செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
அமைதியின்மை பரவுகையில் படுகொலை செய்யப்பட்ட தென்னாபிரிக்க சுரங்கத்
தொழிலாளர்களின் இறுதிச் சடங்குங்கள் நடைபெற்றன
By Julie Hyland
3 September 2012
use this version to print | Send
feedback
ஆகஸ்ட் 16ம் திகதி பொலிசாரால் படுகொலை செய்யப்பட்ட 34 பிளாட்டினம்
சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று
நடைபெற்றன.
ஜோஹன்னஸ்பேர்க்கிற்கு அருகே உள்ள மாரிக்கானா சுரங்கத்தில் நடந்த
கொலைகள்,
ஒரு மாதத்திற்கு வெறும் 500 டாலர் மட்டுமே பெற்றுவந்த மிக ஆபத்தான, முதுகெலும்பை
முறிக்கும் நிலையில் கற்களைத் தோண்டிவந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை
இங்கிலாந்தை தளமாக கொண்ட லோன்மின் நசுக்க எடுத்த முயற்சியாகும்.
முன்னாள் இனப் பாகுபாடு ஆட்சிக்காலத்தில் வாடிக்கையாக
செயல்படுத்தப்பட்ட மிருகத்தனத்தை நினைவுபடுத்தும் நிகழ்வைத்தான் பொலிசார் மற்ற 70
தொழிலாளர்களை காயப்படுத்தியது அமைந்தது. இத்தகைய வழிமுறைகள் ஆபிரிக்க தேசிய
காங்கிரஸ் அரசாங்க காலத்திலும்—“கறுப்பருக்கு
சக்தி அளித்தல் என்று உபதேசம் செய்வது—நடந்துள்ளது
பரந்த சீற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
கொலையுண்டவர்களின் பலரும் கிழக்குக் கேப் பகுதியில் இருந்து
வந்தவர்கள். ஒரு கிராமத்தில் இறுதிச் சடங்குகள் வேலைநிறுத்தம் செய்த
Phumzile Sokhanuyile
க்கும்
மற்றும் தன்னுடைய மகன் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டுச் சரிந்து உயிர்நீத்த
அவருடைய தாயார்
Glorious Mamkhuzeni-Sokhanyi
இருவருக்கும் நடந்தன.
லோன்மின்னுக்கும், தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கம்,
தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தில்
(NUM)
இருந்து பிரிந்து வந்த
AMCU
எனப்படும் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டமைப்புத் தொழிலாளர் சங்கத்தின்
பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற அரசாங்கம் இடைத்தரகராக இருந்தபோதிலும்
வேலைநிறுத்தம் தொடர்கிறது.
NUM
ஐ பேச்சுக்களில் சேர்த்தது ஒரு ஆத்திரமூட்டலுக்கு ஒப்பாகும்,
அதுவும் வேலைநிறுத்தத்தை அது கண்டித்து பொலிஸ் அடக்குமுறைக்கு ஆதரவையும் கொடுத்தது.
வெள்ளிக்கிழமை அதன் 28,000 தொழிலாளர்களில் 6%க்கும் குறைவானவர்கள்
வேலைக்கு வந்தனர் என்று நிர்வாகம் கூறியது; இது படுகொலை நேரத்தில் இருந்த 30%த்தில்
இருந்து சரிந்துள்ளது.
தொழிலாளர் அமைதியின்மை தங்கச் சுரங்கங்களுக்கும் பரவியது. புதன்
அன்று
Gold
Fields
எனப்படும் உலகின் நான்காம் மிகப் பெரிய தங்கச் சுரங்கத்தின் 46,000 தொழிலாளர்களில்
கால்வாசிப் பேர் ஜோஹன்ஸ்பேர்க்கிற்கு மேற்கே உள்ள
KDC
சுரங்கத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
KDC
தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, கானா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் 8 சுரங்கங்களை
நடத்துகிறது. தென்னாபிரிக்காவில்
Gold
Fields
மிகப் பெரிய சுரங்கம் ஆகும்.
