சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

South Africa’s miners and the fear of “contagion”

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களும் “தொற்றுதல்” பற்றிய அச்சமும்

Bill Van Auken
5 September 2012

use this version to print | Send feedback

திங்களன்று பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத் தொழிலாளர்களைக் காயப்படுத்தியமை, ஆகஸ்ட் 16 அன்று 34 வேலைநிறுத்தம் செய்திருந்த பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்களை லோன்மின் மாரிக்கானா சுரங்கத்தில் படுகொலை செய்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்றுள்ளது.

மாரிக்கானவில் நடப்பதைப் போலவே, Gold One’s Modder East சுரங்கத்தில் நடப்பதும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு (NUM) எதிராக தொடக்கப்பட்ட திடீர் வேலைநிறுத்தம் ஆகும். தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய தொழிற்சங்கமும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு தூணுமான NUM மாரிக்கானா படுகொலைகளுக்கு ஆதரவைத் தெரிவித்து போர்க்குணமிக்க சுரங்கத் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் பரவியிருப்பது சுரங்க நிறுவனங்களில் தொட்ரபுடைய முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையைத் தூண்டியுள்ளது; அதேபோல் தென்னாபிரிக்க ஆளும் ANC மற்றும் NUM அதிகாரத்துவத்தில் உள்ள அதன் பங்காளிகளிடையேயும் கவலையைத் தூண்டியுள்ளது. நேற்று NKC Independent Economists ஆலோசனை நிறுவனத்தின் காரி வான் ஸ்டேடன் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் இந்த அச்சங்கள் வெளிப்பாட்டைக் காண்கின்றன: தொற்றுக்கான அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். சுரங்கங்களில் திடீர் நடவடிக்கை பரவுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. என்றார் அவர்.

ஆளும் வர்க்கம் தொற்றைக் கண்டு அஞ்சுகிறது; ஏனெனில் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவு ஒரு பேரழிவு தரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் வெடிப்பை அடையாளம் காட்டி நான்கு ஆண்டுகளுக்குப் பின், தென்னாபிரிக்க தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமை எல்லா இடத்திலும் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் இதன் சமூக உரிமைகளுக்கு முற்றிலும் விரோதப் போக்கைக் காட்டும் அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தை முகங்கொடுக்கிறது; அது கட்சிகளையும், தொழிலாளர்களை பிரதிநிதித்துவதாக கூறிக்கொள்ளும் தொழிற்சங்கங்களையும் கட்டுப்படுத்துகிறது.

வெடிப்புத்தன்மை வாய்ந்த வர்க்கப் போராட்டங்கள் ANC ஆட்சியின் மக்கள் சுதந்திரத்திற்காக போராடுவது என்று நீண்டநாட்களுக்கு முன்பே மங்கிவிட்ட கருத்துக்களை சிதைத்துவிட்டன. ஆளும் வர்க்கத்தின் மூலோபாயங்களை  இயற்றுபவர்கள் இப்பொழுது தம்மைத்தாமே அச்சத்துடன் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் அதிருப்தியில், எந்த அளவிற்கு வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் பரவும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

தென்னாபிரிக்காவில் சட்டபூர்வ நிறவெறி ஆட்சி முடிந்து 18 ஆண்டுகளின் பின்இது பல தசாப்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் எனத் தொழிலாளர்களாலும் ஒடுக்கப்பட்டவர்களாலும் நிகழ்த்தப்பட்டதின் விளைவுவெள்ளைச் சிறுபான்மை ஆட்சியின் போது இலாபம் அடைந்தே அதே சர்வதேச மற்றும் தென்னாபிரிக்க நிறுவனங்களின் நலன்கள் முழுப் பாதுகாப்புடன் உள்ளன. அவை இப்பொழுது ANC, மற்றும் NUM இனால் பாதுகாக்கப்படுகின்றன; இவை ஊழல் மிகுந்த கறுப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் நம்பிக்கைக்கு உகந்த முதலாளிகள் சார்பிலும் பேசுகின்றனர்; அவர்கள்தான் நிறவெறி ஆட்சி முடிந்த பிந்தைய காலத்தில் கறுப்பர் பொருளாதாரச் சக்தியளிப்பு என்பதின் முழு நலன்களையும் பெற்றவர்கள். தென்னாபிரிக்கத் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்களை பொறுத்தவரை, இதில் முதுகெலும்பை முறிக்கும் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த தொழலில் மாதம் ஒன்றிற்கு 300 டாலருக்கும் குறைந்த்த ஊதியத்தை பெறும் தொழிலாளர்கள் அடங்குவர் வெள்ளைச் சிறுபான்மை ஆட்சியில் இருந்ததைப் போலவே வாழ்க்கை, பணி நிலைமைகள் அதேஅளவில் அல்லது இன்னும் மோசமாகவே உள்ளன.

ஆகஸ்ட் 16 படுகொலைகளில் இறந்துபட்ட சுரங்கத் தொழிலாளியான தன் தந்தையின் உடலைத் தேடுவதற்கு மாரிக்கானாவிற்கு வந்துள்ள 22 வயதான கடிசோ மோசெபெட்சனே, தொழிலாளர் தொகுப்பினரின் உணர்வுகளைச் சுருக்கிக் கூறினார்: உங்களுக்கு எதிராக முதலாளி, அரசாங்கம், பொலிஸ், இன்னும் தொழிற்சங்கம் கூட இணைந்து செயல்படுகின்றன. இவை அனைத்தும் உங்களைக் காப்பதற்கு உள்ளன எனக் கருதுப்படுகிறது; ஆனால் அவர்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனஇதுதான் இனப்பாகுபாடு. என்று இண்டிபென்டென்டிடம்  அவர் கூறினார்.

