WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
சோ.ச.க.
அங்கத்தவர்
தோழர்
நீயூட்டனின்
நினைவுகள்
நீடூழி
வாழ்க
By Socialist Equality Party
27 July 2012
நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழுவின்,
இலங்கைப்
பகுதியான
சோசலிச
சமத்துவக்
கட்சியின்
(சோ.ச.க.)
நீண்டகால
அங்கத்தவரான
தோழர்
நியூட்டன்,
கடந்த
ஜூலை
26ம்
திகதி
மரணமானார்.
11 வருடகாலமாக
அவரை
வருத்தி
வந்த
சிறுநீரக
கோளாறு
மோசமடைந்து,
அன்று
காலை
காலி
கராபிட்டி
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு
சிறிது
நேரத்தின்
பின்
அவர்
உயிரிழந்தார்.
நீயூட்டன்
தனது
அன்பு
மனைவி,
ஒரேயொரு
மகள்
மற்றும்
நம்
யாவரையும்
விட்டுப்
பிரிந்த
போது
அவருக்கு
63 வயதாகும்.
1970-77ல்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி (ஸ்ரீ.ல.சு.க.),
லங்கா
சமசமாஜக்
கட்சி (ல.ச.ச.க.)
மற்றும்
ஸ்டாலினிச
கம்யூனிசக்
கட்சி
கூட்டரசாங்கத்துக்கு
எதிராக,
சுயாதீன
தொழிலாளர்
வர்க்க
கட்சி
ஒன்றினைக்
கட்டியெழுப்புவதற்காக,
சோ.ச.க.யின்
முன்னோடியான
புரட்சிக்
கம்யூனிஸ்ட்
கழகம் (பு.க.க.)
முன்னெடுத்தப்
போராட்டத்தின்
போதே
நியூட்டன்
கட்சியுடன்
தொடர்பு
கொண்டார்.
அப்போது
அவர் 25
வயது
நிரம்பிய
இளைஞராக
இருந்தார்.
இலங்கையின்
பழமை
வாய்ந்த
ட்ரொட்ஸ்கிச
கட்சியாக
விளங்கிய
ல.ச.ச.க.
மற்றும்
ஸ்டாலினிச
கம்யூனிஸ்ட்
கட்சிகளால்
தொழிலாளர்கள்
மற்றும்
இளைஞர்களை
முதாலாளித்துவ
ஆட்சிக்கு
கீழ்படுத்தி
வைக்க
எடுக்கப்பட்ட
முயற்சிக்கு
எதிராக,
இடதுசாரிகளை
அரசாங்கத்தில்
இருந்து
வெளியேறுமாறு
கோரி
புரட்சிக்
கம்யூனிஸ்ட்
கழகம்
நடத்திய
பிரச்சாரம்,
இலங்கையினுள்
ஆயிரக்
கணக்கான
இளைஞர்கள்
மற்றும்
யுவதிகளை
கட்சியின்
பால்
ஈர்த்தது.
அப்போராட்டத்தின்
ஊடாகவே,
அப்பிரதேசத்தில்
கூட்டரசாங்கத்துக்கு
எதிரான
மேலும்
சிலருடன்
கட்சியுடனான
கலந்துரையாடல்
ஓன்றுக்கு
வர
நியூட்டனுக்கு
சந்தர்ப்பம்
கிடைத்தது.
சமசமாஜக்
கட்சியின்
காட்டிக்
கொடுப்பு
பற்றிய
அனைத்துலக
அனுபவங்களை
வெட்டை
வெளிச்சமாக்கிய
அந்தக்
கலந்துரையாடல்
ஊடாக
கிடைக்கப்பெற்ற
அரசியல்
தத்துவார்த்த
அறிவினால்
புத்துணர்வு
ஊட்டப்பட்ட
நியூட்டன்,
கட்சியின்
ஹிக்கடுவ
கிளையின்
ஆரம்ப
உறுப்பினராக
சேர்ந்து,
கட்சியில்
செயலூக்கமுடன்
செயற்பட்டார்.
அப்பிரதேச
மீனவர்
உள்ளடங்கலான
கிராமப்புற
ஏழைகள்,
தோட்டத்
தொழிலாளர்கள்
மற்றும்
பல்கலைக்கழக
மாணவர்களைக்
கட்சிக்குள்
வென்றெடுப்பதை
தனது
அரசியல்
வாழ்வின்
முக்கிய
குறிக்கோளாக
அவர்
திடசங்கற்பம்
செய்து
கொண்டார்.
1951
பெப்ரவரி 15ம்
திகதி
ஹிக்கடுவ
கழுபேகொட,
கெதரவத்தயில் 7
சகோதர
சகோதரிகள்
கொண்ட
குடும்பத்தின்
கடைசிப்
பிள்ளையாகப்
பிறந்த
நியூட்டன்,
ஹிக்கடுவ
விமலபுத்தி
மகாவித்தியாலயத்தில்
ஆரம்பக்
கல்வியைக்
கற்றார்.