ஓர் அறிக்கையில் நிறுவனம் எழுதியது:
“(ஜோஹன்ஸ்பேர்க்)
மேற்கு ராண்டிலுள்ள
KDC
Gold Mine
ல்
கிழக்குப் பிரிவில் உள்ள ஊழியர்கள் சட்டவிரோத, பாதுகாப்பற்ற வேலைநிறுத்தத்தில்
புதன் கிழமை இரவுப் பணிமுறையின் தொடக்கத்தில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.”
மாரிக்கானா படுகொலைகள் மற்றும் பரவும் வேலைநிறுத்த நடவடிக்கைகள்
தென்னாபிரிக்க அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளன.
தென்னாபிரிக்க அரசாங்க வக்கீல்கள் நேற்று மாரிக்கானாவின் 270
பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிரான போலிக் கொலைக் குற்றச்சாட்டுக்களை
திரும்பப்பெற்றனர். கடந்த வாரம் தேசிய குற்றவியில் துறை (NPA),
தங்களது 34 சகாக்களை சுரங்கத் தொழிலாளர்கள் கொலை செய்த குற்றத்திற்காக நிறவெறி கால
“பொது
நோக்க”
சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்று
அறிவித்திருந்தது. மேலும் இதற்கு முன் நேற்று காலை ஜனாதிபதி ஜாகப் ஜுமா தான்
சுரங்கத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்குத் தலையிடுவதாக இல்லை என்று கூறினார்.
NPA
உடைய அறிவிப்பை மீறியும், சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் காவலில்
உள்ளனர்; இந்த வாரம் அவர்கள் விடுவிக்கப்படுவதாக இருந்தது.
குற்றச்சாட்டுக்களை மீண்டும் கொண்டு வரும் வாய்ப்பையும் அரசு
கருதுகிறது. தேசிய குற்றவியில் பிரிவின் இடைக்கால இயக்குனரான நோம்ங்கோபோ ஜிபா,
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில்,
“இறுதிக்
குற்றச்சாட்டுக்கள் அனைத்து விசாரணைகளும் முடிந்தபின்தான் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய 270 சந்தேகத்திற்குரியவர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்களும்
நீதிமன்றத்தில் முறையாக தற்காலிகமாக திரும்ப பெறப்படும்”
என்றார்.
NPA
குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறுவது என்பது,
பொதுமக்கள் சீற்றம், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு எனப் பெருகும்
நிகழ்வினால் அதிகாரிகள் மீது கட்டாயமாயிற்று.
சுரங்கத் தொழிலாளர்களின் வக்கீல்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில்,
குற்றச்சாட்டுக்கள்
“தீவிரமான
அபத்தம் ஆகும்.... (நீங்கள்) உண்மையிலேயே எங்கள் தரப்பினர் தங்கள் சொந்தச் சக
ஊழியர்களையும் சில நிகழ்வுகளில் தங்கள் சொந்த உறவினர்களையும் கொன்றனர் என நம்புவது
அல்லது சந்தேகிப்பது கற்பனை செய்தும் பார்க்கப்பட முடியாதது ஆகும்.”
என்று கூறியுள்ளனர்.
கசிந்து வந்துள்ள சடலப் பரிசீலனை அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களில்
பலரும் ஒரு கொலைக்காரப் பொலிஸ் தாக்குதலில் இருந்து தப்பியோட முயற்சிக்கையில்
முதுகில் சுடப்பட்டனர் என்பதைக் குறிக்கின்றன.