தென்னாபிரிக்க சுரங்கங்களில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு, அமெரிக்காவில் கிறைஸ்லர் தொழிலாளர்கள், ஐரோப்பாவில் லுப்ட்தான்சாவின் விமான குழுக்கள், ஆசியாவில் ஹூண்டாய் தொழிலாளர்கள், பிரேசிலில் பொதுத்துறை ஊழியர்கள் என ஒவ்வொரு கண்டத்திலும் அலையென நடக்கும் போராட்டங்களுக்கு இடையே வந்துள்ளது. இப்போராட்டங்கள் பெருகிய முறையில் இருந்துவரும் தொழிற்சங்ங்களுக்கு எதிரான பகிரங்க எழுச்சியாக உள்ளன. இந்த அமைப்புக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் வரை அவற்றின் எழுச்சிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நெரிக்கப்பட்டு, தோற்கடிக்கப்படுகின்றன.

அனைத்து இடங்களிலும் இளம் தென்னாபிரிக்க தொழிலாளி ஒருவரின் சொற்களில், நாம், முதலாளி, அரசாங்கம், பொலிஸ், ஏன் தொழிற்சங்கங்கள்கூட ஒன்றாக இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம்; இவை தொழிலாள வர்க்க்திற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சி என்று கூறக்கூடியதைச் சுமத்துகின்றன. இதுதான் நெருக்கடிக்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் விடையிறுப்பு ஆகும்.

தென்னாபிரிக்காவில் NUM உடைய பங்கை விளக்குகையில் பலரும் சிரில் ராமபோசா இன் வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றனர்; இவர் 1980 களில் தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்கி, 1990 களின் ஆரம்ப ஆண்டுகளில் ANC  இன் பொதுச் செயலாளர் ஆனார். அத் தசாப்தத்தின் இறுதியில் தனியார் துறையில் நுழைந்து பெரும் ஏற்றத்தை அடைந்து தென்னாபிரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராகி, சொந்தச் சொத்துக்களை 239 மில்லியன் டாலர் அளவிற்கு சேமித்தார். லோன்மின் இயக்குனர் குழுவில் ஓர் உறுப்பினராக அவர் உள்ளார்; இந்நிறுவனம் பிளாட்டினச் சுரங்கத் தொழிலாளர்களை அடக்கியமுறைதான் வேலைநிறுத்தம், படுகொலைகள் என்று கடந்த மாதத்தில் நிகழ வகைசெய்தது.

மீண்டும், தென் ஆப்ரிக்கா வரலாற்றில், இது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழங்கியிருக்கிறது ஆனால் இந்நிகழ்வு ஒன்றும் தனிப்பட்டது அல்ல. அமெரிக்காவில் ஐக்கிய கார்த்தயாரிப்பு தொழிலாளர்களின் சங்கம் (UAW) கிறைஸ்லரின் பங்குகளில் 55% ஐக் கொண்டுள்ளது; UAW அதிகாரி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ஒருவராக உள்ளார். தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் போலவே, Dundee கிறைஸ்லர் எஞ்சின் ஆலை என்று மிச்சிகனில் இருக்கும் கார்த் தொழிலாளர்கள், UAW பேரம் பேசியிருந்த உள்ளூர் உடன்படிக்கையை நிராகரித்தவர்கள், இந்த தொழிலாளர் அமைப்பு என அழைக்கப்படுவதை ஒரு விரோதியாக எதிர்கொள்வதுடன், நிறுவனத்தின் ஒரு நேரடிக் கருவி என்றும்தான் எதிர்கொள்கின்றனர்.

தென்னாபிரிக்க NUM சுரங்க நிறுவனங்களுக்கு இலாபத்தைத் தோற்றுவிக்கும் அடக்குமுறை நிலைமைகளை தக்க வைப்பதில் ஒரு பொருள்சார் நலன்களை கொண்டிருப்பதுபோல், UAW உம் இரட்டை அடுக்கு ஊதிய முறைகள், 12 மணி நேரப் பணிநேர முறை, ஒரு மணி நேரத்திற்கு 9 டாலர் ஊதியம் என்றும் ஒப்பந்த வேலைகள் ஆகியவற்றை சுமத்துவதில் நேரடிப் பணயத்தை கொண்டுள்ளது. இது ஊழல் மற்றும் காட்டிக் கொடுப்பு என்று ஏதேனும் ஒரு தொழிற்சங்க அதிகாரியால் நடத்தப்படும் பொருள் அல்ல, இந்த அதிகாரத்துவங்கள் அனைத்தும் பெருவணிகத்தின் கருவிகளாகி தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டுப்பாட்டை சுமத்தும் அமைப்புக்களாகிவிட்டன.

தென்னாபிரிக்காவில் இது NUM என்னும் காட்சியைக் கொடுத்துள்ளதுஇந்த அமைப்பு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதாக கூறிக் கொள்கிறது; ஆனால் அவர்களை பொலிசார் படுகொலை செய்வதற்கு ஒழுங்கமைக்க உதவுகிறது. ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையும்போது இதையொத்த விடையிறுப்பைத்தான் கொடுக்கும்.

அமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் இருப்பதைப் போலவே, தென்னாபிரிக்காவிலும், தொழிலாள வர்க்கம் இந்த அமைப்புக்களில் இருந்து முறித்துக் கொண்டு ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும்; அது அரச அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டு, சோசலிச கொள்கைகளை தொடரவேண்டும்; சுரங்கங்கள், வங்கிகள், பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அமைப்புக்களாக மாற்ற வேண்டும்.

இந்த இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, ஒரு நனவான சர்வதேசிய மூலோபாயத்தை ஆயுதமாகக் கொள்ள வேண்டும்