World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Four South African miners shot as strikes spread after Marikana massacre

மாரிக்கானா படுகொலைகளுக்குப் பின் வேலைநிறுத்தங்கள் பரவுகையில், நான்கு தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் சுடப்பட்டனர்

By Alex Lantier
4 September 2012
Back to screen version

Gold One’s Modder East operation இல், நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டதில் நான்கு தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டங்களை வேலைநிறுத்தத்தை முறிக்கப் பயன்படுத்தினர்.

Modder East இல் மீண்டும் வேலைக்குச் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிய பணிநீக்கம் செய்யப்பட்ட 200 சுரங்கத் தொழிலாளர்களுடனான மோதலில் பொலிசார் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். பொலிஸ் காப்டன் பிங்கி சின்யனே பொலிசார் சுட்டத்தில் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் காயமுற்றனர், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.

எதிர்ப்புத் தெரிவிக்கும் சுரங்கத் தொழிலாளர்களில் சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டிருந்தனர்; இதைத்தவிர சுரங்கத் தொழிலாளர்களின் குழு ஒன்று ஜூன் மாதம் NUM எனப்படும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு எதிராக திடீர் வேலைநிறுத்தம் செய்தபோது நீக்கப்பட்டனர். ஜூன் மாத வேலைநிறுத்தம், PTAWU எனப்படும் போக்குவரத்து, மற்றும் அத்துடன் இணைந்த தொழிலாளர்களின் தொழில் நிபுணத்துவ சங்கம் சுரங்கத்தில் அங்கீகாரத்தை பெறும் நோக்கில் இருந்தது.

தற்போதைய துப்பாக்கிச்சூடு, வேலையை தொடக்குவதற்காக ஜூன் மாத வேலைநிறுத்தத்திற்குப் பின் மீண்டும் சேர்க்கப்பட்ட மற்ற சுரங்கத் தொழிலாளர்களை, எதிர்ப்புத் தெரிவிக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் தடுக்க முயற்சிக்கையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது வெளிப்படை.

Gold One விடுத்த அறிக்கை ஒன்றின்படி, இக்குழு சுரங்கத்திற்கு வரும், வெளியே செல்லும் பாதைகள் அனைத்தையும் தடுப்பிற்கு உட்படுத்தியது, செயற்பாடுகளை அணுக முயன்ற வாகனங்கள் மீது கற்களை எறிந்தது. தென்னாபிரிக்க பொலிஸ் துறை SAPS அதிக அளவில் குழுவிடம் பேசி, அந்த உறுப்பினர்களிடம் கூட்டம் சட்டவிரோதமானது என்றும் கலைந்து போகுமாறும் வேண்டியது. குழு அதை மறுத்துவிட்டது. கிட்டத்தட்ட காலை 11.30 மணிக்கு, SAPS கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை குழுவைக் கலைக்க இயக்கினர். Modder East செயற்பாடுகளை அணுகுதில் இதற்குப்பின் மீண்டும் எளிதாயிற்று.

Gold One இன் தலைமை நிர்வாக அதிகாரி நீல் ப்ரோன்மன் PTAWU வை வேலைநிறுத்தத்திற்காகக் குறைகூறினார்; ஏனெனில் அது தன் உறுப்பினர்களை வேலையை திரும்ப பெறுவதற்கு போராடுவதில் இருந்து விலக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. “PTAWU சரியாகப் புரிந்து கொள்ளவில்லை... அவர்கள் தங்கள் உறுப்பினர்களிடம் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.  அவர்கள் தாங்கள் தவறாகப் பணிநீக்கம் செய்யப்பட்டோம் என நம்புகின்றனர். அது அவ்வாறு அல்ல. என்று தொழில்துறை வெளியீடான Mineweb  இடம் ப்ரோன்மன் கூறினார்.

