WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Parti Quebecois
பேரினவாத,
குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கிறது
By Keith
Jones
1 September 2012
Independantiste
கட்சியான Parti Quebecois,
நீண்ட காலமாக கியூபெக் உயரடுக்கின் அரசாங்க மாற்றீட்டுக் கட்சியாக
செயல்படுவது, அடுத்த செவ்வாயன்று நடக்கும் கியூபெக் தேர்தலில் தன்னுடைய
பிரச்சாரத்தின் மையப்பகுதியாக அடையாள அரசியல் என்னும் பிரச்சினையை முன்வைத்துள்ளது.
கியூபெக் மதிப்பீடுகள், பிரெஞ்சு மொழி ஆகியவற்றைப் பாதுகாத்தல்
என்னும் பெயரில்
PQ
ஒரு
தொடர்ச்சியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இயற்றுவதாக உறுதியளித்துள்ளது. இவற்றில்,
ஒரு கியூபெக் குடியுரிமைச் சட்டம் இருக்கும்; அது மாநிலத்திற்கு புதிதாக
வருபவர்களிடம் போதுமான பிரெஞ்சு மொழியறிவு இல்லையென்றால் சில அடிப்படை அரசியல்
உரிமைகளை அகற்றும்; இதைத்தவிர ஒரு
“மதசார்பற்ற
பட்டயம்”
ஒன்று, சிறுபான்மை மதத்தினரின்
அடையாளங்களை இலக்கு வைக்கும் நோக்கத்தை வெளிப்படையாக கொண்டதும் இயற்றப்படும்; அதே
நேரத்தில் ரோமன் கத்தோலிக்க சமயத்தின் அடையாளங்கள் விலக்கு அளிக்கப்படும்.
2006-07ல் வலதுசாரி ஜனரஞ்சக
Action-democratique du Quebec (ADQ)
மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் குடியேறுபவர்களையும் மத
சமூகங்களையும் இணைக்கும் அரசாங்க கொள்கை ஒன்றை,
“நியாயமாக
ஏற்றல்”,
என்பதற்கு எதிராக பெரும் கூக்கூரலை எழுப்பி, அது
“கியூபெக்கின்
மதிப்புக்களை”
ஒதுக்கிவிடும், ஏன் நசுக்கிவிடும், இது மாநிலத்தின்
சிறுபான்மையினருக்காக செய்யப்படுகிறது என்று கூறின.
ADQ,
அதுவரை அதுவும் அரசியலில் இருந்ததாக கருதப்பட்டதின் முகத் தோற்றத்தை உயர்த்தியது;
மார்ச் 2007 தேர்தலில்
ADQ,
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தில் இருந்து
PQ
வை
அகற்றித் தான் அமர்ந்தது. இதன்பின்
ADQ
விற்கு ஆதரவு விரைவில் சரிந்தது; டிசம்பர் 2008 தேர்தலில் அது 7 இடங்களைத்தான்
பெற்றது; அது
ADQ
வின் 2007ம் ஆண்டு ஏற்றம் பெரும்பாலான கியூபெக் மக்களிடைய தீவிர வலது மாற்றத்தின்
விளைவு அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. மாறாக
ADQ
அரசியல் நடைமுறை, கூட்டாட்சி மற்றும் கியூபெக் சுதந்திர சார்பு உடைய
இறைமை ஆகியவற்றின் மீது இருந்த மக்கள் சீற்றத்தின் தற்காலிக ஆதரவு பெற்ற அமைப்பு
என்பதைத்தான் காட்டியது.
ஆனால் தன்னுடைய 2007 தேர்தல் சங்கடத்தில் இருந்து
PQ
தான் இனி ஒருபொழுதும்
“அடையாளப்
பிரச்சினையால்”
தோற்கடிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், இன்னும் வெளிப்படையாக
பேரினவாதத்தை
பிரச்சாரம் செய்யவேண்டும் எனக் கருதியது.