மிகவும்
அடக்கமான
குணமுடைய
அவருக்கு
பள்ளிப்
படிப்பு
முடியும்
வரை,
குடும்பத்தின்
அனைவரதும்
அன்பும்
ஆதரவும்
கிடைத்தது.
கட்சி
உறுப்பினராகவும்
கொள்கைப்
பிடிப்பான
மனிதராகவும்
அவர்
இடையறாது
அயலவர்களின்
மதிப்பினைப்
பெற்றிருந்தார்.
எல்லோராலும்
விரும்பி
நேசிக்கப்பட்ட
அவர்,
நோயாளியாக
விளங்கிய
நிலையிலும்
கூட,
தனது
இளமையான
மற்றும்
உற்சாகமான
தோற்றம்
எதுவும்
தன்னை
விட்டுச்
செல்ல
இடமளிக்கவில்லை.
மோசமாக
நோய்வாய்ப்பட்ட
நிலையையும்
கவனத்தில்
எடுக்காது
கட்சி
வேலைகளில்
ஈடுபட்ட
நியூட்டன்,
தனது
கடைசி
அரசியல்
நடவடிக்கையாக
காலி
நகர
மண்டபத்தில்
இடம்பெற்ற
தோழி.
பியசீலி
விஜயகுணசிங்கவின்
ஞாபகார்த்த
கூட்டத்தில்
பங்கு
பற்றியிருந்தார்.
இவ்வாண்டு
மேதினக்
கூட்டத்தில்
பங்குபற்றிய
நீயூட்டன்
தனது
வலது
கையை
உயர்த்தி
அசைத்து
அனைத்துலக
கீதத்தை
பாடியபோது,
அவர்
ஒரு
நோயாளி
என்ற
அறிகுறியே
தெரியவில்லை.
சுகயீனத்தால்
வெளியில்
செல்ல
முடியாத
போது,
அவர்
அனைத்துலக
தொழிலாள
வர்க்க
இயக்கத்தின்
அபிவிருத்தியைப்
பற்றி
தெரிந்துகொள்ள
அவர்
தோழர்கள்
வரும்வரை
பொறுமையின்றி
காத்திருப்பார்.
“முதலாளித்துவத்தினால்
தொடர்ந்து
இயங்க
முடியாது,
கட்சியைக்
கட்டியெழுப்புவதே
தற்போது
செய்ய
வேண்டிய
வேலையாகும்”
என்ற
விடயத்தினை
தன்னைச்
சந்திக்கவரும்
ஒவ்வொரு
தடவையும்
தோழர்களுக்கு
நியூட்டன்
தெரிவித்துள்ளார்.
இக்
கலந்துரையாடல்களில்
தனது
ஓரேயொரு
மகளையும்
பங்குபற்ற
வைப்பற்கு
அவர்
முயற்சி
எடுத்திருந்தார்.
கடைசிக்
காலங்களில்
அவர்
தனது
மகளுடனேயே
கூட்டங்களுக்கும்
சமூகமளித்திருந்தார்.
சோசலிசத்துக்கான
இந்த
நம்பிக்கையானது
கட்சியில்
இணைந்த
நாள்முதல்
அபிவிருத்தி
செய்திருந்த
முன்னோக்குப்
பற்றிய
அவரது
ஆழ்ந்ந
பிணைப்பையே
புலப்படுத்துகின்றது.
1977 தேர்தல்
இயக்கத்தில்
நடத்திய
போராட்டமானது,
நியூட்டன்
உட்பட
பல
இளைஞர்களுக்கு
கல்வியறிவூட்டியிருந்தது.
மாத்தறை
ஆசனங்களுக்காக
போட்டியிட்ட
கட்சிப்
பிரதிநிதிகளுடன்
வேலைசெய்த
நியூட்டன்,
உலக
அரசியல்
நிலமை
மற்றும்
தொழிலாளர்
வர்க்க
இயக்கம்
பற்றிய
பல
விடயங்களைப்
பற்றி
கற்றறிருந்திருந்தார்.
சமசமாஜ
மற்றும்
கம்யூனிஸ்ட்
கட்சிகளின்
காட்டிக்
கொடுப்பினால்
பலமடைந்த
ஜே.ஆர்.
ஜயவர்தனவின்
யூ.என்.பீ.
ஆட்சியை
கைப்பற்றிக்
கொண்ட
இத்
தேர்தலில்,
சமசமாஜ
மற்றும்
கம்யூனிஸ்ட்
கட்சிகள்
துடைத்தெறியப்பட்டன.
தேர்தல்
பிரச்சாரத்தினுள்
பு.க.க.
எடுத்துக்
கூறியபடியே,
புதிய
அரசாங்கமானது
பொதுமக்கள்
எதிர்கொண்ட
எப்பிரச்சினைக்கும்
தீர்வு
காண
இலாயக்கற்றது
என்பதை
நிரூபித்தபடி,
தொழிலாளர்
வர்க்க
இயக்கத்தின்
மீது
எகிறிப்
பாய்ந்ததோடு
இராணுவக்
குண்டர்
பலத்தில்
தங்கியிருந்தது.