PTAWU வின் தலைவர் பேகி மிதெம்பு நேற்றைய துப்பாக்கிச் சுட்டைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றார். தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக Gold One மீது ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

Modder East துப்பாக்கிச் சூடு, லோன்மின் மாரிக்கானா சுரங்கத்தில் வேலைநிறுத்தம் செய்த 34 பிளாட்டினம் தொழிலாளர்களை பொலிசார் படுகொலை செய்து மூன்று வாரங்களுக்குள் நடந்துள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிஸ் (ANC) அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை துப்பாக்கிச் சூட்டில் கொன்றது பலரும் முதுகில் சுடப்பட்டனர் அல்லது பொலிஸ் வாகனங்கள் அவர்கள்மீது ஏற்றப்பட்டு இறந்து போயினர் சர்வதேச அளவிலும் தென்னாபிரிக்காவிலும் மக்கள் கருத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தி, ANC உடைய வலதுசாரி, வணிகச் சார்பை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிஸ் (ANC), தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து, வெள்ளை சிறுபான்மை நிறவெறி ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்க்களால் ஆட்சியை அகற்றிய பின்னர் 1994 ல் ஆட்சிக்கு வந்த அது ஒரு முதலாளித்துவ சார்பு கட்சியாகும். அது தென்னாபிரிக்க வணிகச் செயல்களில் கணிசமான செல்வாக்கை பெற்றுவிட்டது. தன் வர்க்க நலன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச முதலீட்டாளர்களின் நலன்களைப்  பாதுகாக்க அது இரக்கமின்றிச் செயல்படுகிறது.

ANC அரசாங்கம் மாரிக்கான படுகொலைகளில் இருந்து தப்பிய 270 தொழிலாளர்கள் மீது போலிக் கொலைக் குற்றச்சாட்டுக்களை, இனப்பாகுபாடு காலத்தில் இருந்த பொது நோக்கு சட்டங்களின் கீழ் பதிவு செய்தது. இச்சட்டம் வன்முறையான பொலிஸ் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது பொலிஸ் மிருகத்தனத்திற்குப் அவர்கள்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்ட அனுமதிக்கிறது; அவர்கள்தான் அத்தகைய பொலிஸ் எதிர்கொள்ளலை ஏற்படுத்தியதற்குப் பொறுப்பு என்னும் சட்டபூர்வக் கட்டுக்கதையின் கீழ் இது நடத்தப்பட்டது.

ANC பொதுமக்கள் கோபத்தைத் தணிக்கும் வகையில் மாரிக்கான சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. நேற்று காவலில் உள்ள 270 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 100 பேர் விடுவிக்கப்பட்டனர்; இன்னும் சில குழுக்கள் வரவிருக்கும் நாட்களில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெப்ருவரி மாதம் சுரங்கத் தொழிலாளர்களை பொது வன்முறை என்ற காரணத்திற்கு குற்றவிசாரணைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது; அதற்குள் பொதுமக்கள் எதிர்ப்பு மங்கிவிடும், சுரங்கத் தொழிலாளர்கள் மீது தண்டனைகளை சுமத்துவது எளிதாகிவிடும் என்று அது நம்புகிறது.

புதிய தென்னாபிரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றம் சார்ந்த தன்மையும், Modder East ல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தங்கச் சுரங்கத் தொழிலாளர்களின் தற்போதைய வேலைநிறுத்தத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

Modder East செயற்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட அரோரா என்பதால் நிர்வகிக்கப்படுகிறது; இக்குழுவில் ஜனாதிபதி ஜாகப் ஜுமாவின் சகோதரர் மகன் குலுபுஸ் மற்றும் ஜோண்வா மண்டேலா—ANC  யின் வரலாற்றுப் புகழ் பெற்ற தலைவரான நெல்சன் மண்டேலாவின் பேரர் ஆகியோர் அடங்குவர். இவ்விருவரும் சுரங்கத்திற்கு விலை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது; ஆனால் அதன் சொத்துக்களை அபகரித்து இப்பொழுது இழந்தவர்களின் வழக்குகளுக்கு உட்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான டாலர்களை வேலையில் இருந்து அகற்றப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க வேணடும் என்னும் நீதிமன்ற உத்தரவுகளையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர்.