ஆகஸ்ட் 21ம் திகதி செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு
ஊழியர்களின் சங்கமான
FIQ
வின் தலைவருடன் பேச்சுக்களுக்கு பின் நிருபர்களிடம் பேசிய மரோய்ஸ் ஒரு
PQ
அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் போதுமான திறமையைற்ற நபர்கள் மாநில
மற்றும் முனிசிபல் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்பதில் இருந்து தடை செய்யப்படுவர்
என்று உறுதிமொழி அளித்தார்.
மாகாணத்தின் பழங்குடிக் குழுவிடம் இருந்து வந்த ஒரு பொது
எதிர்ப்பிற்குப் பின், மரோய்ஸ் தான் சரியாக உரைக்கவில்லை,
கியூபெக்கிற்கு புதிதாக வருபவர்கள்தான் சில அரசியல் உரிமைகளை
இழக்கும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றார்.
திட்டமிடப்பட்டுள்ள
PQ
வின் குடியுரிமைச் சட்டத்தின்கீழ், கனடாவில் இருந்தோ வெளிநாடுகளில்
இருந்தோ கியூபெக்கிற்கு வரும் மக்கள், அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள
குறைந்தப்பட்ச பிரெஞ்சு மொழித் தேர்வில் கியூபெக்கில் மூன்று ஆண்டுகள் இருந்த
பின்னும் தோல்வியுற்றால் இரண்டாந்தர குடிமக்களாக்கப்படுவர். வேட்பாளர்களாக நிற்கும்
உரிமையை இழப்பதைத்தவிர, தங்கள் வறிய பிரெஞ்சு மொழியினால் கியூபெக் குடியுரிமையையும்
இழக்கும் நபர்கள் மாகாண மற்றும் முனிசிபல் தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு
நன்கொடை அளிப்பதில் இருந்தும் தடுக்கப்படுவர், தேசிய சட்டமன்றத்திற்கு
விண்ணப்பங்களைக் கொடுக்கும் ஆரம்ப முயற்சியில் ஈடுபடுவது, அவற்றில் கையெழுத்திடுவது
ஆகியவையும் மறுக்கப்படுவர்.
PQ
ஒரு
”மதசார்பற்ற
பட்டயத்திற்கும்”
முயல்கிறது. இப்பட்டயம் பொது ஊழியர்கள்
“வெளிப்படையான
மத அடையாளங்களை”
அணிவதில் இருந்து, சீக்கியர்களின் தலைப்பாகை, யூதர்களின் யார்முல்கே அல்லது
முஸ்லிம் ஹிஜப் போன்றவற்றை அணிவதில் இருந்து தடுக்கப்படுவர். ஆனால் பொது ஊழியர்கள்
“சற்றே
மறைப்புடன் கூடிய”
சிலுவைச் சின்னங்களை (மரபார்ந்த கத்தோலிக்க அடையாளம்) அணிவதில் தடையேதும் இராது.
மேலும் இது ரோமானியக் கத்தோலிக்க அடையாளங்கள் பொதுக் கட்டிடங்களில் இருந்து
அகற்றப்படுவதையும் வன்மையாக எதிர்த்தது; இதில் 1936ம் ஆண்டு கத்தோலிக்க
திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருந்த நெருக்கமான பிணைப்புக்களை அடையாளம்
காட்டும் வகையில் முக்கிய வலதுசாரித் தலைவர்
Maurice Duplessis
மாட்டியிருந்த சிலுவையும் அடங்கும். இத்தகைய அடையாளங்கள் கியூபெக்கின்
“பண்பாட்டு
மரபியத்தின்”
ஒரு
பகுதி என்றும், இதற்கு மன்னிப்புக் கோரத் தேவையில்லை என்று
PQ உறுதியாகத்
தெரிவித்துள்ளது.
இது ஒரு பாசாங்குத்தனம் மட்டும் அல்ல. இது ஆழ்ந்த
பிற்போக்குத்தனமும் ஆகும்.
