WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
South Africa after the Marikana massacre
மரிக்கானா படுகொலைகளுக்குப் பின் தென்னாபிரிக்கா
Chris Marsden
1 September 2012
மரிக்கானாவில் வேலைநிறுத்தம் செய்துவந்த சுரங்கத் தொழிலாளர்களை
பொலிஸார் படுகொலை செய்தது இனப் பாகுபாட்டிற்குப் பிந்தைய தென்னாபிரிக்காவிற்கும்
சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு பெரும் மாறுதல் கட்டம் ஆகும்.
“கறுப்பருக்கு
அதிகாரமளித்தல்”
மற்றும்
“தேசிய
ஜனநாயகப் புரட்சி”
என்று பொருளாதார, சமூக அடக்குமுறையைக் கடப்பதற்கான முன்னோக்கு மிக
இருண்ட கற்பனை வகையில் முற்றிலும் தோற்றுவிட்டது என்பதைத்தான் நிரூபிக்கிறது.
மரிக்கானாவின் மையப் படிப்பினை சமூகத்தின் அடிப்படைப் பிளவு இனம் அல்ல,
வர்க்கம்தான் என்பதாகும்.
1994ல் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாரிய தியாகம் மற்றும்
புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக அதிகாரத்திற்கு வந்த ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ்
(ANC)
தன்னை அதன் முந்தைய வெள்ளை ஆட்சியளார்களைப் போலவே முக்கிய உலகப்
பெருநிறுவனங்களுக்காக மிக மிருகத்தன சுரண்டலை செயல்படுத்த இரக்கமற்ற முறையில்
செயல்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சுமைதூக்கும் மிருகங்களாக அல்ல ஒரு கௌரவமான மனிதர்களாக வாழவேண்டும்
என்னும் உரிமைக்காகப் போராடியதுதான் ஒரே குற்றம் என்பதைக் கொண்டிருந்த
வேலைநிறுத்தம் செய்திருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, கொல்ல,
காயப்படுத்த பொலிசாரை
ANC
அனுப்பிவைத்தது; பொலிசார் 36 பேரைக் கொன்று, மற்றும் 78 பேரைக் காயப்படுத்தியபின்,
கிட்டத்தட்ட காவலில் உள்ள 270 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொலை மற்றும்
கொலை முயற்சி என்று அவர்கள் சக தொழிலாளர்கள் மீது முயன்றதாக, இனப்பாகுபாட்டுச்
சகாப்த காலத்தில் இருந்த
“பொது
நோக்க”
சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்; பொது நோக்கத்தின் கீழ் வந்த
சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் வன்முறையைத்
“தூண்டிய
குற்றத்தைச்”
செய்தனர் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
மரிக்கானா சுரங்கத் தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 500 டாலருக்கும்
குறைவாகத்தான் ஊதியம் கொடுக்கப்படுகின்றனர்; மிகவும் இழிந்த பொதுக் குடிசைகளில்
வாழ்கின்றனர்; பேராபத்து நிறைந்த, முதுகெலும்பை முறிக்கும் சூழலில் இங்கிலாந்தை
தளமாகக் கொண்ட லோன்மினுக்காக உழைக்கின்றனர்; ஒரு அவுன்ஸ் 1,400 டாலருக்கும் மேல் என
விற்கப்படும் பிளாட்டினத்தை நிலத்தடியில் இருந்து எடுக்கின்றனர். இதைவிட மோசமாக
உலகிலேயே மிக சமத்துவமற்ற நாடு என்று மாறியிருக்கும் தென்னாபிரிக்காவில்
உள்ளவர்களுடைய விதி மில்லியன் கணக்கான மற்றவர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
இதற்கிடையில்
ANC
ஒப்பிடமுடியாத ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு புகழ் பெற்றதோடு ஒரு கறுப்பு
முதலாளித்துவத்தின் அனைத்தையும் பற்றும் அடுக்கை ஈர்த்துள்ளது.
BEE
எனப்படும் பொருளாதார அளவில் சக்தி வாய்ந்த கறுப்பர்
நிறுவனங்களுடனும், பெருநிறுவனங்களின் ஏற்றத்திற்காக முயல்வோருடனும் இது
இயைந்துள்ளது. அவர்கள் சர்வதேச நிறுவனங்களின் சார்பில் செயல்படுபவர்களாக, அரச
கருவியை தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் நேரடிப் பங்கை பயன்படுத்தும் வகையில்
செயல்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராகக் குற்றச்
சாட்டுக்கள் கொண்டுவரப்படும்போதே, தென்னாபிரிக்காவின் சுரங்கத்துறை மந்திரி சூசன்
ஷபாங்கு,
“நம்
முதலீட்டாளர்களுக்கு, இப்பொழுது இருப்பவர்களுக்கும் வரவிருப்பவர்களுக்கும்,
ஜனாதிபதி ஜாகப் ஜுமா நம் சமூகத்தில் உள்ள மோசமான கூறுபாடுகளைத்
தனிமைப்படுத்திவிடுவதில் உறுதியாக உள்ளார்”
என உத்தரவாதம் தருகிறேன் என்று ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் உள்ள
சுரங்கத் துறை நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கூறினார்.
