WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய வங்கிகள் பிணையெடுப்பை நாடுகையில் உலக உற்பத்தி சரிகிறது
By
Andre Damon
4 September 2012
use this version to print | Send
feedback
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் உற்பத்தி நடவடிக்கைகள் சுருக்கமடைகையிலும் மற்றும்
ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் வங்கிகள் மேலதிக பிணையெடுப்புக்களை கோருவதன் மத்தியிலும்
ஒரு உலகளாவிய வீழ்ச்சி ஆழமடைவதற்கான அடையாளங்கள் அதிகரிக்கின்றன.
வெள்ளியன்று
வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 17 நாடுகள் கொண்ட யூரோப்பகுதியில் உற்பத்தி
13வது தொடர்ச்சியான மாதமாக சுருக்கமடைந்தது.
PMI (Purchasing
Managers’ Index) எனப்படும்
சந்தை உற்பத்தி வாங்குவோர் மேலாண்மைக் குறியீடு யூரோப்பகுதிக்கு 45.1 என முந்தைய
45.3 ல் இருந்து திருத்தப்பட்டது. இது 50க்குக்கீழ் எந்த எண்ணிக்கையென்றாலும் அது
சுருக்கத்தையே குறிக்கும்.
இப்பகுதியில் மிகச்சக்தி வாய்ந்த பொருளாதாரமான ஜேர்மனி குறிப்பிடத்தக்க வகையில்
பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மூன்று ஆண்டுகளில் மிகக்
குறைந்தளவிற்கு ஏற்றுமதிகள் அங்கு குறைந்தன. ஐரோப்பியக் கடன் நெருக்கடியினால்
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து தேவைகள் குறைந்துவிட்ட நிலையில் இது இவ்வாறு
உள்ளது. ஜேர்மனிய
PMI
சிறிது
உயர்ந்தாலும், அது 44.7 என்றுதான் இருந்தது.
கடந்த வாரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின்
(EU),
புள்ளிவிவர
அமைப்பான யூரோஸ்ட்டாட் யூரோப்பகுதியில் வேலையின்மை 11.3 என ஆகிவிட்டது என
அறிவித்துள்ளது. இது 1999ல் ஐரோப்பிய நிதிய ஒன்றியம் அமைக்கப்பட்டதில் இருந்து மிக
உயர்ந்த வேலையின்மை அளவு ஆகும்.
ஜூலை மாதம்
கிட்டத்தட்ட 88,000க்கும் மேலாக யூரோப்பகுதி மக்கள் வேலையிழந்தனர். இது மொத்த
எண்ணிக்கையை 18 மில்லியனாக ஆக்கியுள்ளது. வேலையின்மை விகிதம் ஸ்பெயினில் .2
புள்ளிகள் உயர்ந்து 25.1% எனவும், கடந்த ஆண்டு 16.8 என இருந்த கிரேக்கத்தின்
வேலையின்மை விகிதம் .5 அதிகமாகி 23.1% என்றும் ஆயிற்று.
இளைஞர்
வேலையின்மை இன்னும் மோசமாகியுள்ளது. ஸ்பெயினில் வசிப்பவர்களில் 25
வயதிற்குட்பட்டவர்களில் 52.9% வேலையில்லாதுள்ளனர். கிரேக்கத்தில் இது 53.8% என
உள்ளது.
ஐரோப்பியப்
பொருளாதாரம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுருங்கியுள்ள நிலையில், ஜேர்மனி
சுருக்கத்தைத் தவிர்த்துள்ளது. ஆனால் இத்தகைய விளைவு மூன்றாம் காலாண்டில் இராது
எனத் தோன்றுகிறது; ஏனெனில் பல பாரிய வேலைநீக்கங்களும், வெட்டுக்களும் ஏற்பட உள்ளன.
ஜேர்மனியில்
இரண்டாம் பெரிய மின்சக்தி நிறுவனமான
RWE
ஆகஸ்ட் 14ம்
திகதி அதன் மொத்த தொழிலாளர் பிரிவான 72,000த்தில் இருந்து 2014க்குள் 10,400
வேலைகளை நீக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் ஜெனரல்
மோட்டார்ஸ் வேலைநாளை அதன் இரு ஓப்பல் ஆலைகளில் குறைத்தது. இது 15,500
தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்தி
PMI
46ல் இருக்கும் பிரான்சில் இதேபோல் பொருளாதாரச் சுருக்கத்தைச் சுட்டிக்
காட்டுகிறது. நாட்டில் அதிகம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான
கார்த்தயாரிப்பு நிறுவனமான
Peugeot,
இந்த ஆண்டு முன்னதாக 6,500 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டங்களை
அறிவித்தது.
