WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் கிரேக்கத்தில் சிறப்புப் பொருளாதார பகுதிகளுக்கு
அழைப்பு விடுகிறார்
By Ernst Wolff
4 September 2012
use this version to print | Send
feedback
ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் ஐரோப்பிய
பாராளுமன்றத்தின் தலைவருமான
Martin Schulz,
கிரேக்கத்தில் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள்
(SEZs)
நிறுவப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். வார இறுதியில் அவை
நிறுவப்படுவதற்கு ஆதரவாக அவர் பேசி, ஒரு
“வளர்ச்சி
நிறுவனம்”
தோற்றுவிக்கப்பட வேண்டும், இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெற்கு ஐரோப்பிய
நாட்டில் சீர்திருத்தங்களைச் சுமத்துவதற்கு அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
கணிசமான பெருநிறுவனங்கள் இலாபங்கள் மீது வரிகளை செலுத்துவது தவிர்க்கும் போது இந்த
நடவடிக்கைகள்,
சர்வதேச நிறுவனங்கள் பட்டினி ஊதியம் மூலம் கிரேக்கம் தொழிலாளர்களை
சுரண்ட அனுமதிக்கும்.
சர்வதேச நிறுவனங்கள் மிகவும் சாதகமான நிலைமைகளைஅனுபவிக்க சிறப்புக்
கட்டுப்பாடுகளை அளிக்கும் நாடுகளுக்குள் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள்
அமைக்கப்படுகின்றன. இத்தகைய நலன்களில்,
பெருநிறுவனங்களுக்கு குறைந்த வரிகள், உதவித் தொகைகள் அளித்தல்,
சிறப்புச் சுங்க நடவடிக்கைகள், முதலாளிகளின் செலவுகள் குறைக்கப்படுதல் அல்லது
அகற்றப்படுதல், பணியிடங்களில் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படுதல், சுற்றுச் சூழல்
கட்டுப்பாடுகள் வலிமையற்று இருத்தல், கூட்டுப் பேரம் அகற்றப்படுதல் ஆகியவை
அடங்கும்.
Schulz
இன்
கருத்துப்படி,
சிறப்பு பொருளாதார பகுதிகளை
(SEZs)
தோற்றுவிப்பதினால் ஏதென்ஸ் பகுதிகளில்
“சில
அதிகாரங்களை அளிக்கும்”
என்றார்; ஆனால் அதன்பின் இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில்
ஐரோப்பிய ஒன்றியம்
“ஆக்கிரமிக்கும்
சக்தி அல்ல, உதவி அளிக்கும் கருவி”
என்றார்.
இத்தகைய சிறப்பு பொருளாதார பகுதிகளை எவர் கட்டுப்படுத்தவர் என்பது
குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கிரேக்க அரசாங்கம் கடந்த வாரம்
இக்கருத்திற்கு ஆதரவு தருவதாகக் குறிப்பிட்டு, தனி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக
தானே சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவ இருக்கும் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும்
கூறியுள்ளது.
“இப்பகுதிகளில்
உண்மையான பொருளாதாரம் முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து நகர்வதன் மூலம்
ஏற்றுமதிகளுக்கும் ஏற்றம் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்”
என்று வளர்ச்சித்துறை மந்திரி
Costis Hatzidakis
ஒருசெய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்துடன் இந்த
நிகழ்ச்சிநிரல் பற்றிய பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கிரேக்கத்தில் அத்தகைய
பகுதிகள் நிறுவப்படுதல் என்பது,
ஜேர்மனிய அரசாங்கத்தின் ஒரு முன்முயற்சியிலேயே காணப்படலாம். மே 25, 2012 ல் வார ஏடு
Der
Spiegel
பேர்லினின்
ஆறு அம்சத் திட்டம் ஒன்றைப் பற்றி தகவல் கொடுத்தது; அதில் நிதிய ஒன்றியத்தின்
நெருக்கடியில் இருக்கும் எல்லைப் புற நாடுகளில் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகிளை
ஏற்படுத்துதல், அரசாங்க நிறுவனங்களை தனியார் நிதிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும்
ஜேர்மனிய
Treuhand
மாதிரியில் விற்றல், வேலையின்மையைக்குறைக்கும் வகையில் வேலைப் பாதுகாப்புக்களை
தளர்த்தல், வேலை ஒப்பந்தங்கள் குறைந்த வரிச்சுமையுடன் அறிமுகப்படுத்துவதை
விரைவுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.
பேர்லினில் உள்ள அரசாங்கம் ஆரம்பத்தில் இத்திட்டங்களை
உத்தியோகபூர்வமாக உறுதி செய்ய மறுத்தாலும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்
Steffen Seibert
ஜூன்
மாதம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கிரேக்கத்தின் வருங்காலம் பற்றிய
“சிந்தனைக்கு
ஒரு பரந்த பரிசீலனை தேவை”
என்பதை ஒப்புக் கொண்டார்.