ஒரு வெகுஜன எழுச்சி, COSATU எனப்படும் தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸுடன் இணைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக வளர்வது குறித்து ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது; இவை ANC ஆட்சியுடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதின் பாகமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குகின்றன.

NKC Independent Economists என்பதில் ஒரு பகுப்பாய்வாளராக இருக்கும் Gary van Staden, ராய்ட்டர்ஸிடம்கூறினார்: தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன். சுரங்கங்களில் திடீர் வேலைநிறுத்தங்கள் பரவுதலை நாம் காண்பதற்கு உள்ளோம்.

கோல்ட் பீல்டின் KGD Gold Mine நிறுவனத்தில் 12,000 தொழிலாளர்களின் சட்டவிரோத திடீர் வேலைநிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது; உள்ளூர் NUM கிளையின் தலைமையை சுரங்கத் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர் என்ற தகவலுக்கு இடையே இது ஏற்பட்டுள்ளது.

கோல்ட் பீல்ட்ஸ் உடைய செயற்பாட்டு துணைத் தலைவர் பீட்டர் டர்னர் Mineweb  இடம் நிறுவனம் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றத் தடையைச் சுமத்துவதைப் பரிசீலிக்கையில், அது NUM  உடன் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு இணைந்து செயல்படுவதை விரும்புகிறது என்றார். இந்தக் கட்டத்தில் எங்கள் விருப்பம் NUM தலைமைக்கு அதன் உட்பூசல்களை அமைதியாகத் தீர்க்க உதவுவதுதான்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தொழிலாளர்களுக்கு எதிராகப் பெரும் வன்முறையைச் செயல்படுத்துகையில் உயரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை  முகங்கொடுக்கையில், அது சுரங்கத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உலக முதலீட்டாளர்களுக்கு எதிர்ப்புக்கள் அவர்களுடைய இலாபங்களைக் குறைத்து விடாது என உத்தரவாதம் அளிக்க முற்படுகிறது. சுரங்கத் துறை மந்திரி சூசன் ஷுபாங்கு கடந்த வாரம் சமீபத்தியத் தொழிலாளர் வன்முறை தென்னாபிரிக்காவில் முதலீட்டுத் திறனைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டிருந்ததை அது மேற்கோளிட்டுள்ளது.

நேற்று அரச திணைக்கள மந்திரி கோலின்ஸ் ஷபானே செய்தியாளர்களிடம் கூறினார்: மாரிக்கானாவில் நடந்த பெரும் சோக நிகழ்வு தென்னாபிரிக்காவில் வணிகச் சூழலின் பிரதிபலிப்பு அல்ல. நிலைமையை அரசாங்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை தொடர்ந்து நன்கு உள்ளது. நேரடி முதலீடு, உரிய ஊக்கங்கள் ஆகியவற்றிற்கு நாடு தொடர்ந்து முழுமையாக ஆதரிப்பதுடன், முதலீட்டு முடிவுகள், வரைகாலப் பாதுகாப்பு குறித்த கணிப்புக்களில் நம்பிக்கையை அளிப்பதற்குத் தேவையான சட்ட வடிவமைப்பும் தொடர்ந்து இருக்கிறது.

இத்தகைய கருத்துக்கள் உத்தியோகபூர்வ வட்டங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு எனக் கூறப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; இவை அரசாங்கத்தின் வன்முறைச் செயற்பாடுகளையும், தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களை நசுக்கும் நோக்கத்தையும், நிதிய முதலீட்டிற்காக சுரங்கங்களின் தொடர்ந்த இலாபகரமான நிலை உறுதிப்படுத்தப்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.