சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party (US) holds National Congress

சோசலிச சமத்துவக் கட்சி(அமெரிக்கா) தேசிய காங்கிரஸை நடத்துகிறது

30 August 2012

use this version to print | Send feedback

எதிர்வரும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளம், ஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாம் தேசிய காங்கிரஸில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை வெளியிடவிருக்கிறது. பிரதான தீர்மானமானசோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்இன்று பிரசுரிக்கப்படுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) தனது இரண்டாவது தேசிய காங்கிரஸை மிச்சிகன் மாநிலம் டெட்ராயிட்டில் ஜூலை 8-12, 2012 தேதிகளில் நடத்தியது. இந்த காங்கிரஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்”, “2012 தேர்தலும் சோ... பிரச்சாரமும்”, “தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்”, மற்றும்சமூக சமத்துவத்திற்கான  சர்வதேசிய இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை  கட்டுவோம் ஆகிய நான்கு தீர்மானங்களை  ஒருமனதாக  ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவெங்கிலும் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கனடா, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில்  இருந்து சர்வதேசப் பிரதிநிதிகளும் கணிசமாக பங்குபெற்றிருந்தனர்.

கட்சியின் முன்னிலை உறுப்பான ஒரு புதிய தேசியக் குழுவை காங்கிரஸ் தேர்வு செய்தது. தேசிய அளவிலான தலைவராக டேவிட் நோர்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்வருகின்ற தேசிய குழு ஜோசப் கிஷோரை தேசிய செயலாளராக மீண்டும் தேர்வு செய்தது, லோரன்ஸ் போர்ட்டர் தேசிய உதவிச் செயலாளராகவும், பாரி கிரே உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காங்கிரஸை தொடங்கி வைத்துப் பேசிய டேவிட் நோர்த், தற்போதைய உலகப் பொருளாதார  மற்றும்  அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசினார். அவர்  கூறினார்:

“1930களுக்குப் பின் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரும் பொருளாதார, அரசியல், மற்றும் சமூக நெருக்கடி நிலவுகின்றதிற்கு இடையே இந்த காங்கிரஸ் நடந்து கொண்டு இருக்கிறது. வேலை வளர்ச்சியில் தேக்கம் தொடர்வதும், அமெரிக்காவிற்குள் உற்பத்தி விளைபொருட்களின் அளவு கூர்மையாக சிதைவு கண்டுள்ளதும் ஒருமீட்சிநடந்து கொண்டிருப்பதாக ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து கூறி வரும் கூற்றுகளை ஒரு கேலிக்கூத்தாக்குகிறது.

 “அமெரிக்கப் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான சாத்தியப்பாடு என்பது ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்குள்ளான தீவிரமடையும் நெருக்கடியால் ஏறக்குறைய இல்லை என்றாகி விட்டது. சீனாவின் மத்திய வங்கியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் ஒரேசமயத்தில் வட்டி விகிதங்களை வெட்டுவதும், அத்துடன் தனது ஊக்குவிப்புத்திட்டத்தை மேலும் முடுக்கி விடுவதற்கான Bank of England இன் முடிவும் ஆளும் உயரடுக்கினுள் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை துரிதமாக மோசமடைந்து கொண்டிருக்கிறதுஎன்கிற பரவலான நம்பிக்கை நிலவுவதற்கு சாட்சியம் கூறுகின்றன.

 “இந்த நெருக்கடி என்பது, நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, வெறுமனே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியதல்ல மாறாக -சந்தர்ப்பவசமானது என்பதைக் காட்டிலும் அதிகமாய்- ஒரு அமைப்புமுறைரீதியாக தோன்றியிருப்பதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் ஸ்திரநிலைக்கும் மையமாய் அமைந்திருந்த ஸ்தாபனங்களின் முறிவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். யூரோவின் தோல்வி என்பது 1945க்குப் பின் அபிவிருத்தி செய்யப்பட்ட ஐரோப்பியஐக்கியம்என்ற ஒட்டுமொத்த திட்டத்தின் முறிவை அடையாளப்படுத்துகிறது.

ஆனால் நடப்பது ஸ்தாபனங்களின் நிலைக்குலைவு மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கமே சிதைந்து கொண்டிருக்கிறது. நிதிமயமாக்க - இதனை சமகாலப் பொருளாதார அறிஞர் ஒருவரின் வரையறையை இரவல் பெற்றுச் சொல்வதானால், இலாபமீட்டல் என்பது வர்த்தகம் மற்றும் பண்ட உற்பத்தியின் மூலமாக நடைபெறுவதைக் காட்டிலும் நிதி வழிகளின் மூலமாகத் தான் அதிகம் ஏற்படுத்தப்படுகிறதான ஒரு திரட்சி வகையை இது குறிக்கிறது - நிகழ்வு பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தையும், அதனுடன் சேர்த்து, முதலாளித்துவ சமூகம் குற்றவியல் தன்மையின் ஆழமான சரிவுகளுக்குள் நிறுத்த முடியாமல் சரிந்துள்ளதையும் குறிக்கிறது.” 