ஆகஸ்ட் மாத நடுவில், ஜேர்மனியப் பொருளாதார மந்திரி
Philipp Rösler
இதன்
பின் அனைத்து தடுப்புக்களையும் கைவிட்டு, கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஆணையத்திடம்
கிரேக்க பொருளாதாரத்தை
“புதுப்பிக்க”
சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் நிறுவப்படுதல் குறித்து பேச
வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இன்றுவரை, சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள், சீனா, இந்தியா, வட
கொரியா, ரஷ்யா, வியட்நாம், மோல்டோவா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் இருப்பவை
போல் ஒரே ஒரு ஐரோப்பிய நாட்டில்தான்—போலந்தில்தான்—உள்ளன.
இவை அங்கு 1990களில் தோன்றின; ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்தும் போலந்து 2011 ஐ
ஒட்டி சிறப்புப் பகுதிகளின் வரி நலன்களை அகற்ற ஒப்புக் கொண்டது; சிறப்புப் பகுதிகளே
2018 ஐ ஒட்டி அகற்றப்படும் என்றும் கூறியது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கிரேக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன்
அத்தகைய பகுதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கிறது என்னும் உண்மை,
தொழிலாளர்கள் மீது அதிதீவிர தாக்குதல் ஏற்படும் என்ற பொருளைக் கொடுக்கும். உடனடியாக
வருங்காலத்தில் இந்த நடவடிக்கை கிரேக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கும்
நோக்கத்தைக் கொண்டாலும், இது ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் முழுவதற்கும் நீண்டக்கால
அளவில் பாதிப்பைக் கொடுக்கும். இந்த ஆண்டு கிரேக்கத் தொழிலாளர்களின் மாதாந்திர
ஊதியம் 751 யூரோக்களில் இருந்து 586 யூரோக்கள் (மொத்தத்தில்) என்று
குறைக்கப்பட்டுவிட்டன. மற்ற ஐரோப்பிய நாடுகளும் கிரேக்கத்தின் உதாரணத்தைப்
பின்பற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்படும்; சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் நிறுவப்பட
வேண்டும் என வலியுறுத்தப்படும்; இது போட்டித்தன்மையில் ஊதியங்கள் குறைப்பிற்குத்
தூண்டும்; கண்டத்தில் பல தசாப்தங்களாகக் காணப்படாத அதி சுரண்டல்கள் ஏற்படும்.
இத்திட்டங்களின் பின்னணியில் கிரேக்கம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் ஆகியவை நிர்ணயித்த செலவுச் சேமிப்பு
இலக்குகளை அடையவில்லை என்ற உண்மை உள்ளது. பிரதம மந்திரி சமரஸ் கடந்தவாரம்தான்
இலக்குகளை அடைவதற்கு
“இன்னும்
அவகாசம்”
வேண்டும் என்று கோரினார்; இது கிரேக்கம் யூரோப் பகுதியில் இருந்து
வெறியேற்றப்பட வேண்டும் என்ற அழைப்புக்களை தூண்டியது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய நடவடிக்கையை தற்பொழுது தவிர்க்க
விரும்புகிறது; ஏனெனில் முக்கிய சர்வதேச வங்கிகளும்,
அதையொட்டி உலக நிதி அமைப்பும்,
விளைவுகளை இன்னும் கணக்கிட முடியாது உள்ளன. கிரேக்கம் விலகுவது
என்பது கிரேக்கச் சொத்துக்களுக்கு குறைமதிப்பு என்ற பொருளாகும்; இது இத்தாலி,
ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நெருக்கடிப் பாதிப்பிற்கு உட்பட்ட நாடுகளில்
வங்கிகளில் பணம் போட்டவர்கள் அதை எடுத்துக் கொள்ள ஓடும் கட்டாயத்தை ஏற்படுத்தும்;
அது கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போய்விடும். இச்சூழலில், கிரேக்க மற்றம்
ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கிரேக்க தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை இன்னும்
தீவிரமாக்கும் வழிவகைகளை நாடுகின்றன.
மூடிய கதவுகளுக்குப் பின் விவாதிக்கப்படும் சிறப்புப் பொருளாதாரப்
பகுதிகள் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளன என்பது கூட்டாட்சிப் பொருளாதாரத் துறை
அமைச்சரகத்தால் கடந்த வெள்ளியன்று கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் காணப்படலாம். ஜூலை
மாத இறுதியில் கிரேக்கத்திற்கு
“முதலீடு
குறித்த உச்சி மாநாடு தேவை”
என்று அழைப்புக் கொடுந்த மந்திரி
Rösler
அக்டோபர் மாத முதல் வாரத்தில் ஏதென்ஸிற்கு ஜேர்மனிய வணிகப்
பிரதிநிதிகளுடன் பறந்து செல்வார். இந்த உத்தியோகபூர்வ பயணத்திற்கான காரணம் பல
ஜேர்மனிய நிறுவனங்கள் கிரேக்கத்தில் உள்ள புதிய நிலைமைகளில் இருந்து இலாபம் காண
வேண்டும் என்ற வேண்டுகோள்களை விடுத்திருப்பதுதான். |