PQ
வின் குடியுரிமைச் சட்டம் என முன்வைக்கப்படுவது போல், மதசார்பற்ற
பட்டயம் என்பது இனவழி கியூபெக் மக்களின் முக்கியத்துவம் மற்றவர்களைவிட அதிகம்
என்பதை உறுதிப்படுத்தும் நோக்கம் உடையது; அதேபோல் குடியேறும் முஸ்லிம் சமூகங்களை
இழிவாக்குவது என்னும் செய்தி ஊடக நிலைப்பாட்டிற்கு இணங்கியுள்ளது; கனடா
முக்கியபங்கு கொண்டுள்ள ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து
இந்நிலைப்பாடு வந்துள்ளது நியாயப்படுத்தப்படுகிறது.
கடந்த வசந்த காலத்தில்
PQ,
பிரெஞ்சு பாசிச தேசிய முன்னணியில் இருந்து கருத்துக்களை எடுத்துக் கொண்டு,
கியூபெக்கில் ஹலால் கசாப்புக் கடைக்காரர் பெருகுவதாக கூறப்படுவதை ஒரு
பிரச்சினையாக்கியது. செப்டம்பர் 4 தேர்தல்களில், குறைந்தப்பட்சம் அதன்
“தேசிய
பிரச்சாரத்திலேனும்”
அது இப்பிரச்சினை பற்றிக் கூறவில்லை.
PQ
தான் பதவிக்கு வந்த முதல் நூறு நாட்களுக்குள் ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்பை
இன்னும் குறைக்கும் என்றும், சட்டவரைவு 101 ன் விதிகளை விரிவாக்கும் என்றும்
உறுதியளித்துள்ளது; அச்சட்ட விதிகள் 11ல் இருந்து 50 தொழிலாளர்கள் வரை இருக்கும்
நிறுவனங்களில் பிரெஞ்சு மொழி நடைமுறை மொழியாக இருக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறது. அதேபோல் ஆங்கில மொழித் தொடக்க, இடைநிலைப்பள்ளிக் கல்வி
முறையிலும் இப்பொழுது உள்ள தடைகளை
PQ
விரிவாக்க விரும்புகிறது. இதையொட்டி உள்ளூரில் பிறந்து பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்
மற்றும் குடியேறுபவர்கள் (அவர்கள் முதல் மொழி ஆங்கிலமாக இருப்பவர்கள் உட்பட)
CEGEP (பல்கலைக்கழகத்திற்கு
முந்தைய மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில்) சேர்தல், மற்றும் வயதிற்கு
வந்தவர்கள், தொழில்நேர்த்திக் கல்விக்கு ஆங்கில பயிற்று மொழியில் படிக்க முடியாது
எனப்போகும்.
உள்ளூர் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் மொன்ட்ரியால் தீவில் வசிக்கும்
சதவிகிதத்தின் எண்ணிக்கை சரிவது குறித்தும்
PQ
கவலையை தெரிவித்துள்ளது; இச்சரிவை மாற்றும் வகையில் கொள்கைகளை அறிமுகப்படுத்த அவசர
கவனம் கொடுக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளது.
“பிரெஞ்சுப்
பெரும்பான்மை இருக்கும் இடங்கள் ஆபத்திற்கு உட்படுவது புதிதாகக் குடியேறுபவர்களை
பிரெஞ்சுக்குள் ஒருங்கிணைக்கும் நம் கூட்டுத் திறனை ஆபத்திற்கு உட்படுத்திவிடும்”
என்று
PQ
வின் முக்கிய வேட்பாளர்
Jean- François Lisée
புதன் அன்று கூறினார்.
PQ
வின் பேரினவாதக் கொள்கைகள் அதன் முதலாளித்துவ
Republique de Quebec
என்னும் அமைப்பை நிறுவும் திட்டத்திலுள்ள பிற்போக்குத்தன தன்மைக்கு உதாரணம் ஆகும்;
அது
NATO, NORAD
மற்றும்
NAFTA
ஆகியவற்றில் உறுப்பு அமைப்பாக இருக்கும்.