பொருளாதார நெருக்கடி நீடித்த அரசியல் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று நோர்த் கூறினார்:

நாம் வரலாற்று அபிவிருத்தியின் ஒரு நீண்ட கட்டம் முடிவுக்கு வந்திருப்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம். உண்மையில், வரலாற்று அபிவிருத்தியின் ஒரு புதிய கட்டத்திற்குள், உலக வரலாற்றின் மாபெரும் சமூகக் கொந்தளிப்புகளால் அடையாளம் காணப்படுகிற ஒரு கட்டத்திற்குள், ஏற்கனவே பிரவேசித்திருக்கிறோம் என்று கூறுவதே இன்னும் சரியாக இருக்கும். இதுதான், 2008 இன் நெருக்கடி 1914, 1929, மற்றும் 1939 ஆம் ஆண்டுகளின் நெருக்கடிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது என்கிற பிரதான தீர்மானத்தின் திட்டவட்டமான கூற்றின் அர்த்தமாகும்.

 “நான்காம் அகிலத்தின் வரலாற்று அபிவிருத்தியின் நிலைப்பாட்டில் இருந்து இந்த திருப்பத்தின் அரசியல் தாக்கங்களை புரிந்து கொள்வது தான் இந்த காங்கிரசுக்கு முன்னால் இருக்கும் பணியாகும். எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தை பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு ட்ரொட்ஸ்கி ஆரம்பித்தார்: ‘உலக அரசியல் சூழ்நிலை என்பது ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் வரலாற்று நெருக்கடியின் மூலமாகவே பிரதானமாக குணாதிசயப்படுத்தப்படுகிறது.’ உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக முன்னேறிய நெருக்கடிக்கான தனது பொறுப்பைத் தீர்மானிப்பதில், இந்த காங்கிரஸ் பின்வரும் கேள்வியைக் கவனத்திற்கெடுக்க வேண்டும்: உலக முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகளுக்கும் மற்றும் வர்க்க போராட்டங்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு இடையிலான இடைத்தொடர்புகள் குறித்த ஒரு ஆய்வின் உள்ளடக்கத்திற்குள், தொழிலாள வர்க்க தலைமை நெருக்கடியை எவ்வாறு மதிப்பீடு செய்கிறோம்?”

இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகள் மற்றும் எதிர்ப்புரட்சிகளில் இருந்தான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டதில் வேரூன்றிய அரசியல் வேலைத்திட்டங்களைக் கொண்ட சோ... மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் நலன்களைப் பிரதிபலிக்கின்ற போலி-இடது அமைப்புகளின் அணுகுமுறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நோர்த் சுட்டிக் காட்டினார். உதாரணமாக, பிரான்ஸில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA), 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் எழுந்த அரசியல் பிரச்சினைகளின் மீது எந்த நிலைப்பாட்டையும் தான் கொண்டிருக்கவில்லை என்று சமீபத்தில் அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி நோர்த் கூறினார்:

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், NPA வரலாற்று  தவிர்ப்புவாதத்தை- (Abstentionism) பின்பற்றுகிறது. பாரிய வரலாற்றுக் கேள்விகளுக்கு அதன் பதில், ட்ரொட்ஸ்கி ஒருமுறை பேர்ன்ஹாம் தொடர்பாகக் கூறியதைப் போல, ‘மன்னியுங்கள், நான் புகைப்புடிப்பதில்லைஎன்பது தான். கடந்த காலத்தைப் பற்றிச் சொல்வதற்கு அதனிடம் ஒன்றுமில்லை. உலக வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தின் படிப்பினைகளின் வழியாக வேலை செய்யாமல் எந்தப் பிரச்சினையிலும் உறுதியான கொள்கையை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்று ஒருவர் தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். ரஷ்யப் புரட்சியை, சோவியத் ஒன்றியத்தின் தன்மையை, ஸ்ராலினிசத்தை, ஏகாதிபத்திய உலகப் போர்களை அது வெறுமனே கடந்து செல்ல விரும்புகிறது. அவை எல்லாம் எப்படி மறக்கப்பட முடியும்? அரசியல் நிகழ்வுகளுக்கு எல்லாம் முற்றிலும் தோற்றப்பாட்டுவாத முறையில் (impressionistic), அவ்வப்போதைக்கான அடிப்படையில் இது பதிலிறுப்பு செய்கிறது. இத்தகையதொரு வழிமுறை - இது அதன் சமூக இருப்பில் வேர் கொண்டிருக்கிறது - மிகவும் சந்தர்ப்பவாதமான, தொலைநோக்கற்ற அத்துடன் பிற்போக்குத்தனமான அரசியலைத் தவிர வேறொன்றையும் உருவாக்க முடியாது.” 