யூரோப்
பொருளாதாரம் மீண்டும் மூன்றாம் காலாண்டில் சுருங்கும் என்று பகுப்பாய்வாளர்கள்
எதிர்பார்க்கின்றனர். இந்நிகழ்வு இப்பகுதியில் உத்தியோகபூர்வமாக இரண்டாம் மந்தநிலை
மூன்று ஆண்டுகளுக்குள் ஆரம்பிப்பதை குறிக்கும். யூரோப்பகுதியின் பொருளாதாரம்
முந்தைய ஆண்டின் .1% வளர்ச்சியுடன் இது ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இரண்டாம்
காலாண்டில் 0.2 சதவிகிதம் குறைந்தது.
யூரோப்பகுதியில் சரிவு என்பது உலகச் சரிவின் ஒரு பகுதி ஆகும். ஆசியப்
பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த இருப்பிடமான சீனாவில் உற்பத்தி 2008-09 கீழ்நோக்கிய
சரிவுகளிலேயே தீவிரமான விகிதத்தில் சுருக்கத்தை அடைந்தது. அதன் சீன உற்பத்தி
வாங்கும் மேலாளர் குறியீடு ஆகஸ்ட் மாதம் 47.6 என ஆயிற்று என்று
HSBC
குறிப்பிட்டுள்ளது. இது மார்ச் 2009க்குப் பின் மிக மோசமான குறியீடு
ஆகும். இது முந்தைய மாதத்தில் இருந்த 49.3 ல் இருந்து குறைவாகும்.
சீன
அதிகாரிகள் இச்சரிவை யூரோப்பகுதியில் ஏற்பட்டுள்ள சரிவினால் ஏற்பட்டவை
எனக்குறிப்பிட்டுள்ளனர். இது சீன ஏற்றுமதிகளையும் கீழ்நோக்கி
இழுத்துக்கொண்டிருக்கிறது. ஜேர்மனி மற்றும் சீனா போன்ற முக்கிய ஏற்றுமதி நாடுகளில்
உற்பத்திச் சுருக்கம் என்பது ஆஸ்திரேலியா போன்ற அடிப்படைப் பொருட்களை உற்பத்தி
செய்யும் நாட்டையும் கீழிறக்குகிறது. ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் சரியும்
இரும்புத்தாதுப் பொருட்களின் விலையினால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.
தென்
கொரியாவிலும் தைவானிலும் இதேபோல் உற்பத்தி சுருங்கிவிட்டது. தென் கொரியாவின்
PIM குறியீடு ஆகஸ்ட்
மாதம் 47.6 என்று இருந்தது. தைவானில்
PMI
47.5 ல்
இருந்து 46.1 எனச் சுருக்கம் அடைந்தது. தென் கொரிய ஏற்றுமதிகள் ஓராண்டிற்கு முன்பு
இருந்ததைவிடக் கடந்த மாதம் 6.2% குறைந்துவிட்டது. இதற்குக் காரணம்
யூரோப்பகுதிகளுக்கான ஏற்றுமதிகள் 9.3%இனால் குறைந்துவிட்டதுதான்.
கடந்த வாரம்
ஜப்பானிய அரசாங்கம் அதன் பொருளாதார எதிர்பார்ப்பை முதல் தடவையாக 10 மாதங்களில்
குறைந்தது. இதற்குக் காரணம் அதன் பொருளாதாரம் 3.4% மே மாதத்தில் குறைந்தது, ஜூன்
மாதம் .4%தான் வளர்ந்திருந்தது. சனிக்கிழமையன்று பிரெஞ்சு அரசாங்கம் அடைமானக் கடன்
கொடுக்கும்
Credit Immobilier de
Franceக்குப்
பிணையெடுப்பு தரும் என அறிவித்தது. சிக்கலுக்குள்ளாகியுள்ள கடன் கொடுக்கும்
நிறுவனத்தை எவரேனும் வாங்குவரோ என்னும் முயற்சிகள் தோற்றபின் இந்த அறிவிப்பு
வந்துள்ளது.
ஸ்பெயினின்
அரசாங்கத்தின் வங்கிப் பிணையெடுப்பு நிதி இதற்கிடையில் மே மாதம் 19.5 பில்லியன்
யூரோக்களை பிணையெடுப்பாகப் பெற்றிருந்த பாங்கியாவிற்கு மேலும் 4.5 பில்லியன்
யூரோக்களை (5.66 பில்லியன் அமெரிக்க டாலர்) வழங்குவதாக அறிவித்துள்ளது. இப்புதிய
பிணையெடுப்பு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் முதல் அரையாண்டுக் காலத்தில் 4.5
பில்லியன் நஷ்டம் என்று அறிவித்தபின் வந்துள்ளது. ஏனெனில் வாங்கிய கடன்கள்
திருப்பிக் கொடுக்கமுடியாமல் இருப்பது அதிகமாகியுள்ளது.