இதன் இழிந்ந பேரினவாத முறையீடுகளினால்
PQ
பிற்போக்குத்தன வழிவகையில் நிகழ்வுகளை பயன்படுத்தி திசைதிருப்ப
முயல்கிறது; இது தொழில்நேர்த்தியாளர்கள் கடைக்காரர்கள், மத்தியத்தர, தொழிலாள
வர்க்கங்களின் பிற பிரிவுகளின் கவலை, ஏமாற்றம் ஆகியவற்றை அவ்வாறு இயக்க முயல்கிறது;
அதுவும் ஆழ்ந்த சமூகப்பொருளாதார நெருக்கடி, பெருகும் சமூக சமத்துவமற்ற நிலை
இருக்கும்போது.
PQ
வின் முக்கிய பெருவணிகப் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய சொந்த
தேசிய-பேரினவாத தளங்கள் உள்ளன.
இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், லிபரல்கள் சட்டவரைவு 94 ஐ
இயற்றுவதாக உறுதியளிக்கின்றனர்; அது கியூபெக்கில் இருக்கும் சிறு எண்ணிக்கையிலான
நிகப் அல்லது பர்க்கா அணியும் மகளிரை இலக்குக் கொள்கிறது. அவர்கள் தங்கள் மத
தலையங்கியை அகற்றாவிட்டால், அத்தகைய பெண்கள் மாகாணப் பொதுநிறுவனங்களால் வேலை
கொடுக்கப்பட மாட்டார்கள்; இதில் பள்ளிகள், மருத்துவமனைகள் அடங்கும்.
“மிக
அவசரகால நிலைமையில்தான்”
விதிவிலக்கு அளிக்கப்படும்.
பல லிபரல் வேட்பாளர்கள், குறைந்தப்பட்சம் ஒரு தற்போதைய காபினெட்
மந்திரி, கியூபெக்கின் ஐந்தாம் பெரிய முனிசிபாலிட்டியான
Saguenay
ன்
மேயர், வெளிநாட்டில் பிறந்த
PQ
வேட்பாளரை அயல்நாட்டவர் என்று கண்டித்தபின், நியாயமான வீடுகள்
ஒதுக்குதல் குறித்த விவாதத்தில் அவருக்குப் பங்கு பெறும் உரிமை கிடையாது என்றார்.
CAQ (ADQ
கட்சியின் பின்தோன்றல்) தன்னுடைய பங்கிற்கு கியூபெக்
ஏற்றுக்கொள்ளும் குடியேறுவோர் எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கேனும்
குறைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது; மேலும் மாகாணத்தின் குடியேறுதல், மொழிக்
கொள்கைகள் ஆகியவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஒரு
தற்காலிக குடியேற்றத் தகுதியை ஏற்படுத்துதல் அரசாங்கம் வேலையில்லாதவர்கள் அல்லது
இரண்டு ஆண்டுகள் கியூபெக்கில் வாழ்ந்தும் பிரெஞ்சு மொழி பயிலாதவர்களை முறையே
அகற்றவும், வசிக்கும் உரிமையை இரத்து செய்யவும் உதவும் என்றார்.
QS
எனப்படும்
Quebec Solidairer,
இடது கியூபெக் சுதந்திரம் தேவை எனக் கூறிக்ளொள்ளும் அமைப்பு, போலி இடதின் ஆதரவைக்
கொண்டது, முதலாளித்துவ அரசியல் நடைமுறையின் பேரினவாத முறையீடுகளுக்கு நெறியைக்
கொடுக்கிறது.