ANC
தன்
பங்கிற்கு,
முத்தரப்புக் கூட்டணியில் இருக்கும் தன் பங்காளிகளை
—தென்னாபிரிக்க
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
COSATU
தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றை—
உலக மூலதனம் மற்றும் தென்னாபிரிக்க முதலாளித்துவம் பெருகிய முறையில்
அமைதியிழந்து வரும் மக்களிடையே சர்வாதிகாரத்தை சுமத்தும் நிலைக்கு பெரிதும்
நம்புகிறது.
ஸ்ராலினிச
SACP,
இனப்
பாகுப்பாட்டிற்கு எதிரான போராட்டம் முழுவதும் முதலாளித்துவ தென்னாபிரிக்காவில்
கறுப்பர் பெரும்பானமை ஆட்சி சோசலிசத்திற்கு மாறுவதற்கான பாதையில் ஒரு முக்கியமான
கட்டம் ஆகும் என வலியுறுத்தி வந்துள்ளது. அது
COSATU
வை அரசாங்கத்திற்குள் ஒரு தொழிலாள வர்க்கத்தின் அரண் என அது
சித்திரித்து, இம்மாற்றத்தை உறுதிப்படுத்தும் எனவும் கூறியது.
சம்பவங்கள் முற்றிலும் எதிர்த்திசையில்தான் சென்றுள்ளன. பணிகளைச்
செய்ததற்கு
SACP
தலைவர்கள் இனப்பாகுபாட்டிற்குப் பிந்தைய காலத்தில் முக்கிய பங்குகளை அளிக்கப்
பெற்றனர், அதிகாரத்தில் இருந்து கிடைக்கும் ஆதாயங்களில் ஒரு பங்கையும் பெற்றனர்.
COSATU
மற்றும் அத்துடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் ஒரு தொழில்துறை பொலிஸ்
படைபோலவும், அதிகாரத்துவத்தின் சுயச்செல்வக் கொழிப்புப் பெறுவதற்கும் ஒரு கருவி
போல் செயல்பட்டுள்ளன.
Western Cape
பல்கலைக்கழகத்தில் வணிக உயர்கூடத்தில் பேராசிரியாராக உள்ள பிலிப் ஹிர்ஸ்க்சோன்,
கடந்த ஆண்டு எப்படித் தொழிற்சங்கங்கள்
“தன்னலக்குழுவின்
தன்மைகளை”
எடுத்துக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆலைகளில் மேற்பார்வையிடும் பதவிகள் நிர்வாகத்தில் இடம் பெறப்
பயன்படும் கருவிகளாகிவிட்டன; இது
“முயல்வோர்
வெளிப்பாடு, தொழிற்சங்கவாதியாக உத்தியோகம் பெறுதல்”
என்னும் ஒரு பகுதியாகிவிட்டது; இதில்
SACP
உறுப்பினர்தன்மை
“மேலாண்மைப்
பதவிகளிலோ அரசாங்கத்திலோ வாய்ப்புக்களைப் பெறுவதற்கு உதவும் முதற் படிகள்”
என ஆதரவு கொடுக்கப்பட்டது.
NUM
ன்
முன்னாள் தலைவரும் உயர்மட்ட
ANC
அரசியல்வாதியுமான சிரில் ராமபோசா இப்பொழுது ஆபிரிக்காவிலேயே 34 வது மிகப் பெரிய
பணக்காரர் ஆவர்; இவருடைய சொத்துக்களின் நிகர மதிப்பு 275 மில்லியன் டாலர் ஆகும்.
இவருடைய பல நிறுவனங்களில் ஒன்று மாரிக்கானாவில் தொழிலாளர்களை கட்டுப்பட்ட அடிமைத்தன
முறையிலான ஒப்பந்த முறையில் கொண்டுள்ளது. அவருக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு
தொழிலாளிக்கு 12,000 ராண்டுகள் ($1500) லோன்மின்னால் கொடுக்கப்படுகிறது; ஆனால் அவர்
தொழிலாளர்களுக்கு 4,000 ராண்டுகள் மட்டுமே ($500) கொடுக்கிறார்.
நிர்வாகத்தின் ஒரு இணைப்பு என்னும் முறையில் அதன் பங்கின் அர்த்தம்,
NUM
உறுப்பினர்களின் எண்ணிக்கை பல சுரங்கங்களில் இருப்பதைவிட 50% குறைவு எனப்
போய்விட்டது; இதில் பெரும்பாலானவர்கள் திறமைகூடிய வெள்ளை நிற தொழிலாளர்கள்,
மேற்பரப்பில் வேலை செய்பவர்கள், மாரிக்கானாவில் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் பிரிந்து வந்துள்ள
AMCU
சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டமைப்புத் தொழிற்சங்கத்தின்
உறுப்பினர்கள் அல்லது எந்தச் சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லர்.