அதிகரிக்கும் உலக வீழ்ச்சிக்கும் தீவிரமாகும் ஐரோப்பியக் கடன் நெருக்கடிக்கும்
இடையே, வங்கிகளும் முக்கிய பெருநிறுவனங்களும் யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம்
வெளியேறினால் அதை எப்படி முகங்கொடுப்பது என்ற திட்டங்களைத் தயாரிக்கின்றன. அத்தகைய
நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்குக் கொடுக்கும் கடனை நிறுத்திவிடும்.
ஏராளமான திவால்கள் மற்றும் அதன் நிதியமுறை முறிதலை தடுக்க கிரேக்கம் அதன் முன்னைய
நாணயமான டிராஷ்மாவை அச்சிடும் கட்டாயத்திற்கு உட்படும்.
“அமெரிக்க
வங்கியின் மெரில் லிஞ்ச் வாகனங்களில் ரொக்கத்தை நிரப்பி அவற்றைக் கிரேக்க எல்லைக்கு
அனுப்பும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதனால் வேறு பணம் கிடைக்காவிட்டால்
வாடிக்கையாளர்கள் சாதாரண ஊழியர்களுக்கும் பொருள் விநியோகத்தர்களுக்கும் கொடுக்க
முடியும்”
என்று நியூயோர்க் டைம்ஸ்
திங்களன்று தகவல் கொடுத்துள்ளது.
“போர்ட்
தன்னுடைய கணினி முறைகளை ஒரு புதிய கிரேக்க நாணயத்தை உடனே கையாளும் வகையில் மாற்றி
அமைத்துள்ளது.”
இதேபோல்
JP Morgan Chase
புதிய டிராஷ்மாக் கணக்கில்
பெரிய நிறுவனங்களின் கணக்குகளை மாற்றித் தோற்றுவித்துள்ளது என டைம்ஸ்
அறிவித்துள்ளது. பெருநிறுவன நிர்வாகக் குழு (Corporate
Executive Board)
என்னும் ஆலோசனை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களில் 80% கிரேக்கம் யூரோப்பகுதியை
விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கிறார்கள் என்றும் மற்றும் ஐந்தில் ஒரு பகுதியினர்
மற்ற நாடுகளும் நீங்கும் என எதிர்பார்க்கின்றனர் என்றும் கூறியுள்ளது.
தற்பொழுது
காணப்படும் பொருளாதாரச் வீழ்ச்சி, ஐரோப்பிய நிதிய முறையில் உள்ள பெரும்
பாதிப்புக்கள் ஆகியவை வியாழன் அன்று நடைபெற உள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் அடுத்த
கூட்டத்தில் முக்கியத்துவம் பெறும். தற்பொழுது இது 0.75 சதிகிதம் என உள்ள
யூரோப்பகுதியின் அடையாள வட்டிவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள்
கூக்குரல் இடுகையில் எத்தகைய வழிமுறை இந்த நெருக்கடியை முகங்கொடுக்கக் கையாளப்பட
வேண்டும் என்பது பற்றி யூரோ அங்கத்துவ நாடுகளிடையே ஆழ்ந்த பிளவுகள் உள்ளன.
லெஹ்மன்
பிரதர்ஸ் சரிவிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின், உலகம் மற்றொரு நிதியக் கரைப்பை
நோக்கிச் செல்லுகிறது என்பது குறித்த அடையாளங்கள் தான் தென்படுகின்றன. இது 2008
உடன் ஒப்பிடக்கூடிய கரைப்பாக இருக்கலாம். ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை
எதிர்கொள்ளும்வகையில், ஒரு சுற்று ஊதியக் குறைப்பு, சிக்கன நடவடிக்கை ஆகியவற்றை
மேற்கொண்டுள்ள அதே நேரத்தில் பொருளாதாரச் சரிவு அதிகரிக்கையில் டிரில்லியன் கணக்கான
யூரோக்கள் வங்கிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன.
பாரிய
வேலையின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்பு
Unilever
என்னும்
அலங்காரப்பூச்சுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான
Jan Zijderveld
ஆல் அப்பட்டமாக கூறப்பட்டுள்ளது. பைனான்சியில் டைம்ஸிற்கு கொடுத்த பேட்டி
ஒன்றில் அவர் “ஐரோப்பாவிற்கு
மீண்டும் வறுமை வந்துவிட்டது”
என்று அறிவித்துள்ளார்.
தன்னுடைய நிறுவனம் இப்புதிய நிலையை சாதகமாகப்பயன்படுத்தும் வகையில்
வளர்ச்சியடையும் நாடுகளில் முன்னோடியாக இருக்கும் விநியோகிக்கும் வழிமுறைகளை
இறக்குமதி செய்ய இருப்பதாகக் கூறினார்.
“இந்தோனேசியாவில்
நாங்கள் ஷாம்பூ மாதிரிகளை 2-3 சென்ட்டுக்களுக்கு விற்கிறோம், அப்படியும் அதில்
இலாபம் கிடைக்கிறது”
என்றார் அவர்.
|