ஜோசப் கிஷோர்  முதலாம் தீர்மானத்தை அறிமுகம் செய்தார். எகிப்தியப் புரட்சி, விஸ்கான்சினில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள், கிரேக்கத் தேர்தல் மற்றும் ஐரோப்பாவிலான சமூக எழுச்சிகள், மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் ஆகியவை உள்ளிட, 2011 இன் தொடக்கத்திலிருந்தான சர்வதேச வர்க்கப் போராட்ட அபிவிருத்தியில் இடம்பெற்ற முக்கியமான அத்தியாயங்களின் மீது இது கவனம் செலுத்துகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதென்பது அதிலிருந்து பிரிக்கவியலாமல் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு இட்டு சென்று கொண்டிருக்கிறதுஎன்று அத்தீர்மானம் கூறுகிறது. “புரட்சிகரப் போராட்டங்களின் தவிர்க்கவியலா தன்மையை முன்கணிப்பதும், பின் அவை விரிந்து செல்வதற்குக் காத்திருப்பதும் மட்டும் போதுமானதல்ல. பரந்த போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, எல்லாவற்றிற்கும் முதலாய் அதன் மிக முன்னேறிய பிரிவுகளிடையே, ஒரு கணிசமான அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அதனால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும்.”

ஆளும் வர்க்கம், தனது அரசியல் மற்றும் சித்தாந்த மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கான முனைப்பில், எண்ணற்றஇடதுஅமைப்புகளின் சேவைகளையே நம்பியிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் குறிப்பிட்டுக் காட்டியது. தீர்மானத்தில் இந்த அமைப்புகளின் பாத்திரத்தைக் கையாளுகின்ற பகுதிகளைக் குறிப்பிட்ட கிஷோர் கூறினார்: “கடந்த ஒன்றரை வருட காலமானது தொழிலாள வர்க்கத்திற்கு, தலைமையின் முக்கியத்துவத்தின் மீதும், அதே விடயம் தொடர்பில், நடுத்தர வர்க்க போலி-இடதுகளின் பாத்திரம் மீதும் மிக முக்கியமான பல படிப்பினைகளை அளித்திருந்தது. எகிப்தில், புரட்சிகர சோசலிஸ்டுகளும் மற்றும் பிற போலி-இடது போக்குகளும் பரந்த மக்களின் எழுச்சியை முதலாளித்துவ சக்திகளுக்குப் பின்னால் திசைதிருப்பி விட்டன, அதன் மூலம் அவை இராணுவ சர்வாதிகாரத்தைப் பராமரிப்பதற்கு உதவின. முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பைத் தொடர்ந்து புகழ்ந்து வரும் இவை எதிர்ப்புரட்சியைத் திணிப்பதற்கு இராணுவத்துடன் முஸ்லீம் சகோதரத்துவம் மேற்கொண்ட கூட்டணியை புரட்சிக்கான வெற்றியாகக் காட்டுகின்றன.

கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த பரந்த மக்கள் எதிர்ப்பினால் அரசு முதலாளித்துவப் போக்குகள், முன்னாள் ஸ்ராலினிசப் போக்குகள், சுற்றுச்சூழலியல் போக்குகள் மற்றும் பிற பல போக்குகளின் ஒரு கூட்டணியான சிரிசா (Syriza) தான் இலாபமடைந்தது. இது தன்னை முழுமையாக முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தனது விசுவாசத்தை அறிவித்திருப்பதோடு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. இங்கே அமெரிக்காவில் நமக்கு விஸ்கான்சின் அனுபவம் இருக்கிறது. பல ஆண்டுகளின் மிகப் பெரும் தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்கள் எல்லாம், ISO மற்றும் தொழிற்சங்கங்களின் அதிமுக்கிய உதவியைக் கொண்டு ஜனநாயகக் கட்சியின் பின்னால்  திசைதிருப்பப்படுகின்றன.”