“நியாயமாக
ஏற்றல்”
என்பது குறித்த விவாதத்தை பிற்போக்குத்தனத் திசைதிருப்புதல், தேசியவாதத்தை
வளர்த்தல், தொழிலாள வர்க்கத்தை பிரித்தல் என்று முத்திரையிடுவதற்கு பதிலாக,
QS
இதை
முக்கியமானது, தேவையானது என்றதுடன் அதே போக்கில்
PQ
வின் மதசார்பற்ற பட்டயத்தையும் போதுமான அளவு கூறாததற்காகக் குறையும் கூறியுள்ளது.
PQ
முன்வைத்துள்ள குடியுரிமைச் சட்டத்தையும்
QS
எதிர்க்கிறது; ஆனால் சட்டவரைவு 101 வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு
ஒடுத்து ஒரு மொழிமட்டும் தெரிந்த ஆங்கில அறிவு உடையவர்களை கியூபெக்கின் மிகப் பெரிய
நிறுவனமான
SNC LalvinSNC Lalvin
உட்பட நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதைப்
பற்றி கூக்குரலிடுகிறது.
QS,
கடந்த மே மாதம் அதன் உச்சக்கட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கமாக
கட்டுப்பாட்டை விட்டு மீறும் நிலையில் இருந்த கியூபெக் மாணவர் வேலைநிறுத்தங்களுக்கு
விடையிறுக்கையில் பெருவணிக
PQ
கட்சியுடன் தேர்தல் உடன்பாடு என்பதை முன்வைத்தது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில்
இதன் தலைவர்கள் பலமுறை அவர்களுடைய பெரும் நம்பிக்கை செப்டம்பர் 5 வந்துவிட்டால்,
அவர்கள் ஒரு சிறுபான்மை
PQ
அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்த முடியும் என்பதாகும்.
பல தசாப்தங்களாக,
ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய பப்லோவாதிகள்,
மற்றும் கியூபெக்கின் முழு போலி இடதுகளும், கியூபெக்கிய தேசியவாதத்தை
“முற்போக்கானது”
என்று பாராட்டியுள்ளனர். கியூபெக்கின் தொழிலாளர்களை கியூபெக் முதலாளித்துவத்தின்
ஒரு பிரிவின் பின் தள்ளி, ஒரு முழு இறைமை பெற்ற கியூபெக்கை தோற்றுவிக்க
முயல்கின்றனர்; அதே நேரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கியூபெக்
தொழிலாளர்களை ஆங்கிலம் பேசும் கனடாவிலும்,
சர்வதேச அளவில் இருக்கும் தங்கள் வர்க்க சகோதரர்கள், சகோதரிகளிடம்
இருந்து தனிமைப்படுத்தவும் உதவுகிறது.
போலி இடதுகள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான
போராட்டத்தை முழுமையாக எதிர்ப்பதோடு, முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளின்
கூற்றான கனடாவின் நீண்டக்கால அரசியலமைப்பு பூசலில் இரு முகாம்கள்தான்
—கியூபெக்
தனியே போக வேண்டும் என்பவர்கள், கூட்டாட்சியில் இருக்க வேண்டும் என்பவர்கள் என—
உள்ளன என்பதை எதிரொலிக்கின்றனர். இவர்களின் கியூபெக் சுதந்திரத்திட்டத்திற்கு
எதிர்ப்பு என்பது தொழிலாள வர்க்கத்தை
–
பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் குடியேறுவோர் என்று எவராயினும்-- ஒன்றுபடுத்திப்
போராடுவது என்னும் நிலைப்பாட்டிற்கு எதிரானது,
முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக கனேடிய
கூட்டாட்சி என்னும் பிற்போக்குத்தனத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர்.
PQ
வின் குடியேற்ற எதிர்ப்பு, பேரினவாத மேடைகள் அரசியல் சக்திகளின்
பிற்போக்குத்தன, ஜனநாயக விரோத தன்மைக்கு சான்றாக உள்ளன; இதற்கு கியூபெக்கின் போலி
இடது ஆதரவு கொடுக்கிறது. |