NUM, COSATU, SACP
அனைத்துமே வேலைநிறுத்தம் செய்தவர்களை அடக்குவதற்குப் பொலிசை அழைத்தன; படுகொலைக்கு
ஆதரவு கொடுத்துள்ளன,
AMCU
அடக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.
NUM
ன் பொதுச் செயலாளர் பிரான்ஸ் பலேனி மாரிக்கானாப் படுகொலையைப்பற்றி
“பொலிஸ்
பொறுமையுடன் இருந்தனர், ஆனால் இவர்கள் ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்”
என்றார்.
இது சர்வதேச போலி இடது குழுக்களை
COSATU
மற்றும்
அத்துடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ளுதல் தேவை என்பதை
எதிர்க்க தடுக்கவில்லை;
ANC
க்கு எதிரான எத்தகைய போராட்டமும் வேறுவகையில் வாய்ப்பு இல்லை.
சர்வதேச தொழிலாளர்களுக்கான குழு (Committee
for a Workers International) உடன்
இணைந்துள்ள தென்னாபிரிக்க ஜனநாயக சோசலிச இயக்கம் இதற்கு மாறாக,
“இரண்டு
சங்கங்களிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, ஒற்றுமையான நடவடிக்கையைக் கோருகின்றன;
இது உள்ளூர் பொது வேலைநிறுத்தத்துடன் தொடங்க வேண்டும்”,
“ஒரு
தேசியப் பொது வேலைநிறுத்தத்தில் முடிய வேண்டும்”
என்று வலியுறுத்துகின்றது; இவை அனைத்தும்
NUM,
COSATU
ஆகியவற்றின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் போலும்.
இங்கிலாந்தில் இருக்கும் சோசலிச தொழிலாளர் கட்சி, இன்னும் இழிந்த
வகையில், ஆகஸ்ட் 17ம் திகதி எழுதியது:
“அதன்
நோக்கங்கள் எப்படி இருந்தாலும்,
AMCU
ஒற்றுமையின்மையை அறிமுகப்படுத்த சிலநேரங்களில் பயன்படுத்தப்படுகிறது; அதுவும்
தொழிலாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ளுகையில். போட்டிச் சங்கத்தை அமைத்த
தொழிலாளர்கள்
NUM
காரியாளர்களுக்கு எதிராகப் போராடி, அதன் கொள்கைகளை கீழிருந்து மாற்றினால் நன்றாக
இருக்கும்.”
NUM
மற்றும்
COSATU
விற்கு
ஆதரவு என்பது
ANC
மற்றும் அரசாங்கத்துடனான முத்தரப்பு உடன்படிக்கைக்கு ஆதரவாகும். இது
முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆதரவை கொடுக்கிறது.
நிரந்தரப் புரட்சி தத்துவம் தென்னாபிரிக்காவில் உள்ள தொழிலாளர்கள்,
இளைஞர்களுக்கு அவர்களுக்கு முன் இருக்கும் வாழ்வா-சாவா போராட்டத்தை நடத்துவதற்கு
அரசியல் தளத்தைக் கொடுக்கிறது.
ANC
இன் பரிணாம வளர்ச்சி,
முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் இயல்பாகவே முதலாளித்துவத்துடன்
பிணைந்துள்ள நிலையில், தொழிலாளர்களையும் வறிய விவசாயிகளையும் மிருகத்தனமாகச்
சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்பதை எதிர்ப்பவை, ஜனநாயகம் மற்றும்
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் என்பதற்கான போராட்டத்தை
செயல்படுத்தும் திறன் அற்றவை என்னும் ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலைத்தான் உறுதி
செய்துள்ளது.
தொழிலாள வர்க்கம், அனைத்து ஒடுக்கப்பட்டுள்ள கிராமப்புற, நகர்ப்புற
அடுக்குகளை திரட்டி,
ANC
மற்றும் அதற்கு ஆதரவு தரும்
SACP,
பிற தொழிற்சங்க கருவிகளுடன் முறித்துக் கொண்டு தங்களுடைய சொந்த
சோசலிஸ்ட் கட்சியை கட்டமைக்க வேண்டும்.
முழுப் பொருளாதாரத்தையும் சமூக உரிமையாக்கி, பரந்த இயற்கைச்
செல்வத்தைப் பயன்படுத்தும் வகையில் ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்;
தற்பொழுது இவை பெரும் செல்வந்தர்களின் ஏகபோக உரிமையில் உள்ளது; இதற்குப் பதிலாக
சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் கௌரவமான வேலைகள், வீடுகள், கல்வி, சுகாதார
வசதிகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஆபிரிக்கா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில்
இந்தப் புரட்சிகர போராட்டம் விரிவாக்கப்பட வேண்டும்; இது உலக சோசலிசப் புரட்சிக்
கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவு ஒன்றைக் கட்டமைப்பதில்
மூலம்
மட்டுமே சாத்தியமாகும்.
|