Pulitzer
பரிசு
பெற்ற புகைப்படக்காரர் கிரெக் மரினோவிச்,
Wonderkop Hill
படுகொலைகள் நடந்த இடத்தில் இருந்து எழுதியுள்ள குறிப்பில் சிலர் மிக அருகில்
இருந்து சுடப்பட்டனர் அல்லது கனமான பொலிஸ் வாகனங்களால் ஏற்றிக் கொல்லப்பட்டனர் எனக்
கூறப்பட்டுள்ளது. நேரில் பார்த்தவர்களின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு
பார்க்கையில்,
மரினோவிச் பலரும் புகைப்படத்தில் படம் எடுக்க முடியாத மட்டத்திற்கு
கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார். பொலிஸ் பொறியில் அகப்பட்ட அவர்கள் சுடப்பட்டனர்
அல்லது அவர்கள் மீது வாகனங்கள் ஏற்றப்பட்டன.
சாட்சிகளை பேட்டி கண்ட ஜோகன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்
பேராசிரியர் பீட்டர் அலெக்சாந்தர் மற்றும் பிறர் நடத்திய ஆய்வினாலும் இக்குறிப்பு
ஆதரவு பெறுகிறது.
கொலைக்குற்றச்சாட்டுக்கள் குறித்த பொதுமக்கள் சீற்றத்தை
எதிர்கொள்கையில், நீதித்துறை மந்திரி ஜெப்ரி ராடெபீ இவை
“சமூகம்
மற்றும் தென்னாபிரிக்க மக்களிடையே அதிர்ச்சி, பீதி மற்றும் குழுப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது”
என்று புகார் கூறியுள்ளார்.
ராடெபீயின் குறைகூறலைப் பற்றி விமர்சித்த
BBC
யின் தென்னாபிரிக்க அரசியல் பகுப்பாய்வாளர் ரால்ப் மதேக்கா,
“இது
NPA
உடைய முடிவு சுயாதீனமாக எடுக்கப்பட்டது, அரசாங்கத்திற்கு இதில் பங்கு இல்லை என்ற
உணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு வெறும் முகப்புத்தான்”
எனத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
நீதித்துறையில் அரசாங்கத்தின்
“குறுக்கீடு”
குறித்த முந்தைய குறிப்புக்களை மேற்கோளிட்டு---
NPA
உடைய முடிவான 2009ல் ஜுமாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் கைவிட்டது போன்றவை—மதேக்கா
எழுதினார்:
“சாதாரண
தென்னாபிரிக்கர்களின் பார்வையில், அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள லோன்மின் சுரங்கத்
தொழிலாளர்களின் இழப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்தி செய்ய முயல்கிறது;
அவர்களோ இன்னும் பாதிப்பிற்கு உட்படுகின்றனர்.”
கைது செய்யப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களில் மூன்றில் இரு பகுதிக்கும்
மேலானவர்கள் தாங்கள் காவலில் இருக்கும்போது அடித்துச் சித்திரவதைக்குட்பட்டதாக
அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலரும் காச நோயினாலும்
HIV/Aids
னாலும் அவதிப்படுகின்றனர்; முறையான மருத்துவப் பாதுகாப்புப்
பெறமுடியாமல் உள்ளனர். பலரும் நீதிமன்றச் செயற்பாடுகளைக் கவனிக்கக் கூட
அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றத்தில் இடம் இல்லை எனக் காரணம்
கூறப்படுகிறது.
“வெள்ளையர்
ஆட்சி மற்றும் வெள்ளை முதலாளித்துவத்தின் மீது நீண்டகாலமாகக் குவிப்புக்
காட்டப்பட்டுள்ள கோபம்
ANC
மீது திரும்பியுள்ளது. தென்னாபிரிக்காவின் சுதந்திரக் கட்சி இப்பொழுது நடைமுறைக்
கட்சி ஆகியவிட்டது. வெள்ளை வணிக வர்க்கத்துடன் இது ஆழ்ந்த பிணைப்புக்களை
நிறுவியுள்ளது; அதன் ஏற்கும் நடவடிக்கைக் கொள்கைகள் மூலம் ஒரு சிறிய, ஆனால் செல்வம்
படைத்த கறுப்பர் உயரடுக்கு வெளிப்பட்டுள்ளது. மரியாதைக்குரிய இடதுசாரித்
தொழிற்சங்கங்கள்கூட வசதி இல்லாதவர்களால் வசதியுடையவர்களுக்கு இணங்கி நடக்கும்
அமைப்புக்களாகக் காணப்படுகின்றன.”