இந்த அனுபவங்களை வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் குறித்த SEP இன் பகுப்பாய்வுடன் ஒன்று சேர்த்து இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது: “போலி-இடது அமைப்புகள், அவை ஒட்டுமொத்தமாக, முதலாளித்துவ அரசியலுக்குள்ளான ஒரு போக்கினையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.” (அழுத்தம் மூலத்தில் உள்ளவாறு)

தீர்மானம் கூறுகிறது: ”ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தால் மட்டுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்துக்கொள்ள முடியும்.  ஒரு அரசியல் முன்னோக்கினை சோசலிச சமத்துவக் கட்சி வழங்கியாக வேண்டும். இது இல்லாமல் தீவிரமான மற்றும் நீண்ட நெடிய போராட்டமோ அல்லது வெற்றியோ சாத்தியமில்லை. தனது அணியில் மிகவும் தொலைநோக்குடன் சிந்திக்கத்தக்க மற்றும் சுய-தியாக உணர்வு படைத்த தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இணைத்துக்கொள்ள அது முனைய வேண்டும்.” 

2012 அமெரிக்கத் தேர்தல் தொடர்பான தீர்மானம் SEP இன் ஜனாதிபதி வேட்பாளரான ஜெரி வைட்டினால் அறிமுகம் செய்யப்பட்டது. வைட் மற்றும் SEP இன் துணை ஜனாதிபதி வேட்பாளரான பிலிஸ் ஸ்கெரர் பிரச்சாரத்திற்கு இது வழிமொழிவு செய்தது. பராக் ஒபாமாவுக்கும் மிட் ரோம்னிக்கும் இடையிலான தேர்தல் போட்டியென்பது பெருநிறுவன மற்றும் நிதிப் பிரபுத்துவத்தினை பாதுகாப்பதற்கு சம உறுதிப்பாடு கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி என்பதை தீர்மானம் குறிப்பிட்டுக் காட்டியது. SEP இன் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டுவதில் நோக்கம் கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்க ஒழுங்கமைப்பு குறித்த தீர்மானம், உலக சோசலிச வலைத் தள எழுத்தாளரான பாட்ரிக் மார்ட்டின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றக் கூட்டணி (Change to Win Coalition)ஆகியவற்றின் தொழிலாள வர்க்க விரோதமான இயல்பை விளக்குகின்ற இத்தீர்மானம் தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பிற்கு உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுடன் அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் முறித்துக் கொள்வதும் அத்துடன் சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதும் அவசியமாக இருக்கிறது என வலியுறுத்துகிறது. இத்தீர்மானம் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த, விஸ்கான்சினில் நிதிநிலை வெட்டுகளுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இண்டியானாபோலிஸில் ஜெனரல் மோட்டார்ஸிலும் ஓஹியோ மாநிலத்தின் ஃபிண்ட்லேயில் கூப்பர் டயரிலும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஆகியவை உட்பட, அதிமுக்கியமான அமெரிக்க தொழிலாள வர்க்கப் போராட்டங்களை திறனாய்வு செய்கிறது.

காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட இறுதித் தீர்மானம் இளைஞர் பிரிவுத் தலைவரான ஆண்ட்ரே டெமோனால் அறிமுகம் செய்யப்பட்டது. இது சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை விளக்குகிறது. “தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு மார்க்சிசத்தின் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் கோட்பாடுகளில் கல்வியூட்டுவதற்கான ஒரு போராட்டம் அவசியமாக இருக்கிறதுஎன்று அது கூறுகிறது.

இந்த அமைப்பின் பெயரை சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (ISSE) என்பதில் இருந்து சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) என்று மாற்றுவதற்கு இந்த காங்கிரஸ் வாக்களித்தது. இந்த மாற்றத்தைக் கொண்டு, இளைஞர்களின் அனைத்துப் பிரிவுகளுக்கும் IYSSE தனது விண்ணப்பத்தை விரிவுபடுத்த அவசியமுள்ளதையும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்த காங்கிரஸில் அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவக் கட்சியை தீவிரமாகக் கட்டியெழுப்புவதற்கு உறுதிபூண்டு பிரதிநிதிகள் காங்கிரஸை நிறைவு செய்தனர்.

கூட்டத்தை நிறைவு செய்கையில் கிஷோர், கட்சியின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் போராட்டத்துக்குள் தள்ளுகின்ற புறநிலை சக்திகளுக்கு பொருந்தியிருப்பதாக வலியுறுத்தினார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கட்சி பரந்த அளவில் அணிதிரட்டும். "நமது பணி சோசலிசப் புரட்சிக்கான ஒரு சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாய் அமெரிக்காவில் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைவிட வேறொன்றுமில்லை..