கைகளை அடுத்து ஒரு நேரடி கேள்வி பதில் அமர்வு தொடர்ந்தது. ஒரு இளைஞர் "அனைத்து
இடது சக்திகளையும் ஒன்று திரட்டும்" ஒரு திட்டத்தைப் பற்றிய சோ.ச.க.யின் அணுகுமுறை
சம்பந்தமாக கேள்வி எழுப்பினார்.
எல்லா
இடங்களிலும்,
குறிப்பாக இலங்கையின் தொழிலாள வர்க்கம்,
இந்த தவறான வழியைப் பின்பற்றுவதன் மூலம் கசப்பான தோல்விகளால் பாதிக்கப்பட்டன என்று
டயஸ் விளக்கினார். லங்கா சமசமாஜ கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவை
1963
ஆம் ஆண்டு அமைத்த ஐக்கிய இடது முன்னணி அத்தகைய ஒரு அனுபவத்தைக் கொண்டதாகும் என்று
அவர் விளக்கினார்.
"அந்த
இடது முன்னணி,
தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அழிப்பதில் ஒரு தீர்க்கமான வகிபாகத்தை ஆற்றிய
மற்றும் ஒட்டு மொத்த வெகுஜனங்களுக்கும் துயரமான விளைவுகளை கொண்டுவந்த
1964
முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற் படியாக இருந்த்து," என டயஸ்
கூறினார்.
மக்களிடையே ஐக்கியத்துக்கான தூண்டுதலுக்கு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின்
அடிப்படையில், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும்
ஒரு புரட்சிகர கூட்டு அவசியமாகும்
என டயஸ் தெரிவித்தார். "ஆளும் வர்க்கத்துடன் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போட
பல்வேறு வழிகளில் செயற்படும் சகல கட்சிகளையும் குழுக்களையும் அம்பலப்படுத்தி
தோற்கடிக்க புரட்சிகர கட்சி நடத்தும் ஒரு அரசியல் போராட்டத்தின் ஊடாக மட்டுமே இந்த
ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியும்."
பழைய
துரோக "இடது" கட்சிகளுக்கு ஒரு மாற்றாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மக்கள் விடுதலை
முன்னணி (ஜே.வி.பீ.) எவ்வாறு
ஐக்கிய இடது முன்னணி என்ற அதே போக்கை பின்பற்றுகின்றது என்பதை டயஸ் விளக்கினார்.
அது 2004ல்
குமாரதுங்கவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது, பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான
கொடூரமான போரை உக்கிரமாக்கிய இராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வருவதற்கும்
ஒத்துழைத்தது.
போலி
இடது நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இராஜபக்ஷ அரசாங்கத்தை
எதிர்ப்பதன் பெயரில் வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் மேடைகளில் தோன்றின
என்று டயஸ் விளக்கினார். "அவர்கள் அனைவரும் தம்மை
'இடது'
முன்னணி”
என்று அழைத்துக்கொண்ட போதிலும், உண்மையில் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின்
அபிலாஷைகள் இந்த முன்னணிகளுக்குப் பின்னால் கைவிடப்பட்டிருந்தன," என டயஸ்
தெரிவித்தார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சோ.ச.க.யின் அணுகுமுறை, மீது கேள்விகளுக்கு
வழங்கப்பட்டது,
இராஜபக்ஷ அரசாங்கத்தின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு,"
தொழிற்சங்கங்களின் பங்கு மற்றும் சோ.ச.க. எவ்வாறு மக்கள் ஆதரவை பெற முடியும் என்பவை
சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில்கள் வழங்கப்பட்டன. பல
தொழிலாளர்களும் இளைஞர்களும் கூட்டம் முடிந்த பின்னரும் கட்சியின் வேலைத்திட்டம்
பற்றி மேலும் கலந்துரையாடுவதற்காக நின்றிருந்தனர். |