என்று நியூ யோர்க் டைம்ஸ் ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது.
ANC
மற்றும் முத்தரப்புக் கூட்டில் அதன் பங்காளிகளும்
—COSATU
தொழிற்சங்கக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி—
தொடர்ந்து மாரிக்கானாவில் தொழிலாளர் அமைதியின்மை என்பது,
AMCU
உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத சுரங்கத் தொழிலாளர்களால்
NUM
ஐக் குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்புபவர்களின்
“குற்றச்
செயல்களின்”
விளைவு என்று கூறுகின்றன.
இத்தகைய கூற்றுக்கள்
Gold
Fields
இல்
நடக்கும் எதிர்பாரா வேலைநிறுத்தத்தை ஒட்டி நம்பகத்தன்மையை இழக்கின்றன.
AMCU
விற்குத் தங்கச் சுரங்கங்களில் பிரதிநிதித்துவம் இல்லை. தங்க
உற்பத்தியாளர்களும் ஒரு கூட்டுப் பேரமுறையைக் கைப்பிடிக்கின்றனர்; இது மாரிக்கான
நிகழ்வுகள் போன்றவை மீண்டும் வராமல் இருப்பதற்குச் சுரங்கத் தொழில் முழுவதிலும்
விரிவாக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.
Gold Fields
வேலைநிறுத்தம் மற்றும் மாரிக்கானா நிகழ்விற்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்று
NUM
மறுத்துள்ளது. சமீபத்திய பூசல்,
நிறுவனம் கட்டாய இறுதிச் சடங்குத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த விரும்புவதில்
இருந்து வந்துள்ளது; இதன்படி அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் ஊதியங்களில் இருந்து
69 ராண்டுகள் குறைத்துப் பெறுவர். ஆனால்
Gold
Fields, NUM
இயற்றிய கட்டாய இறுதிச் சடங்குத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.
தென்னாபிரிக்க வணிக வலைத் தளமான
BDLive
கருத்துப்படி,
“சுரங்கத்தில்
தொழிலாளர் பிரிவு ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய
NUM
கிளைத் தலைமை, தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அதிருப்தி அடைந்துள்ளது என்றும் முன்னாள்
கிளைத் தலைவர் தன்னைச் சுற்றித் தொழிலாளர்களை ஈர்த்துள்ளார்”
என்றும் தெரிவிக்கிறது.
Mineweb
எழுதுகிறது:
“NUM
பிரதிநிதிகள், சுரங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்கள் பூசலைத் தீர்க்க
முயல்கின்றனர்.”
Gold Fields
வேலைநிறுத்தம்,
“மிருதுவான
முயல்வோர்கள்”
என அழைக்கப்படும்
ANC,
COSATU, NUM
தலைவர்களுக்கு --தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு
உதவிப் பெரும் செல்வக்குவிப்பு கொண்டவர்கள்—
எதிராக தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பு குறித்துத்தான்
தெரிவிக்கிறது.
NUM
உடைய
நிறுவனரும்
ANC
இன் முன்னாள் தலைமைச் செயலருமான சிரில் ராமபோசா லோன்மினில் மறைமுகப் பங்குகளை
கொண்டுள்ளார். அவருடைய ஷாண்டுகா முதலீட்டு நிறுவனம் லோன்மின்னின் முக்கிய கறுப்பர்
பொருளாதார சக்தி உடைய பங்காளி
Incwala Resources
ல் பெரும்பாலான பங்குகளைக் கொண்டுள்ளது; அதைத்தவிர ராமாபோசா
லோன்மின்னின் இயக்குனர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். |