அது,
தொழிற்சங்க
தலமைகளும்
போலி
இடதுசாரி
கட்சிகளும்,
இது
பிற்போக்கின்
காலகட்டம்
என
அறிவித்து,
சகல
தொழிலாளர்
வர்க்கப்
போராட்டங்களையும்
நிராகரித்திருந்த
ஒரு
காலகட்டமாகும்.
இத்தகைய
மிலேச்சகரமான
சமயத்தினுள்
செயற்பட்ட
ஓரேயொரு
தொழிலாள
வர்க்கக்
கட்சியாக
பு.க.க.
மட்டுமே
விளங்கியது.
இத்தகைய
குண்டர்
அச்சுறுத்தல்
விடுக்கும்
அரச
படைகளின்
தொந்தரவுகளின்
மத்தியில்
கம்கறு
மாவத
மற்றும்
தொழிலாளர்
பாதை
பத்திரிகைகளைக்
கொண்டு
பிரதேச
மக்கள்
மத்தியில்
தோழர்
நியூட்டன்
செய்த
தலையீடு
உத்வேகமளிப்பதாகும்.
நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழுவுக்குள்
1980களில்
எழுந்த,
அனைத்துலகவாதத்துக்கு
எதிரான
தேசிய
சோசலிச
கட்சியைக்
கட்டியெழுப்பும்
நடவடிக்கையை
அபிவிருத்தி
செய்ய
மேற்கொள்ளப்பட்ட
முயற்சிக்கு
எதிராக
இடம்பெற்ற
பிளவு,
அரசியல்
சந்தர்ப்பவாதிகளது
உத்வேகத்துக்கு
காரணமாகிய
பெரஸ்ரொயிக்காவுக்கு
எதிரான
அனைத்துலகக்
குழுவின்
போராட்டம்,
அதைத்
தொடர்ந்து
1991ல்
சோவியத்
ஒன்றியம்
கலைக்கப்பட்ட
பின்னர்,
முதலாளித்துவத்தின்
தோல்வியின்மையை
அறிவிப்பதற்கு
எதிராக
அபிவிருத்தி
செய்யப்பட்ட
மார்க்சிய
முனனோக்கு
போன்றவை
தோழர்
நியூட்டனின்
வாழ்வினை
கட்டியெழுப்பும்
அத்திவாரமாக
அமைந்தன.
1977ல்
யூ.என்.பி
அரசாங்கம்
தொடுத்த
தமிழர்
விரோத
இனவாத
தாக்குதலுக்கும்,
மிலேச்சகரமான
யுத்தத்திற்கும்,
பின்னர்
வெளிப்பட்ட
ஜே.வி.பீ.யின்
பாசிச
தாக்குதல்களுக்கும்
எதிராக
பிரதேசத்துள்
கூட்டங்கள்,
கலந்துரையாடல்களை
ஏற்பாடுகள்
செய்வதில்
அவர்
மிகத்
தைரியமாகப்
போராடினார்.
இடதுசாரி
மற்றும்
சோசலிசப்
போராளிகளுக்கு
எதிராக
கொடூர
தாக்குதல்கள்
நடத்திய
பாசிச
துப்பாக்கிதாரிகளிடமிருந்தும்
அரச
வேட்டையாடலில்
இருந்தும்
தொழிலாளர்
வர்க்கத்தையும்
ஒடுக்கப்படுவோரையும்
பாதுகாக்க
தொழிலாளர்
ஐக்கிய
முன்னணி
ஒன்றினைக்
கட்டியெழுப்புவதன்
பொருட்டு
பு.க.க.
நடத்திய
போராட்டத்தினுள்
அவர்
தமது
போராட்டத்தினைக்
கூர்மைபடுத்திக்
கொண்டார். 60
ஆயிரத்துக்கு
மேற்பட்ட
இளைஞர்களை
கொலை
செய்த
யூ.என்.பீ
அரசாங்கத்தின்
இரத்தக்
களரித்
தாக்குதல்களுக்கு
எதிராக,
அவர்
கட்சியுடன்
கைகோர்த்தவாறு
சளைக்காமல்
போராடினார்.
உலக
முதலாளித்துவமானது
வார்த்தைகளால்
விபரித்துக்
கூற
முடியாதளவிலான
நெருக்கடிக்குள்
மூழ்கியுள்ளது.
இராஜபக்ஷ
அரசாங்கம்
புலிகளைத்
தோற்கடித்ததனால்
சிங்கள,
தமிழ்
ஓடுக்கப்பட்ட
மக்களது
மற்றும்
இளைஞர்களது
எந்தவொரு
பிரச்சினையும்
தீர்க்கப்படவில்லை.
தோழர்
நியூட்டன்
போராடிய
முன்னோக்கு
பொருத்தமானது
என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தோழர்
நியூட்டனின்
நினைவு
நீண்டகாலம்
தொடர்ந்தும்
அழியாமல்
நிலைத்திருக்கும்.
சோசலிச
சமத்துவக்
கட்சியில்
இணைந்துகொள்ளுங்கள்.
எமது
வலைத்தளத்தின்
வாசகர்
ஆகுங்கள். |